ஒன்னும் ஒன்னும் ?

*
அண்ணன் சரவணன் (பாக்க தம்பி மாதரி இருப்பாரு) தொடர்பதிவுக்கு கூப்பிட்டு ஏழெட்டு சென்மம் ஆன பிறகு இப்பத்தான் அவச அவரமா எழுதுறேன்... இந்த வார பதிவர் சந்திப்புல பாத்து டின்ன கட்டிடுவாரோன்னு. அதுக்குள்ள வினோத்தும் தொடர்பதிவுக்கு கூப்பிட்டுட்டான்.

உண்மைலேயே எனக்கு அதிகம் ஞாபகம் இல்ல அதனால தான் எழுதுறதுல தயக்கம். கோவியானந்தாவே ஞாபகம் வச்சி எழுதிட்டாரு இந்த வயசான காலத்துல அவரால முடியுரப்ப, பதினெட்டு வயசுல (ச்சும்மா ) நம்ம எழுதலனா எப்படி.

எல்.கே.ஜி - முதல் வகுப்பு.

ஒரு வீட வாடகைக்கு எடுத்து பக்கத்துல கொட்டாய் எல்லாம் போட்டு அதுக்கு ராமகிருஷ்ணா மேட்ரிகுலேசன்னு பேரு வச்சிருந்தாக, அங்க முதல் டெஸ்டிங் நானும் என் மாமன் பசங்களும்தான். எனக்கு ஒரு ஆசிரியை முகம் மட்டும் ஞாபகம் இருக்கு ஆனா பேரு ஞாபகம் இல்ல, ரொம்ப பிடிச்ச்சவங்களும் அவங்க தான், பள்ளில உள்ள அனைவரும் அப்ப ஸ்கூல் பேகுக்கு ஒரு சின்ன அலுமினிய பாக்ஸ் தான் பயன்படுத்துவோம். ஒரு ஸ்டெடி ஹவர்ல அந்த பெட்டி இல்லாத பையன் சிறியதுணி வைக்குற பெட்டிய எடுத்துட்டு வந்ததபாத்து எல்லோரும் சிரிச்சது மட்டும் ஞாபகம் இருக்கு, எனக்கு நெருங்கிய நண்பர்களா இருந்தது ரெண்டு பேரு ஒன்னு ஜெகதீசன் இன்னொருவர் பேரு மறந்துடுச்சி, இப்ப ரெண்டு பேரும் எங்க இருக்காங்கன்னு தெரியாது.

இரண்டாம் வகுப்பு - ஐந்தாம் வகுப்பு

ரெண்டாவது வீட்டுக்கு பக்கத்துல இருந்த பள்ளில சேத்துட்டாங்க, கூடவே என்னோட நண்பன் சிவாவும் அந்த பள்ளிக்கே வந்து சேந்தான் (பக்கத்து வீடு), அவன் எ செக்சென் நான் பி செக்சென் எங்க நேரத்துக்கு பன்னிரெண்டாவது முடிக்கும்வரை அவனுக்கு கிடைத்தது எ செக்சென், எனக்கு கிடைத்தது பி செக்சென். எ செக்சென் பெருசா இல்ல பி செக்சன் பெருசான்னு சண்டை எல்லாம் வரும் அப்ப.

மீனான்னு ஒரு ஆசிரியை அழகா இருப்பாங்க கருப்பு கண்ணாடி போட்டுருப்பாங்க ஆன அவங்கள சுத்தமா பிடிக்காது அடிப்பாங்க அதனாலதான்.

பிரபா இவங்க ஆங்கிலம் எடுப்பாங்க அன்பா பேசுவாங்க அதிகம் அடிக்கமாட்டாங்க.

என் கூட படிச்ச ஒரு பய்யனோட அக்கா எங்களுக்கு ஆசிரியையா இருந்தாக அவங்க பேரு ஞாபகம் இல்ல. அவங்கள பிடிக்கும்.

வயசான ஆசிரியை ஒருத்தவங்க இருந்தாங்க அவங்க பெயர் நினைவில்லை அடிக்கமாட்டாங்க.

தேர்வு தாள் வரும்பொழுது ஒரே பயமா இருக்கும் ஆங்கிலத்துல புள்ளி, கமா உடாம கடம் அடிச்சி எப்படியாச்சும் பாசாகிடுவேன், பன்னிரெண்டாவது வரைக்கும் ஓரளவுக்கு தப்பிச்சது கணக்கவச்சிதான்.

தமிழ்தாள்ல பாசாகிட்டா ஒரே கொண்டாட்டமா இருக்கும் ஆனா அதிகம் பாசானது கிடையாது. தாய் மொழி தமிழ் அதுல பாசாகனும்ன்னு நினைக்குரப்ப...

கண்மணி அன்போடு காதலன்கிற பாட்ட ஒரு பொண்ணு பாடினது ஞாபகம் இருக்கு, அப்பறம் என் தொல்லையை சமாளிச்சி நண்பர்களா இருந்தது அமல்ராஜ், ராஜேஷ், மணிகண்டன், ஆனந்தராஜ்.

ரம்யா பொண்ணு ரொம்ப அழகு ஆன ரொம்ப திமிரும்கூடன்னு அடிக்கடி நண்பர்கள் பேசிப்போம்.

மதிய லஞ்ச் ப்ரேக்குல ஐஸ்பாய் விளையாடுவோம் அப்ப நிறைய கட்டிடங்கள் கட்டிக்கிட்டு இருந்தாக அதனால.

நாலரை மணி எப்ப ஆகும்ன்னு பாத்துகிட்டே இருப்போம் ஒன்னு, ரெண்டு, மூணுன்னு நூறு என்றதுக்குள்ள பெல் அடிச்சிடும்ன்னு நம்பிக்கைல என்னின நாட்கள் பல. பெல் அடிச்சவுடன் வேக வேகமா மெயின் கேட்ட தொட ஓடுவோம்.

வீட்டுக்கு போனவுடனே தலைவலிக்குது, காச்சல் அப்படி,இப்படின்னு டியூஷன் போகாம இருக்க சாக்கு சொன்னாலும் நடக்காது. வேண்டா வெறுப்பா டியூஷன் போவோம். டியூஷன் டீச்சர் "எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தவேண்டும்" கர்த்தர் சொல்லிருக்காரு அப்படின்னு சொன்னவுடனே மீனுக்கும் உயிர் இருக்குல்ல அப்பறம் எதுக்கு நாம அத சாப்பிடுரோம்ன்னு கேட்க அது நமக்காக படைக்கபட்டதுன்னு அவக சொன்னதாக நினைவு.


கூப்பிட்ட அண்ணன் சரவணனுக்கும் தம்பி வினோத்துக்கும் நன்றிகள்.

12 comments:

லோகு said...

கடைசி வரைக்கும் எந்த ஸ்கூல் ன்னு சொல்லவே இல்லையே.. என்ன சூது இது..

வினோத் கெளதம் said...

டேய் நான் உனக்கு தம்பியா..
சின்ன தம்பி அப்படின்னு சொல்லு..

வினோத் கெளதம் said...

எப்பா Template எங்க இருந்து தான் பிடிப்ப சும்மா அசத்தலா இருக்கு..

வினோத் கெளதம் said...

//ரம்யா பொண்ணு ரொம்ப அழகு ஆன ரொம்ப திமிரும்கூடன்னு அடிக்கடி நண்பர்கள் பேசிப்போம்.//

சொல்லவே இல்லை..

தேவன் மாயம் said...

மீனான்னு ஒரு ஆசிரியை அழகா இருப்பாங்க கருப்பு கண்ணாடி போட்டுருப்பாங்க ஆன அவங்கள சுத்தமா பிடிக்காது அடிப்பாங்க அதனாலதான்.

பிரபா இவங்க ஆங்கிலம் எடுப்பாங்க அன்பா பேசுவாங்க அதிகம் அடிக்கமாட்டாங்க.//

அன்பும் கண்டிப்பும் கலந்து அமுதூட்டும் ஆசிரியர்கள் உண்மையில் கடவுளுக்குச் சமமானவர்கள்!

வினோத் கெளதம் said...

உனக்கு நியாபக மராத்தி ஜாஸ்தி தான் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்..

KISHORE said...

//வயசான ஆசிரியை ஒருத்தவங்க இருந்தாங்க அவங்க பெயர் நினைவில்லை //
எப்படி இருக்கும்?

சுசி said...

நாங்களும் உங்க கூட அவசர அவசரமா படிச்சு முடிச்சிட்டோம் பித்தன். ஆத்தா நான் பாசாயிட்டேன்னு உங்க புது டெம்ப்ளேட் வரப்பில ஓடணும் போல இருக்கு. (நீங்க போட்டா புடிக்கிறத யாரோ போட்டா புடிச்சிட்டாங்க) நல்ல அனுபவம்.

கலையரசன் said...

//மீனுக்கும் உயிர் இருக்குல்ல அப்பறம் எதுக்கு நாம அத சாப்பிடுரோம்ன்னு//

அப்பவே.. நெக்கலு?

ம்ம்.. கொசுவத்தி சீக்கிரமா முடிச்ச மாதிரி இருக்கு, நிறைய எழுதியிருக்கலாம்!!

வேடிக்கை மனிதன் said...

எனது அழைப்பை ஏற்று தொடர்பதிவில் பங்கெடுத்ததற்கு மூத்த சகோதரர் பித்தன் விஜய்க்கு நன்றி.

வேடிக்கை மனிதன் said...

நான் சொல்ல விட்ட சில சின்ன வயசு குறும்புத்தனங்களை உங்கள் பதிவில் பார்த்தபொழுது என்னை போலத்தான் நீங்களும் இருந்து இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

வேடிக்கை மனிதன் said...

//அண்ணன் சரவணன் (பாக்க தம்பி மாதரி இருப்பாரு) //

எப்புடி இப்படியெலலம், ஒரே பணிக்கட்டி மழையா "பொய்யுது". கண்டிப்பாக எதாச்சும் வாங்கித் தருவார்.


குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி குடுத்திட்டாப் போச்சு.