துரத்தலின் நினைவுகள்

*

என்னை துரத்துவது என்னவென்று புரியவில்லை ஓடுகிறேன். தனித்து இல்லாததால் மாற்றுவழி தேடி ஓடினேன் உயிரே திரைப்பட பாடல்கள் ஒலித்துகொண்டிருக்கிறது, துரத்தல் தொடர நிற்காமல் மீண்டும் வேகமாக ஓட... வழியடைத்து நெருங்க வாய்ப்பில்லாமல் தொடர்பு துண்டிக்க... எங்கு செல்ல என்று புரியாமல் நடக்க தொடங்கினேன் துணைக்கு புகை கூடவே வருகிறது, இன்னும் வேகமாக அது என்னை துரத்துகிறது. வழிதடுப்பை உடைத்து கற்ப்பனையில் பயணிக்கிறேன். என்னையறியாமல் என் முகத்தில் மனதில் புன்னகை, கால்பகுதியை அடைந்து ஒரு காபி குடிக்க, கற்பனை நீண்டுகொண்டே செல்கிறது. விடியற்காலை வீட்டை நெருங்க எதிர்பாக்காதவண்ணன் ஏன் இப்படி என்றான், லூசு என்று கூட திட்டினான் ஆனால் மாறாக ஏன்னே வழியை ஏற்படுத்தல என்று மற்றுமொரு குரல். எதிர்பாக்கவில்லை துரத்தலின் சக்திதான் இதுவோ என்று நினைத்துக்கொள்ள தூண்டியது.

கருப்பு, வெள்ளை உடை பையில் பலவண்ண பேனா ஒரு சிறு அளவுகோல் துரத்தலின் காரணமாக இந்த கோலத்தோடு இந்த முறை வந்துவிட்டேன். அது என்னை வேகமாக நெருங்கிவிட்டது, நானும் நெருங்கிவிட்டேன் பைத்தியமென்றே நினைத்திருக்க கூடும் பார்ப்பவர், அவர்களுக்கு எப்படி தெரியும் ? அவர்களை துரத்தினால் தானே தெரியும். ஈ கூட ஆடவில்லை ஒரே பயம் எங்கே என்னை துரத்தியது என்னை தாண்டி சென்று அவர்களை பிடித்துவிடுமோ என்றோ தெரியவில்லை ஆனால் பயம் கண்டிப்பாக இருக்கத்தான்செய்யும் யாராக இருந்தாலும். நடக்க இயலாது என்று தெரிந்ததும் அது தானே விலகியது, சுற்றி பலர் இருந்ததால் அந்த முடிவாக இருக்கலாம். சரியான தூக்கம் இல்லை என்றுதான் தோன்றியது ஆனால் பயம்தான் இந்த தூக்கமின்மைக்கு காரணமா? என்று புரியவில்லை, அல்ல அல்ல அது கூட இருக்கலாம் ஆனால் விளைவுகளை கண்டு பயம் இல்லை அப்பொழுது மகிழ்ச்சிதான், விண்ணைமுட்டும் மகிழ்ச்சி.

இந்த முறை அதன் மிரட்டலுக்கு உட்பட்டு எதற்கும் பயமில்லாமல் சென்றேன் எந்த எதிர்பார்ப்பும் இல்லை அதனால் பயமும் இல்லை, மெது மெதுவென்று உள்பக்கம் பஞ்சு பதிக்கப்பட்ட குளிரிலிருந்து பாதுகாக்கும் உடையை அணிந்திருந்ததால், குளிரிலிருந்து உடம்பை பாதுகாத்தாலும் கைகள் வெளியே தெரிய இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றோடு ஒன்றை தேய்த்து சூடு உண்டாக்கி கன்னத்தில் வைத்துக்கொண்டேன் அந்த குளிரில் இந்த சூடு சுகமாக இருக்க ஒரு தேநீர் வாங்கி அந்த குளிரில் குடிக்க மேலும் அது என்னை துரத்தியது, சிறிய பயணத்தில் அது என்னை முந்தி வேறுதிசையில் செல்ல மாற்று திசையில் வேகமாக பயணிக்க இறுதி கனவை தொற்றிக்கொண்டு பாதி தொலைவை தூரத்தை கடந்து ஒரு காபியுடன் கனவை தொடர காலையில் அனைத்தும் கனவுபோல இருந்தது.

கனவா அல்லது நிசமா என்று தெரியாமலே நான் பயந்து ஓடிக்கொண்டிருக்க அது என்னை வேகமாக துரத்திக்கொண்டுதான் இருந்தது அனைவரும் என் கூட இருந்தும் யாருக்கும் இது தெரியாது, தெரிந்தால் பைத்தியக்காரன் என்று முத்திரைகுத்திவிடுவர் என்று எண்ணினேனோ என்னவோ, விரைவில் தெரிந்தது பரவாயில்லை நான் பைத்தியமாகவே இருந்துவிட்டு போகிறேன். உருவம் தெரியாத ஒன்றுக்காக நான் பைத்தியக்காரன் பட்டம் வாங்க சம்மதித்தேன். பட்டம் வழங்கப்பட்டது ஆனால் அதற்குண்டான முழுத்தகுதி அப்பொழுது இல்லை. விரைவில் வரபோகிறது என்று அறியவும் இல்லை.

துரத்தல் இருந்தாலும் மாற்றுபாதையில் பயணிக்கவேண்டி இருந்தது இருக்கா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் பயணம் தொடங்கியது தெரியாததால் துரத்தல் அதிகமாகிற்று அங்கும் இங்கும் தேடி இல்லை என்ற முடிவுக்கே வந்து கண்ணீர்வர இல்லை இல்லை இருக்கு என்று நம்பிக்கைவிதையை உள்ளுணர்வு தொடக்கத்தில் விதைத்து மரமாக வளர்ந்திருந்தது. உள்ளுணர்வின் கூற்று பொய்யில்லாமல் போயிற்று. முழங்கால் அளவு தண்ணிரில் நடந்து பெருமழையில் நினைந்து ஒதுங்ககூட மனமில்லாமல் கால்போனபோக்கில் மலையில் நினைந்து திறிய மயக்கம் தெளிய சன்னலோரத்தில் அமர்ந்து கற்பனையில் பயணித்தேன்.

காலங்கள் ஓட துரத்தலின் வேகம் குறைய கனவுகளைந்து பைத்தியமாகவேமாறி தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறது துரத்தலின் நினைவுகள்.

*

16 comments:

லோகு said...

இதுல ஏதோ பெரிய விஷயம் இருக்கு.. எனக்கு தான் புரியலை..

☀நான் ஆதவன்☀ said...

!@#$%^&*()*&^%$#$%%^&*@@###

அ.மு.செய்யது said...

பின்நவீனத்துவமா பாஸ் !!!!! தல சுத்திருச்சி !!!!

நல்லா எழுதியிருக்கீங்க...

ஸ்வாமி ஓம்கார் said...

நாங்க போடவேண்டிய பின்னூட்டத்தை நீங்களே லேபிளில் போட்டா அப்புறம் நாங்க என்னத்த பின்னூட்டமா போட? :)

அறிவிலி said...

வேணாம்... அழுதுருவேன்...
அவ்வ்வ்வ்வ்வ்.....

வினோத் கெளதம் said...

மச்சி நல்லா எழுதி இருக்க டா.. ஆனா என்ன மேட்டர்..

கலையரசன்.. said...

புரியலை பாஸ்..! எனக்கு புரியும்படி எழுதுங்கள் பித்தன்ஜி..

சாரி! ஞானசூன்ய பித்தன்ஜி!!

வால்பையன் said...

நீங்க இப்போ எங்களை துரத்துறிங்க!
நாங்க எங்க போக!

பீர் | Peer said...

பேர் மாத்தினப்பவே சந்தேகம் வந்தது. :(

முகவை மைந்தன் said...

//பின்னிரவில் தகவமைத்துப் பார்//
தளை தட்டிருச்சு. மாலைல திருத்திப் போடுறேன்.

ஜெகதீசன் said...

என்ன கொடுமை ராம் இது.....
இது கலவர பூமி... இங்கயெல்லாம் வந்து வெண்பா எழுதக்கூடாது...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அண்ணே, உண்மையிலேயே நீங்க ஞானப்பித்தன் தான் :)

குடுகுடுப்பை said...

நானும் இரண்டு முறை படித்தேன் ஒரு மண்ணும் புரியல. ஏதோ தெய்வீக சக்தி பின்னாடி இருக்கு

தமிழ் நாடன் said...

மெய்யாலுமே ஞானம் வந்துட்டதா சாமி?

S.A. நவாஸுதீன் said...

துரத்தலின் நினைவுகள் துரத்துகின்றன. ஆனாலும் பிடிபடவில்லை

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

முதல் வரி!

முத்த மிழ் அறிஞரை ஞாபகப் படித்திடுச்சு!

சபாஷ்! பொழச்சுக்குவேள்!