தேவதையை கேட்பேன்

*

மின்னலின் ஒளியில்
நிலவின் முகம் பார்த்ததுண்டு
நினைந்துகொண்டே மலையில்
நீண்ட பயணம் சென்றதுண்டு
நீண்ட இரவுகள்
நெடுநாள் கண்டதுண்டு
தனிமையில் பேசிய
நாட்களுண்டு
நினைத்தாலே இனிக்கும்
நிகழ்வுகளும் உண்டு
காரணமில்லாமல்
கண்ணீரும் வந்ததுண்டு
கவிதை எழுத
முயற்சித்த காலமும் உண்டு
கானல்நீரான
கனவுகள் பலவும்உண்டு
தேடலின் காரணமாக சில
தெளிவில்லா தெளிவுகளும் உண்டு
நான் நானாகயிருந்த
நாட்களும் உண்டு
இந்த நிலையும் மாறும்
என்பதில் நம்பிக்கையுண்டு
உலகை நேசிக்கும்
மனமும்முண்டு
உலகில் என்னை நேசிக்கும்
மனங்களும் உண்டு
இனி உன்னிடம் யாசிக்க
என்ன உண்டு ?


தொடர்பதிவுக்கு அழைத்த தமிழ் நாடன் அவர்களுக்கு நன்றி !

9 comments:

அப்பாவி முரு said...

எளிமையான உண்மைகள்...

தொடர்பதிவுக்கு அழைக்காததற்கு நன்றிகள்.

தமிழ் நாடன் said...

இவ்ளோ பெரிய மனசா நைனா உங்களுக்கு?

ரொம்ப ரசித்தேன்!

பித்தனின் வாக்கு said...

நல்ல கவிதை, நிறைய உண்டு, ஆனாலும் யாசிக்க சுவாசிக்க, களிக்க ஒரு துணை தேவைதானே.

கவிதையில் ஒரு சிறு நெருடல், ஆனாலும் குறை இல்லை. அது எதுக்கு மின்னலின் ஒளியில் நிலவின் முகம் பாக்குறிங்க. நிலா ஒளியில் பாக்கலாமே. அது காதலியின் முகமானால் அதை இன்னும் கொஞ்சம் புரியும்படி தெளிவுபடுத்தலாம்.

ஸ்வாமி ஓம்கார் said...

//கவிதை எழுத
முயற்சித்த காலமும் உண்டு//

அப்போ இப்ப....? :)

S.A. நவாஸுதீன் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு.

கண்ணீர் என்றாலும், ரேவதி அழுவது போல் கீச் கீச் ஒப்பாரி இல்லாமல் சுகாசினியின் அழுகை மாதிரி அழுத்தம் அதிகம். கவிதையும் அப்படித்தான்.

மணிஜீ...... said...

தேவதை வரம் அருளட்டும்

KISHORE said...

நல்லா இருக்கே..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அவ்வ்வ்வ்வ்!

யாரது...!

கோவி.கண்ணன் said...

//அப்பாவி முரு said...
எளிமையான உண்மைகள்...

தொடர்பதிவுக்கு அழைக்காததற்கு நன்றிகள்.
//
ரிப்பிட்டு