சுயபுராணம்

.
இந்த தளத்தில் ஒருவரி கூட சுயபுராணம் எழுத கூடாதென்றிருந்தேன். தவிர்க்கயியலவில்லை பொறுத்தருளுக


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பித்தன் - நானே வைத்துக்கொண்ட பெயர், பித்தர்கள் மட்டும் தான் இந்த உலகில் நடிப்பதில்லை.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

நினைவில்லை

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கண்டிப்பாக பிடிக்கும், ஆனால் என்னை தவிர மற்றவர்களுக்கு புரிவது கடினம்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
இப்பொழுது : கிடைக்கும் அனைத்து சைவ உணவுகளும்.
எப்பொழுதும் : புட்டு மற்றும் இடியாப்பம் தேங்காய்பாலுடன்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அது அந்த நபர் பழகும் விதத்தை பொருத்தது.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பேச்சி.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது : சில நேரங்களில் கடவுளாக இருப்பது
பிடிக்காதது : பிடித்ததற்கு எதிர்மறை

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்குள் இல்லை

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அம்மா

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கருப்பு நிற பேண்ட். லைட் பச்சை நிற சட்டை

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கீபோர்டின் சத்தம்

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு & வெள்ளை

14.பிடித்த மணம்?
பிஞ்சி குழந்தைகளிடம் இருந்து வரும் பால் மனம்
மல்லிகை
மல்லேஸ்வரம் மார்கெட்டை கடக்கும் பொழுது அனைத்து மலர்களின் மனமும் கலந்து ஒரு புதுவித மனம் வரும் அந்த மனம்.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
நாம் பெற்ற சங்கடம் வேண்டாம் எவருக்கும்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
லோகு :
வறுமையின் நிறம்...
சொல்லாத காதல்..
திருப்பூர் பக்கம் வேலை தேடி வாங்க..

ராசா :

இவரது பெரும்பாலான பதிவுகள் குறிப்பாக என் ஓட்டு அம்மாவுக்குதாண்ணே…

17. பிடித்த விளையாட்டு?
பாடல் கேட்டுக்கொண்டே தனிமையில் நெடுந்தொலைவு ஸ்கேட்டிங் (இன் லைன்) செல்ல பிடிக்கும்.

18.கண்ணாடி அணிபவரா?
கணினி திரைக்கு முன்பு மட்டும்.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
எதார்த்தமான படங்கள், நிச வாழ்கையின் நிழலான படங்கள்

20.கடைசியாகப் பார்த்த படம்?
நான் கடவுள்

21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
இரண்டு மாதங்களுக்கு விடுப்பு கொடுத்திருக்கிறேன், சமிபத்தில் படித்தது
செம்மீன் - தகழி சிவசங்கர பிள்ளை

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மாற்றுவதில்லை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : மெளனம்
பிடிக்காத சத்ததம் : வாகன இரச்சல்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
பாலி

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கலாம்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
குப்பைத்தொட்டியான இதயம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கொடைக்கானல்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
மனிதன் போல நடிக்காமல்... மனிதனாக

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்குள் இல்லை

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க...?
சுழியம் ஆனால் அனைத்தும் இதில் அடங்கும்.

எனக்கு அழைப்பு விடுத்த லோகு மற்றும் அவிங்க ராசா அவர்களுக்கு நன்றிகள்

24 comments:

வினோத் கெளதம் said...

மச்சான் உண்மையில் பதில்கள் ரொம்ப யதார்த்தமா இருக்கு..

KISHORE said...

அருமையான பதில்கள்..மச்சி..

//31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்குள் இல்லை//

கலக்கல் ...

sakthi said...

இது வரை இவ்ளோ விவரமா பதில் சொன்னவுங்க யாருமே இல்லை

ஆதவா said...

படக்'படக்'ன்னு பதில் சொல்லிட்டீங்க.. இருந்தாலும் உங்களைத் தெரிந்து கொள்வதிலுண்டான சிக்கல் இருந்து கொண்டேயிருக்கிறது.

சில நேரங்களில் கடவுள் என்ற வரியை ரொம்பவும் ரசித்தேன்!!!

வேத்தியன் said...

4.பிடித்த மதிய உணவு என்ன?
இப்பொழுது : கிடைக்கும் அனைத்து சைவ உணவுகளும்.
எப்பொழுதும் : புட்டு மற்றும் இடியாப்பம் தேங்காய்பாலுடன்//

எங்க நாட்டுல பொதுவாக இதை இரவு உணவாக தான் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு...:-)

வேத்தியன் said...

பித்தர்கள் மட்டும் தான் இந்த உலகில் நடிப்பதில்லை.//

ஆமா ஆமா...

வேத்தியன் said...

நல்ல சிறப்பான பதில்கள்...

ரசித்தேன்...

Suresh said...

//பித்தன் - நானே வைத்துக்கொண்ட பெயர், பித்தர்கள் மட்டும் தான் இந்த உலகில் நடிப்பதில்லை./

உண்மை

Suresh said...

//இப்பொழுது : கிடைக்கும் அனைத்து சைவ உணவுகளும்.//

ஓ அந்த முயல், காடை, தவளை எல்லாம் காலி போல சிங்கத்தை கூட விட்டு வைக்க மாட்ட போல

Suresh said...

//அது அந்த நபர் பழகும் விதத்தை பொருத்தது.//

எது அந்த பிகர் பொருத்து இருக்குனு சொல்ல வர அதனே

வினோத் : அதே தான்
கிஷோர்: அதே தான்
கண்ணா: அதே தான்
கலை: அதே தான்

Suresh said...

//எப்பொழுதும் : புட்டு மற்றும் இடியாப்பம் தேங்காய்பாலுடன்//


கேரளா பிகர் ஏத்தாச்சும் பாக்கிறாயா

Suresh said...

நீ தான் சங்கிலிய உடைக்கிறியா

Suresh said...

//நாம் பெற்ற சங்கடம் வேண்டாம் எவருக்கும்.//

ஹீ ஹீ ;)

Suresh said...

/பிஞ்சி குழந்தைகளிடம் இருந்து வரும் பால் மனம்
மல்லிகை
மல்லேஸ்வரம் மார்கெட்டை கடக்கும் பொழுது அனைத்து மலர்களின் மனமும் கலந்து ஒரு புதுவித மனம் வரும் அந்த மனம்.//

அட இங்க பாருடா கலக்கலா சொல்லுறான்

Suresh said...

பதிவுகள் நல்ல தேர்வு ராசவோடதும், லோகுவாகட்டும்

கண்ணா.. said...

தல அப்புறம் வால்பையன் மற்றும் சென்ஷி தளத்துல போட்ட போதை பாட்ட தனி பதிவா போழ்ட்ழுங்க..

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி வினோத்

நன்றி கிஷோர்

நன்றி சக்தி அக்கா

நன்றி ஆதவா (சிக்கல தீத்து வைப்போம் :) )

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி சுரேஷ்
நன்றி கண்ணா

கவுஜய தனி பதிவா போட்டு மக்களின் கோபத்துக்கு ஆளாக விரும்பல :)

பீர் | Peer said...

//பித்தர்கள் மட்டும் தான் இந்த உலகில் நடிப்பதில்லை.//

பித்தனாக நடிப்பது எளிதா கடினமா பித்தன்?

கோவி.கண்ணன் said...

ஒரு வழியாகா தமிழ்மணத்தில் இணைஞ்சிட்டிங்க.

வாழ்த்துகள் !

தேவன் மாயம் said...

பித்தன் - நானே வைத்துக்கொண்ட பெயர், பித்தர்கள் மட்டும் தான் இந்த உலகில் நடிப்பதில்லை.
///
(பித்தீட்டீங்க!)! பிச்சுட்டீங்க!!!!

கலையரசன் said...

யப்பா சாமி.. அரை கிலோ சித்தாந்தம்,
அரை கிலோ வேதாந்தம், கொடுப்பா..

என்னது, கடயில ஆள் இல்லயா?
எப்ப வருவாரு? வந்தா...

அவரோட 32 ஒரு வரி பதில்கள்
நல்லாயிருக்கு சொல்லிடுப்பா..!

கலையரசன் said...

யப்பா சாமி.. அரை கிலோ சித்தாந்தம்,
அரை கிலோ வேதாந்தம், கொடுப்பா..

என்னது, கடயில ஆள் இல்லயா?
எப்ப வருவாரு? வந்தா...

அவரோட 32 ஒரு வரி பதில்கள்
நல்லாயிருக்கு சொல்லிடுப்பா..!

குடுகுடுப்பை said...

நானும் மீண்டு எழுத வந்துட்டேன் பித்தரே.