நீ யார் ? நான் யார் ?

கடவுள் : நீ யார் ?
பித்தன் : நான் பித்தன்
கடவுள் : அது உன் பெயர், நீ யார் ?

பித்தன் : நான் ஒரு தாயின் மகன்
கடவுள் : அது உனக்கும் உன்னை ஈன்றவளுக்குமான உறவுமுறை, நீ யார் ?

பித்தன் : நான் ஆத்திகன் (அ) நாத்திகன்
கடவுள் : நீயே உன்னை ஒரு வட்டதில் அடைத்துக்கொண்டது, நீ யார் ?

பித்தன் : நான் ஒரு ஆண்மகன்
கடவுள் : அது உன் பாலினத்தை குறிப்பது, நீ யார் ?

பித்தன்: நான் மனிதன்,
கடவுள் : பிற உயிரினகளிலிருந்து உங்களை வேறுபடித்திகாட்ட நீங்களே அழைத்துக்கொள்வது, நீ யார் ?

பித்தன் : நான் ஒரு உயிர்
கடவுள் : இன்னும் தெளிவாக

பித்தன் : "பல லட்சம்கோடி" உயிர்கள் வாழும் இந்த புவியில் நானும் ஒரு உயிர்
கடவுள் : மறுமுறை சொல்
பித்தன் : "பல லட்சம்கோடி" உயிர்கள் வாழ, வாழும் இந்த புவியில் நானும் ஒரு உயிர்

கடவுள் : உயிர் என்றால் ?
பித்தன் : உணர்வுகளும், உணர்ச்சிகளும் உள்ளடக்கிய பிண்டம்.

கடவுள் : இது உனக்கு மட்டும் தான் பொருந்துமா ?
பித்தன் : இல்லை, "பல லட்சம்கோடி" உயிர்களுக்கும் பொருந்தும்.

கடவுள் : ஒரு உயிரை கொன்று (உண்டு) உயிர்வாழ்வது,
பித்தன் : அது அவரவர் விருப்பம்

கடவுள் : உனது உயிரை இன்னொரு உயிர் கொன்று (உண்டு) வாழ்ந்தால் ?
பித்தன் : என்ன முட்டாள்தனமான கேள்வி, நாங்கள் ஆறறிவு உடையவர்கள் எங்களை தாக்க இயலாது (அ) இதை ஏற்க முடியாது.

கடவுள் : உங்களுக்கு(மனிதர்களுக்கு) போட்டி இல்லை என்ற எண்ணத்தினால் இந்த கருத்தா ?
பித்தன் : இருக்கலாம்

கடவுள் : இயலாதவரை அல்லது எளியோரை, வலியோர் தாக்குவது தகுமா ?
பித்தன் : ஒருகாலும் தகாது..

கடவுள் : உனது குழந்தையிடம் நீ காட்டுவது
பித்தன் : அன்பு

கடவுள் : ஆட்டுக்குட்டி அதன் குழந்தையிடம் காட்டுவது
பித்தன் : அன்புதான்

கடவுள் : இரண்டில் எது உயர்ந்தது
பித்தன் : இரண்டும் தான்.

கடவுள் : உனது குழந்தையின் மீது ஒரு துரும்பு விழுந்தாலும்
பித்தன் : எனது உயிர் துடித்து போகும்.

கடவுள் : மற்ற உயிர்களை கொள்ளும் போது அவை
பித்தன் : கண்டிப்பாக துடிக்கத்தான் செய்யும்.

கடவுள் : ஒரு உயிரை கொன்று(உண்டு) தான் உன் உடலை வளர்க்க இயலுமா ?
பித்தன்: இல்லை, கொல்லாமலும் உயிர் வாழலாம்.

பித்தன் : இவ்வளவு கேட்கின்றாயே, நீ யார் ?
கடவுள் : கடவுள்

பித்தன் : கடவுள் என்றால் ?
கடவுள் : அன்பு

பித்தன் : நீ எங்கே இருக்கின்றாய் ?
கடவுள் : உனது குடும்பத்திடம் நீ செலுத்தும் அன்பை, அனைத்து உயிர்களிடத்திலும் நீ செலுத்தும் பொழுது, கண்ணாடியை பார்.

கடவுள் : நீ யார் ?
பித்தன் : கடவுள் (அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும் பொழுது)

சாக்கடையை சுத்தம் செய்ய ஒரு புது நம்பிக்கை
அரசியல் குப்பைகளை கூட்ட, சாக்கடையை சுத்தம் செய்ய ஒரு புது நம்பிக்கை...

நன்கு படித்து... நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துசெல்ல, துணிந்து... சுயேட்சையாக போட்டியிடும் சரத்பாபுவுக்கு ஒருமுறை வாய்ப்பளித்தால் ஒருவேளை இதுவே புதுமாற்றதுக்கு வித்திடலாம், நீத்துபோன அரசியல் குப்பைகளுக்கு இதுநாள்வரை வாய்பளித்து, அவர்கள் குப்பை கூட்ட கூட லாயக்கில்லை என்று நன்றாகவே தெரிந்துகொண்டோம்.
எந்த கட்சிக்கும் வாய்பளித்து எதுவும் நடந்திடாத பொழுது, சரத்பாபுக்கு வாய்பளிப்பதனால், நமக்கு எதுவும் பெரியதாக இழப்பில்லை...
சரத்பாபு வெற்றிபெற்றால் கண்டிப்பாக ஒரு மாற்றம் வரும், பல திறமையான இளைஞர்கள் அரசியலில் ஈடுபட முன்வருவார்கள்...

மாணவர்களிடமும் விழிபுனர்வுவரும், இதுபோல முயற்சிகள் தொடர்ந்தால், அதற்க்கு வெற்றியும் கிட்டினால், இன்னும் இருபது வருடங்களில் இந்த நாட்டில் நல்ல மாற்றம் கிட்டும், சுதந்திர காற்றை சுவாசிக்க... சனநாயகத்தின் மீது நம்பிக்கைவரலாம். மக்களுக்காக சேவை செய்யவே அரசியல் என்பதை மற்ற அரசியல்வாதிகளும் தூசி தட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தபடுவர்.

புது நம்பிக்கைக்கு உயிர் கொடுப்போம்,,,,

தென் சென்னையில் போட்டியிடும் சரத்பாபுக்கு வாக்களிப்போம்...

தென் சென்னையில் வாக்கில்லாதவர்கள், தென் சென்னையில் தெரிந்தவர்களை சரத்துக்கு வாக்களிக்க சொல்வோம்.

குறைந்தபட்சம் சரத்பாபுவை பற்றி நண்பர்களுக்கு அனுப்பிவைப்போம்....


தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி

1. விருகம்பாக்கம் சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 65 மற்றும் 128 முதல் 131 வரை.

2. சைதாப்பேட்டை சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 132 முதல் 136 வரை மற்றும் 138 முதல் 141 வரை.

3. தியாகராய நகர் சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 117, 120 முதல் 127 வரை மற்றும் 137.

4. மைலாப்பூர் சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 94, 96, 115 மற்றும் 142 முதல் 150 வரை.

5. வேளச்சேரி சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 151 முதல் 155 வரை.

6. சோழிங்கநல்லூர் தாம்பரம் தாலுக்கா (பகுதி) நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல்,

சிட்டலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழதிவாக்கம் (உள்ளகரம்) (பேரூராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ்டவுன்), நீலாங்கரை (செசன்ஸ்டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி).


சரத்தைப்பற்றி....


அவரது இனைய தளம்

http://sarathbabu.co.in/in/

இது சரத்பாபுவின் ஆர்குட்

http://www.orkut.co.in/Main#Profile.aspx?rl=mp&uid=6812256232724535861


சரத் பற்றிய செய்திகள், கட்டுரைகள்…

http://timesofindia.indiatimes.com/articleshow/1464169.cms
http://www.rediff.com/money/2006/aug/31spec.htm
http://timesfoundation.indiatimes.com/articleshow/1935928.cms

http://media.radiosai.org/sai_inspires/2006/SI_20061008.htm

http://specials.rediff.com/money/2008/apr/29sarath1.htm

http://www.hindu.com/2008/11/02/stories/2008110258180200.htm

http://in.youtube.com/user/sarathFoodKing

http://www.hindu.com/2009/02/01/stories/2009020157720200.htm

http://www.deccanherald.com/Content/Feb212009/living20090220119683.asp

http://youthful.vikatan.com/youth/sarathbabu13042009.asp


வலைபூக்கள் http://nellaikirukkan.blogspot.com/2006/08/blog-post_31.html
http://globen.wordpress.com/2009/04/14/sarathbabu/
http://rammohan1985.wordpress.com/2009/04/15/sarath-babu/
http://paarvaigalpalavitham.blogspot.com/2009/04/blog-post_15.html
http://sureshstories.blogspot.com/2009/04/29.htmlஒளிப்படம்

http://www.youtube.com/watch?v=aVDr2z2KrTQ

http://www.youtube.com/watch?v=DpiO8vqWgMA


குறிப்பு :: குறைசொல்ல மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இந்த வலைத்தளம், இன்று சரத்பாபுக்காக வக்காலத்து வாங்குகிறது,.. சரத்பாபு உங்கமேல உள்ள நம்பிக்கைய காப்பாத்துங்க.
"இனியொரு விதிசெய்வோம் அதை எந்தநாளும் காப்போம்"

அ ஆ கவிதைகள்

பேனா
கிடைக்காமல்
இடுப்பில் கைவைத்து
உடம்பை அசைத்து
தரையில் எழுதிய
முதல் அ ஆ...

உடல்
அசைவின் எழுத்துக்களை
ரசித்த அன்னையின்
முத்தமழையில் நினைந்து
நான் எழுப்பிய அ ஆ...

தந்தை
இருவரையும்
அணைத்ததில்
அம்மா எழுப்பிய அ
நான் எழுப்பிய ஆ...

குண்டு சத்தத்தில்
புகை மண்டலங்களுக்கு
நடுவே
நாங்கள் மூவரும்
எழுப்பிய அ ஆ...

திடிக்கிட்டு
எழுந்து
ஈர விழியோடு
என்மனதில்
நான் சொல்லிக்கொண்ட
அ ஆ...

-பித்தன்

கிரிக்கெட் என்றால் என்ன ?

ரஷ்ய புரட்சிக்கு பிறகு ஒரு பெரிய புரட்சி நடந்துள்ளது இந்தியாவில் தான். கிரிக்கெட் என்னும் புரட்சி. பொடியர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்ப்பது, வீட்டில் உள்ளவர்கள் வேறுவழியில்லாமல் பார்ப்பது...

மைதானத்தை பிடிக்க அதிகாலையிலேயே செல்வார்கள். திருவிழா கூட்டம் போல மைதானத்தில் உள்ள கூட்டத்தின் நடுவே, அவரவர் ஆடுகளத்தை சரியாக கவனித்து அனைவரும் ஆடுவது வியப்பின் உச்சிக்கே கொண்டுசெல்லும் ஒன்று.

வார இறுதி நாட்கள், கோடைவிடுமுறை என்றால் இன்னும் விசேசம். தேசிய போட்டிகள் உள்ள நாட்களில், மைதானம் மயானம் போல காட்சியளிக்கும். இந்திய அணியின் தோல்வி காரணமாக ஓரிரு மரணங்கள் கூட நிகழ்ந்துள்ளது.

கிரிக்கெட்டின் வரலாறை பின்னோக்கி பார்த்தால். ஞாயிறுவின் பார்வை தம் மேல் தாராளமாக பட வெள்ளைக்காரன் கண்டுபிடித்த விளையாட்டு. அது விளையாட்டாகவே பல தேசங்களுக்கு பரவி, இந்தியாவுக்கும் நுழைந்தது. நமது தேசிய விளையாட்டை ஓரம்கட்டிவிட்டு, உலககோப்பையை வென்றபொழுது கூட அது விளையாட்டாகவே இருந்தது. ஆனால் நிலைமை இன்று வேறு.

அணித்தேர்வு குழுவில் தகுதி, திறமையை தாண்டி. ஆள் பலம், அரசியல் பலம், மாநிலப்பற்று, இனப்பற்று தாண்டவமாடி கொண்டிருக்கின்றது, அதனை நிரூபிக்கும் வகையில், வெகுநாட்களாக புறக்கணிக்கப்பட்ட தமிழர்களுக்கு இப்பொழுது கிடைக்கும் வாய்ப்பு, எல்லாம் ஸ்ரீ பகவான் புண்ணியத்தில்...

பசியினால் இறக்கும் சக குடிமகன்களுக்காக... வடகிழக்கு மாநிலங்களில் நமது இராணுவத்தினாலையே பாதிக்கப்படும் நமது மக்களுக்காக... படிக்கவேண்டிய வயதில் பிச்சைஎடுக்கும் பிள்ளைகளை பார்த்து... நமக்கு வராத ரோசம்...

உலககோப்பை தோல்வியுற்ற பொழுது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் வந்தது...அதன் விளைவாக சில சோடிப்பு வேலைகள். சில அனல் பறக்கும் வாக்குறுதிகள். அவ்வளவுதான். ஆயிரம் கோடி வியாபாரம் உள்ள இந்த தொழிலை(கிரிகெட்) மறுசீரமைக்க அவர்களுக்கு என்ன பைத்தியமா ?

வருடம் முழுவதும் போட்டிகள் நடந்துகொண்டிருக்கதான் செய்கின்றது. சில போட்டிகளில் தோற்கின்றனர், சில போட்டிகளில் வெற்றிபெருகின்றனர், தோல்வியின் பொழுது இகழ்தலும் வெற்றியின் பொழுது புகழ்தலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது...

செல்வாக்கு உள்ளவர்கள் நல்ல ஆட்டக்காரர்கள் என்ற போர்வையில்.(ஒரு போட்டியில் நூறு அடித்துவிட்டு ஒன்பது போட்டியில் ஒழுங்காக ஆடதவர்கள்) கிழவர்களான பின்னும், இளையவர்களுக்கு வழிவிடாமல் இருக்கின்றனர். செல்வாக்கு இல்லை என்றால் முப்பது வயது வந்துடன் தூக்கி எறிந்துவிடுவார்கள்.

இவர்கள் விளையாடுவதினால் கிட்டும் ஊதியத்தை விட, விளம்பரங்களினால் பெரும் ஊதியம் பலநூறு மடங்கு அதிகம் என்பதாலேயே. இளையோருக்கு வழிவிடாமல் ஆள்பலத்துடன் அணியை கெட்டியமாக பிடித்து கொள்கின்றனர்.

இந்த விளையாட்டை வைத்தே இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களின் பட்டியலில் வந்தவர்களும் உண்டு.

பலகோடி பேர் பார்க்கும் இந்த விளையாட்டில் பணத்துக்காக வேண்டுமென்ற சில சமயம் தோற்று, பார்பவனையும் கேனயனாக்கி விடுகின்றனர், வெளியே தெரிந்து வேறுவழியில்லாமல் அவர்கள் தூக்கிவீசபட்டாலும், பின்னாளில் அரசியல்வாதிகளிடம் இருந்து அவர்களுக்கு ஆதரவுகரம் வந்துவிடுகின்றது. விளையாட்டிலேயே ஊழல் செய்தவர்கள் பதவிக்கு வந்தால் ?

இவர்களுக்கு சமூகத்தில் அங்கிகாரமும் பலநூறு மடங்கு அதிகம். ஒரு வயது குழந்தைக்கு இதய அறுவைசிகிச்சை செய்த மருத்துவரின் புகைப்படத்தை கூட போடாது, செய்தி தரும் ஊடகங்கள். கிரிக்கெட் வீரர்களுக்கு சினிமா துறையினருக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்து வேதனை தான் அடையமுடிகின்றது.

பிச்சை எடுத்து, வாங்கி உண்ணும் ஒருவேளை உணவுக்கு கூட வரியையும் சேர்த்து கொடுத்துவிட்டு தான், பிச்சைகாரனாலையே உணவு உன்னமுடிகிறது இந்த தேசத்தில். ஆனால் பல கோடி சொத்துள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு வருமானவரி விளக்கு கூட கொடுத்திருக்கின்றனர் இதே தேசத்தில்.

கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்கும் மனபக்குவத்தை நாம் வளர்க்க தவறிவிட்டோம் என்பதே உண்மை, ஓய்வு நேரங்களில் மட்டுமே விளையாட கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டுக்கள் இன்று முழுபொழுதையும் ஆக்கரமிப்பதோடு மட்டும் அல்லாமல் நம் வாழ்க்கையோடும் விளையாட ஆரம்பித்துவிடுகின்றன. படிக்கும் பொழுது இந்த விளையாட்டின்மீது உள்ள மோகத்தினால் படிப்பில் கவனம் செலுத்த இயலாத பல குழந்தைகளை பார்க்க இயலுகின்றது. அப்படியே விளையாட்டு வீரனாக வரட்டுமே என்று எண்ணினால் பதினோரு பேருக்காக பலலட்சம் பேர் போட்டிபோடவேண்டி இருக்கின்றது. பதினோரு பேரை தவிர மீதி உள்ளவர்களின் நிலைமை ?

சற்று ஆழமாக யோசித்தால் இந்த விளையாட்டினால் சில நூறு அல்லது சில ஆயிரம் நபர்கள் தான் பயனடைவார்கள் ஆனால், இழப்பு பல கோடிபேருக்கு. அலுவலகத்தில் விடுப்பு எடுத்துவிட்டு, பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லாமல் தேசிய போட்டிகளை பார்த்து போட்டியில் வெற்றி அல்லது தோல்வி ஏற்பட்டாலும் அன்றோடு சரி, பலமணிநேரம் வீணாவது தான் மிச்சம். வருடம் முழுவது இந்த போட்டிகள் நடந்துகொண்டே தான் இருக்கும், நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கபோகிறோம்...

இது கிரிக்கெட்டின் வரலாறு சொல்ல உதவுமே தவிர, நம் வாழ்க்கைக்கு எள்ளளவும் உதவாது.

இராமர் கோவில் எதற்கு ?

தேர்தல் வரும்பொழுது எல்லாம், தாமரை கட்சி தவறாமல் கொடுக்கும் வாக்குறுதி... நாங்கள் இராமர் கோவிலை கட்டுவோம் என்பது.

முகலாய மன்னன் பாபர், இராமர் பிறந்த இடத்தில் மசூதியை கட்டினானாம், நானூற்றி ஐம்பத்தாறு ஆண்டுகளுக்கு பிறகு, 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இராம ஜன்மபூமி மீட்பு இயக்கம், வெற்றிகரமாக பாபர் மசூதியை 1992 ஆம் ஆண்டு இடித்தனர். அன்றிலிருந்து இன்று வரை அரசியலிலும் இது முக்கிய பங்கை வகிக்கின்றது என்று சொன்னால் மிகையல்ல.

- இராமர் பிறந்த இடம் (புராணத்தின் படி) அயோத்தி என்பதால், மசூதியை இடித்திர்கள்... இந்து சமயத்திற்கு முன்பு வேறு சமயம் பாரதத்தில் இருந்து, அதன் கோவில் அதே இடத்தில் இருந்ததாக ஆய்வுகள் சொன்னால் ?

-அப்படியே இராமர் கோவில் கட்டினாலும் அங்கு அமைதியோடு வழிபடமுடியுமா ?

- ஆரியர்கள், இந்தியாவுக்கு சிந்து நதிக்கரையின் வழியாக வந்தவர்கள் என்ற கருத்து இருக்கின்றது, அதனால் அவர்களும் இந்தியர்கள் அல்ல என்றும், ஆரிய கடவுள்கள் இந்தியருக்கு தேவை இல்லை என்று ஒதுக்கிவிடலாமா ?

-பலர் படையெடுத்துவந்து, பலவாராக இந்தியா மாறியது. எனக்கு பழையது வேண்டும் என்று பின்னோக்கி சென்றுகொண்டே இருந்தால்... இறுதியில் மனிதன் தோன்றியதாக கருதப்படும் ஆப்பிரிக்கா கண்டத்திற்குதான் நாம் செல்லவேண்டும்...

-மனிதன், அமைதியான வாழ்கை வாழ நாம் கண்டுபிடித்த மதம், இன்று மதம் பிடித்து ஆடுகின்றது, ஊர் தோறும் குருதி வெள்ளத்தை காண கனவுகாண்கிறது,,, அந்த கனவை நாம் தகர்ப்போம்...

இந்த அரசியல் கட்சிகள் அயோத்தியை ஒரு ஆயுதமாக மற்றும் தங்கமுட்டை இடும் வாத்தாக வைத்துக்கொண்டிருகின்றனர்... மற்றபடி இவர்கள் அயோத்தியில் இராமர் கோவில் கட்டபோவதும் இல்லை...

பலர் உயிர்களை காவுகொடுத்து, பலர்மனத்தை புண்படுத்தி, ஒரு கோவில் தேவையும் இல்லை.

அப்படியே ஒரு கோவில் அமைத்தால், அதில் இறைவனுக்கு பதிலாக பாவங்களும், சாபங்களும் மரன ஓலங்களும் மட்டுமே எஞ்சிருக்கும்,