இராமர் கோவில் எதற்கு ?

தேர்தல் வரும்பொழுது எல்லாம், தாமரை கட்சி தவறாமல் கொடுக்கும் வாக்குறுதி... நாங்கள் இராமர் கோவிலை கட்டுவோம் என்பது.

முகலாய மன்னன் பாபர், இராமர் பிறந்த இடத்தில் மசூதியை கட்டினானாம், நானூற்றி ஐம்பத்தாறு ஆண்டுகளுக்கு பிறகு, 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இராம ஜன்மபூமி மீட்பு இயக்கம், வெற்றிகரமாக பாபர் மசூதியை 1992 ஆம் ஆண்டு இடித்தனர். அன்றிலிருந்து இன்று வரை அரசியலிலும் இது முக்கிய பங்கை வகிக்கின்றது என்று சொன்னால் மிகையல்ல.

- இராமர் பிறந்த இடம் (புராணத்தின் படி) அயோத்தி என்பதால், மசூதியை இடித்திர்கள்... இந்து சமயத்திற்கு முன்பு வேறு சமயம் பாரதத்தில் இருந்து, அதன் கோவில் அதே இடத்தில் இருந்ததாக ஆய்வுகள் சொன்னால் ?

-அப்படியே இராமர் கோவில் கட்டினாலும் அங்கு அமைதியோடு வழிபடமுடியுமா ?

- ஆரியர்கள், இந்தியாவுக்கு சிந்து நதிக்கரையின் வழியாக வந்தவர்கள் என்ற கருத்து இருக்கின்றது, அதனால் அவர்களும் இந்தியர்கள் அல்ல என்றும், ஆரிய கடவுள்கள் இந்தியருக்கு தேவை இல்லை என்று ஒதுக்கிவிடலாமா ?

-பலர் படையெடுத்துவந்து, பலவாராக இந்தியா மாறியது. எனக்கு பழையது வேண்டும் என்று பின்னோக்கி சென்றுகொண்டே இருந்தால்... இறுதியில் மனிதன் தோன்றியதாக கருதப்படும் ஆப்பிரிக்கா கண்டத்திற்குதான் நாம் செல்லவேண்டும்...

-மனிதன், அமைதியான வாழ்கை வாழ நாம் கண்டுபிடித்த மதம், இன்று மதம் பிடித்து ஆடுகின்றது, ஊர் தோறும் குருதி வெள்ளத்தை காண கனவுகாண்கிறது,,, அந்த கனவை நாம் தகர்ப்போம்...

இந்த அரசியல் கட்சிகள் அயோத்தியை ஒரு ஆயுதமாக மற்றும் தங்கமுட்டை இடும் வாத்தாக வைத்துக்கொண்டிருகின்றனர்... மற்றபடி இவர்கள் அயோத்தியில் இராமர் கோவில் கட்டபோவதும் இல்லை...

பலர் உயிர்களை காவுகொடுத்து, பலர்மனத்தை புண்படுத்தி, ஒரு கோவில் தேவையும் இல்லை.

அப்படியே ஒரு கோவில் அமைத்தால், அதில் இறைவனுக்கு பதிலாக பாவங்களும், சாபங்களும் மரன ஓலங்களும் மட்டுமே எஞ்சிருக்கும்,

5 comments:

Shajahan.S. said...

மிகவும் நல்ல பதிவு., மதவெறி ஒழிப்போம், மனிதநேயம் காப்போம்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

//Shajahan.S. said...
மிகவும் நல்ல பதிவு., மதவெறி ஒழிப்போம், மனிதநேயம் காப்போம்.//

நன்றி ஷாஜகான்


//RAJ said... //


நன்றி


//Puram boakku said...


இராமரின் அடிப்படைக் கொள்கை- மற்றவரின் நன்மைக்காக தன் சுகத்தை விட்டுத் தந்து, தான் துன்பத்தை ஏற்றூக் கொள்வதுதான்.


இராமரின் பெருமையை, கொள்கையை கெடுக்கும் வண்ணம் நடக்கக் கூடாது //

அருமையான கருத்து

lightink said...

மனிதனுக்கும் யானைக்கும் மதம் பிடித்தால் ஆபத்து

வெற்றி-[க்]-கதிரவன் said...

//lightink said...
மனிதனுக்கும் யானைக்கும் மதம் பிடித்தால் ஆபத்து
//

நீங்க சொல்ரது சரிதாங்க

பிரியமுடன் பிரபு said...

ஆரியர்கள், இந்தியாவுக்கு சிந்து நதிக்கரையின் வழியாக வந்தவர்கள் என்ற கருத்து இருக்கின்றது, அதனால் அவர்களும் இந்தியர்கள் அல்ல என்றும், ஆரிய கடவுள்கள் இந்தியருக்கு தேவை இல்லை என்று ஒதுக்கிவிடலாமா ?
/////

அருமையான பதிவு