போண்டா + எண்ணை = ?

*
"ரிஸ்" போண்டா சுட அதில் மசாலா அதிகமாக இருக்கின்றது என்று "புரவோ" சொல்கிறார், புரவோ யார் என்று பார்த்தல் இவர் தன்னை போண்டா கட்டுபாட்டு வாரியத்தை சேர்ந்தவர் என்று கூறிகொள்வதாக மற்றவர்கள் கூறுகின்றனர், போண்டாவில் எப்படி மசாலா என்று பார்த்தால் அது மசால் போண்டா, மசால் போண்டாவில் மசாலா இல்லாமலா இருக்கும் என்று ரிஸ் வினவ, அதில் மசாலா அதிகமாக இருப்பதுவே கண்டனத்துக்குரியது அதிலேயும் அதிகம் எண்ணை இருப்பதால், கொழுப்பு கூடிவிடும் என்றும் கூறுகிறார்,

எண்ணை பண்டங்களைத்தான் இளசுகள் முதல் பெருசுகள் வரை விரும்பி உண்பதால் அதை சுடுவதாகவும் இதற்க்கு கடைகாரரும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார், போண்டா சுட ஆரம்பித்த புதிதில் எண்ணை அதிகமாக இருந்தது என்றும் பிறகு குறைந்து கடந்தவாரம் சுடப்பட்ட போண்டாவில் அதிகம் இருந்ததாகவும் அதற்க்கு கடைகாரரும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றார் புரவோ. போண்டா சரியில்லை என்றால் போண்டாவை விமர்சிக்கலாம் ஆனால் போண்டா சுடுபவரை எப்படி விமர்சிக்கலாம் என்று போண்டோ சுடுவோர் சங்கத்தின் சார்பாக கேள்விகள் எழுப்புகின்றனர்.

முக்கோணவடிவில் இருந்திருந்தால் தானே பாராட்டிருப்பேன் ஆனால் அது ஹார்ட் வடிவில் இருப்பதால் அதை தின்று மக்கள் காதலிக்க ஆரம்பித்து கடை கடையாக தேடி தேடி ஹார்ட் வடிவ போண்டா தின்று காதலிப்பதாகவும் புரவோ கூறினார். அதே நேரத்தில் ரிஸ்சின் கழுத்தில் போட்டிருந்த புதிய தங்கசங்கிலியை பற்றி தேவையில்லாமல் இழுத்திருப்பதற்கு போண்டா சுடுவோர் சங்கத்தின் சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தங்கசங்கிலி போட்ட அன்று வாழ்த்திய அனைவரும் உங்கள் கடையில் போண்டா தின்பவர்கள் என்பதை மறந்துவிட கூடாது என்று புரவோ தரப்பு கூறுகின்றனர்.

மசால் போண்டோ சுடுவதால் தன்னை தாக்குவது எந்தவகையிலும் ஏற்கமுடியாது, இது விமர்சனம் அல்ல போண்டா மாஸ்டரை தாக்குதல் என்று மேலும் ரிஸ் கூறினார், உருளைக்கிழங்கு, வெங்காயம் எல்லாம் போட்டு போண்டா செய்யப்பட்டிருக்கிறது என்று கூறிருந்தால் பிரச்னை இல்லை அவர் செய்முறையை எல்லாம் சொல்வதால் அனைவரும் அதை முயற்சி செய்து பார்ப்பார்கள் அது அவர்களுக்கு நல்லதல்ல என்று தனது கருத்தை புரவோ கூறி அதற்கான பதிலை ரிஸ்சிடம் கேட்கிறார்.

உருளை வெங்காயம் கருவேப்பிலை
கடுகு மிளகாய் கடலைமாவு இதை
உருட்டி பிரட்டி எண்ணையில்
போட்டால் அதுவே போண்டா.

பித்தன், புட் நியூஸ்

கருத்துக்கள் வரவேற்கபடுகின்றது :: எங்க நீ சொல்லே, எங்க நீ சொல்லே, நீ சொல்லே, அட நீயாச்சும் சொல்லே...

ஆல் இன் ஆல் அழகுராஜா :: இன்னாத்துக்கு கருத்த கூவிபுட்டா,,, நம்ம ஊட்டு பக்கம் கும்மி, மலையாள மணத்துல நம்ம ரைடிங்ஸ்ஸுக்கு அதிக ஒட்டு அப்பாலிகா நம்மள பேமசாக்கி அல்லாரும் ஒட்டி பதிவு, பேட்டி, உங்கள் அன்பிற்கு நன்றி, மீண்டும் எழுதுகிறேன் இதானே எதிர் பாக்குற, அசுக்கு பிசுக்கு.

.

13 comments:

லோகு said...

நீங்க எப்ப பின் நவீனத்துவ வியாதி சாரி வாதி ஆனீங்க...

தினேஷ் said...

போண்டா கொழகொழனு இருக்கு

குரும்பையூர் மூர்த்தி said...

சும்மா நினைக்கவே மணக்குதில்ல..?

குரும்பையூர் மூர்த்தி said...

சொல்லமறந்தது:
எப்பிடி அண்ணா உங்களுக்கு எல்லாம் இந்தமாதிரி எழுதத் தோன்றுகிறது

பீர் | Peer said...

பின்நவீனத்துவமா...

ஜூட்...

அவிய்ங்க ராசா said...

ithukku peyar thhan sideu nhaveenathuvam..super post...

♠ ராஜு ♠ said...

போன்டால இவ்ளோ மேட்டர் இருக்கா..?
பின் நவீனத்துவம்னு வேற சொல்றீங்க.
மீ த எஸ்கேப்பு.

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி லோகு

நன்றி சூரியன்

நன்றி ஜெகா (கொஸ்டின் கேக்ககூடாது சாமி குத்தமாகிடும் -:) )

நன்றி குரும்பையூர் மூர்த்தி

நன்றி வால்ஸ்

நன்றி பீர் ( நீங்களும் எழுத ட்ரை பண்ணுங்கண்ணே )

நன்றி ராசா

நன்றி டக்லஸ்

நன்றி கலை ( அமீரகத்துல போண்டா கிடைக்குமா ? )

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஒரு போண்டாவ வச்சு ஊடு கட்ரீங்கோவ்வ்வ் :))

வெற்றி-[க்]-கதிரவன் said...

//ச.செந்தில்வேலன் said...
ஒரு போண்டாவ வச்சு ஊடு கட்ரீங்கோவ்வ்வ் :))
//

நம்மள ஊடு கட்டாம இருந்தா சரிதான் -:) நன்றி செந்தில்

தேவன் மாயம் said...

போண்டா நான் சுடுவதே இல்லை. ஏன்.......................................................................................................................ஏன்னா சுட்டா செத்துப்போயிரும்னு ஒரு பயம்!!!

S.A. நவாஸுதீன் said...

போண்டா பத்தி பிரம்மாண்டமா ஒரு பதிவு.

எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் பித்து பிடிக்குது நண்பா.

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி தேவா சார் ( என்ன ஒரு தத்துவம் என்ன ஒரு பொன்மொழி, பின்னூட்டம் போட்டத மேடம் பாதுடபோறாங்க -:) )

நன்றி S.A. நவாஸுதீன் ( நோக்கத்த புரிஞ்சிகிட்டேலே இன்னும் கொஞ்சநாள் படிங்க முழு பித்தனாகிடலாம்)