எளியவழியில் ஞானம் பெற....

^

"ஷிம்ஹோ சிஸா சஷ்ச்தத்தா ஷம்னா
சிரிஷ்ஷச்த்த சின்ஷியாரி ஷய் ஷக்தே"

ஞானம் என்றால் என்ன என்று நீங்கள் தெரிந்துக்கொண்டால்தானே. ஞானத்தின் இன்பத்தை அனுபவிக்கமுடியும்,
ஞான அனுபவம் பற்றி பலர் பலவிதமாக கூறுகின்றனர் நான் ஞானம் பெற்றகதையை உங்களுக்கு கூறலாம் ஆனால் உங்களுக்கு எப்படி புரியும், நீங்கள் அறிவாளிகள், ஆறறிவுள்ளவர்கள் என்று எண்ணிக்கொள்ளலாம், ஆனால் அது அனைத்தும் நீங்களாகவே கற்றது கிடையாது அனைத்தும் கற்பிக்கபட்டவையே, தேனின் சுவை இப்படித்தான் இருக்கும் என்று ஒருவருக்கு மிகச்சரியாக கூறிவிடமுடியாது, எப்படி கூறினாலும் அவர் தேனை சுவைக்கும்போளுது வேறு விதமான சுவையை உணர்ந்ததாகத்தான் கூறுவார், ஆனால் ஏற்கனவே தேன் குடித்தவரிடம் தேனின் சுவை இப்படித்தான் இருக்கும் என்று கூறினால் அவரும் ஏற்றுக்கொள்வார்.

ஆகா ஞானம் அடைந்தவர்களை ஞானமடைந்தவர்களால் தான் உணரமுடியும் மற்றவர்கள் என்ன முயற்சி செய்தாலும் தவறாகத்தான் விடை கிடைக்கும், ஞானமடைந்தவன் என்று கூறிக்கொள்பவர்கள் பலரும் பலவிதமாக ஞானத்தை பற்றி பரப்பிவருகிறார்கள். ஞானத்தை இமையமலை சாரலில் தோண்டி எடுத்துக்கொண்டு அதன் சூடு குறைவதற்குள்ளே அடுத்த விமனத்தை பிடித்து அமெரிக்கா சென்று, முணியாண்டி விலாஸ் போல கடைபரப்பி அனைத்து வகை ஞானங்களையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கிறார்கள், சில நாட்களிலேயே ஞானத்தின் தயவால் பல ஏக்கர் ஆசிரமம். பலமாநிலங்களில் ஆசிரமம் என்று அமெரிக்க வாழ்க்கை, கடவுளை விடுத்து அன்பை விதை அல்லது கடவுளும் அன்பும் ஒன்றே, இதுதான் ஞானத்தின் மூலதன பொருளாக விற்க்கபடுவது, ஆனால் ஞானத்தை கொண்டுவந்தவரின் புகைப்படமும், அவர் ஆசணினி புகைப்படமும் கடவுளாக பாவிப்பதை ஞானம் தடுக்காது மாறாக ஏற்றுக்கொண்டு உற்சாகப்படுத்தும்.

இமையமலை சாரல்களிலும், பாரத தேசத்திலும் (?), பரதேசி போல பல வித்தைகளை கற்றுக்கொண்டு சுற்றித்திறியும் ஆசான்கள் தங்கள் சீடர்களை அமெரிக்கா அல்லது ஐரோப்பாவுக்கு மட்டும் அனுப்பிவைப்பார்கள், எல்லா சீடர்களும் தங்கள் ஆசான் சொல்வதாலே செல்கிறேன் என்று கூறுவது ஞானத்தின் பக்கவிளைவு, எதாவது வேதத்தில் மேற்கில்தான் செல்லவேண்டும் என்று கூறுகிறார்களோ என்னவோ ?, ஆபிரிக்க நாடுகளுக்கு அல்லது பொருளாதரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கோ அவர்கள் செல்லக்கூடாது என்று ஆசான்கள் மௌனத்தால் சொல்ல சீடர்கள் கவனமாக குறிப்பெடுத்துக்கொள்வார்கள் (ஓரிருவரைத்தவிர), தொடக்கத்தில் பிச்சைகாரன் போல காட்சியளிப்பவர்கள் , செருப்பில்லாமல் நடப்பவர்கள், எளிமையை கொள்கையாக கொண்டவர்கள் பிற்காலத்தில் பி.எம்.டபள்யு வண்டி, உயர் தர விமானத்தில் முதல் வகுப்பில் தான் செல்லவேண்டும் என்று தாங்கள் பெற்ற ஞானம் கட்டளையிடுவது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். கடவுளை பற்றிய கேள்விகளுக்கு சாதுரியமாக பதில் சொல்லி தங்களையே கடவுளாக (மறைமுகமாக ) தரிசிக்கவைப்பது ஞானத்தின் இரண்டாம் நிலை.

தாங்களாகவே வடிவமைத்த யோக செய்முறையை (ப்ராடைக்ட்) மக்களுக்கு பரப்புவதே இவர்கள் பெற்ற(?) ஞானத்தின் குறிக்கோள், ஏழைகளுக்கு ஞானத்தின் பாதையில் கூட இடம் கிடைப்பது குறைவுதான், டாலர்கள், ஈரோக்கள் மாதாம் மாதம் காட்டும் பொழுதுதான் ஞானத்தின் பாதை வாழ்வின் இறுதிவரை கிடைக்கும் ( ஞானம் கிடைக்காது என்பது வேறு விசயம்), பொருளாதரத்தை நோக்கி ஓடும் அவசர வாழ்வில் மனவழுத்தம் என்பதுதவிர்க்கமுடியாத ஒன்று, அதை தவிர்ப்பதுக்காக/குறைப்பதற்காக சந்தையில் கிடைக்கும் யோக ப்ராடைட்டுகளை நம்பி மக்கள் செல்லவேண்டி உள்ளது. ப்ராடைக்ட் வேலை செய்யும் பொழுது ப்ரடைக்டை விற்பவர் கடவுளாகிறார், ப்ரடைக்டுகள் வேலைசெய்வதை ஆயிரம் பக்கத்தில் இந்த ஆசான்கள் விளக்கினாலும் அதன் அடிப்படை தத்துவம் ஒன்றுதான் அது "நம்பிக்கை".

காவியுடையில் முதல் வரியில் எழுதிருப்பது போல புரியாத(புரியாத மொழியில் ) அல்லது வெகு சிலருக்கே புரியும் வசனங்களை பேசி கைவிரல்களை ஒருதினுசாக வளைத்து விரல் நாட்டியம் ஒரு நிமிடம் நடத்திவிட்டு, நான் எப்படி ஞானம் அடைந்தேன் என்று தன் இமையமலை வரலாறை அல்லது ஏதாவது மலையில் வாழ்ந்த வரலாறை கூறி தானும் இந்த உலகமும் வேறல்ல என்ற நிகழ்வை(?) கூறும்பொழுதே மக்களுக்கு பாதிக்கு மேல் நம்பிக்கை வந்துவிடும், அவர் மகானாக பார்க்கபடுவார், பிறகு அவர் வாக்கே வேதமாகும், இப்பொழுது அவர் ப்ராடைக்டை அவர்கள் முழு மனதுடன்/ நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு பயிற்சி செய்யும் பொழுது அது வேலை செய்வதாக தோன்றும், வேலைசெய்வது நம் நம்பிக்கைதான். பலரும் அவரது மனபாரத்தை இறக்கிவைக்கத்தான் நேரம்/ஆள் தேடுகின்றனர். அதற்க்கு இந்த ஆசான்கள் கிடைக்க அவர்கள் மீது பாரத்தை இறக்கிவைத்துவிட்டு (எண்ணத்தால் இறக்கிவைத்துவிட்டு) மனம் லேசாக உணர்கின்றனர். மனமே அனைத்துக்கும் காரணி என்று உணருபவர்களுக்கு எந்த ஊன்றுகோலோ அல்லது பிடிமானமோ தேவைப்படாது. அதாவது இந்தவகை ப்ராடைக்டுகள் அல்லது ஆசான்கள் தேவைபடாது.

கடவுள் படத்துக்கு பதிலாக தன் படத்தையோ அல்லது தன் முன்னோர் படத்தையோ வைத்து வழிபட்டாலும் ஒரே விளைவைத்தான் கொடுக்கும் என்ற எண்ணம் மனதில் தோன்றினாலே உங்கள் மனதின் மறுப்பக்கம் தெரிய ஆரம்பிக்கும், சந்தையில் கிடைக்கும் யோகவகை ப்ராடைக்ட்டுகளை உபயோகிப்பதும் உபயோகிக்காமல் இருப்பதும் அவர் அவர் விருப்பம்,

ஞானம் அடைந்தேன் என்று கூறியவர்கள் அன்பைத்தவிர வேறு ஏதும் சொன்னதாக தெரியவில்லை.

குறிப்பு :

(அ) இந்த பதிவு கார்பரேட் யோக சாமியார்களுக்கு மட்டும் பொருந்தும்.

(ஆ) தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள இரண்டு வரிகள் (புரியாத) மகான் ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள் அருளிய பித்தபுரானத்திலிருந்து எடுக்கப்பட்டது.

(இ) தந்திரம் கற்கவேண்டும் (மோதிரம் எடுப்பது, கையிலிருந்து விபூதி வரவழைப்பது, நாக்கிலிருந்து லிங்கம்) என்று விருப்பபடுபவர்கள் மூன்று , ஆறுமாத டிப்ளமோ கோர்ஸ் சேரலாம்.

என் தேவதை

*

பேரூந்து டோல்கேட்டை கடக்கும்பொழுது பெரும்பாலான பயணிகள் இறங்கிருந்தனர், வெளியே பார்த்துக்கொண்டே மிக வேகமாக குறுஞ்செய்தியை கைபேசியில் இருந்து அனுப்பிக்கொண்டிருந்தாள் பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருந்த பெண், அவள் விரலின் வேகத்திற்கு கைபேசி விசைகள் ஈடுகொடுக்கமுடியாததால் எங்கோ பார்த்துக்கொண்டே செய்தியை அடித்துக்கொண்டிருந்தாள் அந்த வேகமே அவள் கல்லூரி மாணவி என்று உறுதிசெய்ய போதுமானதாக இருந்தது . அவளுக்கு இரண்டு இருக்கைகளுக்கு முன்பு பச்சை வண்ணத்தில் உடையணிந்திருந்த காதலர்கள் இருபது வயதுகூட கடந்திருக்காது இருவருக்கும். காதலன் மட்டும் முன்னிருக்கை கம்பியை பிடித்து தலையை குனிந்துகொண்டிருந்தான் அவனுக்கு தெரிந்தவர் அந்த நிறுத்தத்தில் ஏறிவிட்டார் போல.

வண்டி பாலத்தை கடக்கும்பொழுது திருவரங்க இராசகோபுரம் தெரிய அதை பார்த்துக்கொண்டே இருந்தேன் பசுமையான மரங்களுக்கு நடுவில் இராசகோபுரத்தின் மேல்பகுதி தெரிய என் முகத்தில் சிறு புன்னகை , உடலில் சிறு அதிர்வு , காரணம் தெரியவில்லை பிறகு தெரிந்தது என்னருகில் வானிலிருந்து வெள்ளையுடையில் தேவதை வந்தமர்ந்திருந்தாள் திருவானைக்கோவில் கோபுரத்தை பார்த்துவிட்டு திரும்பும்பொழுதுதான் அவள் இருப்பை உணரமுடிந்தது. வெங்கடேசா திரையரங்கை கடக்கும் பொழுது அவள் என்னை முழுவதுமாக ஈர்த்திருந்தாள். திருவானைக்கோவிலை கடந்து ஒரு சிறு பாலத்தின் மீது செல்லும்பொழுது பாலத்தின் கீழ் தொடரூந்து சென்றுக்கொண்டிருந்தது, தொடரூந்து எழுப்பும் ஒலியை இசையாக பாவிக்கும் மனநிலையில் இருந்தேன். மாம்பழச்சாலை சிக்னலில் வண்டி நிற்க, திருவரங்கம் செல்லும் சாலை முகப்பில் ஒரு மரத்தின்கீழ் உள்ளங்கை வியர்வையால் ஈரமான அட்டையின் நடுவில் சொருகப்பட்ட ரோசாவோடு நின்றுகொண்டிருந்தான் ஒரு இளைஞன். காதலை சொல்ல தேதிகுறித்துவிட்டான் போலும், சிகப்பு விளக்கிலிருந்து பச்சைக்கு மாற்றப்பட்ட பின்னும் வண்டி நகரவில்லை, வாகன நெரிசல், வண்டியில் இருந்த சிலர் செவிகளை மூடிக்கொண்டனர் பலரும் விருப்பமில்லாமல் வண்டியில் அமர்ந்திருந்தனர் அதற்க்கு காரணம் வாகனங்களில் ஒலியாக இருக்கலாம், ஆனால் எனக்கு என் இதயம் துடிக்கும் ஒலிய்யத்தவிர வேறு எதுவம் கேக்கவில்லை. மீண்டும் என் பார்வை திருவரங்க சாலையை நோக்கி திரும்பியது.

இரண்டு மூன்று பெண்கள் அவனை கடக்கும் பொழுது ஈரமான அட்டையையும் அதனுள் இருந்த ரோசவயையும் தன் முதுகுக்கு பின்னால் மறைத்துக்கொண்டான். அவர்கள் அவனைக்கடந்த பிறகு ஒரு காலால் தரையை உதைத்துவிட்டு இரண்டு அடி பின்னல் நடந்து கடை படிக்கட்டில் தலையில் கையை வைத்து குனிந்துக்கொண்டான். மூன்று பெண்களும் முக்கியசாலையின் வலது பக்கத்தில் திரும்பியவுடன் நடுவில் இருந்தவளிடம் மற்றவர்கள் ஏதோ சொல்ல வெட்கமும் கோபமும் கலந்து பதில் கூறிக்கொண்டிருந்தாள். வண்டி நகர விழித்திரையில் இருந்து திருவரங்கம் சாலை மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன் மரத்தடியில் தலையில் வைத்தக்கை எடுக்காமல் அப்படியே அதே படிக்கட்டில் அமர்ந்திருந்தான் அந்த இளைஞன், என்னருகில் இருந்த தேவதை அந்த சாலையில் என்னைநோக்கி நடந்து வந்துக்கொண்டிருந்தாள், திரும்பி என்னிருக்கைக்கு அருகில் பார்க்க இங்கும் இருந்தாள்.

காவிரிப்பாலத்தில் செல்லும்பொழுது குளிர்காற்று வீசியதிலிருந்தே ஆற்றில் நீர் ஓடிக்கொண்டிருந்ததை உணரமுடிந்தது. வாகனங்களை ஓரத்தில் நிறுத்திவிட்டு நடைப்பாதையில் மக்கள் நின்றுக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் திருமணமானவர்கள் ஏன் காதலர்கள் இங்கு வருவதில்லை என்று யோசித்துக்கொண்டே திரும்ப, தாயுமானவர் கோவில் தெரிந்தது, அதன் அருகில் இருக்கும் கணேசனும் விழித்திரையில் வந்து சென்றான். அண்ணா சிலையை கடந்தபொழுது அருகிலிருந்த தேநீரகத்தில் அதிகளவில் மாணவர் கூட்டம் காணநேர்ந்தது, வண்டி சத்திரத்தில் நின்றவுடன் அனைவரும் இறங்கிவிட்ட நிலையிலும் எனக்கு இறங்க மனமில்லை. வண்டியில் நான்மட்டும் சிலநொடிகள், வண்டியை விட்டு இறங்கும்பொழுது என்னுடன் தேவதையும் இறங்கினாள்.

நேராக கால்கள் காயத்திரி தேநீரகத்துக்கு சென்றது, ஒரு காபி மட்டும் வாங்கிக்கொண்டேன், உள்ளே அதிகளவில் மாணவர்கள் இரு பிரிவை சேர்ந்தவர்கள், அதிக இரைச்சல், அதிக சிகரட்புகை இருக்கமுடியாமல் வெளியே படிக்கட்டில் நின்றுக்கொண்டு காபியை குடிக்க தொடங்கினேன் நல்லவேளை இன்று வெளியே நிற்க அனுமதி கிடைத்தது.

மெதுவாக பேருந்து நிலையத்தில் இருந்து வந்து கொண்டிருந்த பேரூந்தில் வேகமாக நடந்து சென்று ஏறிக்கொண்டேன் வழி கோர்ட் என்பதை மட்டும் பார்த்து ஏறிவிட்டேன், அதன் அருகில் இருந்த அமெரிக்கன் மருத்துவமனையை பார்க்கவில்லை, வண்டி ஜோசப் கல்லூரி வாயிலை கடக்கும் பொழுது தேவதை வண்டிக்கு முன்னாள் சென்றுக்கொண்டிருந்தாள். புளுதிகளுக்கு மத்தியில் தெப்பக்குளம் தெரிந்தது. தலையரன் வாயிலில் அதிக மக்கள் கூட்டம், சோபீஸ் கார்னரில் பல கல்லூரி மாணவிகள் வண்டியில் ஏற வண்ணமயமானது பேரூந்து. அவர்களுக்கு நடுவில் இன்னும் அழகாக வெள்ளையுடையில் தெரிந்தாள் என் தேவதை. ஆம் அவள் என் தேவதை என்று சொல்லும் அளவிற்கு மௌனத்தின் புரிதலில் இணைந்திருந்தோம். ஒலி மொழிகளின் புரிதலை விட மௌனத்தின் பரிமாற்றம் ஆளுமை கொண்டதாக தோன்றியது,

தில்லை மருந்து வாசனைகளை கடந்து நான்கு சாலைகளில் பச்சைவிளக்குக்காக பேரூந்து நிற்க, எஸ்.வீ.ஆர் உணவகத்தின் அருகிலிருந்து காட்சிக்கொடுத்தாள் என் தேவதை, அடுத்து மருத்துவமனை நிறுத்தத்தில் வண்டி நிற்க, முன் பக்கமாக ஒரு பெண் வண்டியில் அலைபேசியில் பேசிக்கொண்டே ஏறி இரண்டு பயணசீட்டுக்களை வாங்கி மீண்டும் அலைபேசியில் பேச்சை தொடர்ந்தாள், மற்றொரு பயணச்சீட்டுக்கு வண்டியின் பின்பக்கமாக ஒருவன் எறிருப்பான் என்று நினைத்து திரும்ப ஷு, சலவை செய்த சட்டை, ஜீன்ஸ், சீவிய தலைமுடியாக ஒருவன் காட்சியளித்தான், கல்லூரி படிக்கும் காதலர்களுக்கான இலக்கணம் சரியாக இருந்தது அவனிடத்தில். என் தேவதை பயணசீட்டு வாங்கிவிட்டாளா என்று அவளிடம் கேட்க, அருகில் இருந்தவன் என்னை மேலும் கீழுமாக பார்கிறான், எங்கும் எனக்கு பயணச்சீட்டு தேவையில்லை என்று கூறினாள் என் தேவதை, வயதான பாட்டி வர என் இருக்கையை அவருக்கு கொடுத்துவிட்டு தேவதையின் அருகில் நின்றுக்கொண்டேன். டேப் வளாகத்தை கடந்து வண்டி சென்றுக்கொண்டிருந்தது, என் தேவதை என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள், அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவளுக்கு ஒரு இருக்கை கிடைக்க வண்டியின் பின் பக்கம் ஒரு முறை அவள் பார்த்தாள் விழிகளின் வழியே எதோ செய்தி சென்றுக்கொண்டிருந்தது , எனக்கு பின்னாலிருந்து முன்பு பார்த்த ஷு அணிந்திருந்த கால்கள் என்னை கடந்து சென்றது, என் தேவதையிடம் பேசிக்கொண்டிருந்ததால் அவனை பார்க்கவில்லை, ஆனால் அனைவரும் ஏன் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சந்திப்பு நிறுத்தம் வந்தவுடம் என் தேவதை என்னருகில் வந்து ஒரு முறை கண்களை சிமிட்டிவிட்டு வண்டியிலிருந்து இறங்கிச்சென்று சிறிது நேரத்திலேயே மறைந்தாள். வண்டி வளைந்து செல்லும்பொழுது அருகில் இருந்த ஒரு பொது தொலைபேசி நிலையத்திலிருந்து என்னபோல ஒருவன் பேசிக்கொண்டிருந்தான், இப்பொழுது என் தேவதை காட்சிக்கொடுக்கவில்லை இதயத்துடிப்பு அதிகரிக்க அவளை கண்கள் தேடிக்கொண்டிருந்தது. அதற்க்குள் மத்திய பேரூந்து நிலையம் வந்துவிட்டது, இறங்கி என் தேவதையை தேட தொடங்கினேன், எங்கும் இல்லை, வண்டி வந்த பாதையில் நடந்து பின்னோக்கிச்சென்றேன், ஜங்சன் உள்ளே சென்று முழுவதும் தேடினேன் இதுதானே என் தேவதையை நான் தொலைத்த இடம் என்று நீண்டநேரம் தேடினேன், வெளியேற முற்ப்படும்பொழுது நடைமேடை சீட்டை இருவர் கேட்க என் ஒட்டுமொத்த கோபத்தில் பதில் அவர்களுக்கு கிடைத்தது, ஒரு தேநீரகத்தின் வாசலில் தலையிலிருந்து வரும் சிவப்பு நிற திரவத்தை தடவிக்கொண்டே எழுந்தேன் உடல் முழுவதும் சில்லென்று இருந்தது இதற்க்கு முன் இத்தனை சன்னல்கள் என் சட்டையில் இல்லையே என்ற எண்ணம் தோன்றவில்லை, தேவதையை தேடிக்கொண்டே அலைந்துக்கொண்டிருந்தேன், இறுதியில் ஜங்க்ஷன் வாசலில் கால்கள் சோர்வுற்று அமர என் சட்டையின் வண்ணம் மாறிக்கொண்டே இருந்தது என் முடிகள் இறுகிக்கொண்டே இருந்தது.

ஒருநாள் வெள்ளையுடையில் இருவர் வந்து தேவதையிடம் கூட்டிசெல்வதாக கூறினார், தேவதையும் வெள்ளையுடையில் தானே இருப்பாள் அவர்களுடன் செல்ல சம்மதித்தேன். என் நெஞ்சில் எதையோ வைத்து தேடிக்கொண்டிருந்தார் ஒருவர், காதில் இருந்து அதை கழட்டிவிட்டு நாளை தேவதையை காணலாம் இப்பொழுது சென்று ஒய்வெடு என்று கூறினார், என்னைப்போலவே அங்கிருந்த மூன்று இளைஞர்களுக்கும் வெள்ளையுடையில் இருந்தவர் கையில் எதையோ வைத்து சோதித்துக்கொண்டிருந்தார், அவர்கள் மூவரையும் எங்கோ பார்த்ததுபோலவே இருந்தது, எங்குபார்த்தேன் என்று சரியாக நினைவில்லை, அதை யோசிக்க எனக்கு நேரமும்மில்லை.

நாளை என் தேவதையை பார்க்க போகிறேன்...
முடிவெட்டி சவரம் செய்யவேண்டும்...
புதுவுடை வாங்கவேண்டும் ...
அவளை பார்க்கும்பொழுது அழாமல் இருக்கவேண்டும்...
*

தனிமாநில கோரிக்கை மற்றும் கின்னஸ் சாதனைக்காக

*
தமிழகத்துல எங்கள் ஊர் பின்தங்கிய பகுதி சுதந்திரத்துக்கு முன்பும் சரி பின்பும் சரி அதை கண்டுகொள்ள யாரும் இல்லை.

எங்களை அரசாங்கம் கவனிக்கவில்லை, அதனால் கவன ஈர்ப்பு போராட்டமாக நிரந்தர பந்தலை போட்டு இரண்டு மணிநேரம் , நான்குமணிநேரம், ஆறு மணிநேரம் என்று ஷிப்ட் முறையில் எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் உண்ணாநிலை இருந்தோம் குறிப்பாக டயட்டில் இருந்தவர்களுக்கு முன்னிரிமை வழங்கினோம் ஆனால் எங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை நான்குமணிநேரம் உண்ணாநிலை இருந்து நாப்பது தொலைகாட்சிகளில் ஒளிபரப்பி பாத்திர கடையில் ஒரு பதக்கத்தை வாங்கி வெற்றிபெற்றுவிட்டோம் என்று கூறிக்கொள்ளும் அளவுக்கு எங்களுக்கு வசதியும் இல்லை ஆகவே அடுத்தகட்ட நடவடிக்கைக்காக பன்னிரண்டு பேர் கொண்ட குழு சிந்திக்க தொடங்கியது.

அதன் விளைவாக மாபெரும் யோசனை கிட்டியது அந்த திட்டத்தை முதலில் சோதித்து அது வெற்றிப்பெற்றால் எங்கள் ஊரிலும் அதை முயற்சிசெய்யலாம் என்று எண்ணினோம் நீண்டநாட்களாக எங்களை போலவே பக்கத்து ஊருக்காக போராடும் முனுசாமியிடம் இதை தெரிவிக்க அவர் எங்கள் யோசனையை ஏற்று 11 நாட்கள் தொடர் உண்ணாநிலை போராட்டத்தை நடத்தினார். என்ன ஆச்சரியம் உடனே பலன் கிடைத்துவிட்டது. முதலில் எங்கள் மாவட்டத்துக்குதான் தனிமாநில தகுதி கேட்க எண்ணினேன் ஆனால் முனிசாமி வெற்றி பல தாக்கத்தை ஏற்படுத்த, மாவட்டம் சுறுங்கி ஊர் என்ற அளவில் வந்து நிற்கிறேன் இப்பொழுதும் கேக்காவிட்டால் ஊர் சுறுங்கி தெரு என்ற அளவில் வந்துவிடும் அதனால் இந்திய இறையாண்மைக்கு ( அப்படின்னா என்னனு கேக்ககூடாது எனக்கும் தெரியாது, இந்த வார்த்தைய சேக்கலன்னா பாங்குரஸ்காரவங்க தேஞ்ச ரெக்காடு மாதரி திரும்பி திரும்பி கூவிகினு இருப்பாங்க. அதுக்காக சேத்திருக்கேன்.. ) உட்பட்டு எங்கள் ஊரை தனிமாநிலமாக அறிவிக்கவேண்டும்.

பத்துநாட்களுக்குள் மத்தியரசு அனுமதி வழங்கிவிடும் அப்படி நடந்தால் முனுசாமியின் சாதனையை முறியடித்து கின்னஸ்சில் இடம்பெறுவேன். எனக்கு என்னவோ அதிகபட்சம் ஐந்து நாட்கள்தான் அவர்களுக்கு தேவைப்படும் என்று தோன்றுகிறது. வீட்டு குழாயில் தண்ணீர் வராததற்கு மனுக்கள் குவிவது போல் அதே அளவு தனிமாநில கோரிக்கைக்கும் ஆட்கள் இருப்பதால் மத்தியரசு இதற்க்கு புதிய இணையதள சேவையை தொடங்கும் என்று எதிர்பார்கிறேன். ஓரிரு நாட்களில் இணையத்திலேயே ஒப்புதலும் அளித்தால் மிக்கமகிழ்ச்சி.

ஆனால் யாருக்காவது என்னைவிட குறைந்த நாட்களில் தனிமாநில தகுதி கிடைத்துவிட்டால் நான் சும்மா இருக்கமாட்டேன்.. எங்கள் வார்டு, எங்கள் தெரு, எங்கள் வீடு என்று என்னுடைய கோரிக்கையை சுருக்கிக்கொண்டு வருவேன். இந்த கின்னஸ் சாதனைக்கு மத்திய அரசு தோள்கொடுக்கும் என்ற நம்பிக்கையில்

-வெற்றி-[க்]-கதிரவன்
*
*
குறிப்பு : இறையாண்மை என்றால் என்ன என்று தெரிஞ்சவங்க சொல்லுங்க, அது ஒரு வகையான இனிப்பு பலகாரம் என்று நான் நினைக்க இல்லை அது ஒரு விளையாட்டுப்பொருள் என்று என் நண்பன் கூறுகிறான், பல கடைகளில் தேடியும் அது கிடைக்கவில்லை. யாரிடமாவது இறையாண்மை இருந்தால் எனக்கு இரண்டு கிலோ கொடுங்கள்.
*

கரைந்த மௌனங்கள்

*
நின்கானநட ததெல்லாம் நீக்கமற
நின்றுநிற்க நித்தமரும்நில வோடு
நீகை கோர்த்து நிற்க.
எத்தி சையில்யான் சென்றுஎவ
ரிடத்தில் எடுத்துரைத்து என்
கனவை சிறைப்பிடிப்பேன்
மேற்க்கத்திய பயணத்தால்
மௌனகடல் பரவிவிடவட திசையில்
நான் சென்று மௌனத்தின் சுவடு
மெல்ல மௌனமாய் விலகிநிற்க
கரைந்த மௌனத்தின் சிலத்துளிகள்
காலம் கடந்தும் நிற்ப்பதேனோ.

*
குறிப்பு : எழுத்துப்பிழைகள் எல்லாம் திட்டமிட்ட பிழைகள்தான்.

நானும் ஒரு "கவிதை" எழுதிகீறேன்...

*

***^*^*^***

அந்திசாயும் பொழுது
நடக்கதொடங்கினேன்
கால்கள்போன பாதையில்
கடந்து சென்றேன்
147 எழுதிருந்த
பேருந்து வந்தது,
ஏறி இசிலிங்க் அட்டையை
காட்டினேன்.
பேருந்தில்
கீழே அமர பிடிக்காததால்
படியேறி முதல்தளம்
சென்றேன்.
சன்னலோரத்தில் தலைசாய்த்து
ஒரு கண்ணால் சன்னல்பக்கம்
பார்த்துக்கொண்டே சென்றேன்
கவனம் எங்கு சென்றது என்று
தெரியவில்லை.
நீண்ட நேரத்திற்குப்பின்
நினைவு திரும்ப
கீழே இறங்கி இசிலிங்க் அட்டையை
காட்டினேன்
அடுத்த நிறுத்தத்தில் இறங்கினேன்
சிராங்கூன் என்று
எழுதிருந்தது
எதற்கு இங்கு வந்தேன் ?
யோசித்துகொண்டிருக்கிறேன்....***=*=*=***

கவிதையான்னு சந்தேக(படு)ரவங்க லேபிளை பார்க்கவும்...

கவிதை எங்கே என்று தேடுபவர்களும் லேபிளை பார்க்கவும்...

*

எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை

*வித்துக்களை தேடி...

*
துடிப்பு இருபதுமுறை அதிகரிக்கும் ஈர்ப்பின் அருகினில் செல்ல, தொலைத்த தூக்கத்தின் மூலம் இதுவென்று கைகொட்டி சிரிக்கும் கனவின் எச்சங்கள். திரும்பி எங்கோ நோக்க எண்ணங்களின் பாசமழையில் எண்ணங்கள் சிதறிசெல்ல விண்வெளியில் விளையாடிவிட்டு வெகுநேரம் சென்று வீடுதிரும்பி வெரும்நாளில் விழாக்கோலம் பூண்டிருப்பேன். ஓசை மெல்லகேட்டு உலகில் சிறந்தவன் என்று உள்ளம் பூரித்துக்கொள்ளும் உலகை மறந்திருக்கும். அந்தி சாயும் பொழுது ஆதவன் கரைகையிலே வண்ணங்கள் சிதறடித்து கீழ்வானம் சிவந்திருக்கும் எதிர் திசையில் நிலவிருக்கும் என் எண்ணம் இரண்டிற்கும் நடுவிலிருக்கும். சன்னல் கண்ணாடியின் உடைந்த பாகத்தில் பிரகாசிக்கும் நிலவின் ஒளியை பார்க்க நித்தம் ஏங்கும்.

நிறுத்தத்தில் நிற்க, நித்திரையில் நிகழ்த்தியதை நேரில் காண நெஞ்சம் துடித்துபோகும் அடுத்தடுத்து நிகழ்வுகள் திசைமாறி செல்கையில். நிலவொளியில் நீரில் நிலவின்முகம் பார்க்க நின்றுபோகும், துடிக்கும் இதயம். காசில்லை நான் செல்ல கடன்கொடுப்பர் எங்கோ செல்ல வெறுப்பின் உச்சத்தில் விலகிநின்றேன் ஒரு நாள். புகைமருந்தெடுத்தும் புண்ணாறவில்லை.

விதி விளையாட தொடங்கி எதிர்த்திசையில் நடைபழக இமைதிரை விழாது கருவிழிக்கு உதவிசெய்ய, வட்டமிட்டு கடந்து சென்று வாகனத்தில் நான் பறந்து கனவுகைற்றை பிடித்து வானத்தில் நான்யேற தேவதைகள் மலர்தூவி கனவுகள் ஆசிபெற இரண்டுநாட்கள் பிறகு கனவுபோதை தெளிவுற்று பூலோகம் நானும் வந்தேன். வினைதீர்க்கும் திருவுச்சியில் வினைவிதைத்து விதி செல்ல வினைதுடைத்து நானும் சென்றேன், மெய்யோ பொய்யோ என்று இருவிழிகள் என்னிடம் சொல்ல செய்தியை செல்லா காசாக்கியது எந்தன் மனது.

ஆதவனை எழுப்பிவிட அவனே ஆச்சரியப்பட புத்தாடை உடுத்தி பரவசத்துடன் நானிருக்க பாழாய் போனது கனவுகள், கவிதையை தேடி கால்கடுக்க நான் நடக்க மழையில் நினைந்த சுவடு கூட தெரியாமல் தவித்து மாவின் ஆணைப்படி சாலையில் நான்னின்றேன். ஆதவனுக்கு விடைகொடுக்க வருத்தத்துடன் சென்றுவிட்டான் பல்லாயிரம் நட்சத்திரங்களை கொடுத்துவிட்டு. மனதுக்குள் மாற்றம் வர மின்னல் ஒளியில் மழையின் நடுவில் வானிலிருந்து இறங்கிவந்தால் வெள்ளையுடையில் ஓர் தேவதை நிலவை பூர்விகமாக கொண்டு இறகை விறித்து பறப்பவள் இவள்தானோ என்று கனவுபோதையிலும் கருத்துக்கள் சொன்னது இந்த மனது. வரம் கேட்க வழிகிடைத்தும் வாங்கா மனம்படைத்து வீதியினில் ஆடி நின்றேன்.

சிவந்த விழிகளில் சிலதுளி நீரை பொறுக்காது, கரைதலை நிறுத்தி காத்திட உதவுவீர் என்று விளம்பரபலகையை அடித்தது விழியிரண்டும். சரி என்ற செய்தி சாதனை நான் புரிந்ததாக நித்திரையில் மூழ்கடித்து என் சிந்தனையை சிதைத்திருக்க, கண்ணாடி சட்டத்தில் கண்ணிரண்டை நான் காண இதய ஆணைப்படி என் விழிக்கு இரு சட்டங்கள். தவறாய் வந்த தகவல் விளையாட்டை நம்பி இருவாரம் இமை இறுக எங்கோ சென்றிருந்த நினைவுகளை மீட்டுவந்தேன்.

வெகுநாட்களுக்கு பின் திருநாள் நிகழும், சிந்தை சிறகடித்துக்கொண்டே சிக்கி தவிக்கும் நிகழ்வை பற்றி விணவ பதில் இராது, பசுமை போர்த்திய நிகழ்வுகளை சுமந்து பாரினில் உலாவருகிறது நினைவுகள். நினைவுகளுக்கு வேலிபோட வேந்தனாலும் முடியாது வேடிக்கை பார்ப்பதே உத்தமம். வித்துகளை தேடி புறப்படும் நினைவுகளுக்கு நீண்ட இரவுகள் துணைநிற்கும்.
.
ஒரு கட்டத்திற்குமேல் ஒன்றும் புலப்படாது, உறங்கவும் தனியே விடாது வேதனை சூழ்ந்துகொண்டு விரக்தியில் குளிக்கவைக்கும். ஈர விழிகளுக்கு நிலவும் குளம்பியும் துணையிருக்கும்.

தேவதையை கேட்பேன்

*

மின்னலின் ஒளியில்
நிலவின் முகம் பார்த்ததுண்டு
நினைந்துகொண்டே மலையில்
நீண்ட பயணம் சென்றதுண்டு
நீண்ட இரவுகள்
நெடுநாள் கண்டதுண்டு
தனிமையில் பேசிய
நாட்களுண்டு
நினைத்தாலே இனிக்கும்
நிகழ்வுகளும் உண்டு
காரணமில்லாமல்
கண்ணீரும் வந்ததுண்டு
கவிதை எழுத
முயற்சித்த காலமும் உண்டு
கானல்நீரான
கனவுகள் பலவும்உண்டு
தேடலின் காரணமாக சில
தெளிவில்லா தெளிவுகளும் உண்டு
நான் நானாகயிருந்த
நாட்களும் உண்டு
இந்த நிலையும் மாறும்
என்பதில் நம்பிக்கையுண்டு
உலகை நேசிக்கும்
மனமும்முண்டு
உலகில் என்னை நேசிக்கும்
மனங்களும் உண்டு
இனி உன்னிடம் யாசிக்க
என்ன உண்டு ?


தொடர்பதிவுக்கு அழைத்த தமிழ் நாடன் அவர்களுக்கு நன்றி !

அரிதாரம்

*
காலத்தின் கோலம்
முன்சென்றதன் சாபம்
நானாக இல்லை

யாருமறியாமல்
அரிதாரம் பூசி
ஆடத்தொடங்கி

மழைவேகத்தில்
கலை தொலைய
ரிதாரம் களைய

எஞ்சிய வண்ணங்களிலும்
அதன் கண்ணீரிலும்
அரிதாரம் தெரிகிறது.

*

என்னத்த சொல்ல ?

*

தம்பி லோகு நல்லாருடா

1. A – Avatar (Blogger) Name :ஞான பித்தன்

2. B – Best friend? : Friends : தனிமை

3. C – Cake or Pie? : கேக் (முட்டை சேர்க்காத )

4. D – Drink of choice? பசும்பால் காப்பி

5. E – Essential item you use every day? கணினி

6. F – Favorite color? கருப்பு & வெள்ளை

7. G – Gummy Bears Or Worms : அப்படினா

8. H – Hometown? - தமிழகம்

9. I – Indulgence? - ஊர் சுற்றுவது

10. J – January or February? - இரண்டும்

11. K – Kids & their names? நானே குழந்தை தான்

12. L – Life is in complete without? அன்பு உயிர்களிடத்தில்

13. M – Marriage date? - -:(

14. N – Number of siblings? -:(

15. O – Oranges or Apples? ஆப்பிள்..

16. P – Phobias/Fears? Ophidiophobia தொடர் பதிவு

17. Q – Quote for today? பிறப்புக்கும் எல்லாஉயிர்க்கும்

18. R – Reason to smile? சிரிக்காமலிருக்க காரணம்.. ?

19. S – Season? சில்லுன்னு ஒரு மழைகாலம்

20. T – Tag 4 People?-

ஞான பித்தன்,
ஞான பித்தன்,
ஞான பித்தன்,
ஞான பித்தன்,

21. U – Unknown fact about me? தெரியல

22. V – Vegetable you don't like? கத்தரிக்கா

23. W – Worst habit? தொடர் பதிவு எழுவது -:)

24. X – X-rays you've had? இந்த கேள்வி எதுக்கு ?

25. Y – Your favorite food? புட்டு/இடியாப்பம் (தேங்காய் பாலுடன் )

26. Z – Zodiac sign? பொண்ணு பாக்க போறிகளா ?


***********

அன்புக்குரியவர்கள்: அனைவரும்...

ஆசைக்குரியவர்: பில்டேர் காப்பி போட தெரிந்தவர்கள்...

இலவசமாய் கிடைப்பது: அறிவுரைகள்,கருத்துகள்...

ஈதலில் சிறந்தது: இயன்றதை கொடுக்கும் அனைத்தும்

உலகத்தில் பயப்படுவது: எனக்கு

ஊமை கண்ட கனவு: மற்றவர் காணும் கனவைபோலதான்

எப்போதும் உடனிருப்பது: நம்பிக்கை

ஏன் இந்த பதிவு: நட்புக்காக

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: எல்லா இன்புற்றிருக்க நினைப்பது..

ஒரு ரகசியம்: பரமரகசியம்..

ஓசையில் பிடித்தது: மௌனம்

ஔவை/பாரதி மொழி ஒன்று: அச்சம் தவிர்

(அ)ஃறிணையில் பிடித்தது: ஸ்ஸ்ஹ் இப்பவே கண்ணகட்டுதே

*

துரத்தலின் நினைவுகள்

*

என்னை துரத்துவது என்னவென்று புரியவில்லை ஓடுகிறேன். தனித்து இல்லாததால் மாற்றுவழி தேடி ஓடினேன் உயிரே திரைப்பட பாடல்கள் ஒலித்துகொண்டிருக்கிறது, துரத்தல் தொடர நிற்காமல் மீண்டும் வேகமாக ஓட... வழியடைத்து நெருங்க வாய்ப்பில்லாமல் தொடர்பு துண்டிக்க... எங்கு செல்ல என்று புரியாமல் நடக்க தொடங்கினேன் துணைக்கு புகை கூடவே வருகிறது, இன்னும் வேகமாக அது என்னை துரத்துகிறது. வழிதடுப்பை உடைத்து கற்ப்பனையில் பயணிக்கிறேன். என்னையறியாமல் என் முகத்தில் மனதில் புன்னகை, கால்பகுதியை அடைந்து ஒரு காபி குடிக்க, கற்பனை நீண்டுகொண்டே செல்கிறது. விடியற்காலை வீட்டை நெருங்க எதிர்பாக்காதவண்ணன் ஏன் இப்படி என்றான், லூசு என்று கூட திட்டினான் ஆனால் மாறாக ஏன்னே வழியை ஏற்படுத்தல என்று மற்றுமொரு குரல். எதிர்பாக்கவில்லை துரத்தலின் சக்திதான் இதுவோ என்று நினைத்துக்கொள்ள தூண்டியது.

கருப்பு, வெள்ளை உடை பையில் பலவண்ண பேனா ஒரு சிறு அளவுகோல் துரத்தலின் காரணமாக இந்த கோலத்தோடு இந்த முறை வந்துவிட்டேன். அது என்னை வேகமாக நெருங்கிவிட்டது, நானும் நெருங்கிவிட்டேன் பைத்தியமென்றே நினைத்திருக்க கூடும் பார்ப்பவர், அவர்களுக்கு எப்படி தெரியும் ? அவர்களை துரத்தினால் தானே தெரியும். ஈ கூட ஆடவில்லை ஒரே பயம் எங்கே என்னை துரத்தியது என்னை தாண்டி சென்று அவர்களை பிடித்துவிடுமோ என்றோ தெரியவில்லை ஆனால் பயம் கண்டிப்பாக இருக்கத்தான்செய்யும் யாராக இருந்தாலும். நடக்க இயலாது என்று தெரிந்ததும் அது தானே விலகியது, சுற்றி பலர் இருந்ததால் அந்த முடிவாக இருக்கலாம். சரியான தூக்கம் இல்லை என்றுதான் தோன்றியது ஆனால் பயம்தான் இந்த தூக்கமின்மைக்கு காரணமா? என்று புரியவில்லை, அல்ல அல்ல அது கூட இருக்கலாம் ஆனால் விளைவுகளை கண்டு பயம் இல்லை அப்பொழுது மகிழ்ச்சிதான், விண்ணைமுட்டும் மகிழ்ச்சி.

இந்த முறை அதன் மிரட்டலுக்கு உட்பட்டு எதற்கும் பயமில்லாமல் சென்றேன் எந்த எதிர்பார்ப்பும் இல்லை அதனால் பயமும் இல்லை, மெது மெதுவென்று உள்பக்கம் பஞ்சு பதிக்கப்பட்ட குளிரிலிருந்து பாதுகாக்கும் உடையை அணிந்திருந்ததால், குளிரிலிருந்து உடம்பை பாதுகாத்தாலும் கைகள் வெளியே தெரிய இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றோடு ஒன்றை தேய்த்து சூடு உண்டாக்கி கன்னத்தில் வைத்துக்கொண்டேன் அந்த குளிரில் இந்த சூடு சுகமாக இருக்க ஒரு தேநீர் வாங்கி அந்த குளிரில் குடிக்க மேலும் அது என்னை துரத்தியது, சிறிய பயணத்தில் அது என்னை முந்தி வேறுதிசையில் செல்ல மாற்று திசையில் வேகமாக பயணிக்க இறுதி கனவை தொற்றிக்கொண்டு பாதி தொலைவை தூரத்தை கடந்து ஒரு காபியுடன் கனவை தொடர காலையில் அனைத்தும் கனவுபோல இருந்தது.

கனவா அல்லது நிசமா என்று தெரியாமலே நான் பயந்து ஓடிக்கொண்டிருக்க அது என்னை வேகமாக துரத்திக்கொண்டுதான் இருந்தது அனைவரும் என் கூட இருந்தும் யாருக்கும் இது தெரியாது, தெரிந்தால் பைத்தியக்காரன் என்று முத்திரைகுத்திவிடுவர் என்று எண்ணினேனோ என்னவோ, விரைவில் தெரிந்தது பரவாயில்லை நான் பைத்தியமாகவே இருந்துவிட்டு போகிறேன். உருவம் தெரியாத ஒன்றுக்காக நான் பைத்தியக்காரன் பட்டம் வாங்க சம்மதித்தேன். பட்டம் வழங்கப்பட்டது ஆனால் அதற்குண்டான முழுத்தகுதி அப்பொழுது இல்லை. விரைவில் வரபோகிறது என்று அறியவும் இல்லை.

துரத்தல் இருந்தாலும் மாற்றுபாதையில் பயணிக்கவேண்டி இருந்தது இருக்கா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் பயணம் தொடங்கியது தெரியாததால் துரத்தல் அதிகமாகிற்று அங்கும் இங்கும் தேடி இல்லை என்ற முடிவுக்கே வந்து கண்ணீர்வர இல்லை இல்லை இருக்கு என்று நம்பிக்கைவிதையை உள்ளுணர்வு தொடக்கத்தில் விதைத்து மரமாக வளர்ந்திருந்தது. உள்ளுணர்வின் கூற்று பொய்யில்லாமல் போயிற்று. முழங்கால் அளவு தண்ணிரில் நடந்து பெருமழையில் நினைந்து ஒதுங்ககூட மனமில்லாமல் கால்போனபோக்கில் மலையில் நினைந்து திறிய மயக்கம் தெளிய சன்னலோரத்தில் அமர்ந்து கற்பனையில் பயணித்தேன்.

காலங்கள் ஓட துரத்தலின் வேகம் குறைய கனவுகளைந்து பைத்தியமாகவேமாறி தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறது துரத்தலின் நினைவுகள்.

*

360 டிகிரி - ஒரு பார்வை

*

***இதை வாசித்துகொண்டிருக்கும் பொழுது***

- கோபத்தின் உச்சிக்கு சென்றிருக்கலாம்

- யாராவது ஒரு புதிய செருப்பை வாங்கி எழுதியவருக்கு பரிசாக வழங்கிருக்கலாம்

- அல்லது ஒரு படி மேலே போய் அதை கொண்டே அவரை அடித்திருக்கலாம்

- உடனே அந்த புதிய செருப்பு, என்னை அவமானபடுத்திவிட்டாயே என்று கூறிருக்கலாம்

- காரி அந்த புத்தகத்தின் மீது உமிள்ந்திருக்கலாம்.

- புத்தகத்தை எரித்திருக்கலாம்

- படிக்காதே என்று நண்பர்களுக்கு சிபாரிசு பண்ணிருக்கலாம்

- இந்த புத்தகத்தை படிப்பதை பார்த்து காதலி பிரிந்திருக்கலாம்

- கணவன் இந்த புத்தகம் படிப்பதை பார்த்து மனைவி கையில் கிடைப்பதை கொண்டு அடித்திருக்கலாம்.

- புதிய பரிமாணத்தை போய் திட்டுரியேன்னு சொன்ன நண்பனிடம், உன் உடன்பிறந்தவர்களுக்கு வாங்கிகொடுத்து படிக்க சொல்லிவிட்டு, அப்பறம் வந்து என்னிடம் பேசு என்று அவன் நண்பன் சொல்லிருக்கலாம்.

இனி 360 டிகிரியை பற்றிய பார்வை.

சிபத்தில் சிந்திய சிலமணி சிங்காரம் ஆத்திரம் ஆண்கம் அதிமசானம் உலக இருகியவாரம் இந்தி ரேகம் சுண்டரம்தின் சூனியமான சிந்தனைகள் சிந்தித்தா சர்கம் சவரகம் சிந்திராசம் என்று க்ந்திறோம் க்குர் ராக கூறுவதி விடியற்காலை விடாத காற்றின் கீதத்தில் அசைந்தாடும் அனனத்து மனதின் தொன்மையில் மலர்ந்த மலரின் மகரந்தமே அதனி சிந்தையில் சீக்கிரம் சிர்க்கம் என்பதன் பொருள்பட மொழியில் சூழ்ச்சியின் சுதந்திர நடையில் நான் எலுதிர்யாத்து பின் நவீனத்துவம்.

எனது பார்வை உங்களுக்கு புரியவில்லை என்றால் நீங்கள் ஞானசூனியம், புரிந்திருந்ததாக கருதினால் உடனே மனநல மருத்துவரை அணுகவும்.

*

எலும்புத்துண்டுக்காக சில நாய்குட்டிகள்.

*

அது ஒரு அழகிய வீடு, சற்று பெரிய வீடு, அதனை சுற்றி தோட்டம். தொடக்கத்தில் அதனை பாதுகாக்க ஒரு வகையான வெள்ளை நாய்கள் மட்டுமே இருந்தது. வீட்டின் சொந்தகாரர்கள் நன்மதிப்பை பெற்று நண்பர்களாகவே அவைகள் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல வீட்டின் எசமான் பலவகை நாய்களை வாங்கி ஆதரிக்கதொடங்கினார். அதனால் பல கருப்பான நாய்களுக்கும் வீட்டை பாதுகாக்கும் பொறுப்பு கிடைத்தது. அதற்க்கு காரணம் வெள்ளை நாய்களை விட கருப்பு நாய்களுக்கு அல்லது நாட்டு நாய்களுக்கு வீட்டை காப்பது எப்படி என்று நன்றாக தெரியும் வாலை வீட்டின் சொந்தகாரர்களுக்கு மட்டும் ஆட்டும் மற்றும் கருப்பு நாய்களுக்கு இயற்கையிலேயே காக்கும் திறனைவிட பார்க்க அழகு நடையில் நடப்பதால் வீட்டின் எசமானர் கருப்பு வகை நாய்களையே, நாய்கள் வாங்கும்பொழுது வாங்கதொடங்கினார். இதனால் நாளாக நாளாக வெள்ளை நாய்களின் எண்ணிக்கை குறைந்து கருப்பு நாய்களின் கட்டுப்பாட்டுக்குள் வீடு வந்தது.

கருப்பு நாய்கள் எசமானின் விருப்பப்படி அல்லது விரும்பும்படி நடந்துக்கொண்டது அதனால் எசமானுக்கு எதாவது உபயோகமாக இருந்ததா என்று பார்த்தால் ஓரளவே இருந்தது என்றுத்தான் சொல்லவேண்டும். ஆனால் தங்களுக்கு பிடிக்காத வெள்ளை நாய்களை வீட்டை விட்டு துரத்தியதில் வெற்றிக்கொண்டது. இதனால் வெகுநாட்களாகவே வெள்ளை நாய்களின் மொத்தவியாபாரிக்கு ஒரே கவலையாக இருந்தது அதற்க்கு காரணமும் இருந்தது, அந்த தெருவில் உள்ள முக்கால்வாசி வீடுகளில் பாதுகாப்புக்கு வெள்ளை நாய்களை மட்டுமே இருந்தது. ஆனால் இந்த வீட்டை பார்த்து அனைவரும் கருப்பு நாய்களை வாங்க தொடங்கினால் தனது கடையை மூடிவிட வேண்டியதுதான் என்று பயம் அவருக்கு.

சில நாட்களிலேயே வியாபாரி நினைத்தது நடக்க தொடங்கியது. பல வீடுகளில் வெள்ளை நாய்கள் துரத்தப்பட்டு நாட்டு நாய்களை வாங்கிக்கொண்டனர். இதனால் வெள்ளை நாய் வியாபாரியின் வியாபாரம் நொடித்து, பொழப்பு நடத்த முடியாமல் போய்விட்டதால் ஒரு முடிவு செய்து மற்ற நாட்டு நாய் வியாபாரிகளுடன் சேர்ந்து வியாபாரம் செய்ய முடிவு செய்தார். யோசனை ஓரளவுக்கு கைகொடுத்தது ஆனால் பழைய வியாபார செல்வாக்கு போய்விட்டதை நினைத்து வெள்ளை நாய் வியாபாரி கவலைகொள்ளதான் செய்தார் இந்த சமயத்தில்தான் கடை பொறுப்பை வியாபாரியின் மகன் ஏற்றுக்கொண்டார். தனது கடையின் வியாபாரத்தை பெருக்க பலவகைகளில் யோசித்து ஒரு திட்டம் தீட்டினார் அதன்படி முதலிடாக சில எலும்புத்துண்டுகளை போட்டு தெருநாய்களை பிடிப்பது அதுவும் குட்டியாக இருக்கும் பொழுதே பிடித்துவிட்டால் பழக்கிவிடலாம் பழக்கிவிட்டால் நல்லவிலைக்கு போகும். அதோடு முதலிடு மிகவும் குறைவு.

திட்டத்தின் படி தெரு தெருவாக சுற்றி கண்ணில் தென்படும் குட்டிநாய்களுக்கு எலும்பு துண்டுகளை போட்டு பிடித்தார். எலும்பு துண்டு வாங்கும் செலவை குறைப்பதற்காக மற்றும் இவைகளால் தான் வியாபாரம் குறைந்தது என்ற கோபத்தை தணிக்க , கருப்பு நாட்டு நாய்களை குட்டி , பெருசு என்று பாரம்பட்சம்மில்லாமல் கொன்று அதன் எலும்புகளை தனக்கு வியாபாரி போட்டார் என்று தெரிந்தும் கூட அந்த எலும்புத்துண்டை கவ்விக்கொண்டு வியாபாரிக்கு வாலாட்ட தொடங்கியது குட்டிகள். வியாபாரத்தை பெருக்க போட்ட திட்டம் வெற்றி என்று வியாபாரியும், இனி வீடுகளை பாதுகாத்து வெள்ளை நாய்களின் எண்ணிக்கையை வீடுகளில் பெருக்கி வியாபாரிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று குட்டி நாய்களும் நினைத்துக்கொண்டார்கள். இந்த விசயம் எசமானர்களுக்கு தெரியுமா. என்று தெரியவில்லை.


*

பித்தன் முதல் ஞான பித்தன் வரை

*

நான் சிறு வயது முதலே தியானம் செய்து கொண்டிருந்தாலும் நேற்று தான் ஒரு பாறையின் மீது ( ஜிஸோ மலையிலிருந்து இருபத்தி எழு கி.மீக்கு அப்பால்) தியானம் செய்யும் பொழுது நான் எங்கு இருக்கின்றேன் என்பதையே மறந்தேன் உடலற்றநிலையை பெற்றேன்,

பாறை, மரம், செடி, கொடி, துள்ளி ஓடும் மான், அதை துரத்தும் சிங்கம், நதி, அதன் ஓசையில், அதிலிருக்கும் மீனில், ஆகாயத்தில், நிலவில், அதன் ஒளியில், விடியற்காலை சூரியனில், அதன் ஒளியில், கீழே கிடக்கும் கல்லில், துகளாக போய் உருவான மண்ணில், மண் புழு அதை தின்னும் குருவி, அதை விரட்டி தின்னும் பாம்பு, அதை தூக்கிக்கொண்டு செல்லும் பருந்து, அதை வேட்டையாடும் மனிதன், அவன் கையிலிருக்கும் வில்லில், இன்னும் இன்னும் என்னில் அடங்காதவைகளில்...

சுருக்கமாக சொன்னால் இந்த பிரபஞ்சத்தின் இயக்க இரகசியத்திலிருந்து, சுழியம் வரை நான் கலந்திருப்பதை உணர்ந்தேன்....

நான் பெற்ற அனுபத்தை....

நான் பெற்ற ஞானத்தை...

ஆம் நான் ஞாநியாகிவிட்டேன்... என்ன நம்பிக்கை இல்லையா ?

இருந்து விட்டு போங்க... எனக்கு ஒன்றும் நட்டம் இல்லை...

நீங்க என் குழந்தைகள்.. உங்களை காக்கும் பொறுப்பு என்னுடையது...

அதனால் என் அட்வைசை ஆரம்பிக்கிறேன்.....

இப்படி எல்லாம் சொல்லி நான் யோகி வேசம் போட்டு, பல ஆங்கில புத்தகங்களையும் வேற்று மொழி புத்தகங்களையும், கற்பனை கதைகளையும் சொல்லி கார்பரேட் சாமியாராக விரும்பல.... -:)

பித்தன் என்ற பெயரில் நிறைய நண்பர்கள் பதிவுலகிற்கு வந்துவிட்டதால் [பி]-[த்]-[த]-[ன்] என்று கட்டம் எல்லாம் போட்டு பெயரை மாற்றினேன் இப்படி இருந்தும் பின்னூட்டங்களில் குழப்பம் வருவதால் எனது பெயரை "[ஞான]-[பி]-[த்]-[த]-[ன்]" என்று மாற்றிக்கொண்டேன்

[பி]-[த்]-[த]-[ன்] என்ற நான் இன்று முதல் "[ஞான]-[பி]-[த்]-[த]-[ன்]"

*

டமில்டுமில் - கருத்து - எதிர்வினை

*
சப்பாத்தி மாஸ்டராக இருக்கும் டமில்டுமில் அனைவரும் கட்டாயம் சப்பாத்தி சாபிடவேண்டும். அவர் அவர் அவரது உணவை நன்றாக உண்கின்றனர் ஆனால் சப்பாத்தியை சாபிடமாட்டேன்கிறார்கள். அதனால் அனைவரும் கண்டிப்பாக சப்பாத்தியை சாபிடவேண்டும் என்று கூறுகிறார். சப்பாத்தி சங்கத்தின் முதல் தலைவரே அனைவரும் சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று கூறவில்லை அனால் வரது போறது எல்லாம் இப்படி சொல்ல என்ன காரணம் என்று தெரியவில்லை. மற்ற உணவுகளை இந்த மா மனிதர்கள் சாப்பிடமாடார்கலாம் ஆனால் மற்றவர்கள் இவர்கள் உணவை சாப்பிடவேண்டுமாம். அதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் பெரும்பாலானோர் உண்பது சப்பாத்தி அதனால் மற்றவர்களும் உண்ணவேண்டும் என்று கூறுகின்றனர்.

பெரும்பாலானோர் சாப்பிடவில்லை என்பதற்காக நாமும் சாப்பிடாமலா இருக்கமுடியும் ?. நம் நாட்டில் காக்காத்தான் அதிகம் இருக்கின்றது அதற்காக அதையா நாம் தூக்கிவைத்து கொண்டாடுகிறோம்?. அவர்கள், அவர்கள் உணவை மற்றவர் திங்கவேண்டும் என்று எதோ சர்வதிகார தோணியில் சொல்கின்றனர். இந்த இழவுக்குதான் கடை ஆரம்பிச்சவுடன் எங்க கூடவே இருக்கன்னு சொன்னது ?. அவர்கள் உணவையே எங்கள் மீது திணிக்கும் நபர்கள்தான் எங்களுக்கு கடையில் வேலை செய்ய சம உரிமை கொடுப்பார்கள் ?. ஹோட்டலில் எத்தனை சீப் குக்குகள் இட்லியோ அல்லது இடியாப்பமோ தின்பவர்கள் வந்திருக்கிறார்கள் சற்று யோசிக்கவும்? அல்லது இனிமேல் வருவதற்கு வாய்புகள் இருக்கின்றதா ? வாரிசு குக்குகள் மட்டுமே இனிமேல் சீப் குக்காக வர வாய்புள்ளது. கூறு கெட்ட குப்பன்கள் வேண்டுமென்றால் இன்று சப்பாத்தியை சாப்பிட்டுக்கொண்டு அவர்கள் அடையாளங்களை அளித்துக்கொண்டிருகிறார்கள். எந்த விதத்தில் என் இட்லியோ அல்லது பொங்கலோ கெட்டுபோகிவிட்டது.

சப்பாத்தி சங்கத்தின் நோக்கம் புரியாமல் நான் வெளிநாடு வந்தவுடன் இங்கு சப்பதிதான் கிடைக்குது, இட்லி வடை கிடைக்கவில்லை, எல்லாம் உங்களமாதரி ஆளுங்களாலதான் இன்னைக்கு கஷ்டப்பட்டு சப்பாத்தி சாபிடுறேன், அங்கேயே சாப்பிட்டு பழக்கம் இருந்தால் இந்த தொல்லை இல்லை என்று கூப்பாடு போடுகின்றனர். உங்களை யாராவது சட்டையை பிடித்து இட்லி மட்டும் சாப்பிடுங்கள் என்று கூறினார்களா ? சப்பாத்தி கிடைக்கும் நாட்டுக்குத்தான் போகபோகிறிர்கள் என்றல் சப்பாத்தி சாப்பிட கற்றுக்கொள்ளாதது யார் தவறு ?.

இவர்கள் உக்காந்த இடத்துல இருந்தே நோகாம நோம்பி எடுக்கனுமாம் அதுக்காக அனைவரும் சப்பாத்தி சாபிடவேண்டுமாம். இந்த கருமத்துக்கு பர்கரா திண்ண கத்துகிட்டா எந்தநாட்டுக்கு சென்றாலும் (பெரும்பாலான) பிரச்சனை இல்லை என்றால். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் இவர்கள் அடுத்தவர்களை பார்த்து குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டுகுறிர்கள் என்கிறார்கள் இந்த அறிவாளிகள். இன்னும் ஒரு கூட்டம் சப்பாத்தி சாப்பிட்டா எதோ ஊருக்கே படி அளக்கலாம் என்பது போல கூறுவது வாடிக்கையாக வைத்திருகிறார்கள். ஒரு கடை வைக்கவேண்டும் என்றால் பலவகையான உணவுகள் உண்பவர்களை வைத்து ஒரு கடை வைக்க ஆசை மட்டும் வைத்தால் எப்படி ? அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் அதற்க்கு வக்கில்லை என்றால் என்ன இழவுக்கு அனைவரையும் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை, இவர்களே கடையை நடத்தவேண்டும் மற்றவர்கள் கைகட்டி நடக்கவேண்டும் இவர்கள் சர்வாதிகார போக்கில் கடையை நடத்துவார்கள் ஆனால் இதை எல்லாம் எதிர்த்து கேட்டால் கடையின் முறையாண்மைக்கு எதிராக கேள்வி கேட்கின்றார்கள் என்று மிரட்டுவார்கள்.

ஒரு பெரிய கடை கீழ் அனைத்து வகையான உணவுகளும் வைத்து கொள்வது நல்லது அதற்க்கு தகுந்தாற்போல் அனைவரின் உரிமையையும் உணர்வுகளையும் மதிக்கதெரிந்தால் தான் அது ஒரு நல்லகடையாக அமையும். அதவுட்டுபுட்டு சப்பாத்தி சாப்பிடு என்று நேரம் சாதகமாக இருக்கும் பொழுது கூவுவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

சப்பாத்தி வேண்டும் கண்டிப்பாக சாப்பிடவேண்டும் என்பவர்கள் அவர்களே தேடி சென்று சாபிடுகிறார்கள் எதுவும் புரிஞ்சிக்காத அரவேக்காடுங்க தான் அவன் புள்ளமட்டும் சப்பாத்தி சாப்பிடுது, நம்மள ஏமாத்துரானுக என்று கூவும்... வேணும்ன்னா போய் தின்னுகளே யார் வேணான்னு சொன்னா ? அதவிட்டுபுட்டு எல்லாரும் என்னாத்துக்கு கட்டாயமா தின்னனும்ன்னு சொல்லுரிங்கன்னு தெரியல, எவனாவது நாலுபேரு ஏமாத்திபுட்டானுகன்னு சொன்னா, ஆமா ஏமாதிபுட்டனுகன்னு கன்னமூடிகிட்டு சொல்லுறது... கூவுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சிட்டு கூவுங்க....
*

ஏதோ ஒன்று

*

மெதுவாக துடித்த
இதயத்தில் அன்று
வேகம்

படிக்கட்டு தொடர்
பயணத்தில் வானில்
பால்நிலா

நின்று கொன்று
கொன்று தின்றது
நித்தம்

ஒருமுறை திரும்ப
பார்க்க திக்கத்த
பயணங்கள்

நடைபயணம்
தூரத்தில் தேநீரகம்
வானில் நிலா.

சிங்கை பதிவர் சந்திப்பு - போட்டோ கமெண்ட்ஸ்

*
23-ஆகஸ்ட்-2009 சிங்கை பதிவர் சந்திப்பு - போட்டோ கமெண்ட்ஸ்

பதிவுலக வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர் பித்தன்ஜி

*

பதிவுகளில் ஹிட்ஸ்/ஒட்டு வருவதில்லையா அணுகவும் பதிவுலக வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர் பித்தன்.

எனக்கு பதிவுலக வாஸ்து, ஜோதிடம், நேமாலஜி, ப்லாகாலஜி, நுமராலாஜி, அஸ்ட்ராலாஜி போன்ற அனைத்து வியாதியாலஜிகளும் அத்துபடி அது மட்டும் இல்லாமல் நான் கற்ற இந்த கலைகளின் மூலம் உங்கள் பிளாக்கை மேன்படுத்த வேண்டும் என்று நானே சில பதிவகளை எடுத்துக்காட்டாக கொண்டு விளக்கவுள்ளேன்.

ஒரு அஅடு போட்டுகிறேன்.

ஹிட்ஸ் வரலையா / ஒட்டு விழலன்னு கவலையா பித்தன்ஜிய பாருங்க.

பதிவெழுத மூடு இல்லையா இது உங்க வலை தள வாஸ்து கோலாராத்தன் இருக்கும் பித்தன்ஜிய பாருங்க.

ஒட்டுமட்டும் வருது பின்னூட்டம் வரலையா இதுக்கு கண்டிப்பா ப்லாகசுக்ரி தான் காரணம் பித்தன்ஜிய பாருங்க.

நாசமா போய்கிட்டு இருக்குற ப்லோக் நல்லாகனுமா உடனே பித்தன்ஜி அவர்களின் லேட்டஸ்ட் பதிவில் இரண்டு பின்னூட்டமிட்டு குறைகளை மண்ணஞ்சல் மூலம் அனுப்பவும் ( பின்னூட்டம் உங்கள் குறைகளை பெற மட்டுமே நிவர்த்திசெய்ய பிறகு சொல்லப்படும்)

பதிவுலக வாஸ்து புகழ் கொல்லிமலை மலைசுற்றி சித்தரின் ஆசிபெற்ற ஜோதிட திலகம் பித்தன்ஜி
நாசமா`ப்லாகையா தெரு,
போஸ்ட்`ன், பப்பு`லிஸ்ட்டு
அண்டார்`டிக்`டிக்`கா

பித்தன்ஜி விஜயம்

திங்கள் - செவ்வாய் ( ஹோட்டல் இதுதாண்டா சாக்கு, அறை என் 7.5 , எழாவது தளத்திற்கும் எட்டாவது தளத்திருக்கும் நடுவில் )

செவ்வாய் - புதன் (ஹோட்டல் மாட்டிகிட்டாண்டா மைனர், அறை என் கிடையாது, ரிசப்சன்லையே இருப்பேன் 24/7 )

புதன் - உறேனஸ் (ஹோட்டல் வாமுநிமா வா, அருகில் பிளாட்பாரத்தில் ( அங்கு யாராவது ஆக்குபை பண்ணிட்டா அதுக்கு பக்கத்தில்))

வியாழன் - நெப்டியுன் ( ஹோட்டல் வலது சோமணி, எட்டாவது டேபிளில் ஒரு கிளாஸ் பச்சதண்ணியுடன் காத்திருப்பேன் நீங்க யாராவது வந்தவுடன் தான் அடர் கொடுக்கணும்)

வெள்ளி - புளுட்டோ ( மொபைல் 005488773e093473 கால் பண்ணி ஆலூசனை பெற்றுக்கொள்ளவும் )

சனி - டோயோடோ (ப்லோக் டீ கடை வாசலிலேயே கடன் சொல்லி டீ குடிச்சிக்கிட்டு இருப்பேன் நீங்க வந்து கடனை செட்டில் பண்ணினவுடனே ஆலோசனையை தொடரலாம் )

ஞாயிறு - ஆள விடுங்கப்பா

*^*^*^**^*^*^**^*^*^*

இதோ சிலருக்கு இலவச ஆலோசனைகள்

ஆ.மு செய்யது - மழைக்கு ஒதிங்கியவை...

உங்களோட குறை : பதிவு அதிகமாக வருவதில்லை அல்லது உங்களால் எழுத முடியவில்லை.

பித்தன்ஜி ஆலோசனை : நீங்க அதிகம் பதிவு எழுதாததுக்கு காரணம் நேமாலஜி இசு தான். மழைக்கு ஒதிங்கிட்டு எப்படி காதல் கதை/கவிதை அடிக்கடி எழுதமுடியும் சோ "தேர் இஸ் றாங் வித் யுவர் ப்லோக் நேம்" காதல் கவிதை எழுதணும்ன்னா மழைல நினையனும். நினஞ்சாதான் கனவுல டூயட் பாடிட்டு வீட்டுக்கு போய் காச்சள்ள கஷ்ட படலாம். டுயட்டுல பாடினத பதிவா எழுதலாம்.(இலவசமா இவ்வளவுதான் ஆலோசனை வழங்கமுடியும்,)

*^*^*^*

சோம்பேறி - சோம்பேறி

உங்களோட குறை : சோம்பேறிநாளும் நிறைய பதிவெழுதிட்டு இப்ப ஆளையே காணோம்.

பித்தன்ஜி ஆலோசனை : இப்ப இவருக்கு நல்லகாலம் ஆரம்பிச்சிருக்கு அதான் பதிவெளுதனும்ன்னு நினச்சா கூட அவரால முடியல முடியாது, இன்னும் ஆறுமாசத்துக்கு மேல இவரு இதையே கடைபிடிக்கணும் இல்லாட்டி பூரிகட்டைக்கும், ஆஸ்பத்திரி செலவுக்குமே இவரது வருமானம் சரியாக இருக்கும். ஆனா இன்னும் மூனுமாசத்துக்கு உங்களுக்கு போன்பில்லு அதிகமா வரும்.

*^*^*^*

வால்பையன் - வால்பையன்

உங்களோட குறை : எதிர் பதிவுகள் எழுவது குறைந்து விட்டது

பித்தன்ஜி ஆலோசனை : இது ரொம்ப சுலபமா சரிபண்ணிடலாம் இது வாஸ்த்து பிரச்சனை, உங்க ப்ளோக்ல ஏதாவது ஒரு மூலைல ஒண்ணாம் தேதில இருந்து பதினைந்தாம் தேதி வரை நெப்போலியன் படத்தியும் பதினாறு முதல் மாதம் முடியும் வரை மானிடர் படத்தையும் வைத்தால். தானாக இந்த பிரச்சனை சரியாகிவிடும். அதன் அருகில் சிக்கன் பீஸ் , ஊறுகாய் வைக்க கூடுதல் பலன் கிடைக்கும்.

*^*^*^*

வினோத்கெளதம் - ஜூலை காற்றில்

உங்களோட குறை : ரொம்ப நாளா ஒரு பதிவையும் காணோம்.

பித்தன்ஜி ஆலோசனை : முன்ஜென்மத்துல செய்த புண்ணியத்தின் பலனா இவருக்கு இப்ப ஒரு மாசம் சுக்கரதிசை இருக்கும் அதனால பதிவெழுத மாட்டாரு ஆனா இந்த சுக்கரதிசை தாய் நாட்ட விட்டு கிளம்பினா பலிக்காது, திரும்பி பதிவெழுதி ப்லாகோமேனியா வந்துடும்.

*^*^*^*

பீர் - ஜெய்ஹிந்தபுரம்

உங்களோட குறை : இப்போதைக்கு பதிவு நிறையா எழுதுவிங்க

பித்தன்ஜி ஆலோசனை : நீங்க ஹெடர் இமேஜில ஷூ படம் போட்டதிலிருந்தே உங்களுக்கு வச்ச பதிவுலக பில்லி சூனியம் வேலை செய்யாம போனது மட்டும் இல்லாம உங்களுக்கு நல்லகாலம் போய்டுச்சி, அதிக பதிவு எழுத ஆரம்பிச்சிடிங்க, ப்ளாகோமேனியா தாக்காம பாத்துக்குங்க.

*^*^*^*

உண்மைத்தமிழன் - உண்மைத்தமிழன்

உங்களோட குறை : இவரது பதிவ படிக்க இரண்டு சோடா அல்லது ஒரு கட்டிங் தேவைபடுது

பித்தன்ஜி ஆலோசனை : வாஸ்த்து சரியில்ல, அதே போல சில பரிகாரங்கள் செய்யவேண்டி இருக்கு, இல்லாட்டி இவரோட நாப்பத்தி எட்டாவது வயசுல நான் யூத்து யூத்துன்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு, இவரு டெஸ்க்டாப்புல அல்லது பக்கத்துல இருக்குற முருகன் படத்த தூக்கணும், அங்க இல்லன்னா பதிவு எழுதுறப்ப முருகன நினைக்ககூடாது, கடவுள் கொடுத்த கொடைன்னு நினச்சி பிளாக்கர் டேட்டாபேச தீக்குறது மட்டும் இல்லாம ரிசசன் டைம்ல கூட படிக்கும் பதிவர்கள இரண்டு சோடா குடிக்க வச்சிடுவாரு.பக்கம் பக்கமா எளுதுறதுனால இவரு வலைத்தளமும் கூட ஸ்லோவா இருக்கும். டெம்ப்லேட் மாத்தினால் நல்ல பலன் உண்டு.

( 54 வயசுல இருக்கவங்களே யூத்துன்னு சொல்லுறப்ப இவரு தாராளமா சொல்லிகிடலாம்ன்னு.... எல்லாரும் சொல்லுறது காதுல கேக்குது பட் நான் என்னோட தொழிலுக்கு துரோகம் பண்ண முடியாதுல... )

அனைவரும் உங்கள் தளங்களை பிரபலமாக்க உங்கள் பிளாக்கில் வைத்த பில்லி சூனியம் எடுக்க, பித்தன்ஜியை நாடுங்கள்.

*^*^*^*

கட்டணம் : பிளாக் ஒன்றுக்கு ( 5 பின்னூட்டம் மற்றும் இரண்டு வோட்டுகள்***)

***(இந்த சலுகை முதல் பதினைந்து கஸ்டமர்களுக்கு மட்டுமே)

*

கிழமொழியில் எழுதப்பெற்ற பாடல்கள்

*

மகான் ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள் அருளிய பித்தபுராணம் நூலிலிருந்து சில பாடல்களும் ( நூல் கிழமொழியில் (கிழக்கு மொழி) எழுதபெற்றது) அதற்க்கு விளக்கங்களும் சொல்கிறேன்.


கிழமொழியில் எழுதப்பெற்ற பாடல்கள்

ஹிஹோ ஹம ஜிம ஸும சிஸ்ய சிறி
ஸஸிஹி ஹோஸ் ஹிஹோ ஹிஹிஹி
உஹொ ஸிகா ச்ஷிச்ச ஸிந்மெ ஜம்
ஸும்சா ஸிம்ஸா ஜிஹொ ஸிஸ்நா.

சிச்க்ஷா ஸுமா ஸிம்கொ ஹெமேஜோ
ஹோச்ற்றி விஸ்ரா விவாக வேவேகா
ஸுவக்திய ஸிஸ்த்ரியா சிம்ஜிலா ஸிஹி
சிமிஜி ஹூச்ம ஹோபாசு வித்ரிஸ்ஹ்மா

ப்பவோ விட்ரிஸ்ஹ ஸுலகா ஸும்ஸா
விஹாரத் விஸ்ஹ்வத்ரி விதொ னம்தோ
திஸ்மாஸ்ஹ்ய திர்ஸ்ஹ்மா திறி திந்ஸ்ஹா
அதம்ஸ்ரியா அகத்ரிஸ்தொ ச்டுஅமா ஹி

நஸ்ஹா நவஹோ நஜிஸ் நம்ஸ்ர்த்ஹா
பிர்ம்ஹெ பிரிஷ்த்ஷ் பிஹிஸ்ஹ் ஸுஹி
ஹம்ஷதத்தோ தஸ்ஹா தஸிர்ஹ சிஸ்
ஸிம்ஹொ சிம்ய் ஸிர்த்தா ஸிந்ஹா.

-ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள்

இனி மகான் எழுதிய பாடல்களுக்கான தமிழ் விளக்கவுரை.

ஹிஹோ ஹம ஜிம ஸும சிஸ்ய சிறி
ஸஸிஹி ஹோஸ் ஹிஹோ ஹிஹிஹி


பிறப்பால் தன்னை உயர்ந்தவன் என்று கருதுபவனும் தாழ்ந்தவன் என்று கருதுபவனும் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள்.

உஹொ ஸிகா ச்ஷிச்ச ஸிந்மெ ஜம்
ஸும்சா ஸிம்ஸா ஜிஹொ ஸிஸ்நா

மனிதனை மனிதனாக மதிப்பவனும், இறைநிலைக்கு சென்றவனும் ஒன்றே

சிச்க்ஷா ஸுமா ஸிம்கொ ஹெமேஜோ
ஹோச்ற்றி விஸ்ரா விவாக வேவேகா


சகுனம், சடங்கு, சம்பரதயத்தை போதிப்பவன் அல்லது பார்ப்பவன் சாமியாராக இருக்க முடியாது

அன்பை மட்டுமே போதித்து அப்படியே அவனும் வாழ்ந்தால் அவனே ஆசான்.
மூணு வேலை பூசை செய்தாலும், இருபத்திநாலு மணிநேரம் இறைவனை நினைத்தாலும், எதையும் நினைக்காதவன் அருகில் கூட செல்ல இயலாது.

ஸுவக்திய ஸிஸ்த்ரியா சிம்ஜிலா ஸிஹி
சிமிஜி ஹூச்ம ஹோபாசு வித்ரிஸ்ஹ்மா

தான் பிறந்த தேசத்தின் பெருமையை மற்றும் தான் சார்ந்திருந்த மதத்தின் துதி பாடுபவனுக்கு எப்படி அனைத்தையும் ஒன்றாக பார்க்கும் மனது இருக்கும், பிறகு அவன் எப்படி ஞானி ஆவான் ?

ப்பவோ விட்ரிஸ்ஹ ஸுலகா ஸும்ஸா
விஹாரத் விஸ்ஹ்வத்ரி விதொ னம்தோ


மதம் பிடித்தாடும் மதத்தை கட்டிக்கொண்டால் உனக்கும் மதம் பிடிக்கும்.
சாதியை தோற்றி வைத்தல் அந்த சாதியே அவர்களை அளிக்கும்

திஸ்மாஸ்ஹ்ய திர்ஸ்ஹ்மா திறி திந்ஸ்ஹா
அதம்ஸ்ரியா அகத்ரிஸ்தொ ச்டுஅமா ஹி


யாருக்கும் தீங்கிளைகாமல் வாழவேண்டும் என்று விரும்பி அவ்வாறே வாழ்ந்தால் உன் வாழ்க்கைதான் வேதம், மற்றதெல்லாம் குப்பை.

நஸ்ஹா நவஹோ நஜிஸ் நம்ஸ்ர்த்ஹா
பிர்ம்ஹெ பிரிஷ்த்ஷ் பிஹிஸ்ஹ் ஸுஹி


மொழிகளில் பீத்தமொழி, நல்லமொழி என்று ஒன்றும் இல்லை எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது.
எந்த மொழியில் எழுதப்பட்ட பாடலையும் மனமுருகி பாடினால் அதிர்வலை அதுவாகவே வரும், அனைத்து மொழிகளுக்கும் சக்தி உண்டு.

ஹம்ஷதத்தோ தஸ்ஹா தஸிர்ஹ சிஸ்
ஸிம்ஹொ சிம்ய் ஸிர்த்தா ஸிந்ஹா


எனக்கு கிழமொழி மட்டும் தான் தெரியும் அதனால் தான் இந்த நூலை அந்த மொழியில் எழுதினேன். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து எனது கருத்துக்களை அணுஅளவும் கடைபிடிக்காமல், மொழியை மட்டும் பிடித்துக்கொண்டு அதையும் முழுவதும் படிக்காமல், சரியாக உச்சரிக்க மற்றும் அர்த்தம் தெரியாமல் அதுவருது, அதிர்வலை வருது சக்தி வருது கடவுள் மொழி என்று கதை விட்டு மொழியை சிதைக்காமல் இருந்தாலே போதும்.

இந்த பாடல்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பாடல்களாக இருக்கலாம் .

உள் நோக்கி

*


சோறு கொடுக்க
சோதிக்கும் ...
மதியற்றவனனா ?

விடையும் கொடுக்கா
வழியும் கொடுக்கா
பித்துபிடித்தவனோ ?

வினைதீர்க்க
வினையறுக்க
வீற்றிருப்பானோ ?

முத்திகொடுத்து
பிறப்பறுக்க
முயல்கின்றவனோ ?

பிறப்பருமை
தெரியாத
பிண்டபிறவிக்கு

இவன் பிறப்பறுக்க
பிறந்திருக்கிறேன்
உள் நோக்கி.


*

பிரபல பதிவரின் பயோடேட்டா, படிக்க வாங்கோ... வாங்கோ...

*

பிரபல பதிவரின் (சந்தேகமா ? சோத்தாங்கை பக்கம் பாருங்க பதக்கத்த) பயோடேட்டா, படிக்க வாங்கோ... வாங்கோ...

பெயர் : பிரபலபதிவர்

புதிய பெயர் : ப்லோகிங் கிங், பின் நவினத்துவ பதிவர் , சைடு நவீனத்துவ பதிவர், லெப்ட் நவீனத்துவ பதிவர், ரைட் நவீனத்துவ பதிவர்

வயது : இரவுமுழுவதும் ஜி டாக்கில் கடலை (ஜொள்ளு விடும்) போடும் வயது.

தொழில் : ஒருவரை(மாட்ரவங்கள) குறிவைத்து பதிவுலகை விட்டு விரட்டுதல்.

உபதொழில் : அவர் திரும்ப பதிவுலகிற்கு வந்தால் விட்டுவிடுதல்.

குணம் : பாராட்டே ஆனாலும் ஆண்கள் மின்னஞ்சல் மட்டுமே அனுப்பவேண்டும், பெண்கள் திட்டுவதாக இருந்தாலும் என் கைபேசிக்கு அழைக்கவேண்டும் என்று எண்ணுவது.

குரல் : சும்மா கிடக்குற சங்க நல்லா எடுத்து ஊதிட்டு, அப்பாலிக்கா சங்கே ஊதாதமாதறி நடிக்குறது.

நண்பர்கள் : நா கண்டததுக்கு, எல்லாம் சங்க ஊதுரப்ப கூட சேந்து ஊதுபவர்கள்

எதிரிகள் : நான் சங்கு யாருக்காக ஊதிநேனோ அவர்களே கண்டுகொள்ளாததால்.

பிடித்த வேலை : பதிவில் ஜொள்/ரொமான்ஸ்/காதல்/தூதுவிடல்.

பிடித்த பதிவு : சோ கால்ட் பிரபல பதிவர்கள், பதிவுகள் (படிக்காமலேயே)

பிடிக்காத பதிவு : என் நண்பர்களுக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது (நல்லருந்தாகூட)

பிடித்த வலை : எதிர்பதிவு. பிரச்சனைய கிளப்பி.ஜகாவாங்கி. பதிவ தூக்கி. காம்

விரும்புவது : தனி ஒரு நபருக்காக/நபருக்கு மட்டும் புரியும் வகையில் எழுதும் ரொமான்ஸ்/லாவ்ஸ்/ஜொள்ஸ் கவிதைகள்

விரும்பாதது : மேலே சொன்ன கவிதைகள் எனக்காக எழுதபடாதது.

பொழுதுபோக்கு : மொக்கை பதிவுகள் இடுவது.

புரிந்தது : குருப்பா இருந்தாதான் பதிவுலகில் தொடர்ந்து எழுத முடியும்.

புரியாதது : மொக்கையா நாம கருத்து சொல்லுவோம், ஆனா இன்னொருத்தர் அதே போல மொக்கையா கருத்து சொன்னா கூடி கும்மியடிக்குறது.

எளிய செயல் : எதிர்பதிவு போடுவது

அதைவிட எளிய செயல் : ஐந்து நிமிடங்களில் அதை தூக்குவது

சமீபத்திய எரிச்சல் : ரொம்ப பிளான் பண்ணி நடத்துன நாடகம் புஸ்ஸுன்னு போச்சி. (ரொம்ப உசாரா இருக்காங்க மக்கள் -:( )

நீண்டகால எரிச்சல் : ஒரு மொக்கை பதிவர்ன்னு முத்திரை குத்தப்பட்டது.

சமீபத்திய சாதனை : கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல.

நீண்டகால சாதனை : பிரபலபதிவர்ன்னு பிலிம் காட்டுறது

எந்த வளமும் இல்லாத நாடு எப்படி முன்னேறுவது ?


சுதந்திரம் பெற்றபொழுது எந்த வளமும் இல்லை, ஆனால் இன்று ஆசியாவில் சிறந்த பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடு, பல ஆண்டுகளுக்கு முன்பே பலலட்சம் வெளிநாட்டவருக்கு வேலை வாய்ப்பையும் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்த நாடு.

ஆண்டு 1965


ஆண்டு 2000
ஆண்டு 2009

நம்பிக்கை, உழைப்பு, நல்ல தலைமை இருந்தால் எதுவும் சாத்தியம், என்பதை நிருபித்த, நிரூபிக்கும் சிங்கை இதற்க்கு உதாரணம்.

சிங்கைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

*


44 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் சிங்கைக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.எங்கே கடவுள் ? ( எதிர் வினை)அண்ணன் அப்பாவி முரு தேடிகொண்டிருக்கும் கடவுளை நான் இங்கு காட்டுகிறேன்.

பணக்காரனும் தேடுகிறார்,ஏழையும் தேடுகிறார்.
போற்றியும், திட்டியும்சகஸ்ரநாமம் பாடுகிறார்.
வேண்டுமென்றும், வேண்டுமென்றும்

வேலைகள் பல செய்கிறார்,

வேண்டுமென்பவர் வேண்டுமென்றும்,

வேண்டாமென்பவரும் வேண்டுமென்றும்

உருத்தலில்லாமல் வேண்டுகிறார்.

அங்குமில்லாமல், இங்குமில்லாமல்

நடுவில் அப்பாவியாக நின்றாதால்

இருவரும் பெற்ற பெரும்பேர்

எனக்கில்லாமல் போகுமோ?

வேண்டுமென்பதோ, வேண்டாமென்பதோ

இன்றே தெரிந்தால்,

போற்றியோ, திட்டியோ

சகஸ்ரநாமம் பாட

நானும் தேடுகிறேன்

எங்கே பணம் ?

-ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள்பின்னூட்ட குறிப்பு :: குழந்தை முரு (கூல்..கூல்... நா இப்ப சுவாமி) அவர்கள் இரண்டு பின்னூட்டங்களும், மற்றவர்கள் தலா ஒரு பின்னூட்டமூம் இட்டு சுவாமிகளின் ஆசியை பெறுங்கள்."பிரபல பதிவர்" விருது வழங்கும் விழா

*

நான் அறிவித்த இந்த ( சோத்தாங்கை பக்கம் ஒரு "பிரபல பதிவர்" விருது விற்பனைக்கு இருக்கும் சொடுக்கி பாருங்க) திட்டத்தில் பங்குபெற்று ஒரே வாரத்தில் பிரபலமானோர் பலர், அவர்களை அங்கீகரிக்கப்பட்ட பிரபலபதிர்வர்களாக அறிவிக்கிறேன் இனிமேல் அவர்களும் இதை "எம்.எல்.எம்" போல் தொடரலாம்.


குறிப்பிட்ட தொகை பின்னூட்டம் மற்றும் ஒட்டு போட்டவர்களுக்கு மட்டுமே கம்பெனி விருதை அறிவிக்கின்றது. இந்த லிஸ்டில் உள்ளவர்களில் யாரும் கையூட்டு கொடுக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
வால்பையன்


இவரு நம்ம கம்பெனி விருத அறிவிக்கிறதுக்கு முன்னாடியே நம்ம கடை கஸ்டமர் ( கொலை வெறி கவுஜைகளுக்கு) அதனால் அண்ணாத்தைக்கு முதல் விருது. ( இவரு ஏற்கனவே பிரபலம் அப்படின்னு கூவுரவங்களுக்கு சொல்லிகிறேன்.. அப்படியே இருந்தாலும் இனிமேல்தான் இவரு அங்கீகரிக்கப்பட்ட பிரபலம்)

*^*^*^*

ஜெகதீசன்


இவரு பதிவுலக அங்கீகார ஆணையம் அப்படி இப்படின்னு ஆரம்பிச்சி இருந்தாலும், இவ்வளவு நாளும் அங்கீகரிக்கப்படாத பிரபலமாதான் இருந்தாரு இன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட பிரபலம். ( ஒவ்வொரு பதிவுலயும் -:))) போட்டே விருத வாங்கிட்டாரு, இனிமேல் இது போல பின்னூட்டம் போட்டால் விருதுக்கு எற்றுக்கொள்ளபடாது )

*^*^*^*


அ.மு.செய்யது


இவரு பழைய கஸ்டமருதான் பட் இவரோட பின்னூட்ட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. மழைக்கு ஒதுங்காம ஜன்னில எங்கயோ போய்டாருன்னு நினைக்குறேன் இருந்தாலும் விருது கொடுக்கப்படுகிறது. ( எதிர் கவுஜை ஏகாம்பரம்ஸ் ஜாஸ்தி ஆகிட்டதால இப்ப கவிதை எழுதுறதையே நிப்பாடிடதாக நியூஸ் )

*^*^*^*


தேவா சார்


இவரு ரொம்ப நல்லவரு, லேட்டானாலும் லேட்டஸ்டா வந்து பின்னூட்டம் போடுவாரு... ( திரும்ப திரும்ப கேக்ககூடாது,,, பிரபலமா இருக்கலாம் அங்கீகரிக்கப்பட்ட பிரபலம் இன்றுதான் )

*^*^*^*

லோகு


இவரும் திரும்பி எழுதவந்ததுக்கு தனியா காரணம் சொல்லவேண்டாம், இந்த விருத இவரு வாங்குரப்பவே தெரியும் உங்களுக்கு, நிறைய பதிவுக்கு முதல் கஸ்டமர், சோ இவரும் இன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட பிரபல பதிவர். ( ரொம்ப பீலிங்க்ஸா கவிதா எழுதிகிட்டு இருக்காரு எதிர் கவுஜை போட்டாதான் சரிப்பட்டு வரும் )

*^*^*^*


S.A. நவாஸுதீன்


இவர் போட்டில ரொம்ப உண்மையா மற்றும் அதற்காக உழைத்து விருதை பெறுகிறார். ( டேக் ஹிம் அஸ் எக்சாம்பல் )

*^*^*^*


குரும்பையூர் இலக்கியா


இவரும் போட்டில ரொம்ப நேர்மையா பங்குபெற்று விருதை பெறுகிறார். ஆனா இவரு பேக்கேஜ்ஜவிட அதிகம் பின்னூட்டம் போட்டுடாரு சோ இவருகிட்ட இன்னொரு வலைத்தளம் இருந்தா அதுலயும் விருத போட்டுக்கலாம்.

*^*^*^*


சக்கரை சுரேஷ்


முப்பது மார்க் எடுக்குரவங்கள இனிமேலாவது நல்லா படிக்கட்டும்ன்னு கூட அஞ்சி மார்க் போட்டு பாஸ் பண்ணிவிடுரமாதரி இவருக்கு இந்த விருது... பதிவுலகவிட்டு கொஞ்சநாள் ரெஸ்ட் எடுக்கபோனவரு எப்படி சீக்கிரம் திரும்பி வந்தாருன்னு பாத்தா இந்த விருதுதான் இவர இழுத்துகிட்டு வந்திருக்கனம்ன்னு நினைக்குறேன். ( இப்ப அன்ப வெளிபடுத்த என்னோட அட்ரஸ தேடுவிங்கன்னு தெரியும்... கூல்... கூல் )

*^*^*^*

நிறையபேர் சொற்ப வித்யாசத்துல விருத கோட்டைவிட்டுடிங்க.. மனம் தளராம ட்ரை பண்ணுங்க... ஆல் தி பெஸ்ட் பார் வின்னர்ஸ்.... மற்றவர்களுக்கு வழக்கமா சொல்லுறது தான்... ம்ம் அதேதான் "பெட்டெர் லக் நெக்ஸ்ட் வீக்".

பிரபல பதிவர்களுக்கு துதி பாடுவது எப்படி ?

*
அறிவிலி அய்யா

சிம்லா ஸ்பெஷல்லும் நீயே
சிங்கை ஸ்பெஷல்லும் நீயே
காமெடி கிங்கும் நீயே
பதிவுலக நாயகனும் நீயே.
அறியாமையை விரட்டுவதும் நீயே.
அறிவுக்கு அரசன் "அறிவிலி அய்யாவே"

*-*-*

குழலி

சோழநாட்டு பிகரென்று நினைத்தால்,
சுழன்றடிக்கும் சூறாவளி காற்றே,
அரசியல் விமர்சனம் எழுதி
அகல்விளக்காய் ஒளி தருகிறாயே.
களத்துமேட்டு காளையே
கடலூர் கம்பனே
வாழ்க நீ பல்லாண்டு !!!
வளர்க உன் தமிழ்தொண்டு !!!

*-*-*

கோவியார்

ஆத்திகனா இல்லை நாத்திகனா ?
தமிழனா இல்லை திராவிடனா ?
இலக்கணமா இல்லை இலக்கியமா ?
சிறுகதையா இல்லை தொடர்கதையா ?
தலைக்கனமில்லா தமிழ்மகனே
பதில் கூறு மறுகணமே !!!

*-*-*

ஜோதியார்

வெளிச்சத்தை தேடி
எங்கெங்கோ அலைந்தேன்.
சிங்கையில் இருப்பதாக
தெரிய உடனே விரைந்தேன்
கொல்லிமலை குப்புவோடு
அரசியலை விவாதிக்கும்
ஆதவனை போன்ற சோதியாரை
காண கண்கோடி வேண்டும்.
உம்மை துதிபாட
முத்தமிழும் உடனே
எனக்கு வேண்டும்.

*-*-*

முகவை இராம்

மென்பொருளோடு உருண்டு
வன்பொருள் செய்யும் எம்பொருலே
தமிழை வில்லாய் வளைத்து
சொல்லை அம்பாய் இழுத்து
வெண்பாவாக எங்கள் இதயத்தில்
தைக்கும் சங்கயிலக்கியமே
முகவைக்கு மைந்தனே
முத்தமிழுக்கு மூத்தவனே
வாழ்க உம்தமிழ்பணி !!!

*-*-*

கிரி

தமிழ்திரைப்பட சூப்பர் ஸ்டார் அவரு
ப்லோக்கிங் சூப்பர் ஸ்டார் இவரு
இவர் பதிவ படிச்சாலே பவரு
சிங்கைல இவர விட்டா எவரு.


*-*-*

வேடிக்கை மனிதன்

சரவண பொய்கையில் நீராடி
வேடிக்கை வலையில் நாம் கூட
சிந்தனையை தெளிக்கும் பெருமகனே
தேடலில் குதிக்கும் திருமகனே
கும்மி பதிவிடா குலமகனே
கூடியவிரைவில் உமக்கு மாலையிட
மங்கை கிடைக்ககடவது மணமகனே.

*-*-*

அப்பாவி முரு

அயல் தேசத்திலிருந்தாலும்
உன் அன்னைதேசத்து பற்று
அன்னைதேசத்தை விட பெருசு
அதவிட உங்க கோபம் பெருசு
அதவிட உங்க பாசம் பெருசு
அதவிட உங்க நட்பு பெருசு
அப்பாவின்னு பேருவச்சிருக்க
அப்பவியன்னே நீங்க.

*-*-*

பால்ராஜ்

நேற்று பிறந்தவரும் உமக்கு அண்ணன்தான்
இன்று பிறந்தவரும் உமக்கு அண்ணன்தான்
நாளை பிறப்பவரும் உமக்கு அண்ணன்தான்
அடுத்தசென்மத்தில் பிறப்பவரும் உமக்கு அண்ணன்தான்.
மேலே பார்த்தாலும் அண்ணன்தான்
கீழே பார்த்தாலும் அண்ணன்தான்
சைடுல பார்த்தாலும் அண்ணன்தான்
லெப்டுல பாத்தாலும் அண்ணன்தான்
ரைட்டுல பாத்தாலும் அண்ணன்தான்
ஏன் இந்த அகிலமே உமக்கு அண்ணன்தான்.
அண்ணன் அண்ணன் அண்ணன் அண்ணன்
எனக்கு நீங்கதான் அண்ணன்.

*-*-*

'டொன்'லீ

நீ பேசுவதே பாடுவதாக
நீ பாடுவதே இசையாக
நீ இசைப்பதே ராகமாக
உன் ராகமே சங்கீதமாக
உன் சங்கீதமே காதலாக
உன் காதலே தமிழாக.

*-*-*

ஜெகா

" 'ஜெக' தீசன்"
...சும்மா பேரகேட்டாலே அதிருதுல்ல,...
...அதிரடிதான் ஜெகா ஜெகா ஜெகா ஜெகா...
... விருதுனாலும் ஜெகா ஜெகா ஜெகா ஜெகா...
...அங்கீகாரம்னா ஜெகா ஜெகா ஜெகா ஜெகா....
...அனைத்துமே ஜெகா ஜெகா ஜெகா ஜெகா....

*-*-*

அம்மாஅப்பா

அம்மாவும் நீயா அப்பாவும் நீயே...
பின்னூட்டமிட்டு ஆதரிக்கும் தெய்வமும் நீயே ...
நல்லபதிவுக்கு ஓட்டுபோட ஓடிவருவாயே...
மொக்கைபதிவை திரும்பிகூட பார்க்கமறுப்பாயே...
சோழகுல சிங்கத்திலே நீயும் ஒருவனே
உச்சிபிள்ளையார் உன்னுடனே துனையிருப்பானே....

*-*-*

பின்னூட்டபுயல் விஜய் ஆனந்த்.

நல்ல பதிவை நாடுபவன்
ஒட்டு போட்டு வாழ்த்துபவன்
ஓரமாக போகிறவன்
உசிப்பேற்றினால் எழுத்தில்
உதைக்கின்றவன்.

*-*-*

வாசகர் பாஸ்கர் அண்ணாச்சி,

வாசிப்புக்கு பாஸ்கர்
வசந்தத்துக்கு பாஸ்கர்
வள்ளல் பாஸ்கர்
வாசகர் பாஸ்கர்

யாரோ :: என்ன எல்லாம் சிங்கை பதிவர்களா இருக்காங்க மற்ற பிரபல பதிவர்கள் பேர காணோம்.

நானேதான் :: சந்திப்புக்கு போனா, டீ,காப்பி, பக்கோடா,வடை, போண்டா, கேசரி, வெவிச்ச கடலை, கோக், ஹன்ட்ரட் பிளஸ், எல்லாம் இவங்கதான் கொடுக்குறாங்க,,, இனிவர சந்திப்புகளிலும் நேக்கு இது எல்லாம் வேணும், புரியறதோ ? காசு கொடுக்குரவங்களுக்கு ஒட்டு போடாம காசு கொடுகாதவங்களுக்கு ஒட்டு போடா நாங்க ஒன்னும் மனசாட்சி இல்லாதவங்க கிடையாது.
.
முக்கிய குறிப்பு : துதி பாடப்பட்டவர்கள் எல்லாம் 10 டாலரை கீழ் கண்ட வங்கி கணக்கில் செலுத்தவும்.

வங்கி : துதி பேங்க், சிங்கை கிளை
அக்கொண்ட் என் : 000000000010000000000
*

போண்டா + எண்ணை = ?

*
"ரிஸ்" போண்டா சுட அதில் மசாலா அதிகமாக இருக்கின்றது என்று "புரவோ" சொல்கிறார், புரவோ யார் என்று பார்த்தல் இவர் தன்னை போண்டா கட்டுபாட்டு வாரியத்தை சேர்ந்தவர் என்று கூறிகொள்வதாக மற்றவர்கள் கூறுகின்றனர், போண்டாவில் எப்படி மசாலா என்று பார்த்தால் அது மசால் போண்டா, மசால் போண்டாவில் மசாலா இல்லாமலா இருக்கும் என்று ரிஸ் வினவ, அதில் மசாலா அதிகமாக இருப்பதுவே கண்டனத்துக்குரியது அதிலேயும் அதிகம் எண்ணை இருப்பதால், கொழுப்பு கூடிவிடும் என்றும் கூறுகிறார்,

எண்ணை பண்டங்களைத்தான் இளசுகள் முதல் பெருசுகள் வரை விரும்பி உண்பதால் அதை சுடுவதாகவும் இதற்க்கு கடைகாரரும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார், போண்டா சுட ஆரம்பித்த புதிதில் எண்ணை அதிகமாக இருந்தது என்றும் பிறகு குறைந்து கடந்தவாரம் சுடப்பட்ட போண்டாவில் அதிகம் இருந்ததாகவும் அதற்க்கு கடைகாரரும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றார் புரவோ. போண்டா சரியில்லை என்றால் போண்டாவை விமர்சிக்கலாம் ஆனால் போண்டா சுடுபவரை எப்படி விமர்சிக்கலாம் என்று போண்டோ சுடுவோர் சங்கத்தின் சார்பாக கேள்விகள் எழுப்புகின்றனர்.

முக்கோணவடிவில் இருந்திருந்தால் தானே பாராட்டிருப்பேன் ஆனால் அது ஹார்ட் வடிவில் இருப்பதால் அதை தின்று மக்கள் காதலிக்க ஆரம்பித்து கடை கடையாக தேடி தேடி ஹார்ட் வடிவ போண்டா தின்று காதலிப்பதாகவும் புரவோ கூறினார். அதே நேரத்தில் ரிஸ்சின் கழுத்தில் போட்டிருந்த புதிய தங்கசங்கிலியை பற்றி தேவையில்லாமல் இழுத்திருப்பதற்கு போண்டா சுடுவோர் சங்கத்தின் சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தங்கசங்கிலி போட்ட அன்று வாழ்த்திய அனைவரும் உங்கள் கடையில் போண்டா தின்பவர்கள் என்பதை மறந்துவிட கூடாது என்று புரவோ தரப்பு கூறுகின்றனர்.

மசால் போண்டோ சுடுவதால் தன்னை தாக்குவது எந்தவகையிலும் ஏற்கமுடியாது, இது விமர்சனம் அல்ல போண்டா மாஸ்டரை தாக்குதல் என்று மேலும் ரிஸ் கூறினார், உருளைக்கிழங்கு, வெங்காயம் எல்லாம் போட்டு போண்டா செய்யப்பட்டிருக்கிறது என்று கூறிருந்தால் பிரச்னை இல்லை அவர் செய்முறையை எல்லாம் சொல்வதால் அனைவரும் அதை முயற்சி செய்து பார்ப்பார்கள் அது அவர்களுக்கு நல்லதல்ல என்று தனது கருத்தை புரவோ கூறி அதற்கான பதிலை ரிஸ்சிடம் கேட்கிறார்.

உருளை வெங்காயம் கருவேப்பிலை
கடுகு மிளகாய் கடலைமாவு இதை
உருட்டி பிரட்டி எண்ணையில்
போட்டால் அதுவே போண்டா.

பித்தன், புட் நியூஸ்

கருத்துக்கள் வரவேற்கபடுகின்றது :: எங்க நீ சொல்லே, எங்க நீ சொல்லே, நீ சொல்லே, அட நீயாச்சும் சொல்லே...

ஆல் இன் ஆல் அழகுராஜா :: இன்னாத்துக்கு கருத்த கூவிபுட்டா,,, நம்ம ஊட்டு பக்கம் கும்மி, மலையாள மணத்துல நம்ம ரைடிங்ஸ்ஸுக்கு அதிக ஒட்டு அப்பாலிகா நம்மள பேமசாக்கி அல்லாரும் ஒட்டி பதிவு, பேட்டி, உங்கள் அன்பிற்கு நன்றி, மீண்டும் எழுதுகிறேன் இதானே எதிர் பாக்குற, அசுக்கு பிசுக்கு.

.

உங்கள் அன்பிற்கு நன்றி - மீண்டும் எழுதுகிறேன்.

*
நான் கொலைவெறி சரக்கு கவுஜைகளை எழுதுவதை நிறுத்தியதை கண்டித்து பல கோடி,(தெருகோடி இல்ல பலகோடி) மடல்கள், மெசேஜ், அழைப்புகள், பேக்ஸ், ஈமெயில், எல்லாம் வந்ததை கண்டு தபால்காரர் முதல் தந்திகாரர் வரை காண்டாகிவிட்டனர், இதற்க்கெல்லாம் மேலாக நேரிலே வந்து அன்பாக பல வாசகர்கள் கவனித்தது இன்னும் வலிக்குது ச்சி இனிமையாக இருக்கின்றது,


"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்"

என்ற அய்யனின் குறளுக்கான விளக்கத்தை கொடுத்து சென்றனர்.
அவர்கள் கவனித்துவிட்டு செல்லும்பொழுது எவ்வளவு அடிச்சாலும் தாங்குரானே அவன்தான் இவனா இல்லை இல்லை எவ்வளவு அழகா எழுதுறானே அவரா இவரு என்று அவர்கள் கைகளை எடுத்து என் கன்னத்தில் ஐயோ இணைக்கு டைப் பண்ணுறது தப்பவே போகுது என் கைகளை எடுத்து அவர்கள் கண்ணில் ஒத்திக்கொண்டனர்.

சில சாம்பிள் மடல்கள் :

*****

தோபாரு பிராந்தியன்,

நீங்கள் கொலை வெறி கவுஜைகள் எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள் என்று கேள்விப்பட்டு ஆழ்ந்த வேதனையில் சிக்குண்டுவிட்டேன்... காரணம் என் தொழில் நொடித்துவிட்டது,,, அடிதடி வேலை செய்யும் நான் வேலைக்கு போகும் முன் உங்கள் கவிதைகளை படித்து வெறியேத்திகொண்டிருக்கும் பொழுதே எதிர்படுபவர்களை பந்தாடிவிடுவேன்,,,, இபொழுது எல்லாம் காலேஜி போற புள்ளைய காதலிக்குறது போல அமைதியா ஆயிட்டேன், ஒழுங்கா நீ கவுஜை எழுதலனா காதல் தோல்வி கண்ட காதலன் மாதரி உன்ன கைமா பண்ணிடுவேன்.

-ட்டேன்கிசு-
சோமாறி மடசு

_____

திரு சோமாறி மடசு,

நீங்கள் எழுதியது போல பல கடிதங்கள் வந்ததாக காண்பித்து கண்டிப்பாக இதையே சாக்காக வைத்து எழுத தொடங்குகிறேன், முடிஞ்சா ஒரு கட்டிங் ஆடர் செய்யவும்...

'பிராந்தி'யன்
54:08 MM

*****

எப்படிகீர நைனா,

இன்னோமோ நீ எழுதுறதா நிப்பாட்டிகின்யாமே, சரி இல்ல அம்புட்டு தான் சொல்லுவேன், அப்பாலிக்கா கைபோச்சி, பேனா போச்சின்னு எல்லாம் கூவிகினு கிடக்கக்கூடாது, புரியுதா,,, எதுக்கு எழுது எழுதுன்னு சொல்லுறேன்னு பாக்குறியா,,, என்னோட மொவன் ஊட்டு பாடம் எழுதலனா உன்னோட கவுஜயதான் காமிச்சி பயமுறுத்துவேன், உடனே படிக்க உக்காந்துக்கும்.... அம்புட்டுதான் சொல்லுவேம் எழுதுறதா நிப்பாட்டாத நிப்பாட்டினா மூச்சே நின்னுக்கும்...

-நண்டிர்ரிபா
காஞ்ச கருப்பட்டி

_____

திரு காஞ்ச கருப்பட்டி,

உங்கள் கடிதத்தை கண்டு மிகவும் பெருமையாக உள்ளது, என்னை வைத்து பலர் படிகின்றாகளா ?, இவ்வளவு நாள் இது தெரியாம போச்சி, இல்லாங்காட்டி இதவச்சி நான் விளம்பரம் செய்து, மஜா டிவியில் மங்கமாஉடன் ஒரு சந்திப்புல ஒரு வாய்ப்பு வாங்கி பெரிய கவிஞனாக ஆகிருப்பேன், தகவல் தந்தமைக்கு நன்றி,

-"எதிர்"பாப்புடன்
பிராந்தியன்


*******

டேய் லாடுலபக்குதோசு,

உன்னோட கவுச அன்ஜிசெண்டுக்கு பிரோஜனம் இல்லனாலும் படிகுரத நிறுத்த முடியல, ஒழுங்கா மரியாதையா கவுஜைய எழுது நிறுத்தாத, எதோ பெருமையா சொல்லுறன்னு நினைக்காத, காலை கழுத முகத்துல முழிச்ச நல்லது நடக்குமாம் அசிதிஎலையாவுல கழுதை எல்லாம் கிடையாது, அதனால உன்னோட கவுஜய பாக்குறேன், முடிஞ்சா கழுத படத்தையும் உன்னோட ப்ளோக்ல சைடு ஸ்பாட்டுல போடு, சைடிஸ் ஸ்பாட்டுல கொஞ்சம் ஊறுகாய போடு,

தவினஸ் நண்பி
அசிதிஎலையா

____

நன்றி தவினஸ் நண்பி,

நீங்கள் கேர்ள்வாசகர் என்பதால் கண்டிப்பாக நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவேன், உங்கள் புளாக் அடுரசை கொடுத்தால் படிக்காமலே ஆகா, ஓகோ என்று பின்னூட்டமிடுவேன், மெயில் அடுரசை கொடுங்கள் நாள் முழுவதும் சாட் செய்யலாம்***

ஜொள்ளுடன்
பிராந்தியன்

*** அடுத்த கேர்ள் பிரண்டு கிடைக்கும்வரை


*******

இதற்க்கு மேல் வந்த மெயல்களில் மிகவும் மட்டமாக ச்சி மதிக்கத்தக்க வகையில் எழுதிருந்ததால் இத்தோடு முடித்துகொள்கிறேன்,

ஐ அம் பேக்கு இல்ல இல்ல பேக்.

பஞ்சி டைலாக் :: ப்லோக்கிங்கிறது ஒரு சட்டம் அதுல வேண்டாம்னா சட்டைய கழட்டி மாட்டுறது மாதரி எழுதுறத நிப்பாடிடலாம், வேணும்ன்னா மாட்டினத திரும்ப எடுத்து மாட்டிக்கலாம்

எங்கிருந்தோ ஒரு குரல்...

*

புரியாத புவியில்
புரிந்தது போல வயது
ஒவ்வொரு காலகட்டத்திலும்
இதுவே.புரிந்தது தெளிய
புரியாதது புரிவதாக
தெரியாததை காண
இன்னும் தேடல்.இடைதடை இங்கே வர
சிறு முற்றுபுள்ளி. சிலதின
மிடையே மாறிவிட்டது.
காற்புள்ளியாக.புரிந்ததா இல்லையா
புரிதலுக்குள்ளே மீண்டும்
எழும்பியது மற்றொரு குரல்
நான் யார்.

பிரபல பதிவர் பேக்கேஜ்.... சீக்கிரம் வாங்கோ... வாங்குங்கோ... !!!

*

என்னை போல நீங்களும் பிரபல பதிவராக ஆசைபடுவிங்க... ஆயிரம் பதிவு எழுதி பிரபலமாகாம பலர் இருக்க. நா பதிவு எழுதுறதுக்கு முன்னாடியே பிரபலம் ஆனது தெரிந்த விசயமே... என்னைப்போல நீங்களும் பிரபலமாகவேண்டி ஒரு புதிய திட்டத்த அறிமுகபடுத்தப்போறேன்...

பாலோவர்... ஹிட்ஸ் எல்லாம் வச்சி ஒருத்தர பிரபலபதிவருன்னு சொல்லிடமுடியாது ஏன்னா எனக்கு ஹிட்சும் வரதில்லை பாலோவரும்... சரி அதவிட்டுடுங்க...

பலரின் வருத்தத்தை போக்க ஆரம்பிக்கப்பட்டது தான் பிரபல பதிவர் விருது அல்லது பட்டம். அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் பட்டத்தை காசு கொடுத்து வாங்குவது போல இங்கு நீங்களும் செயல்பட்டே ஆகவேண்டும் ஏன் என்றால் காசுகொடுக்காமல் கிடைப்பதற்கு இந்த உலகத்தில் மதிப்பு கிடையாது என்ற ஒரே காரணம்தான்.

கம்மிங் டு பேக்கேஜ்ஜஸ்


பேக்கேஜ் ஒன் :

கொடுப்பவரின் ஒரு பதிவுக்கு இரண்டு பின்னூட்டம் வீதம் ஒரு வாரத்திற்கு.(எத்தனை பதிவிட்டாலும் )

பதிவுக்கு கண்டிப்பாக ஒரு ஒட்டு வீதம் ஒருவாரத்திற்கு (இரண்டு திரட்டிகளில் இடவேண்டும் )


பேக்கேஜ் டூ :

வாரத்திற்கு பதினைந்து பின்னூட்டங்கள் மற்றும் பத்து ஒட்டு ( ஒரே திரட்டி அல்லது ஓட்டை பலதிரட்டிகளில் கூட இடலாம் எண்ணிக்கை மட்டுமே முக்கியம்)

பேக்கேஜ் த்ரீ :

கொடுப்பவரிடம் மொத்தமாக பின்னூடங்கள் மற்றும் ஓட்டை கறாராக பேசிக்கொண்டு வாங்குவது (எண்ணிக்கை கொடுப்பவரின் முடிவை பொருத்தது )


இந்த பேக்கேஜிகளில் எதாவது ஒன்றை தேர்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட பதிவரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பின்னூட்டம் மற்றும் ஒரு ஒட்டு குறை இல்லாமல் செலுத்தும் பட்சத்தில் அங்கீகரிக்கப்பட்ட பதிவர் (நீங்கள் ஒட்டு மற்றும் பின்னூட்டமிடும் பதிவர் ) உங்களுக்கு பிரபல பதிவர் விருதை வழங்குவார். அதன் பின் கீழ் காணும் பதக்கத்தை உங்கள் வலையில் பொருத்திக்கொள்ளலாம்.

முக்கியமான விசியம் : பிரபல பதிவராகும் முன்பே ஒருவாரத்திற்கு பின்னூட்டம் மற்றும் ஒட்டு கம்பெனிக்கு போடவேண்டும் ( மேலே உள்ள பேக்கேஜில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ). தவறும் பட்சத்தில் விருது தரப்பட மாட்டாது.அங்கீகரிக்கப்பட்ட பதிவர் :

விருது பெற்ற அனைத்து பதிவர்களுமே அங்கீகரிக்கப்பட்ட பதிவர்தான், புதியவர்களுடைய அல்லது ஏற்கனவே பல்லாயிரம் இடுகை எழுதியும் பிரபலமாகாத.. மற்றும் பிரபலமாக துடிக்கும் பதிவர்களின் பின்னூட்டம் மற்றும் ஓட்டை பெரும்போளுதே... ஒரே வாரத்தில் நீங்களும் பிரபலம் ஆகிவிடுவீர்கள், பிறகு நீங்கள் யாருக்கும் ஓட்டோ அல்லது பின்னூட்டமோ போடா தேவையில்லை.. அனால் உங்கள் கூட அங்கீகரிக்கபட்ட பிரபலங்களுடன் கும்மி ஆடிபீர்கள்... இதை எதிர்த்து யாரும் கம்பெனியிடம் வழக்கு தொடுத்தால் அந்த வழக்கு செல்லுபடியாகாது... கம்பெனி அதை நிராகரிக்கும். ஆனால் அதற்க்கு கைமாறாக கம்பெனிக்கு அப்போ அப்போ பின்னூட்டம் மற்றும் ஓட்டை நீங்கள் செலுத்தவேண்டும். இதை செய்யத்தவறினால்... தனிநபர் தாக்குகள் உங்கள் மீது நடக்கும் பொழுது பிரபலபதிவர்கள் உங்களின் சார்பாக களமிறக்கி விடப்படமாட்டாது. கம்பெனி உங்களுக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யது.. உங்களுக்கு சாதகமாக செயல் படுபவர்களின் விருதுகளும் பறிக்கப்படும்.

ஆகவே இப்பொழுதே ஓட்டும் பின்னூட்டமும் போட்டு என்னிலிருந்து ஆரம்பியுங்கள் பிரபலபதிவராகுங்கள்

சைடு குறிப்பு :: பிரபலபதிவர் ஆனபிறகு "பிரபல பதிவர்" அப்படின்னு பேருக்கு முன்னாடி இல்லாட்டி "பிப" என்று பேருக்கு பின்னாடி போட்டுக்கலாம்.

எடுத்துக்காட்டு :
பிரபலபதிவர் பித்தன்
பித்தன் "பிப"

(பிரபல பதிவர் ஆகாமல் இந்த வார்த்தைகளை சேர்த்தால் கட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கனவே திருச்செங்கோடு கவி என்பவர் பெயருக்கு முன்னாள் பிரபல பதிவர் சேர்த்திருக்கிறார் இது கட்ட விரோதம் என்றாலும் அவருக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படுகிறது)

***சிரிப்பு இல்ல சீரியசு*** : இந்த தளம்(என்னோடதளம்) தான் கம்பெனி அல்லது நான் தான் கம்பெனி.

உங்கள் அன்பிற்கு நன்றி - விடைபெறுகிறேன்

*

கொலைவெறி கவுஜைக்கு

குருவும் நீயே, எதிர்

கவுஜையை எழுத, என்னை

தூண்டிய ஆசானும் நீயேமாற்று சரக்கடித்து வரும்

வாந்தி போல் சிலர் எழுத

பூந்தி போல பலர் நினைத்து

படித்து தலையில் அடித்து

'கொல்ல'வைதவரும் நீயேஎதிரிகளை வீழ்த்த நமது

கவுஜைகளை அனுப்புவோர் பலர்

எதிரிகள் வீழ்ந்தாலும் நமக்கு

நன்றிகள் சொல்லமறுப்பவர் சிலர்.குடி குடியை கெடுக்கும், பாட்டிலில்

எழுதிருக்குமாம், யாரோ பார்த்து

என்னிடம் சொல்ல இதயம் வெடித்தது,

கொலைவெறி கவுஜையை எழுத

பேனா மறுத்தது.குற்றுணர்வு என்னை தடுத்தது

இந்த சமூகம் என்னை பலிக்குமோ

என்று இந்த மனது நினைத்தது

முடிவு, எழுதுவதை நிறுத்திவிட்டேன்

கொலைவெறி கவுஜைகளை அல்ல

சரக்கு கவுஜைகளை.ஹாட்டில் கலந்த பீரை போல

சரக்கு கவுஜையுடன்

வாழ்க பல்லாண்டு

நான் வடை பெறுகிறேன் ச்சி விடைபெறுகிறேன்.


இது பதிவுலக சரக்கு ஆசான் வால்ஸ் அவர்களுக்கு சமர்ப்பணம்

(சரக்கு வாரம் முடிந்தது, அடுத்து எதவச்சி எதிர் பதிவு எழுதுறது ?, யோசிக்கிறேன் நீங்களும் யோசிச்சி சொல்லுங்க )

குறிப்பு : உங்கள் அன்பின் மிகுதியால், நீங்க சரக்கு கவுஜை எழுதவேண்டும் என்று கூறுவது காதில் கேட்கிறது. அதற்குள் பல ஆயிரம் மினஞ்சல் வந்து என்னை திக்குமுக்காடிட வைக்கின்றது உங்கள் அன்பினை பார்த்து பிரமிப்பாக இருக்கின்றது. எனக்கு தோனுச்சினா நானே எழுதுவேன், கொஞ்ச காலம் பொறுத்தருளுக.


ஜோதிட கவிதைகள் ( எதிர்பதிவு)

*******இன்னைக்கு இவரோடது ( அங்க தொட்டு இங்க தொட்டு கடைசீல, கர்த்தரே என்னை மன்னியுங்கள்)

********சரக்காயுள்

-------------
இரவுநேர குடி பயணத்தில்

பாதியிலேயே தீர்ந்த சரக்கு

பார் பய்யனை கூப்பிட்டு

ஒரு ஹாப், ரெண்டு சோடா என்றேன்இப்ப உங்க பர்ஸ் வீக் என்றான்.

கோபத்துடன் காலி பர்ஸ்சை தூக்கியெறிந்தேன்.என்னை பார்த்து புன்னகைத்த

பார் பய்யன்

காலி பர்ஸ்சை

தூக்கியெறியாதிங்க சார்.

காலி பாட்டிலஎல்லாம் போட்டு

பணத்தை நிரப்பிட்டுவாங்க என்றான்.

பரிகாரம்

------------பார்ட்டிசரக்கு சரியில்லை

பதினைந்துநூருக்கு பாரின்சரக்கு

வாங்க வேண்டுமாம்.

எந்தபாரின்(நாடு) என சொல்லவில்லை

நண்பன்.போதையாலஜி

--- ------- --------என் வீட்டு நாய் குட்டியின் தட்டில்

பீர் கொஞ்சம் சிந்திகிடந்தது.
ஐந்நூறு கொடுத்து சரக்கு பிராண்டை

மாற்றியது மனைவிக்கு பிடிக்கவில்லை.எதிர்காலம்

--------------போதையால் உங்கள் எதிர்காலம்

ஏறுமுகம் என்ற பலனை கேட்டதும்

வீட்டுக்கு வந்து சரக்கை காச்சினேன்.

எனக்கு ஆயுள் தண்டணை.

ஜோதிடம் உண்மையோ?

குடிகாரனா சரக்குகடைகாரனா

---------------------------------------போதையின் ஆயுளை சொல்ல

வந்த ஜோதிடரை - உனக்கு போதையபத்தி தெரியுமா

என கிண்டலடித்த காட்சியை கண்டு

மகிழ்ந்தான் குடிகாரன் .ஜோதிடர் சொன்ன ஒரு மணிநேரத்தில் போதை இறங்கியதை

நினைத்து மகிழ்ந்தான் சரக்குகடைக்காரன்.

குடி வாழ்க்கை

-------------------பல பிராண்டுகள் உங்களுக்கு

போதையேற்ற இருக்கு

உங்கள் குடிவாழ்க்கையில்

பிரச்சனை வர வாய்ப்பில்லை

என்ற சரக்குகடைகாரருக்கு தெரியுமா

பிராண்டுகள் ஒன்றுக்கு ஒன்று

வியாபார போட்டி என்று
.

*********

இங்கன படிசிபோடுங்க முதல ( அவரே வந்து மாடிகிட்டாறு)

*********சரக்கு தொலைத்த இரவுகள்

இன்னமும் அந்தி சாயவில்லை,

அதற்குள்,

சரக்கு பாட்டில் அவன் கைகளில்

கெட்டியமாக பிடிபட்டுகிடந்தது..!இது

நேற்றைய சரக்கின் மிச்சமா..?

இல்லை,

இரவில் என்னுடன்

அடித்ததன் சொச்சமா..?மதிய உணவு முடித்து,

அவன் கையில்

இருந்த சரக்கை குடிக்கும்பொழுது உணர்ந்திருப்பாண் ,

இன்றும் அரைபாட்டில்தான் என்று..

அவன் தானே கொடுத்தான்

சரக்கை..!?எனக்கு பழக்கமிருக்கிறது

இரவு முழுவதும் கண்விழித்து

சரக்கடித்து ..!

அவனோ ஏழு மணிக்கு இரவு உணவு முடித்து

உடன் சரக்கடித்து கொள்ளும்

சாராயகுடுக்கி ..!காலம் இணைத்தது எங்களை,

பாட்டில் பிரித்தது

உறக்கத்தை..!நான் உன் சரக்கை

குடித்தேனா,.?

கேட்டேன் அவனிடம் ..!இல்லை கண்ணா,

நீ சரக்குபானையை கொடுத்தாய்

என்றான் .நெகிழ்ந்தேன்

அவன் பதிலைக்கேட்டு..!சரக்கை இழந்து

சைடிசை தின்பது

அவனுக்கும் பிடித்திருக்கிறது.


அன்பு குடிகாரர் திரு போதையார் (போதையூர்) அவர்களுக்கு!!!

*
இங்கன படிச்சிபோட்டு மேல படிக்கவும்

*******

அன்பு குடிகாரர் திரு போதையார் (போதையூர்) அவர்களுக்கு!!!

நான் உங்க கம்பி ச்சி அம்பி ஐயோ தம்பி பிராந்தியன் எழுதும் அன்பு கடிதம். (கொஞ்சம் போதையில இருக்குறதுனால தடுமாற்றம், ஒரு பெக் போட்டா சரியாயிடும் )

நீங்க குடிச்ச சரக்கு என்னவோ நல்ல சரக்கு தான். ஆனா குடிச்ச விதம் தான் சரியில்லையோனு தோனுது.

மானிட்டர் கொடுத்தவர் போதயாச்சி என்னும் போதயிரான். அவர் அந்த சரக்க கொடுக்கும் போது குடித்த குடியை பார்த்து அப்படியே நீங்களும் குடித்துவிட்டு அவரையே கிண்டல் செய்வதாக நினைக்கிறேன். இங்கே இரவு மணி 6 ஆகிவிட்டது. அதனால் கண்டிப்பாக அந்த சரக்கை காலை அனுப்பிவிடுகிறேன்.

அப்படியே அவர் குடித்தால் கூட (ஏதாவது நல்ல சரக்காவே ) அவர் அதற்க்கு ஏற்புடையவர்.இது பற்றி விலாவாரியாக என்னால் தண்ணியடித்து உளர முடியும் உங்களிடம். ஆனால் இந்த களத்தில் இல்லாத அவரை பற்றி இப்போது நான் உளர விரும்பவில்லை.


அடுத்து பாரினார் ! அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த சரக்கை அறிவித்தார் தெரியுமா? எல்லாம் அடிச்சுகிட்டு ஓடிவிடும் சூழ்நிலையில் அதை அறிவித்தார். அவருக்கு என்ன தகுதி என நீங்க கேட்பது புரிகின்றது. இதே பார்கள் செய்யாத வேலையை அவர் அமைதியாக செய்து கொண்டிருக்கின்றார்.

அவரால் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சரக்கை குடிக்கபெற்றவர்கள் அதிகம். அப்படி அவரால் சரக்கை பெற்றவர்கள் கூட அடித்து கொண்டு நிற்பது யாரால் அமைதியாக பார்த்து கொண்டிருக்க முடியும்?? கோட்டர்வேந்தர் குடிக்க வைக்கிறார். இவர் அவங்களுக்கு சரக்கை வாங்கி தரார் . ஆனா பார் சரக்கு அது அல்ல. ஆக பார் சரக்கை தருவதை விட இவரின் சரக்கை வாங்கியவர்கள் பெருமை படவே வாய்ப்பு அதிகம்.


"குடிகாரர்கள்"ன்னு ஒரு படம். குடிகாரர்கள் அடிச்சுப்பாங்க.ஒரு சின்ன குடிகாரர் சொல்லி பார்ப்பார். பார் ஓனர் கிட்ட சொல்லி பார்ப்பார் . பின்னவும் சண்டை நிற்காது. ஓடிபோய் ப்லபாட்டில் சரக்கை கொண்டுவருவார் ! சண்டை நிற்கும்.


பாரினார் செய்ததுக்கும் இதுக்கும் எந்தவித வித்யாசமும் இல்லை. இப்போ என்ன ஒரு சந்தோஷம் பாருங்க எல்லார் முகத்திலும்.தவிர இந்த சரக்குகடை ஆரம்ப கட்டத்தில் அவரின் உழைப்பு ஏழை குடிகாரர்கள் மேலகுடிக்க அதனால் அவர் இழந்தது எத்தனை எல்லாம் சொல்லி இருப்பார் ஒரு கடையிலே . அந்த கடை விலாசம் தரேன். இந்த சேவையை எந்த பாரும் செய்ததா? இவர் இதை செய்து கொண்டிருக்கிறார் இலவச சேவையாக. அதற்காக ஒரு சின்ன இடத்தை முகப்பிலே ஒதுக்கி கொடுத்த தமிழ்பாருக்கு நன்றிகள் இந்த இடத்திலே.


இதோ யாரும் செய்ய முடியாத அளவு ஏற்பாடுகளை போதியார் என அன்பாக அழைக்கப்படும் மோவி.போதை தண்ணீர்கேணி மூலமாக செய்து வருகின்றார். உழைப்பு அத்தனை. நீங்கள் குறிப்பிட்ட பார்கள் சென்னை - சிங்கப்பூர் சென்று குடிக்க செய்தனவா? இதோ இந்த கடையில் பார்த்தால் சிங்கை குடிகாரர்களின் முயற்சி தெரியும்.


இதே மொடாகுடிகாரன் என்று அழைக்ப்படும் மூத்த குடிகாரர் சரக்குசிஷ்யன் 20 பேருக்கு தலா 60 வீதம் அப்படின்னு பிரமாதபடுத்தி அதற்கு வந்த தாகங்கள் 250. அதில் புது குடிகாரர்கள் தாகம் மட்டுமே 150க்கு மேல் இருக்கு. இது புதிய குடிகாரர்களை ஊக்குவிகும் முயற்சிதேனே . நீங்க சொல்லும் பார்கள் 60 கொடுத்து ஊக்குவித்தது உண்டா?


கோட்டர், ஹல்ப், புல் போன்றவர்கள் குடிகாரர்கள் பட்டரை நடத்தி அதனால் தான் இத் தனை புது குடிகாரர்கள் வந்ததே.இதே கோட்டர், பீர் போன்றவர்கள் தங்கள் கைகாசை செலவு செய்து தானே அங்கே இங்கே ஸ்பான்சர் கொடுங்க அய்யா நாங்க பட்டரை நடத்தி புது குடிகாரர்களை சரக்குகடைக்கு கொண்டு வர போகிறோம் என புதுவை பட்டரை முடித்தார்கள். இதே சென்னைகுடிகாரர்கள் பட்டரை நடத்த இடம், அத்தனை சரக்கு அதாவது இவங்க எடுக்கும் பாடத்தை புதியவர்கள் தனி தனியா கவனிக்க வேண்டி எத்தனை பேரிடம் கிளாஸ் கெஞ்சி , சைடிஷ் கெஞ்சி 2 மாதம் அதை நடத்திய அனைவருக்கும் தூக்கம் போனது.

வரும் குடிகாரர்களுக்கு டக்கீலா பாடம் எடுக்க சொந்த பணத்தில் சகாராவில் இருந்து ஓடிய பிரெஷ்பீர் என்னும் சரக்ஷ் செல்லவில்லையா? புதுவையிலிருந்து தனது டக்கீலா சைடிஷோடு ஓடி வந்து உலகம் முழுக்கும் இருக்கும் எங்களுகு சொல்ல ஓடி வரவில்லையா?


பல்லாவரம் பப்பி போன்றவர்கள் கு.கு.ச என்ற அமைப்பின் மூலமாக எத்தனையோ பல போட்டிகள் வைத்து ஏன் நான் கூட வாங்கி இருக்கிறேன் கு.கு.ச பரிசை. அவர் கொடுத்து அனுப்பி ரம் (இப்போது பாரின் பாரில்) கொண்டு வந்து 500 மதிப்புள்ள சரக்கை கொடுத்தார்கள்(42.77.4007)


ஒரு 7 குடிகாரர்கள் சேர்ந்து நடத்தும் அந்த போட்டிகே 500 மதிப்புள்ள சரக்கு. ஆனால் பார்கள் கொடுப்பதோ அதே 500.


யார் யாரை விரட்ட நினைப்பது. நினைத்து பார்க்கவும்! இந்த சரக்கு அடிப்பது யார் மனதையும் புண்படுத்த அல்ல. குறிப்பாக உங்க மனசையும். இது எனது 222250 வது சரக்கு இந்த என் மெயின் கிளாசில் அதனால் உங்கள இடமிருந்தே முதல் சைடிசை எதிர்பார்க்கும் இளைய குடிகாரர்.


அன்பு தம்பி

போதையுடன் பிராந்தியன்

தலைப்பில்லாத கவிதைகள் (எதிர்வினை)

*
இங்கன படிச்சிபோட்டு மேல படிக்கவும்

**********

திறந்த பாட்டிலில்
வழிந்து கொண்டிருந்தது நல்லதொரு
சரக்கு
முற்றத்தில்
ஐந்தாறு குடிகாரர்கள்
உரக்கச் கத்தியபடி
குடித்து கொண்டிருக்க
உள்ளிருந்து கேட்டது
அண்ணனின் குரல்-
‘எல்லாரையும் துரத்துடா.
ஸ்காட்ச் அடிக்க விடாம
என்ன கூச்சல் இது’
நான் யாரையும் துரத்தவில்லை;
துரத்த மனமில்லை.
அண்ணன் வெளியே வந்து
‘ஸ்காட்ச்சை
குடிக்க தெரியாத ஜடமே’
என்றெனைத் திட்டிப் போனார்
மறுபடி குடிகாரர்கள்
கலகலவெனச் சிரித்து குடித்தனர்

நான் ரசித்தேன்
உள்ளுக்குள் அண்ணனை நினைத்துச்
சிரித்தபடி.(கி.மூ ஜூன் 1 – 3996 – ஸ்நெகா ஓய்ந்ஸ் அருகில் நடந்தது )


***********************************

சேர்த்து வைத்த சரக்குகள்
குடித்து முடித்த பழைய பாட்டில்
எப்படியோ
உடையாமல் போராடி மீண்டு வந்தபோது
பழையசாமன்காரன் தந்த காசு
உடைந்து போன பாட்டிலின் மூடி
நண்பர்களின் சைடிஷ்
இவற்றோடு
உன் நினைவுகளும்.
அவ்வப்போது
பாட்டிலை பார்க்க.

*************************************

‘உங்கள் பிராண்ட் சரக்கு
என்னைக் கவர்ந்தது
அலுவலக மேஜைக்
கண்ணாடிக்கடியில்
அதை வைத்துள்ளேன்’
அறிவித்தார் நண்பர்.
எனக்கும் பிடித்த சரக்குகள்
எத்தனையோ உண்டு.
அப்படிப் பாதுகாக்க
எனக்கும்தான் ஆசை.
யார் தருகிறீர்கள் எனக்கு?
ஒரு பாரும் -
கண்ணாடி குள் சரக்கும் ?


(கி.பி ஜூலை 494 ஜூலி பாரில் பேசியது)

(இந்தக் சரக்கை குடிகாரர் வால்ஸ் அந்தக் காலகட்டத்தில் என் குடியை பாராட்டி எழுதிய கடிதத்தின் பாதிப்பில் குடித்து... வெளியானது)

பேதமற்றவன் (எதிர் வினை)

*

இங்கன படிச்சிபோட்டு மேல படிக்கவும்

பேதமற்றவன்அதைபார்த்ததுண்டா நீங்கள் ?முப்பது,முப்பத்தைந்தாயிரம் வருடங்கள்முன்பு அது பிறந்திருக்ககூடும் !உங்கள் தெருவில் ,ஊரில்நகரத்தில் எங்கேனும் ..அதைப்பார்த்திருப்பீர் நீங்கள்அதுதானவனென்று உங்களுக்குதெரிய வாய்ப்பில்லை ..நினைவு படுத்தி பாருங்கள்"பல நிறத்தில்சுண்டி இழுக்கும் வாசம்உள்நோக்கி இழுக்கும் காந்தம்பாத்தாலே ஏறும் போதை"அடையாளம்.மனமகிழ்ச்சிதரும்நமக்குத்தான் அது தேவைஉங்கள் படிமம்அதுமீது.அதன் கனவுகள்நல்ல உடற்,மனத்தேவை கள்அறிய விருப்பமில்லை ,நேரமில்லைஉங்களுக்கு .அதை நல்லபான வட்டத்தினின்றுதூக்கி எறிந்திருக்கலாம் . (இல்லை )அதை மறந்தே போயிருக்கலாம்பாதகமில்லை !!.என்றேனும் அவசரகதி வாழ்வில்ஒருநாளது தேவை ஏற்ப்படும்.அன்றும் நேரமிருக்காது உங்களுக்கும் எனக்கும் .!!!!

ஆகையால் புறப்பட்டுவிட்டேன் இதோ.அதிருக்கும் திசையைநோக்கி உள்ளே செலுத்த"ஒரு ஆகா""இயன்றால் இருகுவலை"

முடிந்தால் நீங்களும் வரலாம் ..........


பார் தேவதைகள் (எதிர் வினை)இங்கன படிச்சிபோட்டு மேல படிக்கவும்கால‌வ‌ழுகுடிபையில் பத்து ரூபாயும்

கையில் ஊறுகாயும்

கொண்டாட கொஞ்ச‌ம் சுதந்திரமும்

வாய்க்கும் காலநிலையில்

அறிமுகமானது;

மூடியை திறக்க

உலகம் திறக்கும்;

சுவர்களோடு

பேசிக்கொள்ள க‌ற்றுத் தருவாய் ;

அரைமூடி அடிக்காவிட்டாலும்

திருந்திவிட்டாயா என்பாய்போதையின் சக்கரச் சுழலில்

எழுந்து நிற்கும்முன் சரிந்து விழுவேன்.

காசில்லாத ஒரு நாளில்

பட்டையை அடித்து நெஞ்சி எரிந்து போகும்.அந்த பாட்டிலில்

நிரப்பபட்டிருக்கும்

அமுதத்தில்

என் நிராசைக‌ள்

நிறைவேறிருக்கும் .

*******
இட‌வ‌ழுவ‌குடிநேற்று எதிர்பார்க்க‌வில்லை

எதிர்பாராத‌ "இன்று" வ‌ருமென்று.

ஒவ்வொரு நாளும் வேண்டிக் கொள்வேன்

அந்த‌ "இன்று" ம‌ட்டும் வானாளில்

வ‌ர‌வே கூடாதென்று.எதிர்பார்த்த‌ப‌டியே

ஏமாற்றாமல் ஒருநாள்

வ்ந்து தொலைத்த‌து அந்த‌ "இன்று"

சரக்கு கடை வாசலில் ."வேளா வேளைக்கு ஒழுங்கா குடிக்குறியா?"

"வெயில்ல‌ அலங்ச்சா பீரு குடிகிறாயா ?"

"குடல் ந‌ல்லா இருக்கா?"

"நுரையீரல் சுகமா ?"

"இப்பவும் மிட்நைட்டுல பார தேடுறியா ?"

"எப்ப‌டிடா இருக்க‌?"

"போதையோடு இருக்கியா?"

"என்ன‌ ம‌றந்துட்டியா?"

"இல்ல‌ இப்ப‌வும் தெரியாம குடிகுரியா ?"மிக்சிங்கும், சைடிசும்

அருகில் இருக்க‌

கேட்க‌ நினைத்த‌ அனைத்தையும்

ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு

அலைபோல ஆடி கேட்டு முடித்தாய்.

உடனே

உன்னை ஒருவன் அறுபது ருபாய் கொடுத்து

வாங்கி சென்றுவிட்டான்.குறிப்பு : கோட்டர் விலை தெரியவில்லை, சரியான விலையை பினூட்டத்தில் தெரிவிக்கவும்


ஜூலைகாற்றுக்கு பெயர் காரணம் ?

*
ஜூலை 22 பொறந்ததால இப்படி ப்லோக் பேரு வச்சிருக்காரு...நம்ம...பிறந்தநாள் வாழ்த்துக்கள்....


வாழ்க வளமுடன்