டமில்டுமில் - கருத்து - எதிர்வினை

*
சப்பாத்தி மாஸ்டராக இருக்கும் டமில்டுமில் அனைவரும் கட்டாயம் சப்பாத்தி சாபிடவேண்டும். அவர் அவர் அவரது உணவை நன்றாக உண்கின்றனர் ஆனால் சப்பாத்தியை சாபிடமாட்டேன்கிறார்கள். அதனால் அனைவரும் கண்டிப்பாக சப்பாத்தியை சாபிடவேண்டும் என்று கூறுகிறார். சப்பாத்தி சங்கத்தின் முதல் தலைவரே அனைவரும் சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று கூறவில்லை அனால் வரது போறது எல்லாம் இப்படி சொல்ல என்ன காரணம் என்று தெரியவில்லை. மற்ற உணவுகளை இந்த மா மனிதர்கள் சாப்பிடமாடார்கலாம் ஆனால் மற்றவர்கள் இவர்கள் உணவை சாப்பிடவேண்டுமாம். அதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் பெரும்பாலானோர் உண்பது சப்பாத்தி அதனால் மற்றவர்களும் உண்ணவேண்டும் என்று கூறுகின்றனர்.

பெரும்பாலானோர் சாப்பிடவில்லை என்பதற்காக நாமும் சாப்பிடாமலா இருக்கமுடியும் ?. நம் நாட்டில் காக்காத்தான் அதிகம் இருக்கின்றது அதற்காக அதையா நாம் தூக்கிவைத்து கொண்டாடுகிறோம்?. அவர்கள், அவர்கள் உணவை மற்றவர் திங்கவேண்டும் என்று எதோ சர்வதிகார தோணியில் சொல்கின்றனர். இந்த இழவுக்குதான் கடை ஆரம்பிச்சவுடன் எங்க கூடவே இருக்கன்னு சொன்னது ?. அவர்கள் உணவையே எங்கள் மீது திணிக்கும் நபர்கள்தான் எங்களுக்கு கடையில் வேலை செய்ய சம உரிமை கொடுப்பார்கள் ?. ஹோட்டலில் எத்தனை சீப் குக்குகள் இட்லியோ அல்லது இடியாப்பமோ தின்பவர்கள் வந்திருக்கிறார்கள் சற்று யோசிக்கவும்? அல்லது இனிமேல் வருவதற்கு வாய்புகள் இருக்கின்றதா ? வாரிசு குக்குகள் மட்டுமே இனிமேல் சீப் குக்காக வர வாய்புள்ளது. கூறு கெட்ட குப்பன்கள் வேண்டுமென்றால் இன்று சப்பாத்தியை சாப்பிட்டுக்கொண்டு அவர்கள் அடையாளங்களை அளித்துக்கொண்டிருகிறார்கள். எந்த விதத்தில் என் இட்லியோ அல்லது பொங்கலோ கெட்டுபோகிவிட்டது.

சப்பாத்தி சங்கத்தின் நோக்கம் புரியாமல் நான் வெளிநாடு வந்தவுடன் இங்கு சப்பதிதான் கிடைக்குது, இட்லி வடை கிடைக்கவில்லை, எல்லாம் உங்களமாதரி ஆளுங்களாலதான் இன்னைக்கு கஷ்டப்பட்டு சப்பாத்தி சாபிடுறேன், அங்கேயே சாப்பிட்டு பழக்கம் இருந்தால் இந்த தொல்லை இல்லை என்று கூப்பாடு போடுகின்றனர். உங்களை யாராவது சட்டையை பிடித்து இட்லி மட்டும் சாப்பிடுங்கள் என்று கூறினார்களா ? சப்பாத்தி கிடைக்கும் நாட்டுக்குத்தான் போகபோகிறிர்கள் என்றல் சப்பாத்தி சாப்பிட கற்றுக்கொள்ளாதது யார் தவறு ?.

இவர்கள் உக்காந்த இடத்துல இருந்தே நோகாம நோம்பி எடுக்கனுமாம் அதுக்காக அனைவரும் சப்பாத்தி சாபிடவேண்டுமாம். இந்த கருமத்துக்கு பர்கரா திண்ண கத்துகிட்டா எந்தநாட்டுக்கு சென்றாலும் (பெரும்பாலான) பிரச்சனை இல்லை என்றால். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் இவர்கள் அடுத்தவர்களை பார்த்து குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டுகுறிர்கள் என்கிறார்கள் இந்த அறிவாளிகள். இன்னும் ஒரு கூட்டம் சப்பாத்தி சாப்பிட்டா எதோ ஊருக்கே படி அளக்கலாம் என்பது போல கூறுவது வாடிக்கையாக வைத்திருகிறார்கள். ஒரு கடை வைக்கவேண்டும் என்றால் பலவகையான உணவுகள் உண்பவர்களை வைத்து ஒரு கடை வைக்க ஆசை மட்டும் வைத்தால் எப்படி ? அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் அதற்க்கு வக்கில்லை என்றால் என்ன இழவுக்கு அனைவரையும் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை, இவர்களே கடையை நடத்தவேண்டும் மற்றவர்கள் கைகட்டி நடக்கவேண்டும் இவர்கள் சர்வாதிகார போக்கில் கடையை நடத்துவார்கள் ஆனால் இதை எல்லாம் எதிர்த்து கேட்டால் கடையின் முறையாண்மைக்கு எதிராக கேள்வி கேட்கின்றார்கள் என்று மிரட்டுவார்கள்.

ஒரு பெரிய கடை கீழ் அனைத்து வகையான உணவுகளும் வைத்து கொள்வது நல்லது அதற்க்கு தகுந்தாற்போல் அனைவரின் உரிமையையும் உணர்வுகளையும் மதிக்கதெரிந்தால் தான் அது ஒரு நல்லகடையாக அமையும். அதவுட்டுபுட்டு சப்பாத்தி சாப்பிடு என்று நேரம் சாதகமாக இருக்கும் பொழுது கூவுவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

சப்பாத்தி வேண்டும் கண்டிப்பாக சாப்பிடவேண்டும் என்பவர்கள் அவர்களே தேடி சென்று சாபிடுகிறார்கள் எதுவும் புரிஞ்சிக்காத அரவேக்காடுங்க தான் அவன் புள்ளமட்டும் சப்பாத்தி சாப்பிடுது, நம்மள ஏமாத்துரானுக என்று கூவும்... வேணும்ன்னா போய் தின்னுகளே யார் வேணான்னு சொன்னா ? அதவிட்டுபுட்டு எல்லாரும் என்னாத்துக்கு கட்டாயமா தின்னனும்ன்னு சொல்லுரிங்கன்னு தெரியல, எவனாவது நாலுபேரு ஏமாத்திபுட்டானுகன்னு சொன்னா, ஆமா ஏமாதிபுட்டனுகன்னு கன்னமூடிகிட்டு சொல்லுறது... கூவுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சிட்டு கூவுங்க....
*

22 comments:

☀நான் ஆதவன்☀ said...

எனக்கு வேற வழியே இல்ல இங்க....சப்பாத்தி சாப்பிட்டே ஆகனும். இங்க வரும் போது ஒரு வாய் சப்பாத்தி கூட சாப்பிட தெரியாது. மூனு மாசத்தில சாப்பிட கத்துகிட்டேன் :)

வெற்றி-[க்]-கதிரவன் said...

//☀நான் ஆதவன்☀ said...
எனக்கு வேற வழியே இல்ல இங்க....சப்பாத்தி சாப்பிட்டே ஆகனும். இங்க வரும் போது ஒரு வாய் சப்பாத்தி கூட சாப்பிட தெரியாது. மூனு மாசத்தில சாப்பிட கத்துகிட்டேன் :)
//

நன்னா சாப்பிடுங்கோ... சாப்பிட தெரியாதவங்க தான் அடுத்தவங்க மேல பலியபோடுவாங்க -:)

வால்பையன் said...

இப்ப நான் என்ன செய்ய!?

ஜோசப் பால்ராஜ் said...

நாம அரிசி தான் சாப்படனும். வேணும்ணா சாதத்தோட ஒரு சப்பாத்தி சாப்புட்டுக்கலாம், தப்பில்ல. ஆனா சப்பாத்திய தான் முக்கிய உணவா சாப்புடனும்னு சொல்லக் கூடாது. எப்பவும் போல நாம சோறுதான் திங்கனும். சைடு டிஷ் மாதிரி சப்பாத்திய வைச்சுக்கலாம்.

( எனக்கு கூட சை.ந புரியுதே !!)

வெற்றி-[க்]-கதிரவன் said...

//ஜோசப் பால்ராஜ் said...
நாம அரிசி தான் சாப்படனும். வேணும்ணா சாதத்தோட ஒரு சப்பாத்தி சாப்புட்டுக்கலாம், தப்பில்ல. ஆனா சப்பாத்திய தான் முக்கிய உணவா சாப்புடனும்னு சொல்லக் கூடாது. எப்பவும் போல நாம சோறுதான் திங்கனும். சைடு டிஷ் மாதிரி சப்பாத்திய வைச்சுக்கலாம்.

( எனக்கு கூட சை.ந புரியுதே !!)
//

என்னமா சொல்லிகிரிங்க... சூப்பர் அண்ணாத்த

ஜெகதீசன் said...

ஆனாலும் சப்பாத்திக் காரங்க, சோறு அதிகம் இருக்குற சிங்கை வந்தாலும் சோறு திங்காம சப்பாத்தி தான் வேணுமின்னு அடம்பிடிக்கிறாங்களே...

ஜெகதீசன் said...

இங்க சிங்டெல் கடையில 3 மாசம் ப்ரீயா சோறு தராங்க... ஆனா இவனுங்க நாங்க சப்பாத்தி தான் சாப்பிடுவோம்... எங்களுக்கு எப்படி சோறு தரலாம் அப்படின்னு சண்டை போடுறாங்கப்பா...

SanjaiGandhi™ said...

நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா குடுகுடுப்பை?

இதான் எதிர்கட்சிக்காரர் சதியா?

மொக்கை மெயிலில் தப்பிச்சேன். குடுகுடுப்பை மாட்டிவிட்டுட்டாரே.. :(

மங்களூர் சிவா said...

ஸ்ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே!
:))))

பீர் | Peer said...

லேட்டஸ்ட் நியூஸ்- தமிழகத்தில் அனைத்து அரசு உணவகங்களிலும் சப்பாத்தி விற்க பரிசீலனை செய்ய ஆலோசிக்கப்படும்.

-தொடரும்-

நையாண்டி நைனா said...

இங்கே எனக்கு சப்பாத்தி தான் கிடைக்குது.... ஆனாலும் நான் சோறு தான் அதிகம் சாப்பிடுவேன்....

சோறுல தான் தயிர்சாததையும் அதிகம் கலந்து வச்சிட்டாங்களே... தயிர்சாததையும் நீக்க ஏதாவது பண்ணிகிட்டே தான் இருக்கோம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

புஸ் புஸ் இட்லியை விட்டுட்டு எவன் கான்சுபோன சப்பாத்திய சாப்பிடுவான்.

குடுகுடுப்பை said...

விருப்பபடாதவனா சப்பாத்தி சாப்பிட சொல்றது தப்பு.

அறிவிலி said...

எல்லா உணவையும் சாப்பிட பழகிக்கணும். அப்பத்தான் நாலு ஊருக்கு போனா கஷ்டம் இல்லாம இருக்கும். ஆனா எல்லார் வூட்லயும் கட்டாயம் சப்பாத்தி சாப்பிடணும்னு சொல்லக் கூடாது. அதே நேரத்துல கட்டாயமா சப்பாத்தி சாப்பிடக்கூடாது, ஹோட்டல்ல இருக்கற சப்பாத்தியெல்லாம் கொளுத்தனும்னு போராட்டடம் நடத்தறதும் தப்பு.

கலையரசன் said...

டேய் கவுண்டமணி... செந்திலை கடிச்சிட்டியேடா!!
:-)

S.A. நவாஸுதீன் said...

நானும் வெளிநாட்டில் வந்துதான் சப்பாத்தி சாப்பிட ஆரம்பிச்சேன். இப்போ அத தவிர வேற ஒன்னும் சாபிட்றது இல்ல. ஏன்னா இட்லி மாவு இருக்கு ஆனா சட்டி இல்ல. நான் ஒரு ஆள். ஒரே ஆள். என்ன பண்றது

S.A. நவாஸுதீன் said...

அதுக்காக நான் எங்க ஊர்லயும் அதத்தான் திங்கணும்னு சொன்னா சப்பாத்திக் கள்ளியாள அடிப்பேன்

ஆ.ஞானசேகரன் said...

///ஜோசப் பால்ராஜ் said...
நாம அரிசி தான் சாப்படனும். வேணும்ணா சாதத்தோட ஒரு சப்பாத்தி சாப்புட்டுக்கலாம், தப்பில்ல. ஆனா சப்பாத்திய தான் முக்கிய உணவா சாப்புடனும்னு சொல்லக் கூடாது. எப்பவும் போல நாம சோறுதான் திங்கனும். சைடு டிஷ் மாதிரி சப்பாத்திய வைச்சுக்கலாம். ///

ரிபீட்ட்ட்ட்...

ஹிஹிஹீ

ஆ.ஞானசேகரன் said...

//சப்பாத்தி கிடைக்கும் நாட்டுக்குத்தான் போகபோகிறிர்கள் என்றல் சப்பாத்தி சாப்பிட கற்றுக்கொள்ளாதது யார் தவறு ?. //
நல்ல கேள்வியா இருக்கே

superlinks said...

hi

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, இந்த சப்பாத்தி சங்க தலைவராக திரு கப்பில சிப்பில வாக இருப்பார் என எண்ணுகின்றேன். சரி சரி நானும் சப்பாத்தி திண்பது எப்படினு ஒரு பதிவு போடலாமான்னு யோசிக்கின்றேன்.

பித்தனின் வாக்கு said...

கட்டாய சப்பாத்தி சாப்பிடுவதை எதிர்த்து அப்பாவியும், ஜேசப்பும், கோவியார் தலைமையில் தீக்குளிப்பு போரட்டங்கள் நடத்துவார்கள் எனவும், நான் ஓரமாய் நின்று வேடிக்கைப் பார்த்து, வெளியில் இருந்து ஆதாரவு அளிப்பேன்.