எனக்கு ஒரு செருப்பு வேண்டும்

காரி முகத்தில்
உமிழ்ந்த பின்
இறைவனை அடிக்க
எனக்கு ஒரு செருப்பு வேண்டும்.

வேசிமகன் என்று
உரக்க திட்டி
இறைவனை அடிக்க
எனக்கு ஒரு செருப்பு வேண்டும்.

கோபம் தீரா வரம்பெற்று
கோபம்தீரும் வரை
இறைவனை அடிக்க
எனக்கு ஒரு செருப்பு வேண்டும்.

அப்பாவி ஈழர்
அழிவை தடுக்க
இயலாமல் நானிருக்க
என்னை நானே அடித்துக்கொள்ள
எனக்கு ஒரு செருப்பு வேண்டும்.

பாலகுமாரனின் உத்தமன் என்னும் குப்பை

திருஞானசம்பந்தர் எழுதியது பலகுமாரன்னு போட்டுருன்துச்சி,..(உத்தமன் பத்தி ஒரு வரி கூட அட்டயில போடல)எடுத்து படிக்க ஆரம்பிச்சா கொஞ்சம் நேரத்துலையே ஞானசம்பந்தர் கதை முடுஞ்சிடுச்சி, சரி அவரு வாழ்ந்தது கொஞ்சகாலம் தானே...

மீதி, முக்கால்வாசி புத்தகத்த உத்தமனுக்காக ஒதுக்கிருந்தாறு.

ஒரு முனிவர்கிட்ட காமதேனு பசு (நினைத்ததை நொடி பொழுதில் கொடுக்கும் பசு) இருக்கு, அத ஒரு அரசன் எடுத்துகிட்டு போயிடுறான், ஆத்திரம் கொண்ட முனிவரின் மகன், தனி மனிதனா போய், அரசனையும் அவன்குடும்பத்தையும், அவன்படையையும் அழிச்சிட்டு, கமதேணுவ கூட்டிகிட்டு வந்துடுறான்.

அவக அய்யா, இப்படி சத்திரியன் மாதரி சண்டைபோட்டு கூட்டிட்டு வந்த இத பசு எனக்கு வேணாம்னு சொல்லிடுறாரு. நீ வெளியில் போய் மற்ற ஆசான்களிடம் பாடம் படிச்சிட்டு வானு அனுபிடுராறு.
அவக அய்யா சொன்ன படியே போய் பல முனிவர்களிடம், பாடத்த படிச்சிட்டு, வீட்டுக்கு போராரு,

ஒரு நாள் அவிக அம்மா புள்ள நினைபுல, கணவனுக்கு பணிவிடை செய்ய மறந்துடுராக, (பூசைக்கு தேவையான பொருட்கள் எடுத்து வைக்கிறது), உடனே கோபம் கொண்ட, கணவன் அவகள வீட்டுக்கு வெளியிலேயே நிருத்திடுராறு.

இந்த நேரத்துல தன் மகன் வர, தாயை கொல்ல சொல்லுராரு, ஏன் எதற்கு அப்படின்னு கேக்காம, அம்மாவ கொல்ல போக, வேலைகாரி தடுக்குரா, உடனே அவள முதல்ல கொன்னுட்டு அடுத்து அவக அம்மாவ கொன்னுடுராறு....இப்ப அவக அப்பாவுக்கு மகிழ்ச்சி அதிகமாகிடுச்சி, உனக்கு என்ன வரம் வேண்டும்னு கேட்க, இறந்தவர்கள் உயிர் வேணும்னு நம்மாளு சொல்ல, அப்படியே ஆகட்டும்னு சொல்லி தலைகளை உடலோடு சேருன்னு சொல்லுறாரு,

தலையோட உடல சேத்துட்டு பாத்தா, வேலைக்காரி உடலுக்கு அம்மா தலையையும், அம்மா உடலுக்கு வேலைகாரி தலையையும் சேத்திருந்தாறு, பதறி போய் அவக அய்யாகிட்ட சொல்ல, அனைவரையும் அன்னையாகவே நீ நினைக்க யாம் செய்த சோதனைன்னு சொல்லுறாரு.

இப்படியே கதை நகர ஒரு கட்டத்துல... நம்ம கதாநாயகன் எல்லா சத்திரியரையும் பூண்டோடு அழிக்கவேண்டும் என்று சபதம் போட்டுக்கிட்டு கிளம்புராறு, பெரியவர் சிறியவர், குழந்தைகள் அப்படின்னு பாக்காம கண்ணுல பட்ட எல்லா சத்திரிய வம்சத்தையும் கொல்லுராறு,

அந்த வழியே ஒரு கல்யாண கூட்டம் வர, ஏதோ சத்திரிய கூட்டம் தான் வருதுன்னு கண்டுபுடிச்சி வழிமறிக்க, அங்கு இருந்த ராமன சண்டைக்கு வர சொல்லுராரு... அவரு மறுக்க, இவரு இழுக்க , இறுதியில தன் தோளுக்கு பக்கத்துல அத்தனவருடம் கற்ற எல்லாத்தையும் வைக்குராறு நம்ம கதாநாயகன்... அத இராமன் குறிபாத்து வில்லுல தகர்க்க,,, கதாநாயகன் தன் தோல்விய ஒத்துகிட்டு காட்டுக்கு போயடுரறு தவம் செய்ய. போறதுக்கு முன்னாடி இராமன் சென்ற திசையை பாத்து வணங்கிவிட்டு போராரு.

இப்ப நம்ம பாலகுமாரன் அய்யா கதாநாயகன "அவன் உத்தமன்" அப்படின்னு போட்டு கதைய முடிக்குராறு. அப்பறம் கதாநாயகன் பேர சொல்லலையே "பரசுராம்".

இப்ப விசயத்துக்கு வருவோம்....

ஒருத்தன் பண்ணின தப்புக்காக ஒரு குலத்தையே, வேரறுக்க கிளம்பி, ஒன்னும் அறியா குழந்தையில இருந்து பெரியவர் வரை கொல்லுராராம்....

ஒரு வேலை பூசைக்கு பொருட்கள் எடுத்து வைக்காததுக்கு, தன் மனைவியையே கொல்ல சொல்லுராரு ஒருத்தரு...

ஒருத்தனுக்கு ஒரு பாடம் சொல்லிகொடுக்க, இரண்டு பேரோட தலைய மாத்திவைக்குறது எந்த விதத்துல நாயம் ?

அய்யா சொன்ன உடனே, ஏன் எதற்குன்னு கேக்காம அம்மாவ கொல்லுறாராம், இதையே, அம்மா அய்யாவ கொல்லசொன்னா கொல்லுவாரா ?

பெண்களையும், அப்பாவி பொது மக்கள்ளையும் எதோ விளையாட்டு பொருள் மாதரி இந்த கதையில வர நம்ம கதாநாயகனும், அவன் அப்பாவும் உபயோகபடுத்துராங்க.

இதுல என்ன கொடுமைனா ரெண்டுபேரும் முனிவர்கள்.....

சாதரண மனிதன் கூட செய்ய மறுக்குற விசயத்தை முனிவர்கள் செய்வதா காட்டியது கொடுமை.

இவ்வளவு கொடுமையும் செய்யுற கதாநாயகன அதாம் பரசுராம உத்தமன்னு சொல்லுறது மகா கொடுமை.

உங்கள் கண்ணுல தெரியிற ஒளி, ஒரு அமைதியை கொடுக்குதுன்னு ஒரு வாசகி உங்களுக்கு எழுதினதுக்கே, கவனமா பினட்டையில உங்க கண் நல்லா தெரியுற மாதரி உங்க புகைப்படத்தை போட்டிருந்திங்க....

ஆயிரம் ஆயிரம் பேர் படிக்குற ஒரு நூல் எழுதும் போது, அந்த கவனம் வேண்டாமா... இத எதிர்கால இளசுகள் படிச்சா நாசமாத்தான் போகும்.

நிறைய காகிதம் இருக்கு, பேனா நிறையா மை இருக்குன்னு,,, இந்த உத்தமன்னுகிற குப்பைய எழுதிபுட்டிகளே இது நாயமா ?

ஜெயகாந்தன் என்னும் அதிமேதாவி

தொடக்க காலத்தில் கம்யூனிஸ்ட் என்ற கோமணத்தை கட்டிக்கொண்டு, பல படைப்புக்களை தமிழில் கொடுத்த ஜெயகாந்தான், சமஸ்கிருத சபா ஒன்றில், தமிழை மிகக் கடுமையாக விமர்சித்தார், தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் நாய்கள் என்ற ரீதியில் பேசினார் அக் கூட்டத்தில் சமஸ்கிருதத்தை மிக உயர்வாகப் புகழ்ந்து பேசினார்.

பிறகு அதற்க்கு மிக கடுமையாக எதர்ப்பு கிளம்ப, அடுத்த சில நாட்களில் நடந்த ஒரு கூடத்தில் பின்வருமாறு கூறினார்.

"எனக்கு தமிழ் தான் தெரியும் வேறு மொழி தெரியாது. தொட்டிலில் குழந்தையாக தவழ்ந்தபோதே எனக்குத் தமிழ் தெரிந்தது. எனது தாய் தமிழில் தாலாட்டியதால் தமிழ் அறிந்தேன். இந்தியாவைச் சேர்ந்த தமிழன் என்று கூறிக் கொள்ளவே ஆசைப்படுகிறேன் நான், அத்தோடு எனது கருத்து மற்றவர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் ஆனால் எனது கருத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்றார்".

இது நிகழ்ந்து நெடு நாட்கள் ஆகிருந்தாலும், ஞான பீடம் விருது வாங்கிய அய்யா கிட்ட சில கேள்விகள் கேட்கணும்.

1.மொழிகள்ல உயர்வு, தாழ்வு பாமரன் கூட பாக்ககூடாது, இதுல பெரிய பெரிய விருதுஎல்லாம் வாங்கின எழுத்தாளர் நீங்க பாக்கலாமா?.

2.எழுதுவதினால் நான் மேன்மையடைகிறேன், என் மொழி(தமிழ்) மேன்மை அடைகின்றதுனு சொன்ன நீங்க, உங்கள மேன்மையடைய வச்ச மொழிய தாழ்வா பேசலாமா?

3. தமிழ் தமிழ் என்று பேசுறவன் நாய்னா, தமிழ்ல எழுதின நீங்க யாரு ?

4.தமிழை வச்சி உலகத்த தெரிஞ்சிகிட்டவன். தமிழ் தமிழ் நு சொல்லாம உங்க பேரவா சொல்லுவான் ? (தமிழ்ல வச்சி பொழப்பு நடுத்து அரசியல்வாதிகள் தவிர)

5.தமிழ் மொழி மட்டும் தெரிஞ்ச நீங்க, சமஸ்கிருதத்த எத வச்சி உயர்வா பேசினிங்க?. எப்படி ஒப்பிட்டிங்க?.

படிக்காத புத்தகத்திற்கு விமர்சனம் எழுதுற மாதரி, தெரியாத மொழியை உயர்த்தியும், தெரிந்த ஒரே மொழியை தாழ்த்தியும், பேசி உயர்ந்த மொழி மற்றும் தாழ்த்த மொழியை கண்டுபிடித்த, ஞானபீடம் விருது வாங்கிய அய்யா அவர்களுக்கு "அதிமேதாவி" என்ற பட்டத்தை எங்கள் கடையின் சார்பாக வழங்குகிறோம்.