எலும்புத்துண்டுக்காக சில நாய்குட்டிகள்.

*

அது ஒரு அழகிய வீடு, சற்று பெரிய வீடு, அதனை சுற்றி தோட்டம். தொடக்கத்தில் அதனை பாதுகாக்க ஒரு வகையான வெள்ளை நாய்கள் மட்டுமே இருந்தது. வீட்டின் சொந்தகாரர்கள் நன்மதிப்பை பெற்று நண்பர்களாகவே அவைகள் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல வீட்டின் எசமான் பலவகை நாய்களை வாங்கி ஆதரிக்கதொடங்கினார். அதனால் பல கருப்பான நாய்களுக்கும் வீட்டை பாதுகாக்கும் பொறுப்பு கிடைத்தது. அதற்க்கு காரணம் வெள்ளை நாய்களை விட கருப்பு நாய்களுக்கு அல்லது நாட்டு நாய்களுக்கு வீட்டை காப்பது எப்படி என்று நன்றாக தெரியும் வாலை வீட்டின் சொந்தகாரர்களுக்கு மட்டும் ஆட்டும் மற்றும் கருப்பு நாய்களுக்கு இயற்கையிலேயே காக்கும் திறனைவிட பார்க்க அழகு நடையில் நடப்பதால் வீட்டின் எசமானர் கருப்பு வகை நாய்களையே, நாய்கள் வாங்கும்பொழுது வாங்கதொடங்கினார். இதனால் நாளாக நாளாக வெள்ளை நாய்களின் எண்ணிக்கை குறைந்து கருப்பு நாய்களின் கட்டுப்பாட்டுக்குள் வீடு வந்தது.

கருப்பு நாய்கள் எசமானின் விருப்பப்படி அல்லது விரும்பும்படி நடந்துக்கொண்டது அதனால் எசமானுக்கு எதாவது உபயோகமாக இருந்ததா என்று பார்த்தால் ஓரளவே இருந்தது என்றுத்தான் சொல்லவேண்டும். ஆனால் தங்களுக்கு பிடிக்காத வெள்ளை நாய்களை வீட்டை விட்டு துரத்தியதில் வெற்றிக்கொண்டது. இதனால் வெகுநாட்களாகவே வெள்ளை நாய்களின் மொத்தவியாபாரிக்கு ஒரே கவலையாக இருந்தது அதற்க்கு காரணமும் இருந்தது, அந்த தெருவில் உள்ள முக்கால்வாசி வீடுகளில் பாதுகாப்புக்கு வெள்ளை நாய்களை மட்டுமே இருந்தது. ஆனால் இந்த வீட்டை பார்த்து அனைவரும் கருப்பு நாய்களை வாங்க தொடங்கினால் தனது கடையை மூடிவிட வேண்டியதுதான் என்று பயம் அவருக்கு.

சில நாட்களிலேயே வியாபாரி நினைத்தது நடக்க தொடங்கியது. பல வீடுகளில் வெள்ளை நாய்கள் துரத்தப்பட்டு நாட்டு நாய்களை வாங்கிக்கொண்டனர். இதனால் வெள்ளை நாய் வியாபாரியின் வியாபாரம் நொடித்து, பொழப்பு நடத்த முடியாமல் போய்விட்டதால் ஒரு முடிவு செய்து மற்ற நாட்டு நாய் வியாபாரிகளுடன் சேர்ந்து வியாபாரம் செய்ய முடிவு செய்தார். யோசனை ஓரளவுக்கு கைகொடுத்தது ஆனால் பழைய வியாபார செல்வாக்கு போய்விட்டதை நினைத்து வெள்ளை நாய் வியாபாரி கவலைகொள்ளதான் செய்தார் இந்த சமயத்தில்தான் கடை பொறுப்பை வியாபாரியின் மகன் ஏற்றுக்கொண்டார். தனது கடையின் வியாபாரத்தை பெருக்க பலவகைகளில் யோசித்து ஒரு திட்டம் தீட்டினார் அதன்படி முதலிடாக சில எலும்புத்துண்டுகளை போட்டு தெருநாய்களை பிடிப்பது அதுவும் குட்டியாக இருக்கும் பொழுதே பிடித்துவிட்டால் பழக்கிவிடலாம் பழக்கிவிட்டால் நல்லவிலைக்கு போகும். அதோடு முதலிடு மிகவும் குறைவு.

திட்டத்தின் படி தெரு தெருவாக சுற்றி கண்ணில் தென்படும் குட்டிநாய்களுக்கு எலும்பு துண்டுகளை போட்டு பிடித்தார். எலும்பு துண்டு வாங்கும் செலவை குறைப்பதற்காக மற்றும் இவைகளால் தான் வியாபாரம் குறைந்தது என்ற கோபத்தை தணிக்க , கருப்பு நாட்டு நாய்களை குட்டி , பெருசு என்று பாரம்பட்சம்மில்லாமல் கொன்று அதன் எலும்புகளை தனக்கு வியாபாரி போட்டார் என்று தெரிந்தும் கூட அந்த எலும்புத்துண்டை கவ்விக்கொண்டு வியாபாரிக்கு வாலாட்ட தொடங்கியது குட்டிகள். வியாபாரத்தை பெருக்க போட்ட திட்டம் வெற்றி என்று வியாபாரியும், இனி வீடுகளை பாதுகாத்து வெள்ளை நாய்களின் எண்ணிக்கையை வீடுகளில் பெருக்கி வியாபாரிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று குட்டி நாய்களும் நினைத்துக்கொண்டார்கள். இந்த விசயம் எசமானர்களுக்கு தெரியுமா. என்று தெரியவில்லை.


*

6 comments:

அ.மு.செய்யது said...

பல நாட்களாக இமயமலைச்சாரலில் கடுந்தவம் புரிந்து அரிதின் முயன்றெழுதிய‌ சிறுகதை !!!!

ஒளிவட்டம் தலைக்கு பின்னால் தெரிகிறது......எழுத்தும் கதையும் நல்லா இருக்கு பித்தன் !!!!!

வால்பையன் said...

எதையோ ரெகுலரா படிச்சி கெட்டு போயிட்டிங்கன்னு நினைக்கிறேன்!

அப்பாவி முரு said...

கருப்பு நாய்கள் நல்லாவா வீட்டை காப்பாத்துது??

லோகு said...

கருப்பென்ன, வெளுப்பென்ன ? எலும்புத்துண்டுக்கு ஆசைப்படாத நாய் உண்டா.??

கும்க்கி said...

அ.மு.செய்யது said...

பல நாட்களாக இமயமலைச்சாரலில் கடுந்தவம் புரிந்து அரிதின் முயன்றெழுதிய‌ சிறுகதை !!!!

கதைதானா...?

S.A. நவாஸுதீன் said...

இப்படித்தான் கடைசி வரைக்கும் நாய் படாதபாடு படவேண்டி வருமோ. கொஞ்சம் வெத்தலையில் மை போட்டு பார்த்து சொல்லுங்க