அ ஆ கவிதைகள்

பேனா
கிடைக்காமல்
இடுப்பில் கைவைத்து
உடம்பை அசைத்து
தரையில் எழுதிய
முதல் அ ஆ...

உடல்
அசைவின் எழுத்துக்களை
ரசித்த அன்னையின்
முத்தமழையில் நினைந்து
நான் எழுப்பிய அ ஆ...

தந்தை
இருவரையும்
அணைத்ததில்
அம்மா எழுப்பிய அ
நான் எழுப்பிய ஆ...

குண்டு சத்தத்தில்
புகை மண்டலங்களுக்கு
நடுவே
நாங்கள் மூவரும்
எழுப்பிய அ ஆ...

திடிக்கிட்டு
எழுந்து
ஈர விழியோடு
என்மனதில்
நான் சொல்லிக்கொண்ட
அ ஆ...

-பித்தன்

4 comments:

Suresh said...

அ ஆ அருமை என் நெஞ்சை தொட்டு தாலாட்டியது தலைவா...

எவ்வளவு அழகு

//
உடல்
அசைவின் எழுத்துக்களை
ரசித்த அன்னையின்
முத்தமழையில் நினைந்து
நான் எழுப்பிய அ ஆ...//

குண்டு சத்தத்தில்
புகை மண்டலங்களுக்கு
நடுவே
நாங்கள் மூவரும்
எழுப்பிய அ ஆ..

வலியை சொல்லுது அருமை தலைவா

ஹேமா said...

வணக்கம் பித்தன்.சாதாரணமாக அ...ஆ என்று சொல்லும்போது வராத வலி.

வெற்றி-[க்]-கதிரவன் said...

//அ ஆ அருமை என் நெஞ்சை தொட்டு தாலாட்டியது தலைவா...

எவ்வளவு அழகு
//

இந்த பித்தனின் பிதற்றலகூட, அழகுன்னு சொன்னபார் நீ ரொம்ப நல்லவன் சுரேஷ்.... :)

வெற்றி-[க்]-கதிரவன் said...

//ஹேமா said...
வணக்கம் பித்தன்.சாதாரணமாக அ...ஆ என்று சொல்லும்போது வராத வலி.
//

நன்றி ஹேமா