பதிவுலக வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர் பித்தன்ஜி

*

பதிவுகளில் ஹிட்ஸ்/ஒட்டு வருவதில்லையா அணுகவும் பதிவுலக வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர் பித்தன்.

எனக்கு பதிவுலக வாஸ்து, ஜோதிடம், நேமாலஜி, ப்லாகாலஜி, நுமராலாஜி, அஸ்ட்ராலாஜி போன்ற அனைத்து வியாதியாலஜிகளும் அத்துபடி அது மட்டும் இல்லாமல் நான் கற்ற இந்த கலைகளின் மூலம் உங்கள் பிளாக்கை மேன்படுத்த வேண்டும் என்று நானே சில பதிவகளை எடுத்துக்காட்டாக கொண்டு விளக்கவுள்ளேன்.

ஒரு அஅடு போட்டுகிறேன்.

ஹிட்ஸ் வரலையா / ஒட்டு விழலன்னு கவலையா பித்தன்ஜிய பாருங்க.

பதிவெழுத மூடு இல்லையா இது உங்க வலை தள வாஸ்து கோலாராத்தன் இருக்கும் பித்தன்ஜிய பாருங்க.

ஒட்டுமட்டும் வருது பின்னூட்டம் வரலையா இதுக்கு கண்டிப்பா ப்லாகசுக்ரி தான் காரணம் பித்தன்ஜிய பாருங்க.

நாசமா போய்கிட்டு இருக்குற ப்லோக் நல்லாகனுமா உடனே பித்தன்ஜி அவர்களின் லேட்டஸ்ட் பதிவில் இரண்டு பின்னூட்டமிட்டு குறைகளை மண்ணஞ்சல் மூலம் அனுப்பவும் ( பின்னூட்டம் உங்கள் குறைகளை பெற மட்டுமே நிவர்த்திசெய்ய பிறகு சொல்லப்படும்)

பதிவுலக வாஸ்து புகழ் கொல்லிமலை மலைசுற்றி சித்தரின் ஆசிபெற்ற ஜோதிட திலகம் பித்தன்ஜி
நாசமா`ப்லாகையா தெரு,
போஸ்ட்`ன், பப்பு`லிஸ்ட்டு
அண்டார்`டிக்`டிக்`கா

பித்தன்ஜி விஜயம்

திங்கள் - செவ்வாய் ( ஹோட்டல் இதுதாண்டா சாக்கு, அறை என் 7.5 , எழாவது தளத்திற்கும் எட்டாவது தளத்திருக்கும் நடுவில் )

செவ்வாய் - புதன் (ஹோட்டல் மாட்டிகிட்டாண்டா மைனர், அறை என் கிடையாது, ரிசப்சன்லையே இருப்பேன் 24/7 )

புதன் - உறேனஸ் (ஹோட்டல் வாமுநிமா வா, அருகில் பிளாட்பாரத்தில் ( அங்கு யாராவது ஆக்குபை பண்ணிட்டா அதுக்கு பக்கத்தில்))

வியாழன் - நெப்டியுன் ( ஹோட்டல் வலது சோமணி, எட்டாவது டேபிளில் ஒரு கிளாஸ் பச்சதண்ணியுடன் காத்திருப்பேன் நீங்க யாராவது வந்தவுடன் தான் அடர் கொடுக்கணும்)

வெள்ளி - புளுட்டோ ( மொபைல் 005488773e093473 கால் பண்ணி ஆலூசனை பெற்றுக்கொள்ளவும் )

சனி - டோயோடோ (ப்லோக் டீ கடை வாசலிலேயே கடன் சொல்லி டீ குடிச்சிக்கிட்டு இருப்பேன் நீங்க வந்து கடனை செட்டில் பண்ணினவுடனே ஆலோசனையை தொடரலாம் )

ஞாயிறு - ஆள விடுங்கப்பா

*^*^*^**^*^*^**^*^*^*

இதோ சிலருக்கு இலவச ஆலோசனைகள்

ஆ.மு செய்யது - மழைக்கு ஒதிங்கியவை...

உங்களோட குறை : பதிவு அதிகமாக வருவதில்லை அல்லது உங்களால் எழுத முடியவில்லை.

பித்தன்ஜி ஆலோசனை : நீங்க அதிகம் பதிவு எழுதாததுக்கு காரணம் நேமாலஜி இசு தான். மழைக்கு ஒதிங்கிட்டு எப்படி காதல் கதை/கவிதை அடிக்கடி எழுதமுடியும் சோ "தேர் இஸ் றாங் வித் யுவர் ப்லோக் நேம்" காதல் கவிதை எழுதணும்ன்னா மழைல நினையனும். நினஞ்சாதான் கனவுல டூயட் பாடிட்டு வீட்டுக்கு போய் காச்சள்ள கஷ்ட படலாம். டுயட்டுல பாடினத பதிவா எழுதலாம்.(இலவசமா இவ்வளவுதான் ஆலோசனை வழங்கமுடியும்,)

*^*^*^*

சோம்பேறி - சோம்பேறி

உங்களோட குறை : சோம்பேறிநாளும் நிறைய பதிவெழுதிட்டு இப்ப ஆளையே காணோம்.

பித்தன்ஜி ஆலோசனை : இப்ப இவருக்கு நல்லகாலம் ஆரம்பிச்சிருக்கு அதான் பதிவெளுதனும்ன்னு நினச்சா கூட அவரால முடியல முடியாது, இன்னும் ஆறுமாசத்துக்கு மேல இவரு இதையே கடைபிடிக்கணும் இல்லாட்டி பூரிகட்டைக்கும், ஆஸ்பத்திரி செலவுக்குமே இவரது வருமானம் சரியாக இருக்கும். ஆனா இன்னும் மூனுமாசத்துக்கு உங்களுக்கு போன்பில்லு அதிகமா வரும்.

*^*^*^*

வால்பையன் - வால்பையன்

உங்களோட குறை : எதிர் பதிவுகள் எழுவது குறைந்து விட்டது

பித்தன்ஜி ஆலோசனை : இது ரொம்ப சுலபமா சரிபண்ணிடலாம் இது வாஸ்த்து பிரச்சனை, உங்க ப்ளோக்ல ஏதாவது ஒரு மூலைல ஒண்ணாம் தேதில இருந்து பதினைந்தாம் தேதி வரை நெப்போலியன் படத்தியும் பதினாறு முதல் மாதம் முடியும் வரை மானிடர் படத்தையும் வைத்தால். தானாக இந்த பிரச்சனை சரியாகிவிடும். அதன் அருகில் சிக்கன் பீஸ் , ஊறுகாய் வைக்க கூடுதல் பலன் கிடைக்கும்.

*^*^*^*

வினோத்கெளதம் - ஜூலை காற்றில்

உங்களோட குறை : ரொம்ப நாளா ஒரு பதிவையும் காணோம்.

பித்தன்ஜி ஆலோசனை : முன்ஜென்மத்துல செய்த புண்ணியத்தின் பலனா இவருக்கு இப்ப ஒரு மாசம் சுக்கரதிசை இருக்கும் அதனால பதிவெழுத மாட்டாரு ஆனா இந்த சுக்கரதிசை தாய் நாட்ட விட்டு கிளம்பினா பலிக்காது, திரும்பி பதிவெழுதி ப்லாகோமேனியா வந்துடும்.

*^*^*^*

பீர் - ஜெய்ஹிந்தபுரம்

உங்களோட குறை : இப்போதைக்கு பதிவு நிறையா எழுதுவிங்க

பித்தன்ஜி ஆலோசனை : நீங்க ஹெடர் இமேஜில ஷூ படம் போட்டதிலிருந்தே உங்களுக்கு வச்ச பதிவுலக பில்லி சூனியம் வேலை செய்யாம போனது மட்டும் இல்லாம உங்களுக்கு நல்லகாலம் போய்டுச்சி, அதிக பதிவு எழுத ஆரம்பிச்சிடிங்க, ப்ளாகோமேனியா தாக்காம பாத்துக்குங்க.

*^*^*^*

உண்மைத்தமிழன் - உண்மைத்தமிழன்

உங்களோட குறை : இவரது பதிவ படிக்க இரண்டு சோடா அல்லது ஒரு கட்டிங் தேவைபடுது

பித்தன்ஜி ஆலோசனை : வாஸ்த்து சரியில்ல, அதே போல சில பரிகாரங்கள் செய்யவேண்டி இருக்கு, இல்லாட்டி இவரோட நாப்பத்தி எட்டாவது வயசுல நான் யூத்து யூத்துன்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு, இவரு டெஸ்க்டாப்புல அல்லது பக்கத்துல இருக்குற முருகன் படத்த தூக்கணும், அங்க இல்லன்னா பதிவு எழுதுறப்ப முருகன நினைக்ககூடாது, கடவுள் கொடுத்த கொடைன்னு நினச்சி பிளாக்கர் டேட்டாபேச தீக்குறது மட்டும் இல்லாம ரிசசன் டைம்ல கூட படிக்கும் பதிவர்கள இரண்டு சோடா குடிக்க வச்சிடுவாரு.பக்கம் பக்கமா எளுதுறதுனால இவரு வலைத்தளமும் கூட ஸ்லோவா இருக்கும். டெம்ப்லேட் மாத்தினால் நல்ல பலன் உண்டு.

( 54 வயசுல இருக்கவங்களே யூத்துன்னு சொல்லுறப்ப இவரு தாராளமா சொல்லிகிடலாம்ன்னு.... எல்லாரும் சொல்லுறது காதுல கேக்குது பட் நான் என்னோட தொழிலுக்கு துரோகம் பண்ண முடியாதுல... )

அனைவரும் உங்கள் தளங்களை பிரபலமாக்க உங்கள் பிளாக்கில் வைத்த பில்லி சூனியம் எடுக்க, பித்தன்ஜியை நாடுங்கள்.

*^*^*^*

கட்டணம் : பிளாக் ஒன்றுக்கு ( 5 பின்னூட்டம் மற்றும் இரண்டு வோட்டுகள்***)

***(இந்த சலுகை முதல் பதினைந்து கஸ்டமர்களுக்கு மட்டுமே)

*

14 comments:

லோகு said...

ஸ்ரீ பித்தன் சுவாமி எப்போ கடை எண் 2000 க்கு விஜயம் பண்ணுவீங்க.. சில பல யோசனைகளை தேவை படுகிறது.. (ஆப் வோட்காவும், ஊறுகாய் ம் என் செலவு.)

S.A. நவாஸுதீன் said...

( அங்கு யாராவது ஆக்குபை பண்ணிட்டா அதுக்கு பக்கத்தில்))

ஹா ஹா ஹா. பித்தன் கலக்குறீங்களே

வால்பையன் said...

சூப்பர் காமெடி தல
கலக்குங்க!

வால்பையன் said...

//உங்க ப்ளோக்ல ஏதாவது ஒரு மூலைல ஒண்ணாம் தேதில இருந்து பதினைந்தாம் தேதி வரை நெப்போலியன் படத்தியும் பதினாறு முதல் மாதம் முடியும் வரை மானிடர் படத்தையும் வைத்தால்.//

பாக்கெட்லயே வச்சும் முடியலையே தலைவா!?

தேவன் மாயம் said...

அடி தூள்!!
பதிவே ஒரு கட்டிங்க அடிச்ச மாதிரி இருக்கு!!

sakthi said...

பித்தானந்தாய நமஹ

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தம்பீ..

என்னால ஒரு ஓட்டுதான் போட முடிஞ்சது..! நான் என்ன செய்யறது..? தமிழ்மணத்துக்காரங்களோட சதி வேலை.. நீ பிரபலமாயிறக்கூடாதுன்னு அவங்களும் சேர்ந்து சதி பண்றாங்கன்னு நினைக்கிறேன்.

நீ ஒண்ணு பண்ணு.. அடுத்தப் பதிவுல அவங்களை நல்லா திட்டி எழுதி. நான் வந்து அம்பது பின்னூட்டம் போடுறேன் அதுல..

என்னையும் மறக்காமல் கலாய்த்ததற்கு எனது இதயங்கனிந்த நன்றிகள் தம்பீ..

♠ ராஜு ♠ said...

\\( 54 வயசுல இருக்கவங்களே யூத்துன்னு சொல்லுறப்ப இவரு தாராளமா சொல்லிகிடலாம்ன்னு.... எல்லாரும் சொல்லுறது காதுல கேக்குது பட் நான் என்னோட தொழிலுக்கு துரோகம் பண்ண முடியாதுல... )\\


நீங்க யாரச் சொல்றீங்க பாஸு..?
அவரத்தானா..?
இல்ல..வேற யாராவதா..?

பதிவு கலக்கல்.

கலையரசன் said...

ஸ்வாமி பிளிர்றீங்க... சோமபானம் ஏதாவது சாப்டீங்களா?

S.A. நவாஸுதீன் said...

எல்லாருக்கும் நல்ல பரிகாரமாத்தான் சொல்லி இருக்கீங்க சுவாமி

சப்ராஸ் அபூ பக்கர் said...

பித்தன் ஜி!.... இப்படி உண்மையெல்லாம் சட்டென போட்டுக் கொடுக்கக் கூடாது. பாவம் இல்லையா நம்ம பதிவுலக நண்பர்கள்......... (லொள்...)

நல்ல ஒரு பதிவு.... வாழ்த்துக்கள்.....

அறிவிலி said...

வாஸ்து உங்களு்கு வொர்க் அவுட் ஆயிடுச்சா????

SanjaiGandhi™ said...

:)))

ஆனாலும் பாருங்க வாஸ்து நிபுணருக்கே 19 கமெண்ட்ஸ் தான்.. :)

ஊர்சுற்றி said...

கலக்கல் நக்கல்.

இப்படித்தான் நாட்டில நிறைய பேரு திரியுறாய்ங்க!!!