உலகின் தலைசிறந்த எழுத்தாளன் பாகம் 2

*
உலகின் தலைசிறந்த எழுத்தாளன் பாகம் 1
என் வாசக கண்மணிகளின் ஆதரவில் ஆதே கட்சியில் மீண்டும் சால்றா தட்டும் வேலை கிடைத்துவிட்டது. இப்பொழுது சம்பளத்தைக்கூட கூட்டி தருவதாக சொல்லிருகின்றனர். அதற்க்கு காரணமும் உண்டு அதுதான் என் கர்வம். நான் தலைசிறந்த எழுத்தாளன் என்ற கர்வம் எனக்கு இருப்பதாலேயே இது சாத்தியமாகி விட்டது. அதை தூக்கி ஏறி என்று வரும் கடிதங்களை நான் தூக்கி எறிகின்றேன்.

ஒரு எழுத்தாளனுக்கு முக்கியமானது அவன் எழுத்தைவிட அவன் கர்வம் மற்றும் அடுத்தவனின் கருத்தை ஏற்றுக்கொள்ள கூடாது என்ற மனப்பான்மை, எந்த எழுத்தாளனையும் மறந்தும் கூட பாராட்டிவிடக்கூடாது என்ற எழுதப்படாத அடிப்படை விதியை மதித்து செயல்படுபவனே உண்மையான எழுத்தாளன், சக எழுத்தாளனை விமர்சித்து அவனது எழுத்துக்களை குப்பைகலாக்குவதில்தான் ஒரு உண்மையான எழுத்தாளன் ஆனந்தம் காணவேண்டும், எதாவது ஒரு அணியில் இருந்து வேடிக்கை மட்டும் பார்ப்பவர்களே வாசகர்கள்.

என் கருத்துக்களை ஏற்று என் பின்னல் இந்த சமுகம் வந்தால், இந்த சமூகத்தை ஐந்தே ஆண்டுகளில் திருத்திவிடுவேன் ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும் ஆட்சியை போல மாறும் என் கருத்துக்களை மட்டும் என்னால் திருத்திக்கொள்ள இயலாது காரணம் கேட்டால் அதற்க்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை ஏன் என்றால் அது உங்களுக்கே தெரியும் நான் ஒரு உலக தரமான எழுத்தாளன் என்று. கருத்துக்கள் மாறுவது இயற்க்கை அதை யாரும் தடுக்கவோ தட்டி கேட்கவோ கூடாது.

அரும்பு மீசை வளரும் காலத்தில் கருப்பு கொடியும் பின்னாளில் சிகப்பு கொடியை பிடித்து வீதியில் அலைந்தவன் நான். இன்று தேடி தேடி சென்று ஞானிகளின் ஆசிர்வாதத்தை பெற்று வருகின்றேன், இது காலத்தின் கட்டளை அதற்காக என் பாலிய காலத்து கருத்துக்களை திரும்பபெற்றுக்கொள்ள என்று சொன்னால் அது நடக்காத காரியம், ஒருவன் கருத்துக்களை திரும்பி பெற்றுக்கொள்வது அவன் சுயபுத்திக்கு விடுக்கப்பட்ட சவாலே. எனது பழைய கருத்துக்களை தனிப்பட்டமுறையில் நான் ஏற்றுக்கொள்வது இல்லை ஆனால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வது உங்கள் கடமை ஏனெனில் நீங்கள் வாசகன் நான் எழுத்தாளன். கருத்துக்களை மாற்றிக்கொள்ளும் உரிமை எழுத்தாளனுக்கு மட்டுமே உண்டு. வாசகனின் சிந்தனையில் உருவாகும் கருத்து எப்பொழுதும் தவறாகவே இருக்கும். ஆகவே வாசகர்கள் சிந்திக்காமல் இருப்பதுவே நலம்.

அதுபோலவே வாசகர்கள் உப்பு சேர்க்காமல் உணவுண்டால் மட்டுமே எனது வாசகர்களாக இருக்கமுடியும், நான் எழுத்தாளன் என்று மட்டும் சொல்லிவிட்டால் அது தலைகனம் என்றாகிவிடும், ஆகவே அந்த கனத்தை இருக்கவே சிலநேரங்களில் நானும் வாசகனாகிவிடுகிறேன் அதனாலேயே உப்பு அதிகம் சேர்த்துக்கொள்வதில்லை ஆனால் எழுத்தாளன் என்ற முறையில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்கிறேன் என்று காட்ட வேண்டிய நிலைமைக்கு தள்ளபடுவதினால், எழுதும்பொழுது உப்பு அதிகம் சேர்த்துக்கொள்வது போல் நடிக்கவேண்டிய கட்டாயத்திருக்கு தள்ளபடுகிறேன்.

இரத்தம் சூடாக இருக்கையில் பொதுவுடைமை மற்றும் நாத்திகம் பேச குருதியில் புரட்சியும், எழுச்சியும் கரைபுரண்டு ஓடுவதை காணயியலும் ஆனால் குருதியின் சூடு தனிய தனிய ஆத்திகத்தில் உள்ள அதிர்வுகளின் கட்டுப்பாட்டில் நமது கருத்துக்கள் சென்று விடுகிறது. இதை தவரெண்டு சொல்பவர்கள் ஞானசூநியர்கள் ஏன் என்றால் இது என்னுடைய கருத்து. இதற்க்கு வயோதிக பயம் என்று பட்டம் கட்டும் முட்டாள்களும் உண்டு. நான் யாருக்கும் பயப்படுபவனும் அல்ல ஞானத்தை அடையாமல் இறக்க போகபோரவனும் அல்ல. ஞானம் என்றால் என்ன என்று கேட்பபவர்களுக்கு ஒரு தனி இடுகையை எழுதவிருக்கிறேன்.

தொடக்க காலத்தில் சத்திய சோதனையை ஏற்றுக்கொள்வது எனக்கு சத்தியசோதனையாகவே இருந்தது ஆனால் ஆயுளில் முக்கால்வாசி ஓடியபின் இன்று எனது வாழ்க்கை சத்தியசோதனையை ஒத்திருக்கின்றது என்று எழுதவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன் என்பதை நினைக்கும்பொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது, ஏன் என்றால் என்னை சத்தியசீலனாக போற்றுவார்கள் அல்லவா, வந்த பாதை சரியான பாதையா என்பதை காண பெரும்பாலானோர் அளவுகோலாக வைத்துக்கொள்ளும் சத்திய சோதனையை அளவுகோலாக வைத்து நானும் கண்டுகொண்டேன்.

எனது சத்திய சோதனையை "சோறு திங்க வன்முறையும், இளைப்பாற அகிம்சையும்" என்ற நூல்வடிவில் உங்களுக்கான அளவுகோலாக தரவிருக்கிறேன். இந்த நூலை வாங்கி உங்களுக்கான அளவுகோலாக வைத்துக்கொள்ளும் பட்சத்தில்

உங்களுக்கு என் ஆசிகள் கிட்டும்

-முற்போக்கு எழுத்தாளர் பித்தன்

7 comments:

Suresh said...

மச்சான் இந்த பதிவை படித்து நிறையா பேருக்கு மனசு கஷ்டமா இருக்கும்..

காரணம் நம்மள தான் சொல்லுறாங்களோனு பளார்னு அறைந்த மாதிரி இருக்கும்...

குற்றம் உள்ள நெஞ்சு தான் குறு குறுக்கும்..

அவ்

வினோத் கெளதம் said...

பின்னி பெடல் போட்டு இருக்க மச்சி..

Suresh said...

பித்தன் நீர் பெரிய கவிஞர்

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி சுரேஷ், உங்கள் அறிவுரைகளை ஏற்று வாழ்வில் வளம் பெற என்னையே வாழ்த்திக்கொள்கிறேன்

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி வினோத், காச என்கிட்டயே வாங்கி எனக்கே செலவு பண்ணுற நீதான் பெரிய ஆளு :)

வெற்றி-[க்]-கதிரவன் said...

//ஆதவா said...
???!!!!!
//

எதுவும் புரியலனா ரொம்ப சந்தோசபடு :-)

தேவன் மாயம் said...

அரும்பு மீசை வளரும் காலத்தில் கருப்பு கொடியும் பின்னாளில் சிகப்பு கொடியை பிடித்து வீதியில் அலைந்தவன் நான். இன்று தேடி தேடி சென்று ஞானிகளின் ஆசிர்வாதத்தை பெற்று வருகின்றேன், இது காலத்தின் கட்டளை//

என்னா எழுத்து நடை!! நிச்சயம் பெரிய எழுத்தாளந்தான்!!