பித்தன் முதல் ஞான பித்தன் வரை

*

நான் சிறு வயது முதலே தியானம் செய்து கொண்டிருந்தாலும் நேற்று தான் ஒரு பாறையின் மீது ( ஜிஸோ மலையிலிருந்து இருபத்தி எழு கி.மீக்கு அப்பால்) தியானம் செய்யும் பொழுது நான் எங்கு இருக்கின்றேன் என்பதையே மறந்தேன் உடலற்றநிலையை பெற்றேன்,

பாறை, மரம், செடி, கொடி, துள்ளி ஓடும் மான், அதை துரத்தும் சிங்கம், நதி, அதன் ஓசையில், அதிலிருக்கும் மீனில், ஆகாயத்தில், நிலவில், அதன் ஒளியில், விடியற்காலை சூரியனில், அதன் ஒளியில், கீழே கிடக்கும் கல்லில், துகளாக போய் உருவான மண்ணில், மண் புழு அதை தின்னும் குருவி, அதை விரட்டி தின்னும் பாம்பு, அதை தூக்கிக்கொண்டு செல்லும் பருந்து, அதை வேட்டையாடும் மனிதன், அவன் கையிலிருக்கும் வில்லில், இன்னும் இன்னும் என்னில் அடங்காதவைகளில்...

சுருக்கமாக சொன்னால் இந்த பிரபஞ்சத்தின் இயக்க இரகசியத்திலிருந்து, சுழியம் வரை நான் கலந்திருப்பதை உணர்ந்தேன்....

நான் பெற்ற அனுபத்தை....

நான் பெற்ற ஞானத்தை...

ஆம் நான் ஞாநியாகிவிட்டேன்... என்ன நம்பிக்கை இல்லையா ?

இருந்து விட்டு போங்க... எனக்கு ஒன்றும் நட்டம் இல்லை...

நீங்க என் குழந்தைகள்.. உங்களை காக்கும் பொறுப்பு என்னுடையது...

அதனால் என் அட்வைசை ஆரம்பிக்கிறேன்.....

இப்படி எல்லாம் சொல்லி நான் யோகி வேசம் போட்டு, பல ஆங்கில புத்தகங்களையும் வேற்று மொழி புத்தகங்களையும், கற்பனை கதைகளையும் சொல்லி கார்பரேட் சாமியாராக விரும்பல.... -:)

பித்தன் என்ற பெயரில் நிறைய நண்பர்கள் பதிவுலகிற்கு வந்துவிட்டதால் [பி]-[த்]-[த]-[ன்] என்று கட்டம் எல்லாம் போட்டு பெயரை மாற்றினேன் இப்படி இருந்தும் பின்னூட்டங்களில் குழப்பம் வருவதால் எனது பெயரை "[ஞான]-[பி]-[த்]-[த]-[ன்]" என்று மாற்றிக்கொண்டேன்

[பி]-[த்]-[த]-[ன்] என்ற நான் இன்று முதல் "[ஞான]-[பி]-[த்]-[த]-[ன்]"

*

10 comments:

வால்பையன் said...

எங்களை கோன பித்தன் ஆக்காமல் இருந்தால் சரி!

:)

(ஸ்மைலி போட்டிருக்கிறேன்)

அ.மு.செய்யது said...

ஓக்கே ஞான பித்தன்..ஞான பித்தன்..!!!

அப்பாவி முரு said...

ஆஹா, இனிமேல் பிரிச்சு கும்முறதுக்கு வசதியாக இருக்கும்...

வேடிக்கை மனிதன் said...

முடியல

S.A. நவாஸுதீன் said...

சரி ஞானியே. நீங்க சொன்னீங்கன்னா சரியாத்தான் இருக்கும்

ஊர்சுற்றி said...

ஹாஹாஹா....
எங்கே நீங்களும் ஒரு கார்ப்பரேட் சாமியார் மாதிரி பேசுறீங்களேன்னு நினைச்சேன்..... நல்லவேளை.


பெயர்மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்.

ஜோசப் பால்ராஜ் said...

நீங்க அந்த ஆழ்நிலை தியானத்த முடிச்சுட்டு கார்ல வர்றப்ப நான் உங்களுக்கு எதிர்ல வந்த மாதிரி இருந்துருக்குமே. உடனே நீங்க போன் அடிச்சு விசாரிச்சப்ப, நான் ஊர்லயே இல்ல வேற ஊர்லை இருக்கதா சொல்லிருப்பாளே? அதெல்லாம் நடந்ததா இல்லையா? அப்டியெல்லாம் நடக்கலைன்னா நீர் வெறும் பித்தன் தான், ஞானப்பித்தன் இல்லையாக்கும்.

என். உலகநாதன் said...

ஏன்,

உங்கள் இயற்பெயரிலேயே எழுதலாமே?

குடுகுடுப்பை said...

பித்தன் சாமிகள்

யாகவா முனிவர் , நீங்க எல்லாம் பிறந்த நூற்றாண்டு தவறு. ஒரு ஆயிரம் இரண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி பொறந்திருந்தா கதைக்கு ஆயிருக்கும்.
இப்ப ஞானப்பித்தன் ஆனா பதிவு எழுதலாம். அதுக்கு ஒரு போலி ஞானபித்தன் வரலாம் அவ்ளோதான்

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி வால்ஸ்

நன்றி பாலா

நன்றி செய்யது

நன்றி செந்தில்

நன்றி முரு ஜி

நன்றி ராஜு

நன்றி கலை

நன்றி சரவணன்

நன்றி S.A. நவாஸுதீன்

நன்றி ஊர்சுற்றி

நன்றி ஜோசப் -:)

நன்றி உலகநாதன் (என் சொந்தபேருளையும் நிறைய நண்பர்கள் இருக்கின்றனர் )

நன்றி குடுப்ஸ் ( அந்த அளவுக்கு நாம வொர்த் இல்ல :)