நானும் ஒரு "கவிதை" எழுதிகீறேன்...

*

***^*^*^***

அந்திசாயும் பொழுது
நடக்கதொடங்கினேன்
கால்கள்போன பாதையில்
கடந்து சென்றேன்
147 எழுதிருந்த
பேருந்து வந்தது,
ஏறி இசிலிங்க் அட்டையை
காட்டினேன்.
பேருந்தில்
கீழே அமர பிடிக்காததால்
படியேறி முதல்தளம்
சென்றேன்.
சன்னலோரத்தில் தலைசாய்த்து
ஒரு கண்ணால் சன்னல்பக்கம்
பார்த்துக்கொண்டே சென்றேன்
கவனம் எங்கு சென்றது என்று
தெரியவில்லை.
நீண்ட நேரத்திற்குப்பின்
நினைவு திரும்ப
கீழே இறங்கி இசிலிங்க் அட்டையை
காட்டினேன்
அடுத்த நிறுத்தத்தில் இறங்கினேன்
சிராங்கூன் என்று
எழுதிருந்தது
எதற்கு இங்கு வந்தேன் ?
யோசித்துகொண்டிருக்கிறேன்....***=*=*=***

கவிதையான்னு சந்தேக(படு)ரவங்க லேபிளை பார்க்கவும்...

கவிதை எங்கே என்று தேடுபவர்களும் லேபிளை பார்க்கவும்...

*

எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை

*வித்துக்களை தேடி...

*
துடிப்பு இருபதுமுறை அதிகரிக்கும் ஈர்ப்பின் அருகினில் செல்ல, தொலைத்த தூக்கத்தின் மூலம் இதுவென்று கைகொட்டி சிரிக்கும் கனவின் எச்சங்கள். திரும்பி எங்கோ நோக்க எண்ணங்களின் பாசமழையில் எண்ணங்கள் சிதறிசெல்ல விண்வெளியில் விளையாடிவிட்டு வெகுநேரம் சென்று வீடுதிரும்பி வெரும்நாளில் விழாக்கோலம் பூண்டிருப்பேன். ஓசை மெல்லகேட்டு உலகில் சிறந்தவன் என்று உள்ளம் பூரித்துக்கொள்ளும் உலகை மறந்திருக்கும். அந்தி சாயும் பொழுது ஆதவன் கரைகையிலே வண்ணங்கள் சிதறடித்து கீழ்வானம் சிவந்திருக்கும் எதிர் திசையில் நிலவிருக்கும் என் எண்ணம் இரண்டிற்கும் நடுவிலிருக்கும். சன்னல் கண்ணாடியின் உடைந்த பாகத்தில் பிரகாசிக்கும் நிலவின் ஒளியை பார்க்க நித்தம் ஏங்கும்.

நிறுத்தத்தில் நிற்க, நித்திரையில் நிகழ்த்தியதை நேரில் காண நெஞ்சம் துடித்துபோகும் அடுத்தடுத்து நிகழ்வுகள் திசைமாறி செல்கையில். நிலவொளியில் நீரில் நிலவின்முகம் பார்க்க நின்றுபோகும், துடிக்கும் இதயம். காசில்லை நான் செல்ல கடன்கொடுப்பர் எங்கோ செல்ல வெறுப்பின் உச்சத்தில் விலகிநின்றேன் ஒரு நாள். புகைமருந்தெடுத்தும் புண்ணாறவில்லை.

விதி விளையாட தொடங்கி எதிர்த்திசையில் நடைபழக இமைதிரை விழாது கருவிழிக்கு உதவிசெய்ய, வட்டமிட்டு கடந்து சென்று வாகனத்தில் நான் பறந்து கனவுகைற்றை பிடித்து வானத்தில் நான்யேற தேவதைகள் மலர்தூவி கனவுகள் ஆசிபெற இரண்டுநாட்கள் பிறகு கனவுபோதை தெளிவுற்று பூலோகம் நானும் வந்தேன். வினைதீர்க்கும் திருவுச்சியில் வினைவிதைத்து விதி செல்ல வினைதுடைத்து நானும் சென்றேன், மெய்யோ பொய்யோ என்று இருவிழிகள் என்னிடம் சொல்ல செய்தியை செல்லா காசாக்கியது எந்தன் மனது.

ஆதவனை எழுப்பிவிட அவனே ஆச்சரியப்பட புத்தாடை உடுத்தி பரவசத்துடன் நானிருக்க பாழாய் போனது கனவுகள், கவிதையை தேடி கால்கடுக்க நான் நடக்க மழையில் நினைந்த சுவடு கூட தெரியாமல் தவித்து மாவின் ஆணைப்படி சாலையில் நான்னின்றேன். ஆதவனுக்கு விடைகொடுக்க வருத்தத்துடன் சென்றுவிட்டான் பல்லாயிரம் நட்சத்திரங்களை கொடுத்துவிட்டு. மனதுக்குள் மாற்றம் வர மின்னல் ஒளியில் மழையின் நடுவில் வானிலிருந்து இறங்கிவந்தால் வெள்ளையுடையில் ஓர் தேவதை நிலவை பூர்விகமாக கொண்டு இறகை விறித்து பறப்பவள் இவள்தானோ என்று கனவுபோதையிலும் கருத்துக்கள் சொன்னது இந்த மனது. வரம் கேட்க வழிகிடைத்தும் வாங்கா மனம்படைத்து வீதியினில் ஆடி நின்றேன்.

சிவந்த விழிகளில் சிலதுளி நீரை பொறுக்காது, கரைதலை நிறுத்தி காத்திட உதவுவீர் என்று விளம்பரபலகையை அடித்தது விழியிரண்டும். சரி என்ற செய்தி சாதனை நான் புரிந்ததாக நித்திரையில் மூழ்கடித்து என் சிந்தனையை சிதைத்திருக்க, கண்ணாடி சட்டத்தில் கண்ணிரண்டை நான் காண இதய ஆணைப்படி என் விழிக்கு இரு சட்டங்கள். தவறாய் வந்த தகவல் விளையாட்டை நம்பி இருவாரம் இமை இறுக எங்கோ சென்றிருந்த நினைவுகளை மீட்டுவந்தேன்.

வெகுநாட்களுக்கு பின் திருநாள் நிகழும், சிந்தை சிறகடித்துக்கொண்டே சிக்கி தவிக்கும் நிகழ்வை பற்றி விணவ பதில் இராது, பசுமை போர்த்திய நிகழ்வுகளை சுமந்து பாரினில் உலாவருகிறது நினைவுகள். நினைவுகளுக்கு வேலிபோட வேந்தனாலும் முடியாது வேடிக்கை பார்ப்பதே உத்தமம். வித்துகளை தேடி புறப்படும் நினைவுகளுக்கு நீண்ட இரவுகள் துணைநிற்கும்.
.
ஒரு கட்டத்திற்குமேல் ஒன்றும் புலப்படாது, உறங்கவும் தனியே விடாது வேதனை சூழ்ந்துகொண்டு விரக்தியில் குளிக்கவைக்கும். ஈர விழிகளுக்கு நிலவும் குளம்பியும் துணையிருக்கும்.

தேவதையை கேட்பேன்

*

மின்னலின் ஒளியில்
நிலவின் முகம் பார்த்ததுண்டு
நினைந்துகொண்டே மலையில்
நீண்ட பயணம் சென்றதுண்டு
நீண்ட இரவுகள்
நெடுநாள் கண்டதுண்டு
தனிமையில் பேசிய
நாட்களுண்டு
நினைத்தாலே இனிக்கும்
நிகழ்வுகளும் உண்டு
காரணமில்லாமல்
கண்ணீரும் வந்ததுண்டு
கவிதை எழுத
முயற்சித்த காலமும் உண்டு
கானல்நீரான
கனவுகள் பலவும்உண்டு
தேடலின் காரணமாக சில
தெளிவில்லா தெளிவுகளும் உண்டு
நான் நானாகயிருந்த
நாட்களும் உண்டு
இந்த நிலையும் மாறும்
என்பதில் நம்பிக்கையுண்டு
உலகை நேசிக்கும்
மனமும்முண்டு
உலகில் என்னை நேசிக்கும்
மனங்களும் உண்டு
இனி உன்னிடம் யாசிக்க
என்ன உண்டு ?


தொடர்பதிவுக்கு அழைத்த தமிழ் நாடன் அவர்களுக்கு நன்றி !