எங்கிருந்தோ ஒரு குரல்...

*

புரியாத புவியில்
புரிந்தது போல வயது
ஒவ்வொரு காலகட்டத்திலும்
இதுவே.புரிந்தது தெளிய
புரியாதது புரிவதாக
தெரியாததை காண
இன்னும் தேடல்.இடைதடை இங்கே வர
சிறு முற்றுபுள்ளி. சிலதின
மிடையே மாறிவிட்டது.
காற்புள்ளியாக.புரிந்ததா இல்லையா
புரிதலுக்குள்ளே மீண்டும்
எழும்பியது மற்றொரு குரல்
நான் யார்.

17 comments:

ஜெகநாதன் said...

//சிறு முற்றுபுள்ளி. சிலதின
மிடையே மாறிவிட்டது.
காற்புள்ளியாக.// நன்று!

தேவன் மாயம் said...

புரியாத புவியில்
புரிந்தது போல வயது
ஒவ்வொரு காலகட்டத்திலும்
இதுவே.
///

ஆகா அசத்தல் பின்னூட்டம்..

நாடோடி இலக்கியன் said...

//சிறு முற்றுபுள்ளி. சிலதின
மிடையே மாறிவிட்டது.
காற்புள்ளியாக.//

நிதர்சனம்.

தேவன் மாயம் said...

புரிந்தது தெளிய
புரியாதது புரிவதாக
தெரியாததை காண
இன்னும் தேடல். ///

தேடல் தினமும் இருக்கு இந்த புவியில்...அழகுங்க

தேவன் மாயம் said...

இடைதடை இங்கே வர
சிறு முற்றுபுள்ளி. சிலதின
மிடையே மாறிவிட்டது.
காற்புள்ளியாக.///

வாழ்வு ஒரு தொடர்..................

பாலா said...

தேடலுக்கு முடிவே இல்லையோ ??????????(உண்மைதான் )
அண்ணே நீங்களும் ரவுடிதான் ஒத்துக்குறேன்

குரும்பையூர் மூர்த்தி said...

சொல்லமறந்தது:
கவிதை நல்லாக இருக்கின்றது

குரும்பையூர் மூர்த்தி said...

//இடைதடை இங்கே வர
சிறு முற்றுபுள்ளி. சிலதின
மிடையே மாறிவிட்டது.
காற்புள்ளியாக//

அகரம் சிகரமாகவும், தகரம் தங்கமாகவும் மாற கனகாலம் எடுக்காது

S.A. நவாஸுதீன் said...

ஒரு தேடலின் முடிவே, இன்னொன்றின் ஆரம்பம். கவிதை நல்லா இருக்கு பித்தன்

ஜெகதீசன் said...

//
தோணிற்று எழுதினேன்
//
எனக்கும் உங்கள அடிக்கனும்ன்னு தோணுது.... ஆட்டோ எடுத்துட்டு வரவா?
:P
;)

நான் பித்தனா?சித்தனா? said...

அற்புதம்....

சங்ககாலமென்றால் சித்தன் என்பேன்....

sakthi said...

புரிந்தது தெளிய
புரியாதது புரிவதாக
தெரியாததை காண
இன்னும் தேடல்

ம்ம்ம்ம்

தொடரட்டும் தேடல்

வேடிக்கை மனிதன் said...

//புரிந்ததா இல்லையா
புரிதலுக்குள்ளே மீண்டும்
எழும்பியது மற்றொரு குரல்
நான் யார்.//

இந்தத் தேடல் முற்றுப் பெறாமலிருக்கவே அந்தச் சூன்யம் மறைந்து கொண்டது, கவிதை நன்று

தேடல் தொடரட்டும்

அப்பாவி முரு said...

உள்ளும், வெளியும் விலகாத
விசையினில் சிக்கிக்கொண்டு
தேடும் தேடலுக்கு
விடை காணலறிது.

வினோத் கெளதம் said...

புரியுது ஆனா புரியுல..

ஸ்வாமி ஓம்கார் said...

நல்ல முயற்சி

Suresh said...

/புரிந்தது தெளிய
புரியாதது புரிவதாக
தெரியாததை காண
இன்னும் தேடல்./

Intha line than sema... super kavithai aana un vayasula kathalai kavithai eltuhama ethayo thedi eluthirua samiyar pitha ;)