"பிரபல பதிவர்" விருது வழங்கும் விழா

*

நான் அறிவித்த இந்த ( சோத்தாங்கை பக்கம் ஒரு "பிரபல பதிவர்" விருது விற்பனைக்கு இருக்கும் சொடுக்கி பாருங்க) திட்டத்தில் பங்குபெற்று ஒரே வாரத்தில் பிரபலமானோர் பலர், அவர்களை அங்கீகரிக்கப்பட்ட பிரபலபதிர்வர்களாக அறிவிக்கிறேன் இனிமேல் அவர்களும் இதை "எம்.எல்.எம்" போல் தொடரலாம்.


குறிப்பிட்ட தொகை பின்னூட்டம் மற்றும் ஒட்டு போட்டவர்களுக்கு மட்டுமே கம்பெனி விருதை அறிவிக்கின்றது. இந்த லிஸ்டில் உள்ளவர்களில் யாரும் கையூட்டு கொடுக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
வால்பையன்


இவரு நம்ம கம்பெனி விருத அறிவிக்கிறதுக்கு முன்னாடியே நம்ம கடை கஸ்டமர் ( கொலை வெறி கவுஜைகளுக்கு) அதனால் அண்ணாத்தைக்கு முதல் விருது. ( இவரு ஏற்கனவே பிரபலம் அப்படின்னு கூவுரவங்களுக்கு சொல்லிகிறேன்.. அப்படியே இருந்தாலும் இனிமேல்தான் இவரு அங்கீகரிக்கப்பட்ட பிரபலம்)

*^*^*^*

ஜெகதீசன்


இவரு பதிவுலக அங்கீகார ஆணையம் அப்படி இப்படின்னு ஆரம்பிச்சி இருந்தாலும், இவ்வளவு நாளும் அங்கீகரிக்கப்படாத பிரபலமாதான் இருந்தாரு இன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட பிரபலம். ( ஒவ்வொரு பதிவுலயும் -:))) போட்டே விருத வாங்கிட்டாரு, இனிமேல் இது போல பின்னூட்டம் போட்டால் விருதுக்கு எற்றுக்கொள்ளபடாது )

*^*^*^*


அ.மு.செய்யது


இவரு பழைய கஸ்டமருதான் பட் இவரோட பின்னூட்ட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. மழைக்கு ஒதுங்காம ஜன்னில எங்கயோ போய்டாருன்னு நினைக்குறேன் இருந்தாலும் விருது கொடுக்கப்படுகிறது. ( எதிர் கவுஜை ஏகாம்பரம்ஸ் ஜாஸ்தி ஆகிட்டதால இப்ப கவிதை எழுதுறதையே நிப்பாடிடதாக நியூஸ் )

*^*^*^*


தேவா சார்


இவரு ரொம்ப நல்லவரு, லேட்டானாலும் லேட்டஸ்டா வந்து பின்னூட்டம் போடுவாரு... ( திரும்ப திரும்ப கேக்ககூடாது,,, பிரபலமா இருக்கலாம் அங்கீகரிக்கப்பட்ட பிரபலம் இன்றுதான் )

*^*^*^*

லோகு


இவரும் திரும்பி எழுதவந்ததுக்கு தனியா காரணம் சொல்லவேண்டாம், இந்த விருத இவரு வாங்குரப்பவே தெரியும் உங்களுக்கு, நிறைய பதிவுக்கு முதல் கஸ்டமர், சோ இவரும் இன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட பிரபல பதிவர். ( ரொம்ப பீலிங்க்ஸா கவிதா எழுதிகிட்டு இருக்காரு எதிர் கவுஜை போட்டாதான் சரிப்பட்டு வரும் )

*^*^*^*


S.A. நவாஸுதீன்


இவர் போட்டில ரொம்ப உண்மையா மற்றும் அதற்காக உழைத்து விருதை பெறுகிறார். ( டேக் ஹிம் அஸ் எக்சாம்பல் )

*^*^*^*


குரும்பையூர் இலக்கியா


இவரும் போட்டில ரொம்ப நேர்மையா பங்குபெற்று விருதை பெறுகிறார். ஆனா இவரு பேக்கேஜ்ஜவிட அதிகம் பின்னூட்டம் போட்டுடாரு சோ இவருகிட்ட இன்னொரு வலைத்தளம் இருந்தா அதுலயும் விருத போட்டுக்கலாம்.

*^*^*^*


சக்கரை சுரேஷ்


முப்பது மார்க் எடுக்குரவங்கள இனிமேலாவது நல்லா படிக்கட்டும்ன்னு கூட அஞ்சி மார்க் போட்டு பாஸ் பண்ணிவிடுரமாதரி இவருக்கு இந்த விருது... பதிவுலகவிட்டு கொஞ்சநாள் ரெஸ்ட் எடுக்கபோனவரு எப்படி சீக்கிரம் திரும்பி வந்தாருன்னு பாத்தா இந்த விருதுதான் இவர இழுத்துகிட்டு வந்திருக்கனம்ன்னு நினைக்குறேன். ( இப்ப அன்ப வெளிபடுத்த என்னோட அட்ரஸ தேடுவிங்கன்னு தெரியும்... கூல்... கூல் )

*^*^*^*

நிறையபேர் சொற்ப வித்யாசத்துல விருத கோட்டைவிட்டுடிங்க.. மனம் தளராம ட்ரை பண்ணுங்க... ஆல் தி பெஸ்ட் பார் வின்னர்ஸ்.... மற்றவர்களுக்கு வழக்கமா சொல்லுறது தான்... ம்ம் அதேதான் "பெட்டெர் லக் நெக்ஸ்ட் வீக்".

13 comments:

வால்பையன் said...

அய்யா!
நானும் பிரபலம் ஆயிட்டேன்!

வெங்கிராஜா | Venkiraja said...

இந்த பிரபலம்.. பிரபலம் அப்பூடீங்கறீங்களே.. என்னதுங்க அது?

sakthi said...

இந்த பிரபலம்.. பிரபலம் அப்பூடீங்கறீங்களே.. என்னதுங்க அது?

அதானே அப்படின்னா என்னங்கோ!!!!

பீர் | Peer said...

பித்தம் தலைக்கேறி போச்சு.

நட்புடன் ஜமால் said...

அடடடே ...

ஆ.ஞானசேகரன் said...

அடட டேய்.... ஆரம்பிச்சிடாங்களா!!!!!!!!!!

இராம்/Raam said...

எதன் அடிப்படையிலே இந்த விருதை நீங்க கொடுக்கிறீங்கன்னு தெரிஞ்சுகனும்.. இல்லன்னா போராட்டம் நடக்கும்.. ஆமாம்... :))

அ.மு.செய்யது said...

//வெங்கிராஜா said...
இந்த பிரபலம்.. பிரபலம் அப்பூடீங்கறீங்களே.. என்னதுங்க அது?
//

athu singapore la kedakira oru thinpandam thana ??

கலையரசன் said...

எங்க.. என் விருது..

எங்க.. என் விருது..

எங்க.. என் விருது..

குடந்தை அன்புமணி said...

இந்த விருது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா... (எல்லாரும் சேர்ந்து சொல்லுங்க)

’டொன்’ லீ said...

இந்த விருது வழங்கல் செல்லாது என நாம் அறிவித்து உத்தரவிடுகின்றோம்.

:-))))

Suresh said...

Virutha enaka enaka enaka enaka ! he he eh enaku than he :-)

//வால்பையன் said...
அய்யா!
நானும் பிரபலம் ஆயிட்டேன்!
//

Repeatttay !!!!

ரீ-ரிப்பீட்டேய்
ரொம்ப நன்றி Machan.

Eppadi pathu pathu pass agi than mudichaen

என். உலகநாதன் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.