எனக்கு ஒரு செருப்பு வேண்டும்

காரி முகத்தில்
உமிழ்ந்த பின்
இறைவனை அடிக்க
எனக்கு ஒரு செருப்பு வேண்டும்.

வேசிமகன் என்று
உரக்க திட்டி
இறைவனை அடிக்க
எனக்கு ஒரு செருப்பு வேண்டும்.

கோபம் தீரா வரம்பெற்று
கோபம்தீரும் வரை
இறைவனை அடிக்க
எனக்கு ஒரு செருப்பு வேண்டும்.

அப்பாவி ஈழர்
அழிவை தடுக்க
இயலாமல் நானிருக்க
என்னை நானே அடித்துக்கொள்ள
எனக்கு ஒரு செருப்பு வேண்டும்.

2 comments:

லோகு said...

அபாரம்ங்க.. நெற்றி கண்ண திறந்தது மாதிரி இருக்கு,..
என்னையும் ஒரு அடி அடிங்க..

வெற்றி-[க்]-கதிரவன் said...

//அபாரம்ங்க.. நெற்றி கண்ண திறந்தது மாதிரி இருக்கு,..
என்னையும் ஒரு அடி அடிங்க.. //

நன்றி லோகு,,,

எனக்கு இறைவனை அடிக்குக்க மட்டும் உரிமை உண்டு.... உன்னை அடிக்க இல்லை..