கிரிக்கெட் என்றால் என்ன ?

ரஷ்ய புரட்சிக்கு பிறகு ஒரு பெரிய புரட்சி நடந்துள்ளது இந்தியாவில் தான். கிரிக்கெட் என்னும் புரட்சி. பொடியர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்ப்பது, வீட்டில் உள்ளவர்கள் வேறுவழியில்லாமல் பார்ப்பது...

மைதானத்தை பிடிக்க அதிகாலையிலேயே செல்வார்கள். திருவிழா கூட்டம் போல மைதானத்தில் உள்ள கூட்டத்தின் நடுவே, அவரவர் ஆடுகளத்தை சரியாக கவனித்து அனைவரும் ஆடுவது வியப்பின் உச்சிக்கே கொண்டுசெல்லும் ஒன்று.

வார இறுதி நாட்கள், கோடைவிடுமுறை என்றால் இன்னும் விசேசம். தேசிய போட்டிகள் உள்ள நாட்களில், மைதானம் மயானம் போல காட்சியளிக்கும். இந்திய அணியின் தோல்வி காரணமாக ஓரிரு மரணங்கள் கூட நிகழ்ந்துள்ளது.

கிரிக்கெட்டின் வரலாறை பின்னோக்கி பார்த்தால். ஞாயிறுவின் பார்வை தம் மேல் தாராளமாக பட வெள்ளைக்காரன் கண்டுபிடித்த விளையாட்டு. அது விளையாட்டாகவே பல தேசங்களுக்கு பரவி, இந்தியாவுக்கும் நுழைந்தது. நமது தேசிய விளையாட்டை ஓரம்கட்டிவிட்டு, உலககோப்பையை வென்றபொழுது கூட அது விளையாட்டாகவே இருந்தது. ஆனால் நிலைமை இன்று வேறு.

அணித்தேர்வு குழுவில் தகுதி, திறமையை தாண்டி. ஆள் பலம், அரசியல் பலம், மாநிலப்பற்று, இனப்பற்று தாண்டவமாடி கொண்டிருக்கின்றது, அதனை நிரூபிக்கும் வகையில், வெகுநாட்களாக புறக்கணிக்கப்பட்ட தமிழர்களுக்கு இப்பொழுது கிடைக்கும் வாய்ப்பு, எல்லாம் ஸ்ரீ பகவான் புண்ணியத்தில்...

பசியினால் இறக்கும் சக குடிமகன்களுக்காக... வடகிழக்கு மாநிலங்களில் நமது இராணுவத்தினாலையே பாதிக்கப்படும் நமது மக்களுக்காக... படிக்கவேண்டிய வயதில் பிச்சைஎடுக்கும் பிள்ளைகளை பார்த்து... நமக்கு வராத ரோசம்...

உலககோப்பை தோல்வியுற்ற பொழுது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் வந்தது...அதன் விளைவாக சில சோடிப்பு வேலைகள். சில அனல் பறக்கும் வாக்குறுதிகள். அவ்வளவுதான். ஆயிரம் கோடி வியாபாரம் உள்ள இந்த தொழிலை(கிரிகெட்) மறுசீரமைக்க அவர்களுக்கு என்ன பைத்தியமா ?

வருடம் முழுவதும் போட்டிகள் நடந்துகொண்டிருக்கதான் செய்கின்றது. சில போட்டிகளில் தோற்கின்றனர், சில போட்டிகளில் வெற்றிபெருகின்றனர், தோல்வியின் பொழுது இகழ்தலும் வெற்றியின் பொழுது புகழ்தலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது...

செல்வாக்கு உள்ளவர்கள் நல்ல ஆட்டக்காரர்கள் என்ற போர்வையில்.(ஒரு போட்டியில் நூறு அடித்துவிட்டு ஒன்பது போட்டியில் ஒழுங்காக ஆடதவர்கள்) கிழவர்களான பின்னும், இளையவர்களுக்கு வழிவிடாமல் இருக்கின்றனர். செல்வாக்கு இல்லை என்றால் முப்பது வயது வந்துடன் தூக்கி எறிந்துவிடுவார்கள்.

இவர்கள் விளையாடுவதினால் கிட்டும் ஊதியத்தை விட, விளம்பரங்களினால் பெரும் ஊதியம் பலநூறு மடங்கு அதிகம் என்பதாலேயே. இளையோருக்கு வழிவிடாமல் ஆள்பலத்துடன் அணியை கெட்டியமாக பிடித்து கொள்கின்றனர்.

இந்த விளையாட்டை வைத்தே இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களின் பட்டியலில் வந்தவர்களும் உண்டு.

பலகோடி பேர் பார்க்கும் இந்த விளையாட்டில் பணத்துக்காக வேண்டுமென்ற சில சமயம் தோற்று, பார்பவனையும் கேனயனாக்கி விடுகின்றனர், வெளியே தெரிந்து வேறுவழியில்லாமல் அவர்கள் தூக்கிவீசபட்டாலும், பின்னாளில் அரசியல்வாதிகளிடம் இருந்து அவர்களுக்கு ஆதரவுகரம் வந்துவிடுகின்றது. விளையாட்டிலேயே ஊழல் செய்தவர்கள் பதவிக்கு வந்தால் ?

இவர்களுக்கு சமூகத்தில் அங்கிகாரமும் பலநூறு மடங்கு அதிகம். ஒரு வயது குழந்தைக்கு இதய அறுவைசிகிச்சை செய்த மருத்துவரின் புகைப்படத்தை கூட போடாது, செய்தி தரும் ஊடகங்கள். கிரிக்கெட் வீரர்களுக்கு சினிமா துறையினருக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்து வேதனை தான் அடையமுடிகின்றது.

பிச்சை எடுத்து, வாங்கி உண்ணும் ஒருவேளை உணவுக்கு கூட வரியையும் சேர்த்து கொடுத்துவிட்டு தான், பிச்சைகாரனாலையே உணவு உன்னமுடிகிறது இந்த தேசத்தில். ஆனால் பல கோடி சொத்துள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு வருமானவரி விளக்கு கூட கொடுத்திருக்கின்றனர் இதே தேசத்தில்.

கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்கும் மனபக்குவத்தை நாம் வளர்க்க தவறிவிட்டோம் என்பதே உண்மை, ஓய்வு நேரங்களில் மட்டுமே விளையாட கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டுக்கள் இன்று முழுபொழுதையும் ஆக்கரமிப்பதோடு மட்டும் அல்லாமல் நம் வாழ்க்கையோடும் விளையாட ஆரம்பித்துவிடுகின்றன. படிக்கும் பொழுது இந்த விளையாட்டின்மீது உள்ள மோகத்தினால் படிப்பில் கவனம் செலுத்த இயலாத பல குழந்தைகளை பார்க்க இயலுகின்றது. அப்படியே விளையாட்டு வீரனாக வரட்டுமே என்று எண்ணினால் பதினோரு பேருக்காக பலலட்சம் பேர் போட்டிபோடவேண்டி இருக்கின்றது. பதினோரு பேரை தவிர மீதி உள்ளவர்களின் நிலைமை ?

சற்று ஆழமாக யோசித்தால் இந்த விளையாட்டினால் சில நூறு அல்லது சில ஆயிரம் நபர்கள் தான் பயனடைவார்கள் ஆனால், இழப்பு பல கோடிபேருக்கு. அலுவலகத்தில் விடுப்பு எடுத்துவிட்டு, பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லாமல் தேசிய போட்டிகளை பார்த்து போட்டியில் வெற்றி அல்லது தோல்வி ஏற்பட்டாலும் அன்றோடு சரி, பலமணிநேரம் வீணாவது தான் மிச்சம். வருடம் முழுவது இந்த போட்டிகள் நடந்துகொண்டே தான் இருக்கும், நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கபோகிறோம்...

இது கிரிக்கெட்டின் வரலாறு சொல்ல உதவுமே தவிர, நம் வாழ்க்கைக்கு எள்ளளவும் உதவாது.

6 comments:

எட்வின் said...

நல்லா சொல்லியிருக்கீங்க, இல்ல குத்தி இருக்கீங்க. நீங்க சொல்ற மாதிரி. விளையாட்டை விளையாட்டாக பார்த்தாலே போதும்.பிரச்சினை இருக்காது

Suresh said...

arumaiya solli iruking ahtalai
hha illai vilayata eppadi than parkanum nu neeng sonna vitham super

anna enga ellamrum including me cricket variyargal hha ha

//பசியினால் இறக்கும் சக குடிமகன்களுக்காக... வடகிழக்கு மாநிலங்களில் நமது இராணுவத்தினாலையே பாதிக்கப்படும் நமது மக்களுக்காக... படிக்கவேண்டிய வயதில் பிச்சைஎடுக்கும் பிள்ளைகளை பார்த்து... நமக்கு வராத ரோசம்.../

arumaiyana karuthukkal

dhoni nalla vilayadalai na onnu kudi vitta odaikiran ..

aaana arasila nalla ilai na kaikatikitu velaiya pakuran

Scorpion King said...

ஏதோ எழுதனும்னு எழுதனுது போல இருக்கு .... கிரிக்கெட் பிடிக்கவில்லை என்றால் அதை பற்றி தாங்கள் இவ்வளவு நேரம் செலவிட்டு எழுதியிருக்க தேவைஇல்லை .. கிரிக்கெட்டினால் ஏதோ பாதிக்கபட்டவர் போல எழுதியிருகீர்கள் .... அதை வெறும் ஒரு விளையாட்டா எடுத்துகொண்டால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது .....

Pradeep said...

I liked your comments.....

TARA said...

arumaya unamay solli irukeenga....ungaloda katuthai na mulumaya amothikiren....Unmaya sollanum na intha ulagathula nallavangaliku kaalam illai...illathavangalta than intha ulagam avan katti irukura komanatha kooda (vari engingra perla)vittu vaikathu....

அமுதன் said...

//பசியினால் இறக்கும் சக குடிமகன்களுக்காக... வடகிழக்கு மாநிலங்களில் நமது இராணுவத்தினாலையே பாதிக்கப்படும் நமது மக்களுக்காக... படிக்கவேண்டிய வயதில் பிச்சைஎடுக்கும் பிள்ளைகளை பார்த்து... நமக்கு வராத ரோசம்...//

இந்த வெறி என்றுதான் அடங்குமோ???