தலைப்பில்லாத கவிதைகள் (எதிர்வினை)

*
இங்கன படிச்சிபோட்டு மேல படிக்கவும்

**********

திறந்த பாட்டிலில்
வழிந்து கொண்டிருந்தது நல்லதொரு
சரக்கு
முற்றத்தில்
ஐந்தாறு குடிகாரர்கள்
உரக்கச் கத்தியபடி
குடித்து கொண்டிருக்க
உள்ளிருந்து கேட்டது
அண்ணனின் குரல்-
‘எல்லாரையும் துரத்துடா.
ஸ்காட்ச் அடிக்க விடாம
என்ன கூச்சல் இது’
நான் யாரையும் துரத்தவில்லை;
துரத்த மனமில்லை.
அண்ணன் வெளியே வந்து
‘ஸ்காட்ச்சை
குடிக்க தெரியாத ஜடமே’
என்றெனைத் திட்டிப் போனார்
மறுபடி குடிகாரர்கள்
கலகலவெனச் சிரித்து குடித்தனர்

நான் ரசித்தேன்
உள்ளுக்குள் அண்ணனை நினைத்துச்
சிரித்தபடி.(கி.மூ ஜூன் 1 – 3996 – ஸ்நெகா ஓய்ந்ஸ் அருகில் நடந்தது )


***********************************

சேர்த்து வைத்த சரக்குகள்
குடித்து முடித்த பழைய பாட்டில்
எப்படியோ
உடையாமல் போராடி மீண்டு வந்தபோது
பழையசாமன்காரன் தந்த காசு
உடைந்து போன பாட்டிலின் மூடி
நண்பர்களின் சைடிஷ்
இவற்றோடு
உன் நினைவுகளும்.
அவ்வப்போது
பாட்டிலை பார்க்க.

*************************************

‘உங்கள் பிராண்ட் சரக்கு
என்னைக் கவர்ந்தது
அலுவலக மேஜைக்
கண்ணாடிக்கடியில்
அதை வைத்துள்ளேன்’
அறிவித்தார் நண்பர்.
எனக்கும் பிடித்த சரக்குகள்
எத்தனையோ உண்டு.
அப்படிப் பாதுகாக்க
எனக்கும்தான் ஆசை.
யார் தருகிறீர்கள் எனக்கு?
ஒரு பாரும் -
கண்ணாடி குள் சரக்கும் ?


(கி.பி ஜூலை 494 ஜூலி பாரில் பேசியது)

(இந்தக் சரக்கை குடிகாரர் வால்ஸ் அந்தக் காலகட்டத்தில் என் குடியை பாராட்டி எழுதிய கடிதத்தின் பாதிப்பில் குடித்து... வெளியானது)

15 comments:

லோகு said...

பரிசல் காரருக்கே தண்ணி காட்டறீங்க.. கலக்கல்..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாலுக்கு போட்டியா?

சொல்லி வரச்சொல்றேன்.

வெங்கிராஜா | Venkiraja said...

தாறுமாறுங்க!
சான்ஸே இல்லை..
கவுஜர்களுக்குள் போட்டி... யேய்!

"பேச்சிலும் மூச்சிலும்
நான் காணும் அத்தனையிலும்
கல்யாணி பீர் தானடி!"

ஆதவா said...

பரிசலுடையது முன்பே படித்தேன்...
இதைப் படித்ததும் வீட்டில் சிரித்துவிட்டேன்!!
அழகான எதிர்பாட்டு!!

பரிசல்காரன் said...

//நான் ரசித்தேன்
உள்ளுக்குள் அண்ணனை நினைத்துச்
சிரித்தபடி.//

நான் மிதந்தேன்
வாய்க்குள் குவாட்டரை சாய்த்துச்
சாய்ந்தபடி

எப்பூஊஊடீ?

பரிசல்காரன் said...

//அலுவலக மேஜைக்
கண்ணாடிக்கடியில்
அதை வைத்துள்ளேன்’//

அலுவலக மேஜை
டிராயருக்குள்ளே
அதை வைத்துள்ளேன்

(யோவ்... கண்ணாடிக்கடில எப்படி சரக்கு பாட்டிலை வைப்பீங்க?)

பரிசல்காரன் said...

//உன் நினைவுகளும்.
அவ்வப்போது
பாட்டிலை பார்க்க.//

ஊறுகாய்களும்
அவ்வப்போது
நக்கிக்கொள்ள


எப்பூடீஈஈஈஈ?

பரிசல்காரன் said...

அடைப்புக்குறிக்குள் இருக்கும் குறிப்புகள் ஒவ்வொண்ணும் சரவெடி பாஸு!!

பரிசல்காரன் said...

//யார் தருகிறீர்கள் எனக்கு?
ஒரு பாரும் -
கண்ணாடி குள் சரக்கும் ?//


பார் என்றாலே கண்ணாடிக் கோப்பைகளுக்குள் சரக்கிருக்குமே. ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?

ஒரு வேலையும்
ஒளித்துவைக்க
சரக்குப் போத்தலும்

இப்படி வரலாம். இதுகூட நல்லால்ல பாஸூ. வேற மாதிரி யோசிக்கறேன்..

(இப்பல்ல... நாளைக்கு ரெண்டு பீர் ஏத்தினா வரும்!)

என். உலகநாதன் said...

அருமையா இருக்கு பித்தன்.

வால்பையன் said...

குடியின் பெருமையை
உலகுக்கு உணர்த்த
நல்லதொரு நண்பனை
தேடி கொண்டிருந்தேன்
கண்டடைந்தேன்
பித்தனை!,
பித்தனை பித்தனால்
தானே உணரமுடியும்!

-- said...

எ..ல்..லா..ரு..மே ரொ..ம்..பா ஸ்டெடி..யா ..இருக்கீங்களே
பாஸு....!
எ....ப்....ப......டி......?

அறிவிலி said...

வெல் டன்... ஜூப்பர்..

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி அறிவிலி அய்யா -:)

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி லோகு ( பயபுள்ள எப்படி கோத்துடுது பாரு -:) )

நன்றி வெளிச்சபதிவரே

நன்றி செய்யது (சிரிக்க மட்டும் தானே எழுதுறது )

நன்றி வெங்கி ( உங்க கவுஜை சூப்பர் )

நன்றி பரிசல் ( நீங்களே எதிர் கவுஜை எழுதிடலாம் போல ;-)
)

நன்றி இனியவன் சார்

நன்றி சேகர் ( நீங்களே வந்து மாட்டிகிட்டின்களே )

நன்றி வால்ஸ் ( கவிதை கவிதை )