பிரபல பதிவர் பேக்கேஜ்.... சீக்கிரம் வாங்கோ... வாங்குங்கோ... !!!

*

என்னை போல நீங்களும் பிரபல பதிவராக ஆசைபடுவிங்க... ஆயிரம் பதிவு எழுதி பிரபலமாகாம பலர் இருக்க. நா பதிவு எழுதுறதுக்கு முன்னாடியே பிரபலம் ஆனது தெரிந்த விசயமே... என்னைப்போல நீங்களும் பிரபலமாகவேண்டி ஒரு புதிய திட்டத்த அறிமுகபடுத்தப்போறேன்...

பாலோவர்... ஹிட்ஸ் எல்லாம் வச்சி ஒருத்தர பிரபலபதிவருன்னு சொல்லிடமுடியாது ஏன்னா எனக்கு ஹிட்சும் வரதில்லை பாலோவரும்... சரி அதவிட்டுடுங்க...

பலரின் வருத்தத்தை போக்க ஆரம்பிக்கப்பட்டது தான் பிரபல பதிவர் விருது அல்லது பட்டம். அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் பட்டத்தை காசு கொடுத்து வாங்குவது போல இங்கு நீங்களும் செயல்பட்டே ஆகவேண்டும் ஏன் என்றால் காசுகொடுக்காமல் கிடைப்பதற்கு இந்த உலகத்தில் மதிப்பு கிடையாது என்ற ஒரே காரணம்தான்.

கம்மிங் டு பேக்கேஜ்ஜஸ்


பேக்கேஜ் ஒன் :

கொடுப்பவரின் ஒரு பதிவுக்கு இரண்டு பின்னூட்டம் வீதம் ஒரு வாரத்திற்கு.(எத்தனை பதிவிட்டாலும் )

பதிவுக்கு கண்டிப்பாக ஒரு ஒட்டு வீதம் ஒருவாரத்திற்கு (இரண்டு திரட்டிகளில் இடவேண்டும் )


பேக்கேஜ் டூ :

வாரத்திற்கு பதினைந்து பின்னூட்டங்கள் மற்றும் பத்து ஒட்டு ( ஒரே திரட்டி அல்லது ஓட்டை பலதிரட்டிகளில் கூட இடலாம் எண்ணிக்கை மட்டுமே முக்கியம்)

பேக்கேஜ் த்ரீ :

கொடுப்பவரிடம் மொத்தமாக பின்னூடங்கள் மற்றும் ஓட்டை கறாராக பேசிக்கொண்டு வாங்குவது (எண்ணிக்கை கொடுப்பவரின் முடிவை பொருத்தது )


இந்த பேக்கேஜிகளில் எதாவது ஒன்றை தேர்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட பதிவரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பின்னூட்டம் மற்றும் ஒரு ஒட்டு குறை இல்லாமல் செலுத்தும் பட்சத்தில் அங்கீகரிக்கப்பட்ட பதிவர் (நீங்கள் ஒட்டு மற்றும் பின்னூட்டமிடும் பதிவர் ) உங்களுக்கு பிரபல பதிவர் விருதை வழங்குவார். அதன் பின் கீழ் காணும் பதக்கத்தை உங்கள் வலையில் பொருத்திக்கொள்ளலாம்.

முக்கியமான விசியம் : பிரபல பதிவராகும் முன்பே ஒருவாரத்திற்கு பின்னூட்டம் மற்றும் ஒட்டு கம்பெனிக்கு போடவேண்டும் ( மேலே உள்ள பேக்கேஜில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ). தவறும் பட்சத்தில் விருது தரப்பட மாட்டாது.அங்கீகரிக்கப்பட்ட பதிவர் :

விருது பெற்ற அனைத்து பதிவர்களுமே அங்கீகரிக்கப்பட்ட பதிவர்தான், புதியவர்களுடைய அல்லது ஏற்கனவே பல்லாயிரம் இடுகை எழுதியும் பிரபலமாகாத.. மற்றும் பிரபலமாக துடிக்கும் பதிவர்களின் பின்னூட்டம் மற்றும் ஓட்டை பெரும்போளுதே... ஒரே வாரத்தில் நீங்களும் பிரபலம் ஆகிவிடுவீர்கள், பிறகு நீங்கள் யாருக்கும் ஓட்டோ அல்லது பின்னூட்டமோ போடா தேவையில்லை.. அனால் உங்கள் கூட அங்கீகரிக்கபட்ட பிரபலங்களுடன் கும்மி ஆடிபீர்கள்... இதை எதிர்த்து யாரும் கம்பெனியிடம் வழக்கு தொடுத்தால் அந்த வழக்கு செல்லுபடியாகாது... கம்பெனி அதை நிராகரிக்கும். ஆனால் அதற்க்கு கைமாறாக கம்பெனிக்கு அப்போ அப்போ பின்னூட்டம் மற்றும் ஓட்டை நீங்கள் செலுத்தவேண்டும். இதை செய்யத்தவறினால்... தனிநபர் தாக்குகள் உங்கள் மீது நடக்கும் பொழுது பிரபலபதிவர்கள் உங்களின் சார்பாக களமிறக்கி விடப்படமாட்டாது. கம்பெனி உங்களுக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யது.. உங்களுக்கு சாதகமாக செயல் படுபவர்களின் விருதுகளும் பறிக்கப்படும்.

ஆகவே இப்பொழுதே ஓட்டும் பின்னூட்டமும் போட்டு என்னிலிருந்து ஆரம்பியுங்கள் பிரபலபதிவராகுங்கள்

சைடு குறிப்பு :: பிரபலபதிவர் ஆனபிறகு "பிரபல பதிவர்" அப்படின்னு பேருக்கு முன்னாடி இல்லாட்டி "பிப" என்று பேருக்கு பின்னாடி போட்டுக்கலாம்.

எடுத்துக்காட்டு :
பிரபலபதிவர் பித்தன்
பித்தன் "பிப"

(பிரபல பதிவர் ஆகாமல் இந்த வார்த்தைகளை சேர்த்தால் கட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கனவே திருச்செங்கோடு கவி என்பவர் பெயருக்கு முன்னாள் பிரபல பதிவர் சேர்த்திருக்கிறார் இது கட்ட விரோதம் என்றாலும் அவருக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படுகிறது)

***சிரிப்பு இல்ல சீரியசு*** : இந்த தளம்(என்னோடதளம்) தான் கம்பெனி அல்லது நான் தான் கம்பெனி.

24 comments:

வால்பையன் said...

ஹிஹிஹிஹிஹி!

நான் ஆட்டைக்கு வரல!

பிரபலமாயிட்டா ஆட்டோகிராப் போட்டு கை வலிக்கும், அதான்!

வினோத் கெளதம் said...

ஹை..
இது நல்ல திட்டமா இருக்கே..நானும் சேர்ந்துக்குறேன்..
நானும் பிரபலம் தான் நானும் பிரபலம் தான்.

தேவன் மாயம் said...

இது என்ன கலாட்டா?

கோவி.கண்ணன் said...

எனக்கு ஒரு பேக்கேஜ் வேண்டும், அதை நான் பதிவர் திரு ஆமத்தூர் ஜெகதீசனுக்கு கொடுக்க விரும்புகிறேன்

பாலா said...

எல்லாரும் என்னைய மாதிரியே விருத காசு கொடுத்து வாங்கிட்ட எந்த பிரசினையும் இல்ல
சரிதானே பித்தன்

லோகு said...

இதுக்கு போட்டியா உங்கள விட குறைஞ்ச விலைல, ஒரு பட்டம் ரெடி பண்ணி, நான் என் கடைல விக்கிற யோசனை இருக்கு.. என்ன சொல்லறீங்க..

பீர் | Peer said...

எனக்கு வேண்டாம்... பிரபலமாகிட்டா கண்டவனும் கண்ட மாதிரி பேசுவான். மூத்திர சந்துக்கு அடிக்கடி போற மாதிரி இருக்கும். ;)

(அடுத்து மூத்த பதிவர் பேக்கேஜா?)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆஹா.. விருது கொடுக்க இன்னொரு நிறுவனமா? நடத்துங்க :))

ஆ.ஞானசேகரன் said...

இப்படியெல்லாம் நடக்குதா? வாழ்த்துகள் நண்பா

இராம்/Raam said...

ஹி ஹி

நாமக்கல் சிபி said...

//(பிரபல பதிவர் ஆகாமல் இந்த வார்த்தைகளை சேர்த்தால் கட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கனவே திருச்செங்கோடு கவி என்பவர் பெயருக்கு முன்னாள் பிரபல பதிவர் சேர்த்திருக்கிறார் இது கட்ட விரோதம் என்றாலும் அவருக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படுகிறது)//

:))ஹிஹி!

ஜெகநாதன் said...

செம விளாசு!

நான் பித்தனா?சித்தனா? said...

Anonymous Anonymous said...

This is not a original idea :-((((

http://jambazarjaggu.blogspot.com/2009/07/money-back-guarantee.html

July 28, 2009 8:10 AM
இந்த பக்கத்தை காணோம் ....

பதிவு எல்லொருக்கும் தெரிந்த ரகசியம்
ஊரோட சேர்ந்து நாமும் கும்மியடிப்போம் நன்பரே....

ஜெகதீசன் said...

இந்த விருது "பதிவுலக விருது அங்கீகர ஆணையத்தின்" அங்கீகரம் பெறாத விருது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்...

கலையரசன் said...

போடடடா...ங்! நல்லா வாயில வருது!

Tech Shankar said...

s u p e r

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி கிறுக்கன்

நன்றி ஜெகா (உங்க நிறுவனத்துக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கலன்னு கேள்விபட்டேன், -:)
நம்ம கம்பெனி அட்டானமொஸ் சோ நோ நீட் அதர் உனிவேர்சிடி அப்ரோவல் -:))) )

நன்றி தமிழ் :)

குரும்பையூர் மூர்த்தி said...

சொல்லமறந்தது:
கவனமாக எண்ணிக்கொள்ளுங்கோ!

குரும்பையூர் மூர்த்தி said...

நான் ரேடி. நீங்க..?

நான் வேண்டவிரும்புவது : பேக்கேஜ் ஒன்

வெற்றி-[க்]-கதிரவன் said...

/குரும்பையூர் மூர்த்தி said... /

Nandri and kandippaa ennikkuren -:)

நஜி said...

பேக்கேஜ் வித்து தந்தா கமிஷன் இருக்கா?

சென்ஷி said...

:-))

நல்லாயிருக்குங்க..

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி சுரேஷ் ( கடமையை செய் பலனை எதிர்பாக்காதே, விருது தானாக தேடி வரும் )

Cool Boy கிருத்திகன். said...

தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க..