நீ யார் ? நான் யார் ?

கடவுள் : நீ யார் ?
பித்தன் : நான் பித்தன்
கடவுள் : அது உன் பெயர், நீ யார் ?

பித்தன் : நான் ஒரு தாயின் மகன்
கடவுள் : அது உனக்கும் உன்னை ஈன்றவளுக்குமான உறவுமுறை, நீ யார் ?

பித்தன் : நான் ஆத்திகன் (அ) நாத்திகன்
கடவுள் : நீயே உன்னை ஒரு வட்டதில் அடைத்துக்கொண்டது, நீ யார் ?

பித்தன் : நான் ஒரு ஆண்மகன்
கடவுள் : அது உன் பாலினத்தை குறிப்பது, நீ யார் ?

பித்தன்: நான் மனிதன்,
கடவுள் : பிற உயிரினகளிலிருந்து உங்களை வேறுபடித்திகாட்ட நீங்களே அழைத்துக்கொள்வது, நீ யார் ?

பித்தன் : நான் ஒரு உயிர்
கடவுள் : இன்னும் தெளிவாக

பித்தன் : "பல லட்சம்கோடி" உயிர்கள் வாழும் இந்த புவியில் நானும் ஒரு உயிர்
கடவுள் : மறுமுறை சொல்
பித்தன் : "பல லட்சம்கோடி" உயிர்கள் வாழ, வாழும் இந்த புவியில் நானும் ஒரு உயிர்

கடவுள் : உயிர் என்றால் ?
பித்தன் : உணர்வுகளும், உணர்ச்சிகளும் உள்ளடக்கிய பிண்டம்.

கடவுள் : இது உனக்கு மட்டும் தான் பொருந்துமா ?
பித்தன் : இல்லை, "பல லட்சம்கோடி" உயிர்களுக்கும் பொருந்தும்.

கடவுள் : ஒரு உயிரை கொன்று (உண்டு) உயிர்வாழ்வது,
பித்தன் : அது அவரவர் விருப்பம்

கடவுள் : உனது உயிரை இன்னொரு உயிர் கொன்று (உண்டு) வாழ்ந்தால் ?
பித்தன் : என்ன முட்டாள்தனமான கேள்வி, நாங்கள் ஆறறிவு உடையவர்கள் எங்களை தாக்க இயலாது (அ) இதை ஏற்க முடியாது.

கடவுள் : உங்களுக்கு(மனிதர்களுக்கு) போட்டி இல்லை என்ற எண்ணத்தினால் இந்த கருத்தா ?
பித்தன் : இருக்கலாம்

கடவுள் : இயலாதவரை அல்லது எளியோரை, வலியோர் தாக்குவது தகுமா ?
பித்தன் : ஒருகாலும் தகாது..

கடவுள் : உனது குழந்தையிடம் நீ காட்டுவது
பித்தன் : அன்பு

கடவுள் : ஆட்டுக்குட்டி அதன் குழந்தையிடம் காட்டுவது
பித்தன் : அன்புதான்

கடவுள் : இரண்டில் எது உயர்ந்தது
பித்தன் : இரண்டும் தான்.

கடவுள் : உனது குழந்தையின் மீது ஒரு துரும்பு விழுந்தாலும்
பித்தன் : எனது உயிர் துடித்து போகும்.

கடவுள் : மற்ற உயிர்களை கொள்ளும் போது அவை
பித்தன் : கண்டிப்பாக துடிக்கத்தான் செய்யும்.

கடவுள் : ஒரு உயிரை கொன்று(உண்டு) தான் உன் உடலை வளர்க்க இயலுமா ?
பித்தன்: இல்லை, கொல்லாமலும் உயிர் வாழலாம்.

பித்தன் : இவ்வளவு கேட்கின்றாயே, நீ யார் ?
கடவுள் : கடவுள்

பித்தன் : கடவுள் என்றால் ?
கடவுள் : அன்பு

பித்தன் : நீ எங்கே இருக்கின்றாய் ?
கடவுள் : உனது குடும்பத்திடம் நீ செலுத்தும் அன்பை, அனைத்து உயிர்களிடத்திலும் நீ செலுத்தும் பொழுது, கண்ணாடியை பார்.

கடவுள் : நீ யார் ?
பித்தன் : கடவுள் (அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும் பொழுது)

16 comments:

நிகழ்காலத்தில்... said...

அருமையான நடையில் உண்மையான தத்துவம்..

வாழ்த்துக்கள்...

வெற்றி-[க்]-கதிரவன் said...

//அறிவே தெய்வம் said...
அருமையான நடையில் உண்மையான தத்துவம்..

வாழ்த்துக்கள்...
//

நன்றி அறிவே தெய்வம் அவர்களே.

குடுகுடுப்பை said...

அன்பே சிவம்.

குடுகுடுப்பை said...

நான் கூட உருவ வழிபாடு , அன்பே சிவம் கருத்தை மையமாக கொண்டு ஒரு பதிவு யோசித்து வைத்திருக்கிறேன்.ஆனால் மனதளவில் இன்னும் தயாராகவில்லை

Suresh said...

நான் சமிபத்தில் படித்த மிக சிறந்த பதிவு ... ஒரு நல்ல பதிவு நம்மை யாரு என்று நம்மை கேள்வி் கேட்டுக்கொள்ள உதவும் பதிவு.... எனக்கு சில கேள்விகள் உண்டு அதை ஒரு பதிவாய் கேட்கிறேன்

:-) Very good thought provoking post

வெற்றி-[க்]-கதிரவன் said...

//நான் கூட உருவ வழிபாடு , அன்பே சிவம் கருத்தை மையமாக கொண்டு ஒரு பதிவு யோசித்து வைத்திருக்கிறேன்.ஆனால் மனதளவில் இன்னும் தயாராகவில்லை//

சீக்கிரம் எழுதுங்க, முதல் ஆளா வந்து படுசிடுறேன் :)

வெற்றி-[க்]-கதிரவன் said...

//நான் சமிபத்தில் படித்த மிக சிறந்த பதிவு ... ஒரு நல்ல பதிவு நம்மை யாரு என்று நம்மை கேள்வி் கேட்டுக்கொள்ள உதவும் பதிவு.... எனக்கு சில கேள்விகள் உண்டு அதை ஒரு பதிவாய் கேட்கிறேன்

:-) Very good thought provoking post//

நன்றி ஏடாகூடமா எதுவும் கேட்டுவைக்காத

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி ராசா

Anonymous said...

Arumai, Uier enru sollumbothu neengal kurippiduvathu vilanguhalai (Animal) mattuma, allathu thavartangalum seartha ?. Yeanendral thavarangalukkum uier manathu eruppathaha solhiraarhale ?.

"கருவெளி" said...

நீங்கள்... பித்தனல்ல...
சித்தன்...

எளிமையான விளக்கம் உண்மையாக அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய விளக்கம்...

உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...

வெற்றி-[க்]-கதிரவன் said...

//"கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran] said...
நீங்கள்... பித்தனல்ல...
சித்தன்...

எளிமையான விளக்கம் உண்மையாக அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய விளக்கம்...

உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...
//

நன்றி ராச.மகேந்திரன்

கோவி.கண்ணன் said...

//கடவுள் : மற்ற உயிர்களை கொள்ளும் போது அவை
பித்தன் : கண்டிப்பாக துடிக்கத்தான் செய்யும்.

கடவுள் : ஒரு உயிரை கொன்று(உண்டு) தான் உன் உடலை வளர்க்க இயலுமா ?
பித்தன்: இல்லை, கொல்லாமலும் உயிர் வாழலாம்.//

அருமையாக இருக்கு, நான் இன்று வரை சைவமாக இருக்க இதுவே காரணம்

வெற்றி-[க்]-கதிரவன் said...

//கோவி.கண்ணன் said...
//கடவுள் : மற்ற உயிர்களை கொள்ளும் போது அவை
பித்தன் : கண்டிப்பாக துடிக்கத்தான் செய்யும்.

கடவுள் : ஒரு உயிரை கொன்று(உண்டு) தான் உன் உடலை வளர்க்க இயலுமா ?
பித்தன்: இல்லை, கொல்லாமலும் உயிர் வாழலாம்.//

அருமையாக இருக்கு, நான் இன்று வரை சைவமாக இருக்க இதுவே காரணம்
//

நானும் தாங்க :)

தேவன் மாயம் said...

கடவுள் : உனது குழந்தையின் மீது ஒரு துரும்பு விழுந்தாலும்
பித்தன் : எனது உயிர் துடித்து போகும்.
///
நல்லா எழுதியிருக்கீக அப்பு!!

வெற்றி-[க்]-கதிரவன் said...

//thevanmayam said...
கடவுள் : உனது குழந்தையின் மீது ஒரு துரும்பு விழுந்தாலும்
பித்தன் : எனது உயிர் துடித்து போகும்.
///
நல்லா எழுதியிருக்கீக அப்பு!!
//

நன்றிங்க அப்பு

பிரியமுடன் பிரபு said...

கட+உள் - உனது உள்ளுக்குள் கடந்து செல் என்பதுதான் கடவுள்!!!