பிரபல பதிவரின் பயோடேட்டா, படிக்க வாங்கோ... வாங்கோ...

*

பிரபல பதிவரின் (சந்தேகமா ? சோத்தாங்கை பக்கம் பாருங்க பதக்கத்த) பயோடேட்டா, படிக்க வாங்கோ... வாங்கோ...

பெயர் : பிரபலபதிவர்

புதிய பெயர் : ப்லோகிங் கிங், பின் நவினத்துவ பதிவர் , சைடு நவீனத்துவ பதிவர், லெப்ட் நவீனத்துவ பதிவர், ரைட் நவீனத்துவ பதிவர்

வயது : இரவுமுழுவதும் ஜி டாக்கில் கடலை (ஜொள்ளு விடும்) போடும் வயது.

தொழில் : ஒருவரை(மாட்ரவங்கள) குறிவைத்து பதிவுலகை விட்டு விரட்டுதல்.

உபதொழில் : அவர் திரும்ப பதிவுலகிற்கு வந்தால் விட்டுவிடுதல்.

குணம் : பாராட்டே ஆனாலும் ஆண்கள் மின்னஞ்சல் மட்டுமே அனுப்பவேண்டும், பெண்கள் திட்டுவதாக இருந்தாலும் என் கைபேசிக்கு அழைக்கவேண்டும் என்று எண்ணுவது.

குரல் : சும்மா கிடக்குற சங்க நல்லா எடுத்து ஊதிட்டு, அப்பாலிக்கா சங்கே ஊதாதமாதறி நடிக்குறது.

நண்பர்கள் : நா கண்டததுக்கு, எல்லாம் சங்க ஊதுரப்ப கூட சேந்து ஊதுபவர்கள்

எதிரிகள் : நான் சங்கு யாருக்காக ஊதிநேனோ அவர்களே கண்டுகொள்ளாததால்.

பிடித்த வேலை : பதிவில் ஜொள்/ரொமான்ஸ்/காதல்/தூதுவிடல்.

பிடித்த பதிவு : சோ கால்ட் பிரபல பதிவர்கள், பதிவுகள் (படிக்காமலேயே)

பிடிக்காத பதிவு : என் நண்பர்களுக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது (நல்லருந்தாகூட)

பிடித்த வலை : எதிர்பதிவு. பிரச்சனைய கிளப்பி.ஜகாவாங்கி. பதிவ தூக்கி. காம்

விரும்புவது : தனி ஒரு நபருக்காக/நபருக்கு மட்டும் புரியும் வகையில் எழுதும் ரொமான்ஸ்/லாவ்ஸ்/ஜொள்ஸ் கவிதைகள்

விரும்பாதது : மேலே சொன்ன கவிதைகள் எனக்காக எழுதபடாதது.

பொழுதுபோக்கு : மொக்கை பதிவுகள் இடுவது.

புரிந்தது : குருப்பா இருந்தாதான் பதிவுலகில் தொடர்ந்து எழுத முடியும்.

புரியாதது : மொக்கையா நாம கருத்து சொல்லுவோம், ஆனா இன்னொருத்தர் அதே போல மொக்கையா கருத்து சொன்னா கூடி கும்மியடிக்குறது.

எளிய செயல் : எதிர்பதிவு போடுவது

அதைவிட எளிய செயல் : ஐந்து நிமிடங்களில் அதை தூக்குவது

சமீபத்திய எரிச்சல் : ரொம்ப பிளான் பண்ணி நடத்துன நாடகம் புஸ்ஸுன்னு போச்சி. (ரொம்ப உசாரா இருக்காங்க மக்கள் -:( )

நீண்டகால எரிச்சல் : ஒரு மொக்கை பதிவர்ன்னு முத்திரை குத்தப்பட்டது.

சமீபத்திய சாதனை : கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல.

நீண்டகால சாதனை : பிரபலபதிவர்ன்னு பிலிம் காட்டுறது

12 comments:

லோகு said...

என்ன பண்ண முடியும்.. குத்த வச்சு வேடிக்கை பார்க்க வேண்டியது தான்..

என்ன இருந்தாலும் அவர போய் இப்படி சொல்லிட்டிங்களே??

ஜோசப் பால்ராஜ் said...

நீங்க சக்திவேலுக்கு 10 கேள்வி கேட்ட பிரபலப் பதிவரா?

வெற்றி-[க்]-கதிரவன் said...

//ஜோசப் பால்ராஜ் said...
நீங்க சக்திவேலுக்கு 10 கேள்வி கேட்ட பிரபலப் பதிவரா
//

ஒரு பிரபல பதிவர் மற்ற பதிவர்களிடம் பேசுவதே பெருசு இதுல, கேள்வியா நெவெர்... நா கேக்கல....

நா ரொம்ப பிஸி, அத பத்தி எல்லாம் எனக்கு தெரியாது,,,

பீர் | Peer said...

யாருன்னு எனக்கு தெளிவா புரிஞ்சிடுச்சு...

மவனே... அடுத்து நீதான் டார்கெட்..

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி தேவா சார்

லோகு said...

அந்த பிரபலம் யாரென்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்.. ரூ.முன்னூறுக்கு d.d. எடுத்து கீழ்க்கண்ட என் முகவரிக்கு அனுப்பவும்,

லோகு,
அரசாங்க கடை எண்: 2000 க்கு மிக அருகில்,
திருப்பூர்.

பீர் | Peer said...

அந்த பிரபலம் யாரென்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்..

JUST DROP AN EMAIL TO ME...

ஜெகநாதன் said...

பாபிப!!!

அ.மு.செய்யது said...

//குணம் : பாராட்டே ஆனாலும் ஆண்கள் மின்னஞ்சல் மட்டுமே அனுப்பவேண்டும், பெண்கள் திட்டுவதாக இருந்தாலும் என் கைபேசிக்கு அழைக்கவேண்டும் என்று எண்ணுவது.//

இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

( யோவ் !!! அடங்கவே மாட்டீங்களா ?? )

S.A. நவாஸுதீன் said...

உங்ககிட்ட பட்டம் வாங்குன யாரும் இல்லையே இதுல. ஒரு டிஸ்கி போட்டு அதையும் சொல்லிடுங்க தல

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

நல்லவேளை நான் எந்த கேட்டகிரியிலும் வரல!

தப்பிச்சேன்!

அவிய்ங்க ராசா said...

ஹி..ஹி,.கூடிய சீக்கிரம் உங்க வீட்டுக்கு ஆட்டோ வர்றதை யாருனாலயும் தடுக்க முடியாது போலிருக்கே…எவ்வளவு நாளு சிங்கையில இருப்பீங்க..ஊருப்பக்கம் வரணும்ல..))))