எங்கே கடவுள் ? ( எதிர் வினை)அண்ணன் அப்பாவி முரு தேடிகொண்டிருக்கும் கடவுளை நான் இங்கு காட்டுகிறேன்.

பணக்காரனும் தேடுகிறார்,ஏழையும் தேடுகிறார்.
போற்றியும், திட்டியும்சகஸ்ரநாமம் பாடுகிறார்.
வேண்டுமென்றும், வேண்டுமென்றும்

வேலைகள் பல செய்கிறார்,

வேண்டுமென்பவர் வேண்டுமென்றும்,

வேண்டாமென்பவரும் வேண்டுமென்றும்

உருத்தலில்லாமல் வேண்டுகிறார்.

அங்குமில்லாமல், இங்குமில்லாமல்

நடுவில் அப்பாவியாக நின்றாதால்

இருவரும் பெற்ற பெரும்பேர்

எனக்கில்லாமல் போகுமோ?

வேண்டுமென்பதோ, வேண்டாமென்பதோ

இன்றே தெரிந்தால்,

போற்றியோ, திட்டியோ

சகஸ்ரநாமம் பாட

நானும் தேடுகிறேன்

எங்கே பணம் ?

-ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள்பின்னூட்ட குறிப்பு :: குழந்தை முரு (கூல்..கூல்... நா இப்ப சுவாமி) அவர்கள் இரண்டு பின்னூட்டங்களும், மற்றவர்கள் தலா ஒரு பின்னூட்டமூம் இட்டு சுவாமிகளின் ஆசியை பெறுங்கள்.10 comments:

அப்பாவி முரு said...

கண்டிக்கிறேன்

அப்பாவி முரு said...

ரெண்டு முடிஞ்சு மூணும் நானே,

ஏன்னா, நான் குழந்தை(கடவுள்)

அப்பாவி முரு said...

வாழ்த்துகிறேன்

வால்பையன் said...

ஆஹா!

காசே தான் கடவுளடான்னு புது கவிதை பாடிட்டிங்களே!

அருமை சுவாமி!

பக்தனுக்கு ஒரு கோடி அக்கவுண்டில் போடுங்கள்!

பீர் | Peer said...

போங்கப்பா..

sakthi said...

எதிர் பதிவு புகழ் பித்தானந்தா சுவாமியே வாழ்க வளமுடன்!!!!

அ.மு.செய்யது said...

//ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள் //

உண்டியல் வச்சி கலெக்ஷன ஆரம்பிங்க பிரபோ !!!

கலையரசன் said...

ஸ்வாமிகளுக்கு சிஷ்யைகள் உண்டா..?
ஏன்னா.. நானும் ஜாயின் பண்ணிகலாமுன்னு...

என். உலகநாதன் said...

உங்களுக்கு கவிதை நல்லா வருது பித்தன்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

//என். உலகநாதன் said...
உங்களுக்கு கவிதை நல்லா வருது பித்தன்.
//

நன்றி உலகநாதன் சார்