நானும் ஒரு "கவிதை" எழுதிகீறேன்...

*

***^*^*^***

அந்திசாயும் பொழுது
நடக்கதொடங்கினேன்
கால்கள்போன பாதையில்
கடந்து சென்றேன்
147 எழுதிருந்த
பேருந்து வந்தது,
ஏறி இசிலிங்க் அட்டையை
காட்டினேன்.
பேருந்தில்
கீழே அமர பிடிக்காததால்
படியேறி முதல்தளம்
சென்றேன்.
சன்னலோரத்தில் தலைசாய்த்து
ஒரு கண்ணால் சன்னல்பக்கம்
பார்த்துக்கொண்டே சென்றேன்
கவனம் எங்கு சென்றது என்று
தெரியவில்லை.
நீண்ட நேரத்திற்குப்பின்
நினைவு திரும்ப
கீழே இறங்கி இசிலிங்க் அட்டையை
காட்டினேன்
அடுத்த நிறுத்தத்தில் இறங்கினேன்
சிராங்கூன் என்று
எழுதிருந்தது
எதற்கு இங்கு வந்தேன் ?
யோசித்துகொண்டிருக்கிறேன்....



***=*=*=***

கவிதையான்னு சந்தேக(படு)ரவங்க லேபிளை பார்க்கவும்...

கவிதை எங்கே என்று தேடுபவர்களும் லேபிளை பார்க்கவும்...

*

23 comments:

அப்பாவி முரு said...

என் இனமடா நீ!!!

முகவை மைந்தன் said...

கடவுள் தம்பி நீலாம்!

முகவை மைந்தன் said...

என்ன இனமடா நீ!!!

பீர் | Peer said...

டிஸ்கி சூப்பர்.

பீர் | Peer said...

ம்.. சொல்ல மறந்துட்டேன். உள் குத்தெல்லாம் ஒண்ணும் இல்லை (அல்லது தெரியவில்லை) ;)

வினோத் கெளதம் said...

டேய்..:))

முகவை மைந்தன் said...

பால்ராஜ் அண்ணே, கொள்ளலாம், கொல்லாது விடுங்க. நம்ம இளவல்ணே!

வால்பையன் said...

டிஸ்கியால் தப்பிச்சிங்க!

அ.மு.செய்யது said...

ர‌த்த‌ வெறி !!!! இன்னும் உங்க‌ கிட்ட‌ர்ந்து நிறைய‌ எதிர்ப்பாக்குறோம் !!!

இன்னும் போர்ஸா !!!

அறிவிலி said...

என்ன கொடும இது?

பித்தனின் வாக்கு said...

நல்லவேளை, பஸ்ஸிக்கு ஒன்னும் ஆகலையே, இல்லை அதுவும் எங்க போறம்னு தெரியாம போயிடுச்சா?. பாதை மாறிய பயணங்கள் அல்லது தடம் புரண்ட இலக்குகள் அப்படினு பெயர் வைக்கலாமா?

முனைவர்.இரா.குணசீலன் said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு said...

ஏலே பாண்டி எடுலே அந்த வீச்சரிவா, இங்கன ஒரு மக்கா ரவுசு பண்ணிக்கிடக்கு, பொலிபோடுவேம்.

மதிபாலா said...

ஆனா செம உள்குத்துபா...

நா இனிமே கவிதென்னு எதையாச்சும் எழுதி லேபிள்ல கூட கவிதென்னு போட மாட்டேன் ஆமா!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

முடியல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

D.R.Ashok said...

எதுவும் சொல்லாமல் சொல்லி போகிறது கவிதை.

காதல், கடமை, வேற ஏதோன்னு கருத்து சொல்லி உயிர வாங்காததனால

பிடிச்சுருக்குங்க..

வேடிக்கை மனிதன் said...

அடடா என்ன கவிதை, தன்னிலை மறந்தேன்;)

வேடிக்கை மனிதன் said...

அடடா! என்ன ஒரு கவிதை, தன்னிலை மறந்தேன்

வானம்பாடிகள் said...

=)). அட எஞ்சாமி. இம்புட்டு குசும்பு புடிச்ச ஆளா நீங்க?

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி சரவணன்

நன்றி வானம்பாடிகள்

பித்தனின் வாக்கு said...

நண்பரே நான் தங்களுக்கு பயணக் கட்டுரைகளுக்காக ஒரு விருதினைக் கொடுத்துள்ளேன். அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும், நன்றி.

பிரியமுடன் பிரபு said...

நானெல்லாம் இதைத்தான் கவிதைனு சொல்லுவேன்
அழகா இருக்கு வெற்றி
தொடர்ந்து எழுதுங்க

கொலைமிரட்டலுக்கு எல்லாம் பயப்பட பிடாது

ஆ.ஞானசேகரன் said...

அட அடேய்ய்ய்ய்ய்