பிரபல பதிவர்களுக்கு துதி பாடுவது எப்படி ?

*
அறிவிலி அய்யா

சிம்லா ஸ்பெஷல்லும் நீயே
சிங்கை ஸ்பெஷல்லும் நீயே
காமெடி கிங்கும் நீயே
பதிவுலக நாயகனும் நீயே.
அறியாமையை விரட்டுவதும் நீயே.
அறிவுக்கு அரசன் "அறிவிலி அய்யாவே"

*-*-*

குழலி

சோழநாட்டு பிகரென்று நினைத்தால்,
சுழன்றடிக்கும் சூறாவளி காற்றே,
அரசியல் விமர்சனம் எழுதி
அகல்விளக்காய் ஒளி தருகிறாயே.
களத்துமேட்டு காளையே
கடலூர் கம்பனே
வாழ்க நீ பல்லாண்டு !!!
வளர்க உன் தமிழ்தொண்டு !!!

*-*-*

கோவியார்

ஆத்திகனா இல்லை நாத்திகனா ?
தமிழனா இல்லை திராவிடனா ?
இலக்கணமா இல்லை இலக்கியமா ?
சிறுகதையா இல்லை தொடர்கதையா ?
தலைக்கனமில்லா தமிழ்மகனே
பதில் கூறு மறுகணமே !!!

*-*-*

ஜோதியார்

வெளிச்சத்தை தேடி
எங்கெங்கோ அலைந்தேன்.
சிங்கையில் இருப்பதாக
தெரிய உடனே விரைந்தேன்
கொல்லிமலை குப்புவோடு
அரசியலை விவாதிக்கும்
ஆதவனை போன்ற சோதியாரை
காண கண்கோடி வேண்டும்.
உம்மை துதிபாட
முத்தமிழும் உடனே
எனக்கு வேண்டும்.

*-*-*

முகவை இராம்

மென்பொருளோடு உருண்டு
வன்பொருள் செய்யும் எம்பொருலே
தமிழை வில்லாய் வளைத்து
சொல்லை அம்பாய் இழுத்து
வெண்பாவாக எங்கள் இதயத்தில்
தைக்கும் சங்கயிலக்கியமே
முகவைக்கு மைந்தனே
முத்தமிழுக்கு மூத்தவனே
வாழ்க உம்தமிழ்பணி !!!

*-*-*

கிரி

தமிழ்திரைப்பட சூப்பர் ஸ்டார் அவரு
ப்லோக்கிங் சூப்பர் ஸ்டார் இவரு
இவர் பதிவ படிச்சாலே பவரு
சிங்கைல இவர விட்டா எவரு.


*-*-*

வேடிக்கை மனிதன்

சரவண பொய்கையில் நீராடி
வேடிக்கை வலையில் நாம் கூட
சிந்தனையை தெளிக்கும் பெருமகனே
தேடலில் குதிக்கும் திருமகனே
கும்மி பதிவிடா குலமகனே
கூடியவிரைவில் உமக்கு மாலையிட
மங்கை கிடைக்ககடவது மணமகனே.

*-*-*

அப்பாவி முரு

அயல் தேசத்திலிருந்தாலும்
உன் அன்னைதேசத்து பற்று
அன்னைதேசத்தை விட பெருசு
அதவிட உங்க கோபம் பெருசு
அதவிட உங்க பாசம் பெருசு
அதவிட உங்க நட்பு பெருசு
அப்பாவின்னு பேருவச்சிருக்க
அப்பவியன்னே நீங்க.

*-*-*

பால்ராஜ்

நேற்று பிறந்தவரும் உமக்கு அண்ணன்தான்
இன்று பிறந்தவரும் உமக்கு அண்ணன்தான்
நாளை பிறப்பவரும் உமக்கு அண்ணன்தான்
அடுத்தசென்மத்தில் பிறப்பவரும் உமக்கு அண்ணன்தான்.
மேலே பார்த்தாலும் அண்ணன்தான்
கீழே பார்த்தாலும் அண்ணன்தான்
சைடுல பார்த்தாலும் அண்ணன்தான்
லெப்டுல பாத்தாலும் அண்ணன்தான்
ரைட்டுல பாத்தாலும் அண்ணன்தான்
ஏன் இந்த அகிலமே உமக்கு அண்ணன்தான்.
அண்ணன் அண்ணன் அண்ணன் அண்ணன்
எனக்கு நீங்கதான் அண்ணன்.

*-*-*

'டொன்'லீ

நீ பேசுவதே பாடுவதாக
நீ பாடுவதே இசையாக
நீ இசைப்பதே ராகமாக
உன் ராகமே சங்கீதமாக
உன் சங்கீதமே காதலாக
உன் காதலே தமிழாக.

*-*-*

ஜெகா

" 'ஜெக' தீசன்"
...சும்மா பேரகேட்டாலே அதிருதுல்ல,...
...அதிரடிதான் ஜெகா ஜெகா ஜெகா ஜெகா...
... விருதுனாலும் ஜெகா ஜெகா ஜெகா ஜெகா...
...அங்கீகாரம்னா ஜெகா ஜெகா ஜெகா ஜெகா....
...அனைத்துமே ஜெகா ஜெகா ஜெகா ஜெகா....

*-*-*

அம்மாஅப்பா

அம்மாவும் நீயா அப்பாவும் நீயே...
பின்னூட்டமிட்டு ஆதரிக்கும் தெய்வமும் நீயே ...
நல்லபதிவுக்கு ஓட்டுபோட ஓடிவருவாயே...
மொக்கைபதிவை திரும்பிகூட பார்க்கமறுப்பாயே...
சோழகுல சிங்கத்திலே நீயும் ஒருவனே
உச்சிபிள்ளையார் உன்னுடனே துனையிருப்பானே....

*-*-*

பின்னூட்டபுயல் விஜய் ஆனந்த்.

நல்ல பதிவை நாடுபவன்
ஒட்டு போட்டு வாழ்த்துபவன்
ஓரமாக போகிறவன்
உசிப்பேற்றினால் எழுத்தில்
உதைக்கின்றவன்.

*-*-*

வாசகர் பாஸ்கர் அண்ணாச்சி,

வாசிப்புக்கு பாஸ்கர்
வசந்தத்துக்கு பாஸ்கர்
வள்ளல் பாஸ்கர்
வாசகர் பாஸ்கர்

யாரோ :: என்ன எல்லாம் சிங்கை பதிவர்களா இருக்காங்க மற்ற பிரபல பதிவர்கள் பேர காணோம்.

நானேதான் :: சந்திப்புக்கு போனா, டீ,காப்பி, பக்கோடா,வடை, போண்டா, கேசரி, வெவிச்ச கடலை, கோக், ஹன்ட்ரட் பிளஸ், எல்லாம் இவங்கதான் கொடுக்குறாங்க,,, இனிவர சந்திப்புகளிலும் நேக்கு இது எல்லாம் வேணும், புரியறதோ ? காசு கொடுக்குரவங்களுக்கு ஒட்டு போடாம காசு கொடுகாதவங்களுக்கு ஒட்டு போடா நாங்க ஒன்னும் மனசாட்சி இல்லாதவங்க கிடையாது.
.
முக்கிய குறிப்பு : துதி பாடப்பட்டவர்கள் எல்லாம் 10 டாலரை கீழ் கண்ட வங்கி கணக்கில் செலுத்தவும்.

வங்கி : துதி பேங்க், சிங்கை கிளை
அக்கொண்ட் என் : 000000000010000000000
*

29 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஐயோ! ஐயோ!!

துதிபாடலால், ஒரு இணத்தை துடைத்தெறிந்துவிட்டு இன்னும் மயக்கத்தில் துதிபாடிக்கொண்டு இருக்கிறோம்.

இங்கயும் துதிபாடலா?

லோகு said...

/காசு கொடுக்குரவங்களுக்கு ஒட்டு போடாம காசு கொடுகாதவங்களுக்கு ஒட்டு போடா நாங்க ஒன்னும் மனசாட்சி இல்லாதவங்க கிடையாது//

என்னா வில்லத்தனம்???? நடத்துங்க...

♠ ராஜு ♠ said...

\\காசு கொடுக்குரவங்களுக்கு ஒட்டு போடாம காசு கொடுகாதவங்களுக்கு ஒட்டு போடா நாங்க ஒன்னும் மனசாட்சி இல்லாதவங்க கிடையாது. \\

அப்ப இவங்கல்லாம் அழகிரியா..?

குழலி / Kuzhali said...

அய்யய்யோ இங்கே பாருங்க யாரோ இவருக்கு சூனியம் வச்சிட்டாங்க....

S.A. நவாஸுதீன் said...

சூப்பர், அருமை, கலக்கல், உங்களால மட்டும்தான் இப்படி எல்லாம் எழுத முடியும், தொடர்ந்து எழுதுங்க, (ஆமா இது எந்த வகை நண்பா)

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி S.A. நவாஸுதீன் ( இது கும்மி வகை -:) )

கிரி said...

இப்பவே கண்ணை கட்டுதே!

சி. கருணாகரசு said...

இப்படி துதி பாடுவது உங்களின் பகுதி நேரத் தொழிலா? இல்ல முழு நேரமும் இதுதானா... அடுத்த சந்திப்புக்கு நானும் வரேன்... அதுசரி "அன்புடன் நான்"க்கு துதிபாட எவ்வளவு ஆகும்? (நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக் கொள்ளவும்)

நிகழ்காலத்தில்... said...

துதி பாட தனித்திறமை வேண்டும்.,
தங்களிடம் அது நிறைவாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி கிரி ( கட்ட அவிழ்த்துவிட்டு மறுபடியும் படிங்க -:) )

நன்றி சி. கருணாகரசு ( இது தனித்திறமை வகைகளில் வருகிறது, வீக் எண்டு கோர்ஸ் ஆரம்பித்திருக்கிறேன் வந்து கற்று நீங்களே துதி பாடிகொ'ல்'லுங்கள் -:) )

நன்றி நிகழ்காலத்தில்...

நன்றி சரவணன்

நன்றி ஜெகா

அறிவிலி said...

எனக்கு நடிப்பு வராது... அடுத்த சந்திப்புல சொன்னா மாதிரி செட்டில் பண்ணிர்றேன்....

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

காசா....?

நம்ம கைய்யில எல்லாம் கேக்கலையே?

கலையரசன் said...

எப்படியெல்லாம் ஹிட்ஸ் வாங்குறானுங்க பாருங்க மக்களே!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கோவியார், ஜோசப் ஆகியோருக்கு பாடிய துதி ரசிக்க வைத்தது...

பணத்த செட்டில் பன்னுங்கப்பா!

அறிவிலி said...

//நீங்க ரொம்ப நல்லவரு -:)//

நோ... இது ஒப்பந்தத்துல கிடையாது. இதுக்கு அடிஷனலா போட்டு கொடுக்கப்பட மாட்டாது...

வெற்றி-[க்]-கதிரவன் said...

//அறிவிலி said...
//நீங்க ரொம்ப நல்லவரு -:)//

நோ... இது ஒப்பந்தத்துல கிடையாது. இதுக்கு அடிஷனலா போட்டு கொடுக்கப்பட மாட்டாது...
//

அட்லீஸ்ட் ஒரு வடை/காப்பி

Suresh said...

ha ha ha ha நின்னு ஆடுறியே மச்சான் ஹா ஹா செம ;) ஒரு ஒருத்தருக்கு எழுதியதை நல்லா சிரிச்சு ரசிச்சு படிச்சேன் குறிப்பா சில வரிகள் எல்லாம் ;)

அபி அப்பா said...

என் அண்ணன் மொவன் ஜோசப்பூ கவி தை சூப்பர் சரவெடி! அதையே நான் அப்துல்லாவுக்கு பரிசா கொடுக்குறேன் உங்க அனுமதியோட!!!!!

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி சுரேஷ்

நன்றி அபி அப்பா (சேமமா கொடுங்கோ )

sakthi said...

பித்தா கலக்கல் பதிவு

பிரியமுடன் பிரபு said...

நல்லா பாடுறீங்க துதி

கோவியர் துதி அருமை

’டொன்’ லீ said...

இதுக்கு முன்னாலே அதிமுக வில் இருந்தீர்களா..? இல்லை ஜெகத்தரட்சகன் சிஷ்யரா நீங்கள்...?

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி சக்தி அக்கா

நன்றி பிரபு

நன்றி ’டொன்’ லீ ( அடுத்த சந்திப்புக்கு வா பாத்துக்குறேன் )

வால்பையன் said...

சரியா தானே சொல்லியிருக்கிங்க!

இராம்/Raam said...

கூவல் திலகம்'ண்ணே நீயி.... :))

குரும்பையூர் மூர்த்தி said...

பித்தன்:

கலகலப்பாய் கவுஜ எழுதி
கடிகடியாய் பதிவு எழுதி
பி.ப விருதுதனை
பிரபலமாய் பிரசவித்த
சிங்கைதேச சிங்கம்
பித்தன் வாழ்க!

குரும்பையூர் மூர்த்தி said...

சொல்லமறந்தது:
திங்கள் தொடக்கம் திங்கள் வரை ஒரு வாரமாகிவிட்டது!! என் விருதை மறக்கவேண்டாம்

குரும்பையூர் மூர்த்தி said...

//பேக்கேஜ் ஒன் :

கொடுப்பவரின் ஒரு பதிவுக்கு இரண்டு பின்னூட்டம் வீதம் ஒரு வாரத்திற்கு.(எத்தனை பதிவிட்டாலும் )

பதிவுக்கு கண்டிப்பாக ஒரு ஒட்டு வீதம் ஒருவாரத்திற்கு (இரண்டு திரட்டிகளில் இடவேண்டும் )
//

இது தான் எனது பக்கேஜ். இதன்படி நட்ந்திருக்கிறேன் தானே?. நீங்கள் இன்றைக்கு இனி பதிவு ஏதும் எழுதாதவரை??

எதாவது மிஸ் பண்ணியிருந்தால் சொல்லுங்க...பில் பண்ணியிடுறேன்.

ஆ.ஞானசேகரன் said...

//துதி பாடப்பட்டவர்கள் எல்லாம் 10 டாலரை கீழ் கண்ட வங்கி கணக்கில் செலுத்தவும்.

வங்கி : துதி பேங்க், சிங்கை கிளை
அக்கொண்ட் என் : 000000000010000000000///

1000 வெள்ளி அனுப்பிவிட்டேன் சரி பார்க்கவும்


மிக நன்று அருமை