உங்கள் அன்பிற்கு நன்றி - மீண்டும் எழுதுகிறேன்.

*
நான் கொலைவெறி சரக்கு கவுஜைகளை எழுதுவதை நிறுத்தியதை கண்டித்து பல கோடி,(தெருகோடி இல்ல பலகோடி) மடல்கள், மெசேஜ், அழைப்புகள், பேக்ஸ், ஈமெயில், எல்லாம் வந்ததை கண்டு தபால்காரர் முதல் தந்திகாரர் வரை காண்டாகிவிட்டனர், இதற்க்கெல்லாம் மேலாக நேரிலே வந்து அன்பாக பல வாசகர்கள் கவனித்தது இன்னும் வலிக்குது ச்சி இனிமையாக இருக்கின்றது,


"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்"

என்ற அய்யனின் குறளுக்கான விளக்கத்தை கொடுத்து சென்றனர்.
அவர்கள் கவனித்துவிட்டு செல்லும்பொழுது எவ்வளவு அடிச்சாலும் தாங்குரானே அவன்தான் இவனா இல்லை இல்லை எவ்வளவு அழகா எழுதுறானே அவரா இவரு என்று அவர்கள் கைகளை எடுத்து என் கன்னத்தில் ஐயோ இணைக்கு டைப் பண்ணுறது தப்பவே போகுது என் கைகளை எடுத்து அவர்கள் கண்ணில் ஒத்திக்கொண்டனர்.

சில சாம்பிள் மடல்கள் :

*****

தோபாரு பிராந்தியன்,

நீங்கள் கொலை வெறி கவுஜைகள் எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள் என்று கேள்விப்பட்டு ஆழ்ந்த வேதனையில் சிக்குண்டுவிட்டேன்... காரணம் என் தொழில் நொடித்துவிட்டது,,, அடிதடி வேலை செய்யும் நான் வேலைக்கு போகும் முன் உங்கள் கவிதைகளை படித்து வெறியேத்திகொண்டிருக்கும் பொழுதே எதிர்படுபவர்களை பந்தாடிவிடுவேன்,,,, இபொழுது எல்லாம் காலேஜி போற புள்ளைய காதலிக்குறது போல அமைதியா ஆயிட்டேன், ஒழுங்கா நீ கவுஜை எழுதலனா காதல் தோல்வி கண்ட காதலன் மாதரி உன்ன கைமா பண்ணிடுவேன்.

-ட்டேன்கிசு-
சோமாறி மடசு

_____

திரு சோமாறி மடசு,

நீங்கள் எழுதியது போல பல கடிதங்கள் வந்ததாக காண்பித்து கண்டிப்பாக இதையே சாக்காக வைத்து எழுத தொடங்குகிறேன், முடிஞ்சா ஒரு கட்டிங் ஆடர் செய்யவும்...

'பிராந்தி'யன்
54:08 MM

*****

எப்படிகீர நைனா,

இன்னோமோ நீ எழுதுறதா நிப்பாட்டிகின்யாமே, சரி இல்ல அம்புட்டு தான் சொல்லுவேன், அப்பாலிக்கா கைபோச்சி, பேனா போச்சின்னு எல்லாம் கூவிகினு கிடக்கக்கூடாது, புரியுதா,,, எதுக்கு எழுது எழுதுன்னு சொல்லுறேன்னு பாக்குறியா,,, என்னோட மொவன் ஊட்டு பாடம் எழுதலனா உன்னோட கவுஜயதான் காமிச்சி பயமுறுத்துவேன், உடனே படிக்க உக்காந்துக்கும்.... அம்புட்டுதான் சொல்லுவேம் எழுதுறதா நிப்பாட்டாத நிப்பாட்டினா மூச்சே நின்னுக்கும்...

-நண்டிர்ரிபா
காஞ்ச கருப்பட்டி

_____

திரு காஞ்ச கருப்பட்டி,

உங்கள் கடிதத்தை கண்டு மிகவும் பெருமையாக உள்ளது, என்னை வைத்து பலர் படிகின்றாகளா ?, இவ்வளவு நாள் இது தெரியாம போச்சி, இல்லாங்காட்டி இதவச்சி நான் விளம்பரம் செய்து, மஜா டிவியில் மங்கமாஉடன் ஒரு சந்திப்புல ஒரு வாய்ப்பு வாங்கி பெரிய கவிஞனாக ஆகிருப்பேன், தகவல் தந்தமைக்கு நன்றி,

-"எதிர்"பாப்புடன்
பிராந்தியன்


*******

டேய் லாடுலபக்குதோசு,

உன்னோட கவுச அன்ஜிசெண்டுக்கு பிரோஜனம் இல்லனாலும் படிகுரத நிறுத்த முடியல, ஒழுங்கா மரியாதையா கவுஜைய எழுது நிறுத்தாத, எதோ பெருமையா சொல்லுறன்னு நினைக்காத, காலை கழுத முகத்துல முழிச்ச நல்லது நடக்குமாம் அசிதிஎலையாவுல கழுதை எல்லாம் கிடையாது, அதனால உன்னோட கவுஜய பாக்குறேன், முடிஞ்சா கழுத படத்தையும் உன்னோட ப்ளோக்ல சைடு ஸ்பாட்டுல போடு, சைடிஸ் ஸ்பாட்டுல கொஞ்சம் ஊறுகாய போடு,

தவினஸ் நண்பி
அசிதிஎலையா

____

நன்றி தவினஸ் நண்பி,

நீங்கள் கேர்ள்வாசகர் என்பதால் கண்டிப்பாக நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவேன், உங்கள் புளாக் அடுரசை கொடுத்தால் படிக்காமலே ஆகா, ஓகோ என்று பின்னூட்டமிடுவேன், மெயில் அடுரசை கொடுங்கள் நாள் முழுவதும் சாட் செய்யலாம்***

ஜொள்ளுடன்
பிராந்தியன்

*** அடுத்த கேர்ள் பிரண்டு கிடைக்கும்வரை


*******

இதற்க்கு மேல் வந்த மெயல்களில் மிகவும் மட்டமாக ச்சி மதிக்கத்தக்க வகையில் எழுதிருந்ததால் இத்தோடு முடித்துகொள்கிறேன்,

ஐ அம் பேக்கு இல்ல இல்ல பேக்.

பஞ்சி டைலாக் :: ப்லோக்கிங்கிறது ஒரு சட்டம் அதுல வேண்டாம்னா சட்டைய கழட்டி மாட்டுறது மாதரி எழுதுறத நிப்பாடிடலாம், வேணும்ன்னா மாட்டினத திரும்ப எடுத்து மாட்டிக்கலாம்

14 comments:

வால்பையன் said...

வாசகர்ளின் வேண்டுகோளுகிணங்க உடனே ஒரு எதிர்கவுஜ எழுதி இன்னிங்ஸை ஆரம்பிக்கமாறு கேட்டு கொள்கிறேன்!

நாகா said...

உங்கள் கவுஜைப் பிளிறல்கள் காட்டாறு போல் உள்ளன அதன தாக்கத்தால் நினைவிழந்து பிதற்றியவன் என்ற முறையில் சொல்கிறேன், தொடர்ந்து பிளிறாவிட்டால் நானும் ஒரு மடல் எழுத வேண்டி வரும்..

கோவி.கண்ணன் said...

// நாகா said...
உங்கள் கவுஜைப் பிளிறல்கள் காட்டாறு போல் உள்ளன அதன தாக்கத்தால் நினைவிழந்து பிதற்றியவன் என்ற முறையில் சொல்கிறேன், தொடர்ந்து பிளிறாவிட்டால் நானும் ஒரு மடல் எழுத வேண்டி வரும்..
//

இதே ஞானும் வழிமொழிஞ்ஞு...

கலையரசன் said...

யப்பா சாமி.. உன்னையை இதுபோல எல்லாம் பேச சொல்லி யாருடா சொல்லிக்குடுக்குறது?
அருமைய்யா.. பிராந்தியன் - பிரா இந்தியன்

டேய் என் பிளாக்குக்கு வந்த சரி.. நாயிக்கு பேரு வச்சியே, சோரு வச்சியா?
ஓட்டு போட்டியா?

S.A. நவாஸுதீன் said...

வால்பையன் said...

வாசகர்ளின் வேண்டுகோளுகிணங்க உடனே ஒரு எதிர்கவுஜ எழுதி இன்னிங்ஸை ஆரம்பிக்கமாறு கேட்டு கொள்கிறேன்!

ஹ ஹா ஹா. நானும் கொள்(ல்)கிறேன்

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி வால்ஸ்(தங்கள் சித்தம் என் பாக்கியம் -:) )

நன்றி நாகா (அவசரப்பட்டு மடல் எழுதிடாதிங்க... கவுஜுறேன் )

நன்றி கோவியாரே

நன்றி கலை (-:):):) )

நன்றி S.A. நவாஸுதீன்

தேவன் மாயம் said...

என் போன்ற பல்லாயிரம் வசகர்களின் வேண்டுகோளை ஏற்று ...............................................................கு மிக்க நன்றி..

வெற்றி-[க்]-கதிரவன் said...

//தேவன் மாயம் said...
என் போன்ற பல்லாயிரம் வசகர்களின் வேண்டுகோளை ஏற்று ...............................................................கு மிக்க நன்றி..
//

நானே பிள் பண்ணிகிட்டா ? -:)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அக்க.. இன்னாமா தோணுதுபா உன்கு.. என்னமா எழுதிகீர.. :))

குரும்பையூர் மூர்த்தி said...

//உங்கள் அன்பிற்கு நன்றி - மீண்டும் எழுதுகிறேன்.//

தலைப்பை மட்டும் ஆர்ச்சரியப் படும்படியாக வைத்தால் சரியாய்யா?

குரும்பையூர் மூர்த்தி said...

சொலல மறந்தது:
அமா கவுஜ என்றால் என்ன?. நான் ஒரு பிரபலமாகிவரும் புதுப் பதிபவராக்கும்?

வெற்றி-[க்]-கதிரவன் said...

//ச.செந்தில்வேலன் said...
அக்க.. இன்னாமா தோணுதுபா உன்கு.. என்னமா எழுதிகீர.. :))
//

நன்றி செந்தில்

Suresh said...

ஹீ ஹீ
மச்சான் என் கடித்தை வெளியிடாத உன்னை தூண்டிக்கிறேன் சீ கண்டிக்கிறேன்
நீ எழுதவில்லை என்பதால் பதிவுலகம் சம்பித்து போனது.. ஒரு நிமிடம் நாடே கொந்தளித்தது

வெற்றி-[க்]-கதிரவன் said...

// Suresh said...
ஹீ ஹீ
மச்சான் என் கடித்தை வெளியிடாத உன்னை தூண்டிக்கிறேன் சீ கண்டிக்கிறேன்
நீ எழுதவில்லை என்பதால் பதிவுலகம் சம்பித்து போனது.. ஒரு நிமிடம் நாடே கொந்தளித்தது
//

நன்றி சுரேஷ்