கிழமொழியில் எழுதப்பெற்ற பாடல்கள்

*

மகான் ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள் அருளிய பித்தபுராணம் நூலிலிருந்து சில பாடல்களும் ( நூல் கிழமொழியில் (கிழக்கு மொழி) எழுதபெற்றது) அதற்க்கு விளக்கங்களும் சொல்கிறேன்.


கிழமொழியில் எழுதப்பெற்ற பாடல்கள்

ஹிஹோ ஹம ஜிம ஸும சிஸ்ய சிறி
ஸஸிஹி ஹோஸ் ஹிஹோ ஹிஹிஹி
உஹொ ஸிகா ச்ஷிச்ச ஸிந்மெ ஜம்
ஸும்சா ஸிம்ஸா ஜிஹொ ஸிஸ்நா.

சிச்க்ஷா ஸுமா ஸிம்கொ ஹெமேஜோ
ஹோச்ற்றி விஸ்ரா விவாக வேவேகா
ஸுவக்திய ஸிஸ்த்ரியா சிம்ஜிலா ஸிஹி
சிமிஜி ஹூச்ம ஹோபாசு வித்ரிஸ்ஹ்மா

ப்பவோ விட்ரிஸ்ஹ ஸுலகா ஸும்ஸா
விஹாரத் விஸ்ஹ்வத்ரி விதொ னம்தோ
திஸ்மாஸ்ஹ்ய திர்ஸ்ஹ்மா திறி திந்ஸ்ஹா
அதம்ஸ்ரியா அகத்ரிஸ்தொ ச்டுஅமா ஹி

நஸ்ஹா நவஹோ நஜிஸ் நம்ஸ்ர்த்ஹா
பிர்ம்ஹெ பிரிஷ்த்ஷ் பிஹிஸ்ஹ் ஸுஹி
ஹம்ஷதத்தோ தஸ்ஹா தஸிர்ஹ சிஸ்
ஸிம்ஹொ சிம்ய் ஸிர்த்தா ஸிந்ஹா.

-ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள்

இனி மகான் எழுதிய பாடல்களுக்கான தமிழ் விளக்கவுரை.

ஹிஹோ ஹம ஜிம ஸும சிஸ்ய சிறி
ஸஸிஹி ஹோஸ் ஹிஹோ ஹிஹிஹி


பிறப்பால் தன்னை உயர்ந்தவன் என்று கருதுபவனும் தாழ்ந்தவன் என்று கருதுபவனும் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள்.

உஹொ ஸிகா ச்ஷிச்ச ஸிந்மெ ஜம்
ஸும்சா ஸிம்ஸா ஜிஹொ ஸிஸ்நா

மனிதனை மனிதனாக மதிப்பவனும், இறைநிலைக்கு சென்றவனும் ஒன்றே

சிச்க்ஷா ஸுமா ஸிம்கொ ஹெமேஜோ
ஹோச்ற்றி விஸ்ரா விவாக வேவேகா


சகுனம், சடங்கு, சம்பரதயத்தை போதிப்பவன் அல்லது பார்ப்பவன் சாமியாராக இருக்க முடியாது

அன்பை மட்டுமே போதித்து அப்படியே அவனும் வாழ்ந்தால் அவனே ஆசான்.
மூணு வேலை பூசை செய்தாலும், இருபத்திநாலு மணிநேரம் இறைவனை நினைத்தாலும், எதையும் நினைக்காதவன் அருகில் கூட செல்ல இயலாது.

ஸுவக்திய ஸிஸ்த்ரியா சிம்ஜிலா ஸிஹி
சிமிஜி ஹூச்ம ஹோபாசு வித்ரிஸ்ஹ்மா

தான் பிறந்த தேசத்தின் பெருமையை மற்றும் தான் சார்ந்திருந்த மதத்தின் துதி பாடுபவனுக்கு எப்படி அனைத்தையும் ஒன்றாக பார்க்கும் மனது இருக்கும், பிறகு அவன் எப்படி ஞானி ஆவான் ?

ப்பவோ விட்ரிஸ்ஹ ஸுலகா ஸும்ஸா
விஹாரத் விஸ்ஹ்வத்ரி விதொ னம்தோ


மதம் பிடித்தாடும் மதத்தை கட்டிக்கொண்டால் உனக்கும் மதம் பிடிக்கும்.
சாதியை தோற்றி வைத்தல் அந்த சாதியே அவர்களை அளிக்கும்

திஸ்மாஸ்ஹ்ய திர்ஸ்ஹ்மா திறி திந்ஸ்ஹா
அதம்ஸ்ரியா அகத்ரிஸ்தொ ச்டுஅமா ஹி


யாருக்கும் தீங்கிளைகாமல் வாழவேண்டும் என்று விரும்பி அவ்வாறே வாழ்ந்தால் உன் வாழ்க்கைதான் வேதம், மற்றதெல்லாம் குப்பை.

நஸ்ஹா நவஹோ நஜிஸ் நம்ஸ்ர்த்ஹா
பிர்ம்ஹெ பிரிஷ்த்ஷ் பிஹிஸ்ஹ் ஸுஹி


மொழிகளில் பீத்தமொழி, நல்லமொழி என்று ஒன்றும் இல்லை எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது.
எந்த மொழியில் எழுதப்பட்ட பாடலையும் மனமுருகி பாடினால் அதிர்வலை அதுவாகவே வரும், அனைத்து மொழிகளுக்கும் சக்தி உண்டு.

ஹம்ஷதத்தோ தஸ்ஹா தஸிர்ஹ சிஸ்
ஸிம்ஹொ சிம்ய் ஸிர்த்தா ஸிந்ஹா


எனக்கு கிழமொழி மட்டும் தான் தெரியும் அதனால் தான் இந்த நூலை அந்த மொழியில் எழுதினேன். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து எனது கருத்துக்களை அணுஅளவும் கடைபிடிக்காமல், மொழியை மட்டும் பிடித்துக்கொண்டு அதையும் முழுவதும் படிக்காமல், சரியாக உச்சரிக்க மற்றும் அர்த்தம் தெரியாமல் அதுவருது, அதிர்வலை வருது சக்தி வருது கடவுள் மொழி என்று கதை விட்டு மொழியை சிதைக்காமல் இருந்தாலே போதும்.

இந்த பாடல்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பாடல்களாக இருக்கலாம் .

9 comments:

ஜோசப் பால்ராஜ் said...

ஆஹா,
கிளப்பிட்டாய்ங்கய்யா,கிளம்பிட்டாய்ங்க.

இனி என்னென்ன நடக்குமோ தெரியலையே

அப்பாவி முரு said...

//இந்த பாடல்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பாடல்களாக இருக்கலாம்//


இருக்கலாம்...


இருக்கலாம்...

அ.மு.செய்யது said...

ரத்தவெறி கண்ல தெரியுது...

இப்படி எத்தன பேரு கெளம்பிர்கீங்க..

’டொன்’ லீ said...

இந்தப் பாடலில் பொருள் குற்றம் உள்ளது. இதற்கு சரியான விளக்கம் தரப்படாவிட்டால் பதிவுலகத்தில் இருந்து உங்களை 5000 வருடங்கள் தள்ளி வைத்து தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்

S.A. நவாஸுதீன் said...

கிழமொழியில் பித்தபுராணம் கலக்கல் போங்கோ

சுசி said...

ஏன் இந்த கொலைவெறி பித்தன்?
படிச்சுட்டு பித்துக்குளியாட்டம் சிரிச்சிட்டு இருக்கேன்.

வேடிக்கை மனிதன் said...

எனக்கு தாறுமாறா கண்ணக்கட்டுது

வால்பையன் said...

வாவ்!

விளக்கம் சூப்பர்!

பித்தனின் வாக்கு said...

ஷ்ஷ்ச்ஷ் இப்பவே கண்ணை கட்டுதே. அப்பா சாமி எப்பிடி இப்படி பொறுமையா எழுதுனிங்க. நீங்க ரொம்பா நல்லவருங்க ஆங்க்க்க்க்க்