உலகின் தலைசிறந்த எழுத்தாளன் பாகம் 1
எழுதுவதற்கு முன் ஒரு டீ குடித்துவிட்டு எழுதலாம் என்று சட்டை பையை பார்த்தால் ஐம்பது பைசாதான் இருக்கு,.. சிறந்த எழுத்தாளருக்கான தகுதி வந்த நிலையில் இந்த இடுகையை இடுகிறேன்.

என்னை தவிர தமிழகத்தில் இருப்பவர்கள் எல்லாம் மனநோய் மருத்துவமனையை அனுகவேன்டியவர்கள். நான் ஒரு வைத்தியன் மட்டும், இவர்களை திருத்தமுடியாது என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதும் இல்லை, என்னைப்போல அறிவாளியாக இவர்கள் ஏன் இருக்கவில்லை என்று எழும் துயரத்தைவிட நான் ஒருவன் மட்டும் அறிவாளியாக இருப்பதில் எனக்கு சந்தோசமாக இருக்கத்தான் செய்கிறது.

நான் ஒருவன் தனியாக இவர்களை எல்லாம் திருத்திவிடலாம் என்ற எண்ணத்தோடுதான் சென்னைக்கு பதினைந்து வருடத்திருக்கு முன்பு வந்தேன். என் எழுத்தை பார்த்து சைக்கோ என்று சொல்லும் இவர்கள் தான். காசுகொடுத்து அவர்கள் கட்சிக்காக என்னை எழுத அழைத்தார்கள். கண்ணை மூடிக்கொண்டு இவர்களை ஆதரித்து எழுத தொடங்கினேன். காசு கொடுக்கிறார்கள் அல்லவா.

சிலசமையம் என்னை நேர்மையான எழுத்தாளனாக காட்டிக்கொள்ள இவர்களை தூற்றுவதுபோல தூற்றி ஏற்றிவிடுவேன். பெரும்பாலான எழுத்தாளர்களை போல கம்யூனிச சாயத்தை பூசிக்கொண்டு தோலில் சோலானா பை மாட்டிக்கொண்டு பார்பவர்களை தோழர்கள் என்றுசொல்லிக்கொண்டு டீ வாங்கிகொடுத்து அல்லது வாங்கிகுடித்து தின பொலப்புக்கே சிங்கி அடிப்பதை தவிர்க்கவே இந்த சால்ரா வேலையில் சேர்ந்தேன்.

அதே போல, எனக்கு சால்ரா அடிபவர்களே என் அன்புக்கினிய வாசகர்கள் ஆவர்.
நான் உலகத்தரமான எழுத்தாளர்களில் ஒருவன் என்பதில் கர்வம் கொள்ளாமல் இவர்கள் அனுப்பும் மின்னஞ்சலுக்கு பதில் எழுதுவதையும், யாராவது உண்மையை எழுதும் பட்சத்தில் அவர்களை கிழிகிழி என்று கிழித்து அனைவரும் படிக்கும்வகையில் அந்த மடலையும் வெளியிடுவது என் சுபாவம். அதையே என் விசிறிகள் செய்கின்றனர் என்பதை பார்க்கும் பொழுது எனக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிடுகின்றது.

வடஇந்திய பத்திரிக்கைகளில் என் படைப்பு வரும்பொழுது அதை கொண்டாடுவேன். ஏன் என்றால் தமிழக பத்திரிக்கைகளுக்கு என் படைப்பை விமர்சனம் பண்ணும் அளவுக்கு தகுதி கிடையாது என்ற ஒரு காரணம்தான். இன்றைய தேதியில் என்னைபோல் புதுமையாக, நவினமாக சிந்திப்பவர்கள் வெகுசிலர், அதிலும் என்னை பின்னுக்குதள்ளும் அளவுக்கு யாருக்கும் சிந்தனை திறனோ, திறமையோ கிடையாது. பிரான்ஸ் முற்போக்கு எழுத்தாளர் "டானியன் டிம்பர்" கடந்த வாரம் எனக்கு ஒரு அழைப்பு விடுத்தார், அப்பொழுது அவர் உங்களைபோல ஒரு எழுத்தாளர் உலகத்தில் கிடையாது என்று சொல்லிகொண்டிருக்கும் பொழுதே குறுக்கிட்டு இந்த உலகத்தில் என்னை போல எழுத்தாளர்கள் இருகிறார்கள் ஆனால் என் அளவிருக்கு அவர்கள் எழுதுவதில்லை அல்லது எழுதும் திறமை அவர்களுக்கு இல்லை என்று மிக பணிவோடு கூறினேன்.

கடந்த வருடம் இருபத்திஎட்டு புத்தகங்களை வெளியிட்டு இருக்கும் பட்சத்தில், ஒரு கடையிலும் என் புத்தகம் கிடைக்காதது இந்த கடைகாரர்களின் சுயநலத்தை காட்டுகிறது மற்ற எழுத்தாளர்களின் கூட்டுசதியோ என்று சந்தேகம் கூட இருக்கின்றது, இவர்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் இந்த வருடம் ஐம்பத்தி ஆறு புத்தகங்களை வெளியிட்டு, அதன் மூலம் சுனாமியை உருவாக்கபோகிறேன்.

சரி விசயதிர்க்கு வருகிறேன், இப்படி உலகத்தரத்தில் நோபல் பரிசை நோக்கி சென்றுகொண்டிருக்கும் எனக்கு கடந்த சிலமாதங்களாக கட்சியில் இருந்து காசு வருவதில்லை. காரணம் என்னவென்று விசாரிக்கையில் சொற்ப பணத்திற்க்காக கட்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் மிகவும் கீழ்இறங்கி கூட எழுத பல சிறு எழுத்தாளர்கள் கிடைத்துவிட்ட காரணத்தினாலேயே. இன்று எனக்கு கைபேசியை கூட அடகுவைக்கும் நிலைமை.

அத்தான் என்று கூப்பிட்டுக்கொண்டிருந்த என் மனைவி குந்தவை பிறகு என்னை வாங்க, போங்க என்று கூப்பிட்டு இன்று வா,போ என்று கூப்பிடும் அளவுக்கு வந்துவிட்டது... அவள் வாடா, போடா என்று கூப்பிடுவதர்க்குள் என் அன்பிற்கினிய வாசகர்களே மாற்று கட்சியில் இருந்து ஒரு சால்ரா அடிக்கும் பதவியை வாங்கிகொடுங்கள்.

உங்களுக்கு என் ஆசிகள் கிட்டும்.

-முற்போக்கு எழுத்தாளர் பித்தன்

11 comments:

வால்பையன் said...

இதுக்கு ஏன் பின்னூட்டம் வரல!

அருமையான ஒரு முற்போக்கு எழுத்தாளர் பதிவுல கமெண்ட முடியாதவங்க எதுக்கு பதிவு எழுதுறிங்க!

ஆதவா said...

வழக்கம்போல உங்கள் நக்கல்!! இறுதி நேர ட்விஸ்ட் நன்றாக இருந்தது. எதிர்பார்த்தது போல. ஒரு சிறுகதையைப் போல உணர்கிறேன்!!!

தொடருங்கள் பித்தன் சார்

வெற்றி-[க்]-கதிரவன் said...

//ஆதவா said...
வழக்கம்போல உங்கள் நக்கல்!! இறுதி நேர ட்விஸ்ட் நன்றாக இருந்தது. எதிர்பார்த்தது போல. ஒரு சிறுகதையைப் போல உணர்கிறேன்!!!

தொடருங்கள் பித்தன் சார்
//

நன்றி ஆதவா

Suresh said...

//எழுதுவதற்கு முன் ஒரு டீ குடித்துவிட்டு எழுதலாம் என்று சட்டை பையை பார்த்தால் ஐம்பது பைசாதான் இருக்கு//

நீ கொடுத்து வச்சவன் என் பையில் 5 பைசா ;)

Suresh said...

மச்சான் உன் நக்கல நக்கல் தான் டா ;)

அவிய்ங்க ராசா said...

கலக்கல் அண்ணாத்தே...கலக்கிட்டே..நான் உங்க கட்சி...

வெற்றி-[க்]-கதிரவன் said...

//Suresh said...
//எழுதுவதற்கு முன் ஒரு டீ குடித்துவிட்டு எழுதலாம் என்று சட்டை பையை பார்த்தால் ஐம்பது பைசாதான் இருக்கு//

நீ கொடுத்து வச்சவன் என் பையில் 5 பைசா ;)
//

அப்படியா ! கண்டிப்பாக நீங்கள் தான் என்னைவிட மிகசிறந்த எழுத்தாளர்

குடுகுடுப்பை said...

அருமையோ அருமை.

வெற்றி-[க்]-கதிரவன் said...

//குடுகுடுப்பை said...
அருமையோ அருமை.
//

நன்றி பொதுசெயலாளர் அவர்களே

கோவி.கண்ணன் said...

//எழுதுவதற்கு முன் ஒரு டீ குடித்துவிட்டு எழுதலாம் என்று சட்டை பையை பார்த்தால் ஐம்பது பைசாதான் இருக்கு,.. சிறந்த எழுத்தாளருக்கான தகுதி வந்த நிலையில் இந்த இடுகையை இடுகிறேன்.//

இது ஒன்றே சிறந்த வருங்கால எழுத்தாளரை அடையாளம் காட்டுது.

வாழ்த்துகள் !

வெற்றி-[க்]-கதிரவன் said...

//கோவி.கண்ணன் said...
//எழுதுவதற்கு முன் ஒரு டீ குடித்துவிட்டு எழுதலாம் என்று சட்டை பையை பார்த்தால் ஐம்பது பைசாதான் இருக்கு,.. சிறந்த எழுத்தாளருக்கான தகுதி வந்த நிலையில் இந்த இடுகையை இடுகிறேன்.//

இது ஒன்றே சிறந்த வருங்கால எழுத்தாளரை அடையாளம் காட்டுது.

வாழ்த்துகள் !
//

நன்றிங்க கோவியாரே