பிரபல பதிவர்களுக்கு துதி பாடுவது எப்படி ?

*
அறிவிலி அய்யா

சிம்லா ஸ்பெஷல்லும் நீயே
சிங்கை ஸ்பெஷல்லும் நீயே
காமெடி கிங்கும் நீயே
பதிவுலக நாயகனும் நீயே.
அறியாமையை விரட்டுவதும் நீயே.
அறிவுக்கு அரசன் "அறிவிலி அய்யாவே"

*-*-*

குழலி

சோழநாட்டு பிகரென்று நினைத்தால்,
சுழன்றடிக்கும் சூறாவளி காற்றே,
அரசியல் விமர்சனம் எழுதி
அகல்விளக்காய் ஒளி தருகிறாயே.
களத்துமேட்டு காளையே
கடலூர் கம்பனே
வாழ்க நீ பல்லாண்டு !!!
வளர்க உன் தமிழ்தொண்டு !!!

*-*-*

கோவியார்

ஆத்திகனா இல்லை நாத்திகனா ?
தமிழனா இல்லை திராவிடனா ?
இலக்கணமா இல்லை இலக்கியமா ?
சிறுகதையா இல்லை தொடர்கதையா ?
தலைக்கனமில்லா தமிழ்மகனே
பதில் கூறு மறுகணமே !!!

*-*-*

ஜோதியார்

வெளிச்சத்தை தேடி
எங்கெங்கோ அலைந்தேன்.
சிங்கையில் இருப்பதாக
தெரிய உடனே விரைந்தேன்
கொல்லிமலை குப்புவோடு
அரசியலை விவாதிக்கும்
ஆதவனை போன்ற சோதியாரை
காண கண்கோடி வேண்டும்.
உம்மை துதிபாட
முத்தமிழும் உடனே
எனக்கு வேண்டும்.

*-*-*

முகவை இராம்

மென்பொருளோடு உருண்டு
வன்பொருள் செய்யும் எம்பொருலே
தமிழை வில்லாய் வளைத்து
சொல்லை அம்பாய் இழுத்து
வெண்பாவாக எங்கள் இதயத்தில்
தைக்கும் சங்கயிலக்கியமே
முகவைக்கு மைந்தனே
முத்தமிழுக்கு மூத்தவனே
வாழ்க உம்தமிழ்பணி !!!

*-*-*

கிரி

தமிழ்திரைப்பட சூப்பர் ஸ்டார் அவரு
ப்லோக்கிங் சூப்பர் ஸ்டார் இவரு
இவர் பதிவ படிச்சாலே பவரு
சிங்கைல இவர விட்டா எவரு.


*-*-*

வேடிக்கை மனிதன்

சரவண பொய்கையில் நீராடி
வேடிக்கை வலையில் நாம் கூட
சிந்தனையை தெளிக்கும் பெருமகனே
தேடலில் குதிக்கும் திருமகனே
கும்மி பதிவிடா குலமகனே
கூடியவிரைவில் உமக்கு மாலையிட
மங்கை கிடைக்ககடவது மணமகனே.

*-*-*

அப்பாவி முரு

அயல் தேசத்திலிருந்தாலும்
உன் அன்னைதேசத்து பற்று
அன்னைதேசத்தை விட பெருசு
அதவிட உங்க கோபம் பெருசு
அதவிட உங்க பாசம் பெருசு
அதவிட உங்க நட்பு பெருசு
அப்பாவின்னு பேருவச்சிருக்க
அப்பவியன்னே நீங்க.

*-*-*

பால்ராஜ்

நேற்று பிறந்தவரும் உமக்கு அண்ணன்தான்
இன்று பிறந்தவரும் உமக்கு அண்ணன்தான்
நாளை பிறப்பவரும் உமக்கு அண்ணன்தான்
அடுத்தசென்மத்தில் பிறப்பவரும் உமக்கு அண்ணன்தான்.
மேலே பார்த்தாலும் அண்ணன்தான்
கீழே பார்த்தாலும் அண்ணன்தான்
சைடுல பார்த்தாலும் அண்ணன்தான்
லெப்டுல பாத்தாலும் அண்ணன்தான்
ரைட்டுல பாத்தாலும் அண்ணன்தான்
ஏன் இந்த அகிலமே உமக்கு அண்ணன்தான்.
அண்ணன் அண்ணன் அண்ணன் அண்ணன்
எனக்கு நீங்கதான் அண்ணன்.

*-*-*

'டொன்'லீ

நீ பேசுவதே பாடுவதாக
நீ பாடுவதே இசையாக
நீ இசைப்பதே ராகமாக
உன் ராகமே சங்கீதமாக
உன் சங்கீதமே காதலாக
உன் காதலே தமிழாக.

*-*-*

ஜெகா

" 'ஜெக' தீசன்"
...சும்மா பேரகேட்டாலே அதிருதுல்ல,...
...அதிரடிதான் ஜெகா ஜெகா ஜெகா ஜெகா...
... விருதுனாலும் ஜெகா ஜெகா ஜெகா ஜெகா...
...அங்கீகாரம்னா ஜெகா ஜெகா ஜெகா ஜெகா....
...அனைத்துமே ஜெகா ஜெகா ஜெகா ஜெகா....

*-*-*

அம்மாஅப்பா

அம்மாவும் நீயா அப்பாவும் நீயே...
பின்னூட்டமிட்டு ஆதரிக்கும் தெய்வமும் நீயே ...
நல்லபதிவுக்கு ஓட்டுபோட ஓடிவருவாயே...
மொக்கைபதிவை திரும்பிகூட பார்க்கமறுப்பாயே...
சோழகுல சிங்கத்திலே நீயும் ஒருவனே
உச்சிபிள்ளையார் உன்னுடனே துனையிருப்பானே....

*-*-*

பின்னூட்டபுயல் விஜய் ஆனந்த்.

நல்ல பதிவை நாடுபவன்
ஒட்டு போட்டு வாழ்த்துபவன்
ஓரமாக போகிறவன்
உசிப்பேற்றினால் எழுத்தில்
உதைக்கின்றவன்.

*-*-*

வாசகர் பாஸ்கர் அண்ணாச்சி,

வாசிப்புக்கு பாஸ்கர்
வசந்தத்துக்கு பாஸ்கர்
வள்ளல் பாஸ்கர்
வாசகர் பாஸ்கர்

யாரோ :: என்ன எல்லாம் சிங்கை பதிவர்களா இருக்காங்க மற்ற பிரபல பதிவர்கள் பேர காணோம்.

நானேதான் :: சந்திப்புக்கு போனா, டீ,காப்பி, பக்கோடா,வடை, போண்டா, கேசரி, வெவிச்ச கடலை, கோக், ஹன்ட்ரட் பிளஸ், எல்லாம் இவங்கதான் கொடுக்குறாங்க,,, இனிவர சந்திப்புகளிலும் நேக்கு இது எல்லாம் வேணும், புரியறதோ ? காசு கொடுக்குரவங்களுக்கு ஒட்டு போடாம காசு கொடுகாதவங்களுக்கு ஒட்டு போடா நாங்க ஒன்னும் மனசாட்சி இல்லாதவங்க கிடையாது.
.
முக்கிய குறிப்பு : துதி பாடப்பட்டவர்கள் எல்லாம் 10 டாலரை கீழ் கண்ட வங்கி கணக்கில் செலுத்தவும்.

வங்கி : துதி பேங்க், சிங்கை கிளை
அக்கொண்ட் என் : 000000000010000000000
*

போண்டா + எண்ணை = ?

*
"ரிஸ்" போண்டா சுட அதில் மசாலா அதிகமாக இருக்கின்றது என்று "புரவோ" சொல்கிறார், புரவோ யார் என்று பார்த்தல் இவர் தன்னை போண்டா கட்டுபாட்டு வாரியத்தை சேர்ந்தவர் என்று கூறிகொள்வதாக மற்றவர்கள் கூறுகின்றனர், போண்டாவில் எப்படி மசாலா என்று பார்த்தால் அது மசால் போண்டா, மசால் போண்டாவில் மசாலா இல்லாமலா இருக்கும் என்று ரிஸ் வினவ, அதில் மசாலா அதிகமாக இருப்பதுவே கண்டனத்துக்குரியது அதிலேயும் அதிகம் எண்ணை இருப்பதால், கொழுப்பு கூடிவிடும் என்றும் கூறுகிறார்,

எண்ணை பண்டங்களைத்தான் இளசுகள் முதல் பெருசுகள் வரை விரும்பி உண்பதால் அதை சுடுவதாகவும் இதற்க்கு கடைகாரரும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார், போண்டா சுட ஆரம்பித்த புதிதில் எண்ணை அதிகமாக இருந்தது என்றும் பிறகு குறைந்து கடந்தவாரம் சுடப்பட்ட போண்டாவில் அதிகம் இருந்ததாகவும் அதற்க்கு கடைகாரரும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றார் புரவோ. போண்டா சரியில்லை என்றால் போண்டாவை விமர்சிக்கலாம் ஆனால் போண்டா சுடுபவரை எப்படி விமர்சிக்கலாம் என்று போண்டோ சுடுவோர் சங்கத்தின் சார்பாக கேள்விகள் எழுப்புகின்றனர்.

முக்கோணவடிவில் இருந்திருந்தால் தானே பாராட்டிருப்பேன் ஆனால் அது ஹார்ட் வடிவில் இருப்பதால் அதை தின்று மக்கள் காதலிக்க ஆரம்பித்து கடை கடையாக தேடி தேடி ஹார்ட் வடிவ போண்டா தின்று காதலிப்பதாகவும் புரவோ கூறினார். அதே நேரத்தில் ரிஸ்சின் கழுத்தில் போட்டிருந்த புதிய தங்கசங்கிலியை பற்றி தேவையில்லாமல் இழுத்திருப்பதற்கு போண்டா சுடுவோர் சங்கத்தின் சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தங்கசங்கிலி போட்ட அன்று வாழ்த்திய அனைவரும் உங்கள் கடையில் போண்டா தின்பவர்கள் என்பதை மறந்துவிட கூடாது என்று புரவோ தரப்பு கூறுகின்றனர்.

மசால் போண்டோ சுடுவதால் தன்னை தாக்குவது எந்தவகையிலும் ஏற்கமுடியாது, இது விமர்சனம் அல்ல போண்டா மாஸ்டரை தாக்குதல் என்று மேலும் ரிஸ் கூறினார், உருளைக்கிழங்கு, வெங்காயம் எல்லாம் போட்டு போண்டா செய்யப்பட்டிருக்கிறது என்று கூறிருந்தால் பிரச்னை இல்லை அவர் செய்முறையை எல்லாம் சொல்வதால் அனைவரும் அதை முயற்சி செய்து பார்ப்பார்கள் அது அவர்களுக்கு நல்லதல்ல என்று தனது கருத்தை புரவோ கூறி அதற்கான பதிலை ரிஸ்சிடம் கேட்கிறார்.

உருளை வெங்காயம் கருவேப்பிலை
கடுகு மிளகாய் கடலைமாவு இதை
உருட்டி பிரட்டி எண்ணையில்
போட்டால் அதுவே போண்டா.

பித்தன், புட் நியூஸ்

கருத்துக்கள் வரவேற்கபடுகின்றது :: எங்க நீ சொல்லே, எங்க நீ சொல்லே, நீ சொல்லே, அட நீயாச்சும் சொல்லே...

ஆல் இன் ஆல் அழகுராஜா :: இன்னாத்துக்கு கருத்த கூவிபுட்டா,,, நம்ம ஊட்டு பக்கம் கும்மி, மலையாள மணத்துல நம்ம ரைடிங்ஸ்ஸுக்கு அதிக ஒட்டு அப்பாலிகா நம்மள பேமசாக்கி அல்லாரும் ஒட்டி பதிவு, பேட்டி, உங்கள் அன்பிற்கு நன்றி, மீண்டும் எழுதுகிறேன் இதானே எதிர் பாக்குற, அசுக்கு பிசுக்கு.

.

உங்கள் அன்பிற்கு நன்றி - மீண்டும் எழுதுகிறேன்.

*
நான் கொலைவெறி சரக்கு கவுஜைகளை எழுதுவதை நிறுத்தியதை கண்டித்து பல கோடி,(தெருகோடி இல்ல பலகோடி) மடல்கள், மெசேஜ், அழைப்புகள், பேக்ஸ், ஈமெயில், எல்லாம் வந்ததை கண்டு தபால்காரர் முதல் தந்திகாரர் வரை காண்டாகிவிட்டனர், இதற்க்கெல்லாம் மேலாக நேரிலே வந்து அன்பாக பல வாசகர்கள் கவனித்தது இன்னும் வலிக்குது ச்சி இனிமையாக இருக்கின்றது,


"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்"

என்ற அய்யனின் குறளுக்கான விளக்கத்தை கொடுத்து சென்றனர்.
அவர்கள் கவனித்துவிட்டு செல்லும்பொழுது எவ்வளவு அடிச்சாலும் தாங்குரானே அவன்தான் இவனா இல்லை இல்லை எவ்வளவு அழகா எழுதுறானே அவரா இவரு என்று அவர்கள் கைகளை எடுத்து என் கன்னத்தில் ஐயோ இணைக்கு டைப் பண்ணுறது தப்பவே போகுது என் கைகளை எடுத்து அவர்கள் கண்ணில் ஒத்திக்கொண்டனர்.

சில சாம்பிள் மடல்கள் :

*****

தோபாரு பிராந்தியன்,

நீங்கள் கொலை வெறி கவுஜைகள் எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள் என்று கேள்விப்பட்டு ஆழ்ந்த வேதனையில் சிக்குண்டுவிட்டேன்... காரணம் என் தொழில் நொடித்துவிட்டது,,, அடிதடி வேலை செய்யும் நான் வேலைக்கு போகும் முன் உங்கள் கவிதைகளை படித்து வெறியேத்திகொண்டிருக்கும் பொழுதே எதிர்படுபவர்களை பந்தாடிவிடுவேன்,,,, இபொழுது எல்லாம் காலேஜி போற புள்ளைய காதலிக்குறது போல அமைதியா ஆயிட்டேன், ஒழுங்கா நீ கவுஜை எழுதலனா காதல் தோல்வி கண்ட காதலன் மாதரி உன்ன கைமா பண்ணிடுவேன்.

-ட்டேன்கிசு-
சோமாறி மடசு

_____

திரு சோமாறி மடசு,

நீங்கள் எழுதியது போல பல கடிதங்கள் வந்ததாக காண்பித்து கண்டிப்பாக இதையே சாக்காக வைத்து எழுத தொடங்குகிறேன், முடிஞ்சா ஒரு கட்டிங் ஆடர் செய்யவும்...

'பிராந்தி'யன்
54:08 MM

*****

எப்படிகீர நைனா,

இன்னோமோ நீ எழுதுறதா நிப்பாட்டிகின்யாமே, சரி இல்ல அம்புட்டு தான் சொல்லுவேன், அப்பாலிக்கா கைபோச்சி, பேனா போச்சின்னு எல்லாம் கூவிகினு கிடக்கக்கூடாது, புரியுதா,,, எதுக்கு எழுது எழுதுன்னு சொல்லுறேன்னு பாக்குறியா,,, என்னோட மொவன் ஊட்டு பாடம் எழுதலனா உன்னோட கவுஜயதான் காமிச்சி பயமுறுத்துவேன், உடனே படிக்க உக்காந்துக்கும்.... அம்புட்டுதான் சொல்லுவேம் எழுதுறதா நிப்பாட்டாத நிப்பாட்டினா மூச்சே நின்னுக்கும்...

-நண்டிர்ரிபா
காஞ்ச கருப்பட்டி

_____

திரு காஞ்ச கருப்பட்டி,

உங்கள் கடிதத்தை கண்டு மிகவும் பெருமையாக உள்ளது, என்னை வைத்து பலர் படிகின்றாகளா ?, இவ்வளவு நாள் இது தெரியாம போச்சி, இல்லாங்காட்டி இதவச்சி நான் விளம்பரம் செய்து, மஜா டிவியில் மங்கமாஉடன் ஒரு சந்திப்புல ஒரு வாய்ப்பு வாங்கி பெரிய கவிஞனாக ஆகிருப்பேன், தகவல் தந்தமைக்கு நன்றி,

-"எதிர்"பாப்புடன்
பிராந்தியன்


*******

டேய் லாடுலபக்குதோசு,

உன்னோட கவுச அன்ஜிசெண்டுக்கு பிரோஜனம் இல்லனாலும் படிகுரத நிறுத்த முடியல, ஒழுங்கா மரியாதையா கவுஜைய எழுது நிறுத்தாத, எதோ பெருமையா சொல்லுறன்னு நினைக்காத, காலை கழுத முகத்துல முழிச்ச நல்லது நடக்குமாம் அசிதிஎலையாவுல கழுதை எல்லாம் கிடையாது, அதனால உன்னோட கவுஜய பாக்குறேன், முடிஞ்சா கழுத படத்தையும் உன்னோட ப்ளோக்ல சைடு ஸ்பாட்டுல போடு, சைடிஸ் ஸ்பாட்டுல கொஞ்சம் ஊறுகாய போடு,

தவினஸ் நண்பி
அசிதிஎலையா

____

நன்றி தவினஸ் நண்பி,

நீங்கள் கேர்ள்வாசகர் என்பதால் கண்டிப்பாக நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவேன், உங்கள் புளாக் அடுரசை கொடுத்தால் படிக்காமலே ஆகா, ஓகோ என்று பின்னூட்டமிடுவேன், மெயில் அடுரசை கொடுங்கள் நாள் முழுவதும் சாட் செய்யலாம்***

ஜொள்ளுடன்
பிராந்தியன்

*** அடுத்த கேர்ள் பிரண்டு கிடைக்கும்வரை


*******

இதற்க்கு மேல் வந்த மெயல்களில் மிகவும் மட்டமாக ச்சி மதிக்கத்தக்க வகையில் எழுதிருந்ததால் இத்தோடு முடித்துகொள்கிறேன்,

ஐ அம் பேக்கு இல்ல இல்ல பேக்.

பஞ்சி டைலாக் :: ப்லோக்கிங்கிறது ஒரு சட்டம் அதுல வேண்டாம்னா சட்டைய கழட்டி மாட்டுறது மாதரி எழுதுறத நிப்பாடிடலாம், வேணும்ன்னா மாட்டினத திரும்ப எடுத்து மாட்டிக்கலாம்

எங்கிருந்தோ ஒரு குரல்...

*

புரியாத புவியில்
புரிந்தது போல வயது
ஒவ்வொரு காலகட்டத்திலும்
இதுவே.



புரிந்தது தெளிய
புரியாதது புரிவதாக
தெரியாததை காண
இன்னும் தேடல்.



இடைதடை இங்கே வர
சிறு முற்றுபுள்ளி. சிலதின
மிடையே மாறிவிட்டது.
காற்புள்ளியாக.



புரிந்ததா இல்லையா
புரிதலுக்குள்ளே மீண்டும்
எழும்பியது மற்றொரு குரல்
நான் யார்.

பிரபல பதிவர் பேக்கேஜ்.... சீக்கிரம் வாங்கோ... வாங்குங்கோ... !!!

*

என்னை போல நீங்களும் பிரபல பதிவராக ஆசைபடுவிங்க... ஆயிரம் பதிவு எழுதி பிரபலமாகாம பலர் இருக்க. நா பதிவு எழுதுறதுக்கு முன்னாடியே பிரபலம் ஆனது தெரிந்த விசயமே... என்னைப்போல நீங்களும் பிரபலமாகவேண்டி ஒரு புதிய திட்டத்த அறிமுகபடுத்தப்போறேன்...

பாலோவர்... ஹிட்ஸ் எல்லாம் வச்சி ஒருத்தர பிரபலபதிவருன்னு சொல்லிடமுடியாது ஏன்னா எனக்கு ஹிட்சும் வரதில்லை பாலோவரும்... சரி அதவிட்டுடுங்க...

பலரின் வருத்தத்தை போக்க ஆரம்பிக்கப்பட்டது தான் பிரபல பதிவர் விருது அல்லது பட்டம். அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் பட்டத்தை காசு கொடுத்து வாங்குவது போல இங்கு நீங்களும் செயல்பட்டே ஆகவேண்டும் ஏன் என்றால் காசுகொடுக்காமல் கிடைப்பதற்கு இந்த உலகத்தில் மதிப்பு கிடையாது என்ற ஒரே காரணம்தான்.

கம்மிங் டு பேக்கேஜ்ஜஸ்


பேக்கேஜ் ஒன் :

கொடுப்பவரின் ஒரு பதிவுக்கு இரண்டு பின்னூட்டம் வீதம் ஒரு வாரத்திற்கு.(எத்தனை பதிவிட்டாலும் )

பதிவுக்கு கண்டிப்பாக ஒரு ஒட்டு வீதம் ஒருவாரத்திற்கு (இரண்டு திரட்டிகளில் இடவேண்டும் )


பேக்கேஜ் டூ :

வாரத்திற்கு பதினைந்து பின்னூட்டங்கள் மற்றும் பத்து ஒட்டு ( ஒரே திரட்டி அல்லது ஓட்டை பலதிரட்டிகளில் கூட இடலாம் எண்ணிக்கை மட்டுமே முக்கியம்)

பேக்கேஜ் த்ரீ :

கொடுப்பவரிடம் மொத்தமாக பின்னூடங்கள் மற்றும் ஓட்டை கறாராக பேசிக்கொண்டு வாங்குவது (எண்ணிக்கை கொடுப்பவரின் முடிவை பொருத்தது )


இந்த பேக்கேஜிகளில் எதாவது ஒன்றை தேர்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட பதிவரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பின்னூட்டம் மற்றும் ஒரு ஒட்டு குறை இல்லாமல் செலுத்தும் பட்சத்தில் அங்கீகரிக்கப்பட்ட பதிவர் (நீங்கள் ஒட்டு மற்றும் பின்னூட்டமிடும் பதிவர் ) உங்களுக்கு பிரபல பதிவர் விருதை வழங்குவார். அதன் பின் கீழ் காணும் பதக்கத்தை உங்கள் வலையில் பொருத்திக்கொள்ளலாம்.





முக்கியமான விசியம் : பிரபல பதிவராகும் முன்பே ஒருவாரத்திற்கு பின்னூட்டம் மற்றும் ஒட்டு கம்பெனிக்கு போடவேண்டும் ( மேலே உள்ள பேக்கேஜில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ). தவறும் பட்சத்தில் விருது தரப்பட மாட்டாது.



அங்கீகரிக்கப்பட்ட பதிவர் :

விருது பெற்ற அனைத்து பதிவர்களுமே அங்கீகரிக்கப்பட்ட பதிவர்தான், புதியவர்களுடைய அல்லது ஏற்கனவே பல்லாயிரம் இடுகை எழுதியும் பிரபலமாகாத.. மற்றும் பிரபலமாக துடிக்கும் பதிவர்களின் பின்னூட்டம் மற்றும் ஓட்டை பெரும்போளுதே... ஒரே வாரத்தில் நீங்களும் பிரபலம் ஆகிவிடுவீர்கள், பிறகு நீங்கள் யாருக்கும் ஓட்டோ அல்லது பின்னூட்டமோ போடா தேவையில்லை.. அனால் உங்கள் கூட அங்கீகரிக்கபட்ட பிரபலங்களுடன் கும்மி ஆடிபீர்கள்... இதை எதிர்த்து யாரும் கம்பெனியிடம் வழக்கு தொடுத்தால் அந்த வழக்கு செல்லுபடியாகாது... கம்பெனி அதை நிராகரிக்கும். ஆனால் அதற்க்கு கைமாறாக கம்பெனிக்கு அப்போ அப்போ பின்னூட்டம் மற்றும் ஓட்டை நீங்கள் செலுத்தவேண்டும். இதை செய்யத்தவறினால்... தனிநபர் தாக்குகள் உங்கள் மீது நடக்கும் பொழுது பிரபலபதிவர்கள் உங்களின் சார்பாக களமிறக்கி விடப்படமாட்டாது. கம்பெனி உங்களுக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யது.. உங்களுக்கு சாதகமாக செயல் படுபவர்களின் விருதுகளும் பறிக்கப்படும்.

ஆகவே இப்பொழுதே ஓட்டும் பின்னூட்டமும் போட்டு என்னிலிருந்து ஆரம்பியுங்கள் பிரபலபதிவராகுங்கள்

சைடு குறிப்பு :: பிரபலபதிவர் ஆனபிறகு "பிரபல பதிவர்" அப்படின்னு பேருக்கு முன்னாடி இல்லாட்டி "பிப" என்று பேருக்கு பின்னாடி போட்டுக்கலாம்.

எடுத்துக்காட்டு :
பிரபலபதிவர் பித்தன்
பித்தன் "பிப"

(பிரபல பதிவர் ஆகாமல் இந்த வார்த்தைகளை சேர்த்தால் கட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கனவே திருச்செங்கோடு கவி என்பவர் பெயருக்கு முன்னாள் பிரபல பதிவர் சேர்த்திருக்கிறார் இது கட்ட விரோதம் என்றாலும் அவருக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படுகிறது)

***சிரிப்பு இல்ல சீரியசு*** : இந்த தளம்(என்னோடதளம்) தான் கம்பெனி அல்லது நான் தான் கம்பெனி.

உங்கள் அன்பிற்கு நன்றி - விடைபெறுகிறேன்

*

கொலைவெறி கவுஜைக்கு

குருவும் நீயே, எதிர்

கவுஜையை எழுத, என்னை

தூண்டிய ஆசானும் நீயே



மாற்று சரக்கடித்து வரும்

வாந்தி போல் சிலர் எழுத

பூந்தி போல பலர் நினைத்து

படித்து தலையில் அடித்து

'கொல்ல'வைதவரும் நீயே



எதிரிகளை வீழ்த்த நமது

கவுஜைகளை அனுப்புவோர் பலர்

எதிரிகள் வீழ்ந்தாலும் நமக்கு

நன்றிகள் சொல்லமறுப்பவர் சிலர்.



குடி குடியை கெடுக்கும், பாட்டிலில்

எழுதிருக்குமாம், யாரோ பார்த்து

என்னிடம் சொல்ல இதயம் வெடித்தது,

கொலைவெறி கவுஜையை எழுத

பேனா மறுத்தது.



குற்றுணர்வு என்னை தடுத்தது

இந்த சமூகம் என்னை பலிக்குமோ

என்று இந்த மனது நினைத்தது

முடிவு, எழுதுவதை நிறுத்திவிட்டேன்

கொலைவெறி கவுஜைகளை அல்ல

சரக்கு கவுஜைகளை.



ஹாட்டில் கலந்த பீரை போல

சரக்கு கவுஜையுடன்

வாழ்க பல்லாண்டு

நான் வடை பெறுகிறேன் ச்சி விடைபெறுகிறேன்.






இது பதிவுலக சரக்கு ஆசான் வால்ஸ் அவர்களுக்கு சமர்ப்பணம்





(சரக்கு வாரம் முடிந்தது, அடுத்து எதவச்சி எதிர் பதிவு எழுதுறது ?, யோசிக்கிறேன் நீங்களும் யோசிச்சி சொல்லுங்க )





குறிப்பு : உங்கள் அன்பின் மிகுதியால், நீங்க சரக்கு கவுஜை எழுதவேண்டும் என்று கூறுவது காதில் கேட்கிறது. அதற்குள் பல ஆயிரம் மினஞ்சல் வந்து என்னை திக்குமுக்காடிட வைக்கின்றது உங்கள் அன்பினை பார்த்து பிரமிப்பாக இருக்கின்றது. எனக்கு தோனுச்சினா நானே எழுதுவேன், கொஞ்ச காலம் பொறுத்தருளுக.


ஜோதிட கவிதைகள் ( எதிர்பதிவு)

*******



இன்னைக்கு இவரோடது ( அங்க தொட்டு இங்க தொட்டு கடைசீல, கர்த்தரே என்னை மன்னியுங்கள்)

********



சரக்காயுள்

-------------




இரவுநேர குடி பயணத்தில்

பாதியிலேயே தீர்ந்த சரக்கு

பார் பய்யனை கூப்பிட்டு

ஒரு ஹாப், ரெண்டு சோடா என்றேன்



இப்ப உங்க பர்ஸ் வீக் என்றான்.

கோபத்துடன் காலி பர்ஸ்சை தூக்கியெறிந்தேன்.



என்னை பார்த்து புன்னகைத்த

பார் பய்யன்

காலி பர்ஸ்சை

தூக்கியெறியாதிங்க சார்.

காலி பாட்டிலஎல்லாம் போட்டு

பணத்தை நிரப்பிட்டுவாங்க என்றான்.





பரிகாரம்

------------



பார்ட்டிசரக்கு சரியில்லை

பதினைந்துநூருக்கு பாரின்சரக்கு

வாங்க வேண்டுமாம்.

எந்தபாரின்(நாடு) என சொல்லவில்லை

நண்பன்.



போதையாலஜி

--- ------- --------



என் வீட்டு நாய் குட்டியின் தட்டில்

பீர் கொஞ்சம் சிந்திகிடந்தது.




ஐந்நூறு கொடுத்து சரக்கு பிராண்டை

மாற்றியது மனைவிக்கு பிடிக்கவில்லை.



எதிர்காலம்

--------------



போதையால் உங்கள் எதிர்காலம்

ஏறுமுகம் என்ற பலனை கேட்டதும்

வீட்டுக்கு வந்து சரக்கை காச்சினேன்.

எனக்கு ஆயுள் தண்டணை.

ஜோதிடம் உண்மையோ?





குடிகாரனா சரக்குகடைகாரனா

---------------------------------------



போதையின் ஆயுளை சொல்ல

வந்த ஜோதிடரை - உனக்கு போதையபத்தி தெரியுமா

என கிண்டலடித்த காட்சியை கண்டு

மகிழ்ந்தான் குடிகாரன் .



ஜோதிடர் சொன்ன ஒரு மணிநேரத்தில் போதை இறங்கியதை

நினைத்து மகிழ்ந்தான் சரக்குகடைக்காரன்.





குடி வாழ்க்கை

-------------------



பல பிராண்டுகள் உங்களுக்கு

போதையேற்ற இருக்கு

உங்கள் குடிவாழ்க்கையில்

பிரச்சனை வர வாய்ப்பில்லை

என்ற சரக்குகடைகாரருக்கு தெரியுமா

பிராண்டுகள் ஒன்றுக்கு ஒன்று

வியாபார போட்டி என்று
.





*********

இங்கன படிசிபோடுங்க முதல ( அவரே வந்து மாடிகிட்டாறு)

*********



சரக்கு தொலைத்த இரவுகள்





இன்னமும் அந்தி சாயவில்லை,

அதற்குள்,

சரக்கு பாட்டில் அவன் கைகளில்

கெட்டியமாக பிடிபட்டுகிடந்தது..!



இது

நேற்றைய சரக்கின் மிச்சமா..?

இல்லை,

இரவில் என்னுடன்

அடித்ததன் சொச்சமா..?



மதிய உணவு முடித்து,

அவன் கையில்

இருந்த சரக்கை குடிக்கும்பொழுது உணர்ந்திருப்பாண் ,

இன்றும் அரைபாட்டில்தான் என்று..

அவன் தானே கொடுத்தான்

சரக்கை..!?



எனக்கு பழக்கமிருக்கிறது

இரவு முழுவதும் கண்விழித்து

சரக்கடித்து ..!

அவனோ ஏழு மணிக்கு இரவு உணவு முடித்து

உடன் சரக்கடித்து கொள்ளும்

சாராயகுடுக்கி ..!



காலம் இணைத்தது எங்களை,

பாட்டில் பிரித்தது

உறக்கத்தை..!



நான் உன் சரக்கை

குடித்தேனா,.?

கேட்டேன் அவனிடம் ..!



இல்லை கண்ணா,

நீ சரக்குபானையை கொடுத்தாய்

என்றான் .



நெகிழ்ந்தேன்

அவன் பதிலைக்கேட்டு..!



சரக்கை இழந்து

சைடிசை தின்பது

அவனுக்கும் பிடித்திருக்கிறது.






அன்பு குடிகாரர் திரு போதையார் (போதையூர்) அவர்களுக்கு!!!

*
இங்கன படிச்சிபோட்டு மேல படிக்கவும்

*******

அன்பு குடிகாரர் திரு போதையார் (போதையூர்) அவர்களுக்கு!!!

நான் உங்க கம்பி ச்சி அம்பி ஐயோ தம்பி பிராந்தியன் எழுதும் அன்பு கடிதம். (கொஞ்சம் போதையில இருக்குறதுனால தடுமாற்றம், ஒரு பெக் போட்டா சரியாயிடும் )

நீங்க குடிச்ச சரக்கு என்னவோ நல்ல சரக்கு தான். ஆனா குடிச்ச விதம் தான் சரியில்லையோனு தோனுது.

மானிட்டர் கொடுத்தவர் போதயாச்சி என்னும் போதயிரான். அவர் அந்த சரக்க கொடுக்கும் போது குடித்த குடியை பார்த்து அப்படியே நீங்களும் குடித்துவிட்டு அவரையே கிண்டல் செய்வதாக நினைக்கிறேன். இங்கே இரவு மணி 6 ஆகிவிட்டது. அதனால் கண்டிப்பாக அந்த சரக்கை காலை அனுப்பிவிடுகிறேன்.

அப்படியே அவர் குடித்தால் கூட (ஏதாவது நல்ல சரக்காவே ) அவர் அதற்க்கு ஏற்புடையவர்.இது பற்றி விலாவாரியாக என்னால் தண்ணியடித்து உளர முடியும் உங்களிடம். ஆனால் இந்த களத்தில் இல்லாத அவரை பற்றி இப்போது நான் உளர விரும்பவில்லை.


அடுத்து பாரினார் ! அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த சரக்கை அறிவித்தார் தெரியுமா? எல்லாம் அடிச்சுகிட்டு ஓடிவிடும் சூழ்நிலையில் அதை அறிவித்தார். அவருக்கு என்ன தகுதி என நீங்க கேட்பது புரிகின்றது. இதே பார்கள் செய்யாத வேலையை அவர் அமைதியாக செய்து கொண்டிருக்கின்றார்.

அவரால் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சரக்கை குடிக்கபெற்றவர்கள் அதிகம். அப்படி அவரால் சரக்கை பெற்றவர்கள் கூட அடித்து கொண்டு நிற்பது யாரால் அமைதியாக பார்த்து கொண்டிருக்க முடியும்?? கோட்டர்வேந்தர் குடிக்க வைக்கிறார். இவர் அவங்களுக்கு சரக்கை வாங்கி தரார் . ஆனா பார் சரக்கு அது அல்ல. ஆக பார் சரக்கை தருவதை விட இவரின் சரக்கை வாங்கியவர்கள் பெருமை படவே வாய்ப்பு அதிகம்.


"குடிகாரர்கள்"ன்னு ஒரு படம். குடிகாரர்கள் அடிச்சுப்பாங்க.ஒரு சின்ன குடிகாரர் சொல்லி பார்ப்பார். பார் ஓனர் கிட்ட சொல்லி பார்ப்பார் . பின்னவும் சண்டை நிற்காது. ஓடிபோய் ப்லபாட்டில் சரக்கை கொண்டுவருவார் ! சண்டை நிற்கும்.


பாரினார் செய்ததுக்கும் இதுக்கும் எந்தவித வித்யாசமும் இல்லை. இப்போ என்ன ஒரு சந்தோஷம் பாருங்க எல்லார் முகத்திலும்.தவிர இந்த சரக்குகடை ஆரம்ப கட்டத்தில் அவரின் உழைப்பு ஏழை குடிகாரர்கள் மேலகுடிக்க அதனால் அவர் இழந்தது எத்தனை எல்லாம் சொல்லி இருப்பார் ஒரு கடையிலே . அந்த கடை விலாசம் தரேன். இந்த சேவையை எந்த பாரும் செய்ததா? இவர் இதை செய்து கொண்டிருக்கிறார் இலவச சேவையாக. அதற்காக ஒரு சின்ன இடத்தை முகப்பிலே ஒதுக்கி கொடுத்த தமிழ்பாருக்கு நன்றிகள் இந்த இடத்திலே.


இதோ யாரும் செய்ய முடியாத அளவு ஏற்பாடுகளை போதியார் என அன்பாக அழைக்கப்படும் மோவி.போதை தண்ணீர்கேணி மூலமாக செய்து வருகின்றார். உழைப்பு அத்தனை. நீங்கள் குறிப்பிட்ட பார்கள் சென்னை - சிங்கப்பூர் சென்று குடிக்க செய்தனவா? இதோ இந்த கடையில் பார்த்தால் சிங்கை குடிகாரர்களின் முயற்சி தெரியும்.


இதே மொடாகுடிகாரன் என்று அழைக்ப்படும் மூத்த குடிகாரர் சரக்குசிஷ்யன் 20 பேருக்கு தலா 60 வீதம் அப்படின்னு பிரமாதபடுத்தி அதற்கு வந்த தாகங்கள் 250. அதில் புது குடிகாரர்கள் தாகம் மட்டுமே 150க்கு மேல் இருக்கு. இது புதிய குடிகாரர்களை ஊக்குவிகும் முயற்சிதேனே . நீங்க சொல்லும் பார்கள் 60 கொடுத்து ஊக்குவித்தது உண்டா?


கோட்டர், ஹல்ப், புல் போன்றவர்கள் குடிகாரர்கள் பட்டரை நடத்தி அதனால் தான் இத் தனை புது குடிகாரர்கள் வந்ததே.இதே கோட்டர், பீர் போன்றவர்கள் தங்கள் கைகாசை செலவு செய்து தானே அங்கே இங்கே ஸ்பான்சர் கொடுங்க அய்யா நாங்க பட்டரை நடத்தி புது குடிகாரர்களை சரக்குகடைக்கு கொண்டு வர போகிறோம் என புதுவை பட்டரை முடித்தார்கள். இதே சென்னைகுடிகாரர்கள் பட்டரை நடத்த இடம், அத்தனை சரக்கு அதாவது இவங்க எடுக்கும் பாடத்தை புதியவர்கள் தனி தனியா கவனிக்க வேண்டி எத்தனை பேரிடம் கிளாஸ் கெஞ்சி , சைடிஷ் கெஞ்சி 2 மாதம் அதை நடத்திய அனைவருக்கும் தூக்கம் போனது.

வரும் குடிகாரர்களுக்கு டக்கீலா பாடம் எடுக்க சொந்த பணத்தில் சகாராவில் இருந்து ஓடிய பிரெஷ்பீர் என்னும் சரக்ஷ் செல்லவில்லையா? புதுவையிலிருந்து தனது டக்கீலா சைடிஷோடு ஓடி வந்து உலகம் முழுக்கும் இருக்கும் எங்களுகு சொல்ல ஓடி வரவில்லையா?


பல்லாவரம் பப்பி போன்றவர்கள் கு.கு.ச என்ற அமைப்பின் மூலமாக எத்தனையோ பல போட்டிகள் வைத்து ஏன் நான் கூட வாங்கி இருக்கிறேன் கு.கு.ச பரிசை. அவர் கொடுத்து அனுப்பி ரம் (இப்போது பாரின் பாரில்) கொண்டு வந்து 500 மதிப்புள்ள சரக்கை கொடுத்தார்கள்(42.77.4007)


ஒரு 7 குடிகாரர்கள் சேர்ந்து நடத்தும் அந்த போட்டிகே 500 மதிப்புள்ள சரக்கு. ஆனால் பார்கள் கொடுப்பதோ அதே 500.


யார் யாரை விரட்ட நினைப்பது. நினைத்து பார்க்கவும்! இந்த சரக்கு அடிப்பது யார் மனதையும் புண்படுத்த அல்ல. குறிப்பாக உங்க மனசையும். இது எனது 222250 வது சரக்கு இந்த என் மெயின் கிளாசில் அதனால் உங்கள இடமிருந்தே முதல் சைடிசை எதிர்பார்க்கும் இளைய குடிகாரர்.


அன்பு தம்பி

போதையுடன் பிராந்தியன்

தலைப்பில்லாத கவிதைகள் (எதிர்வினை)

*
இங்கன படிச்சிபோட்டு மேல படிக்கவும்

**********

திறந்த பாட்டிலில்
வழிந்து கொண்டிருந்தது நல்லதொரு
சரக்கு
முற்றத்தில்
ஐந்தாறு குடிகாரர்கள்
உரக்கச் கத்தியபடி
குடித்து கொண்டிருக்க
உள்ளிருந்து கேட்டது
அண்ணனின் குரல்-
‘எல்லாரையும் துரத்துடா.
ஸ்காட்ச் அடிக்க விடாம
என்ன கூச்சல் இது’
நான் யாரையும் துரத்தவில்லை;
துரத்த மனமில்லை.
அண்ணன் வெளியே வந்து
‘ஸ்காட்ச்சை
குடிக்க தெரியாத ஜடமே’
என்றெனைத் திட்டிப் போனார்
மறுபடி குடிகாரர்கள்
கலகலவெனச் சிரித்து குடித்தனர்

நான் ரசித்தேன்
உள்ளுக்குள் அண்ணனை நினைத்துச்
சிரித்தபடி.



(கி.மூ ஜூன் 1 – 3996 – ஸ்நெகா ஓய்ந்ஸ் அருகில் நடந்தது )


***********************************

சேர்த்து வைத்த சரக்குகள்
குடித்து முடித்த பழைய பாட்டில்
எப்படியோ
உடையாமல் போராடி மீண்டு வந்தபோது
பழையசாமன்காரன் தந்த காசு
உடைந்து போன பாட்டிலின் மூடி
நண்பர்களின் சைடிஷ்
இவற்றோடு
உன் நினைவுகளும்.
அவ்வப்போது
பாட்டிலை பார்க்க.

*************************************

‘உங்கள் பிராண்ட் சரக்கு
என்னைக் கவர்ந்தது
அலுவலக மேஜைக்
கண்ணாடிக்கடியில்
அதை வைத்துள்ளேன்’
அறிவித்தார் நண்பர்.
எனக்கும் பிடித்த சரக்குகள்
எத்தனையோ உண்டு.
அப்படிப் பாதுகாக்க
எனக்கும்தான் ஆசை.
யார் தருகிறீர்கள் எனக்கு?
ஒரு பாரும் -
கண்ணாடி குள் சரக்கும் ?


(கி.பி ஜூலை 494 ஜூலி பாரில் பேசியது)

(இந்தக் சரக்கை குடிகாரர் வால்ஸ் அந்தக் காலகட்டத்தில் என் குடியை பாராட்டி எழுதிய கடிதத்தின் பாதிப்பில் குடித்து... வெளியானது)

பேதமற்றவன் (எதிர் வினை)

*

இங்கன படிச்சிபோட்டு மேல படிக்கவும்

பேதமற்றவன்



அதைபார்த்ததுண்டா நீங்கள் ?



முப்பது,முப்பத்தைந்தாயிரம் வருடங்கள்



முன்பு அது பிறந்திருக்ககூடும் !



உங்கள் தெருவில் ,ஊரில்



நகரத்தில் எங்கேனும் .



.



அதைப்பார்த்திருப்பீர் நீங்கள்



அதுதானவனென்று உங்களுக்கு



தெரிய வாய்ப்பில்லை .



.



நினைவு படுத்தி பாருங்கள்



"பல நிறத்தில்



சுண்டி இழுக்கும் வாசம்



உள்நோக்கி இழுக்கும் காந்தம்



பாத்தாலே ஏறும் போதை"



அடையாளம்



.



மனமகிழ்ச்சிதரும்



நமக்குத்தான் அது தேவை



உங்கள் படிமம்



அதுமீது



.



அதன் கனவுகள்



நல்ல உடற்,மனத்தேவை கள்



அறிய விருப்பமில்லை ,நேரமில்லை



உங்களுக்கு .



அதை நல்லபான வட்டத்தினின்று



தூக்கி எறிந்திருக்கலாம் . (இல்லை )



அதை மறந்தே போயிருக்கலாம்



பாதகமில்லை !!



.



என்றேனும் அவசரகதி வாழ்வில்



ஒருநாளது தேவை ஏற்ப்படும்.



அன்றும் நேரமிருக்காது உங்களுக்கும் எனக்கும் .!!!!





ஆகையால் புறப்பட்டுவிட்டேன் இதோ



.



அதிருக்கும் திசையைநோக்கி உள்ளே செலுத்த



"ஒரு ஆகா"



"இயன்றால் இருகுவலை"





முடிந்தால் நீங்களும் வரலாம் ..........


பார் தேவதைகள் (எதிர் வினை)



இங்கன படிச்சிபோட்டு மேல படிக்கவும்



கால‌வ‌ழுகுடி



பையில் பத்து ரூபாயும்

கையில் ஊறுகாயும்

கொண்டாட கொஞ்ச‌ம் சுதந்திரமும்

வாய்க்கும் காலநிலையில்

அறிமுகமானது;

மூடியை திறக்க

உலகம் திறக்கும்;

சுவர்களோடு

பேசிக்கொள்ள க‌ற்றுத் தருவாய் ;

அரைமூடி அடிக்காவிட்டாலும்

திருந்திவிட்டாயா என்பாய்



போதையின் சக்கரச் சுழலில்

எழுந்து நிற்கும்முன் சரிந்து விழுவேன்.

காசில்லாத ஒரு நாளில்

பட்டையை அடித்து நெஞ்சி எரிந்து போகும்.



அந்த பாட்டிலில்

நிரப்பபட்டிருக்கும்

அமுதத்தில்

என் நிராசைக‌ள்

நிறைவேறிருக்கும் .





*******




இட‌வ‌ழுவ‌குடி



நேற்று எதிர்பார்க்க‌வில்லை

எதிர்பாராத‌ "இன்று" வ‌ருமென்று.

ஒவ்வொரு நாளும் வேண்டிக் கொள்வேன்

அந்த‌ "இன்று" ம‌ட்டும் வானாளில்

வ‌ர‌வே கூடாதென்று.



எதிர்பார்த்த‌ப‌டியே

ஏமாற்றாமல் ஒருநாள்

வ்ந்து தொலைத்த‌து அந்த‌ "இன்று"

சரக்கு கடை வாசலில் .



"வேளா வேளைக்கு ஒழுங்கா குடிக்குறியா?"

"வெயில்ல‌ அலங்ச்சா பீரு குடிகிறாயா ?"

"குடல் ந‌ல்லா இருக்கா?"

"நுரையீரல் சுகமா ?"

"இப்பவும் மிட்நைட்டுல பார தேடுறியா ?"

"எப்ப‌டிடா இருக்க‌?"

"போதையோடு இருக்கியா?"

"என்ன‌ ம‌றந்துட்டியா?"

"இல்ல‌ இப்ப‌வும் தெரியாம குடிகுரியா ?"



மிக்சிங்கும், சைடிசும்

அருகில் இருக்க‌

கேட்க‌ நினைத்த‌ அனைத்தையும்

ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு

அலைபோல ஆடி கேட்டு முடித்தாய்.

உடனே

உன்னை ஒருவன் அறுபது ருபாய் கொடுத்து

வாங்கி சென்றுவிட்டான்.



குறிப்பு : கோட்டர் விலை தெரியவில்லை, சரியான விலையை பினூட்டத்தில் தெரிவிக்கவும்


ஜூலைகாற்றுக்கு பெயர் காரணம் ?

*
ஜூலை 22 பொறந்ததால இப்படி ப்லோக் பேரு வச்சிருக்காரு...



நம்ம...



பிறந்தநாள் வாழ்த்துக்கள்....


வாழ்க வளமுடன்

செந்தழல் விருது சாரி சுவாரஸ்ய வலைப்பதிவு விருது...!!!

*

தேவா சார் தெரியாம இந்த விருத எனக்கு கொடுத்துட்டாரு... அவருக்கு நன்றிகள்...

இப்ப இந்த விருத மத்தவங்களுக்கு கொடுக்கணும்,,,, யாருக்கு கொடுக்கலாம் ?

நான் தமிழன், தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், தமிழ் பகுத்தறிவு, தமிழ் ஆன்மிகம் அனைத்தையும் பின்பற்றுபவன்...

அய்யயோ திராவிடன்கிற வார்த்தைய மறந்துட்டேன் மனிச்சிடுங்க...

தமிழ், தமிழ்... தமிழ் .. தமிழ் தமிழ் தமிழ்.....தமிழ்... தமிழ்.....

இப்ப எதுக்கு மொக்கை போடுறேன்னு பாக்றேளா ?

இந்த விருத கொடுக்கத்தான்... மேல சொன்னதெல்லாம் சொல்லலைன்னா நீங்க கீழ வரதெல்லாம் ஏத்துக்கமாட்டிங்க.

ஊரோட ஒத்துபோறவன் நானு ... அதனால...

தமிழ் மரபு (நல்லா கவனிக்கணும் என்னோட மரபு இல்ல தமிழ் மரபு) படி என்னோட வாரிசுக்கு கொடுக்கலாம் பட் ஹம் கோ வாரிசு நகி.

சொந்த காரவங்களுக்கு கொடுக்கலாம்ன்னு பாத்தா ரிலேடிவு பதிவர்ஸ் லேது...

தெரிஞ்சவர் இல்ல உண்மையாலுமே சுவாரஸ்யமா எழுதுரவருக்கு கொடுக்கலாம் பட்,,, தமிழ் மரபு குறுக்க நிக்கிது... அதனால

வேறு வழி இல்லாமல் என்னோட இன்னொரு வலைப்பதிவு தளத்துக்கு இந்த விருதை வழங்குகிறேன்...

குறிப்பு : இதேபோல யாராவது பிரபலபதிவர் விருது அறிமுகம் படுத்துங்க... அறிமுக படுத்தி பத்து நாள்ல நானும் பிரபல பதிவர் ஆகிடுவேன்... செந்தழலாரே ஆரம்பிச்சா அவருக்கு இன்னொரு தேங்க்ஸ் அட்வான்சா...

சிங்கை பதிவர் சந்திப்பு - போட்டோ கமெண்ட்ஸ்

*
18-ஜூலை-2009 சிங்கை பதிவர் சந்திப்பு - போட்டோ கமெண்ட்ஸ்











ஒன்னும் ஒன்னும் ?

*
அண்ணன் சரவணன் (பாக்க தம்பி மாதரி இருப்பாரு) தொடர்பதிவுக்கு கூப்பிட்டு ஏழெட்டு சென்மம் ஆன பிறகு இப்பத்தான் அவச அவரமா எழுதுறேன்... இந்த வார பதிவர் சந்திப்புல பாத்து டின்ன கட்டிடுவாரோன்னு. அதுக்குள்ள வினோத்தும் தொடர்பதிவுக்கு கூப்பிட்டுட்டான்.

உண்மைலேயே எனக்கு அதிகம் ஞாபகம் இல்ல அதனால தான் எழுதுறதுல தயக்கம். கோவியானந்தாவே ஞாபகம் வச்சி எழுதிட்டாரு இந்த வயசான காலத்துல அவரால முடியுரப்ப, பதினெட்டு வயசுல (ச்சும்மா ) நம்ம எழுதலனா எப்படி.

எல்.கே.ஜி - முதல் வகுப்பு.

ஒரு வீட வாடகைக்கு எடுத்து பக்கத்துல கொட்டாய் எல்லாம் போட்டு அதுக்கு ராமகிருஷ்ணா மேட்ரிகுலேசன்னு பேரு வச்சிருந்தாக, அங்க முதல் டெஸ்டிங் நானும் என் மாமன் பசங்களும்தான். எனக்கு ஒரு ஆசிரியை முகம் மட்டும் ஞாபகம் இருக்கு ஆனா பேரு ஞாபகம் இல்ல, ரொம்ப பிடிச்ச்சவங்களும் அவங்க தான், பள்ளில உள்ள அனைவரும் அப்ப ஸ்கூல் பேகுக்கு ஒரு சின்ன அலுமினிய பாக்ஸ் தான் பயன்படுத்துவோம். ஒரு ஸ்டெடி ஹவர்ல அந்த பெட்டி இல்லாத பையன் சிறியதுணி வைக்குற பெட்டிய எடுத்துட்டு வந்ததபாத்து எல்லோரும் சிரிச்சது மட்டும் ஞாபகம் இருக்கு, எனக்கு நெருங்கிய நண்பர்களா இருந்தது ரெண்டு பேரு ஒன்னு ஜெகதீசன் இன்னொருவர் பேரு மறந்துடுச்சி, இப்ப ரெண்டு பேரும் எங்க இருக்காங்கன்னு தெரியாது.

இரண்டாம் வகுப்பு - ஐந்தாம் வகுப்பு

ரெண்டாவது வீட்டுக்கு பக்கத்துல இருந்த பள்ளில சேத்துட்டாங்க, கூடவே என்னோட நண்பன் சிவாவும் அந்த பள்ளிக்கே வந்து சேந்தான் (பக்கத்து வீடு), அவன் எ செக்சென் நான் பி செக்சென் எங்க நேரத்துக்கு பன்னிரெண்டாவது முடிக்கும்வரை அவனுக்கு கிடைத்தது எ செக்சென், எனக்கு கிடைத்தது பி செக்சென். எ செக்சென் பெருசா இல்ல பி செக்சன் பெருசான்னு சண்டை எல்லாம் வரும் அப்ப.

மீனான்னு ஒரு ஆசிரியை அழகா இருப்பாங்க கருப்பு கண்ணாடி போட்டுருப்பாங்க ஆன அவங்கள சுத்தமா பிடிக்காது அடிப்பாங்க அதனாலதான்.

பிரபா இவங்க ஆங்கிலம் எடுப்பாங்க அன்பா பேசுவாங்க அதிகம் அடிக்கமாட்டாங்க.

என் கூட படிச்ச ஒரு பய்யனோட அக்கா எங்களுக்கு ஆசிரியையா இருந்தாக அவங்க பேரு ஞாபகம் இல்ல. அவங்கள பிடிக்கும்.

வயசான ஆசிரியை ஒருத்தவங்க இருந்தாங்க அவங்க பெயர் நினைவில்லை அடிக்கமாட்டாங்க.

தேர்வு தாள் வரும்பொழுது ஒரே பயமா இருக்கும் ஆங்கிலத்துல புள்ளி, கமா உடாம கடம் அடிச்சி எப்படியாச்சும் பாசாகிடுவேன், பன்னிரெண்டாவது வரைக்கும் ஓரளவுக்கு தப்பிச்சது கணக்கவச்சிதான்.

தமிழ்தாள்ல பாசாகிட்டா ஒரே கொண்டாட்டமா இருக்கும் ஆனா அதிகம் பாசானது கிடையாது. தாய் மொழி தமிழ் அதுல பாசாகனும்ன்னு நினைக்குரப்ப...

கண்மணி அன்போடு காதலன்கிற பாட்ட ஒரு பொண்ணு பாடினது ஞாபகம் இருக்கு, அப்பறம் என் தொல்லையை சமாளிச்சி நண்பர்களா இருந்தது அமல்ராஜ், ராஜேஷ், மணிகண்டன், ஆனந்தராஜ்.

ரம்யா பொண்ணு ரொம்ப அழகு ஆன ரொம்ப திமிரும்கூடன்னு அடிக்கடி நண்பர்கள் பேசிப்போம்.

மதிய லஞ்ச் ப்ரேக்குல ஐஸ்பாய் விளையாடுவோம் அப்ப நிறைய கட்டிடங்கள் கட்டிக்கிட்டு இருந்தாக அதனால.

நாலரை மணி எப்ப ஆகும்ன்னு பாத்துகிட்டே இருப்போம் ஒன்னு, ரெண்டு, மூணுன்னு நூறு என்றதுக்குள்ள பெல் அடிச்சிடும்ன்னு நம்பிக்கைல என்னின நாட்கள் பல. பெல் அடிச்சவுடன் வேக வேகமா மெயின் கேட்ட தொட ஓடுவோம்.

வீட்டுக்கு போனவுடனே தலைவலிக்குது, காச்சல் அப்படி,இப்படின்னு டியூஷன் போகாம இருக்க சாக்கு சொன்னாலும் நடக்காது. வேண்டா வெறுப்பா டியூஷன் போவோம். டியூஷன் டீச்சர் "எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தவேண்டும்" கர்த்தர் சொல்லிருக்காரு அப்படின்னு சொன்னவுடனே மீனுக்கும் உயிர் இருக்குல்ல அப்பறம் எதுக்கு நாம அத சாப்பிடுரோம்ன்னு கேட்க அது நமக்காக படைக்கபட்டதுன்னு அவக சொன்னதாக நினைவு.


கூப்பிட்ட அண்ணன் சரவணனுக்கும் தம்பி வினோத்துக்கும் நன்றிகள்.