எளியவழியில் ஞானம் பெற....

^

"ஷிம்ஹோ சிஸா சஷ்ச்தத்தா ஷம்னா
சிரிஷ்ஷச்த்த சின்ஷியாரி ஷய் ஷக்தே"

ஞானம் என்றால் என்ன என்று நீங்கள் தெரிந்துக்கொண்டால்தானே. ஞானத்தின் இன்பத்தை அனுபவிக்கமுடியும்,
ஞான அனுபவம் பற்றி பலர் பலவிதமாக கூறுகின்றனர் நான் ஞானம் பெற்றகதையை உங்களுக்கு கூறலாம் ஆனால் உங்களுக்கு எப்படி புரியும், நீங்கள் அறிவாளிகள், ஆறறிவுள்ளவர்கள் என்று எண்ணிக்கொள்ளலாம், ஆனால் அது அனைத்தும் நீங்களாகவே கற்றது கிடையாது அனைத்தும் கற்பிக்கபட்டவையே, தேனின் சுவை இப்படித்தான் இருக்கும் என்று ஒருவருக்கு மிகச்சரியாக கூறிவிடமுடியாது, எப்படி கூறினாலும் அவர் தேனை சுவைக்கும்போளுது வேறு விதமான சுவையை உணர்ந்ததாகத்தான் கூறுவார், ஆனால் ஏற்கனவே தேன் குடித்தவரிடம் தேனின் சுவை இப்படித்தான் இருக்கும் என்று கூறினால் அவரும் ஏற்றுக்கொள்வார்.

ஆகா ஞானம் அடைந்தவர்களை ஞானமடைந்தவர்களால் தான் உணரமுடியும் மற்றவர்கள் என்ன முயற்சி செய்தாலும் தவறாகத்தான் விடை கிடைக்கும், ஞானமடைந்தவன் என்று கூறிக்கொள்பவர்கள் பலரும் பலவிதமாக ஞானத்தை பற்றி பரப்பிவருகிறார்கள். ஞானத்தை இமையமலை சாரலில் தோண்டி எடுத்துக்கொண்டு அதன் சூடு குறைவதற்குள்ளே அடுத்த விமனத்தை பிடித்து அமெரிக்கா சென்று, முணியாண்டி விலாஸ் போல கடைபரப்பி அனைத்து வகை ஞானங்களையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கிறார்கள், சில நாட்களிலேயே ஞானத்தின் தயவால் பல ஏக்கர் ஆசிரமம். பலமாநிலங்களில் ஆசிரமம் என்று அமெரிக்க வாழ்க்கை, கடவுளை விடுத்து அன்பை விதை அல்லது கடவுளும் அன்பும் ஒன்றே, இதுதான் ஞானத்தின் மூலதன பொருளாக விற்க்கபடுவது, ஆனால் ஞானத்தை கொண்டுவந்தவரின் புகைப்படமும், அவர் ஆசணினி புகைப்படமும் கடவுளாக பாவிப்பதை ஞானம் தடுக்காது மாறாக ஏற்றுக்கொண்டு உற்சாகப்படுத்தும்.

இமையமலை சாரல்களிலும், பாரத தேசத்திலும் (?), பரதேசி போல பல வித்தைகளை கற்றுக்கொண்டு சுற்றித்திறியும் ஆசான்கள் தங்கள் சீடர்களை அமெரிக்கா அல்லது ஐரோப்பாவுக்கு மட்டும் அனுப்பிவைப்பார்கள், எல்லா சீடர்களும் தங்கள் ஆசான் சொல்வதாலே செல்கிறேன் என்று கூறுவது ஞானத்தின் பக்கவிளைவு, எதாவது வேதத்தில் மேற்கில்தான் செல்லவேண்டும் என்று கூறுகிறார்களோ என்னவோ ?, ஆபிரிக்க நாடுகளுக்கு அல்லது பொருளாதரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கோ அவர்கள் செல்லக்கூடாது என்று ஆசான்கள் மௌனத்தால் சொல்ல சீடர்கள் கவனமாக குறிப்பெடுத்துக்கொள்வார்கள் (ஓரிருவரைத்தவிர), தொடக்கத்தில் பிச்சைகாரன் போல காட்சியளிப்பவர்கள் , செருப்பில்லாமல் நடப்பவர்கள், எளிமையை கொள்கையாக கொண்டவர்கள் பிற்காலத்தில் பி.எம்.டபள்யு வண்டி, உயர் தர விமானத்தில் முதல் வகுப்பில் தான் செல்லவேண்டும் என்று தாங்கள் பெற்ற ஞானம் கட்டளையிடுவது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். கடவுளை பற்றிய கேள்விகளுக்கு சாதுரியமாக பதில் சொல்லி தங்களையே கடவுளாக (மறைமுகமாக ) தரிசிக்கவைப்பது ஞானத்தின் இரண்டாம் நிலை.

தாங்களாகவே வடிவமைத்த யோக செய்முறையை (ப்ராடைக்ட்) மக்களுக்கு பரப்புவதே இவர்கள் பெற்ற(?) ஞானத்தின் குறிக்கோள், ஏழைகளுக்கு ஞானத்தின் பாதையில் கூட இடம் கிடைப்பது குறைவுதான், டாலர்கள், ஈரோக்கள் மாதாம் மாதம் காட்டும் பொழுதுதான் ஞானத்தின் பாதை வாழ்வின் இறுதிவரை கிடைக்கும் ( ஞானம் கிடைக்காது என்பது வேறு விசயம்), பொருளாதரத்தை நோக்கி ஓடும் அவசர வாழ்வில் மனவழுத்தம் என்பதுதவிர்க்கமுடியாத ஒன்று, அதை தவிர்ப்பதுக்காக/குறைப்பதற்காக சந்தையில் கிடைக்கும் யோக ப்ராடைட்டுகளை நம்பி மக்கள் செல்லவேண்டி உள்ளது. ப்ராடைக்ட் வேலை செய்யும் பொழுது ப்ரடைக்டை விற்பவர் கடவுளாகிறார், ப்ரடைக்டுகள் வேலைசெய்வதை ஆயிரம் பக்கத்தில் இந்த ஆசான்கள் விளக்கினாலும் அதன் அடிப்படை தத்துவம் ஒன்றுதான் அது "நம்பிக்கை".

காவியுடையில் முதல் வரியில் எழுதிருப்பது போல புரியாத(புரியாத மொழியில் ) அல்லது வெகு சிலருக்கே புரியும் வசனங்களை பேசி கைவிரல்களை ஒருதினுசாக வளைத்து விரல் நாட்டியம் ஒரு நிமிடம் நடத்திவிட்டு, நான் எப்படி ஞானம் அடைந்தேன் என்று தன் இமையமலை வரலாறை அல்லது ஏதாவது மலையில் வாழ்ந்த வரலாறை கூறி தானும் இந்த உலகமும் வேறல்ல என்ற நிகழ்வை(?) கூறும்பொழுதே மக்களுக்கு பாதிக்கு மேல் நம்பிக்கை வந்துவிடும், அவர் மகானாக பார்க்கபடுவார், பிறகு அவர் வாக்கே வேதமாகும், இப்பொழுது அவர் ப்ராடைக்டை அவர்கள் முழு மனதுடன்/ நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு பயிற்சி செய்யும் பொழுது அது வேலை செய்வதாக தோன்றும், வேலைசெய்வது நம் நம்பிக்கைதான். பலரும் அவரது மனபாரத்தை இறக்கிவைக்கத்தான் நேரம்/ஆள் தேடுகின்றனர். அதற்க்கு இந்த ஆசான்கள் கிடைக்க அவர்கள் மீது பாரத்தை இறக்கிவைத்துவிட்டு (எண்ணத்தால் இறக்கிவைத்துவிட்டு) மனம் லேசாக உணர்கின்றனர். மனமே அனைத்துக்கும் காரணி என்று உணருபவர்களுக்கு எந்த ஊன்றுகோலோ அல்லது பிடிமானமோ தேவைப்படாது. அதாவது இந்தவகை ப்ராடைக்டுகள் அல்லது ஆசான்கள் தேவைபடாது.

கடவுள் படத்துக்கு பதிலாக தன் படத்தையோ அல்லது தன் முன்னோர் படத்தையோ வைத்து வழிபட்டாலும் ஒரே விளைவைத்தான் கொடுக்கும் என்ற எண்ணம் மனதில் தோன்றினாலே உங்கள் மனதின் மறுப்பக்கம் தெரிய ஆரம்பிக்கும், சந்தையில் கிடைக்கும் யோகவகை ப்ராடைக்ட்டுகளை உபயோகிப்பதும் உபயோகிக்காமல் இருப்பதும் அவர் அவர் விருப்பம்,

ஞானம் அடைந்தேன் என்று கூறியவர்கள் அன்பைத்தவிர வேறு ஏதும் சொன்னதாக தெரியவில்லை.

குறிப்பு :

(அ) இந்த பதிவு கார்பரேட் யோக சாமியார்களுக்கு மட்டும் பொருந்தும்.

(ஆ) தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள இரண்டு வரிகள் (புரியாத) மகான் ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள் அருளிய பித்தபுரானத்திலிருந்து எடுக்கப்பட்டது.

(இ) தந்திரம் கற்கவேண்டும் (மோதிரம் எடுப்பது, கையிலிருந்து விபூதி வரவழைப்பது, நாக்கிலிருந்து லிங்கம்) என்று விருப்பபடுபவர்கள் மூன்று , ஆறுமாத டிப்ளமோ கோர்ஸ் சேரலாம்.

10 comments:

ஜெகதீசன் said...

ஞானம் பெற்றவங்க இப்படித்தான் எல்லாப் பதிவுகளையும் பார்த்து சும்மா வெறும் ஸ்மைலி மட்டும் போட்டுட்டுப் போவாங்களாம்.... அதான் நானும்...

கோவி.கண்ணன் said...

:) தம்பி ஆன்கால் (வேலை) பார்கிறதுக்கு பதிலாக உத்தி தெரிஞ்ச நீ சாமியார் ஆகி இருந்தால் கோடிகளில் புரளலாம். காஸ்ட்லி காரில் பவனி வரலாம்

அரவிந்த் said...

நீவீர் உயரிய ஞானத்தை ”அடைந்து” விட்டீர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. விரைவில் லண்டன், யூ.எஸ் ”ஸ்பிர்ட்சுவல் டூர்” செல்ல தயாராக இருக்கவும். :-)

வானம்பாடிகள் said...

நானு நானு. :))

அப்பாவி முரு said...

அய்யர் தி கிரேட்...

வினோத் கெளதம் said...

டேய்..நீ சொல்லுறது சரி தான்..காசு மட்டும் தான் அவங்க நோக்கம் என்பதைபோல் தான் பெரும்பாலும் செயல்ப்படுகின்ற்றனர்..
ஏன் அவர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்ப்பாராமல் எளியவர்கள் வாழ்கையை மேம்ப்படுத்த வேண்டியது தானே..
ஆதங்கம் சரியானது தான்..

வால்பையன் said...

//"ஷிம்ஹோ சிஸா சஷ்ச்தத்தா ஷம்னா
சிரிஷ்ஷச்த்த சின்ஷியாரி ஷய் ஷக்தே"//


எதுக்கு தல ஆரம்பத்துலயே திட்டுறிங்க!

வால்பையன் said...

//தந்திரம் கற்கவேண்டும் (மோதிரம் எடுப்பது, கையிலிருந்து விபூதி வரவழைப்பது, நாக்கிலிருந்து லிங்கம்) என்று விருப்பபடுபவர்கள் மூன்று , ஆறுமாத டிப்ளமோ கோர்ஸ் சேரலாம்.//

அதற்கு கூலியா உங்களுக்கு எம்புட்டு ஞானம் வேண்டும்!

goma said...

ஆசையே துன்பத்துக் காரணம்...என்ற புத்தர் ஒரு ஞானி.அப்படி யென்றால்வாழ்க்கையில் துன்பம் நுழையும், ஆசை என்ற வாசலை அடைப்பதுதான் ஞானமா

ரோஸ்விக் said...

ஞானப் பித்தன்-ங்கிற பேறு சரியாத்தான்யா இருக்கு. சிலர் கல்லை காட்டி கடவுளென்பர்... சிலர் கையைக்காட்டி கடவுளென்பர்.... இன்னும் சிலர் வித்தை காட்டி கடவுளென்பர். இதிலிருந்து புரியவில்லையா கடவுளுக்கு பல உருவம் உண்டு என்று ? ! :-)))

அந்த ப்ரொடக்ட் சேல்ஸ் ஆபீசர் வேலை கெடைக்குமா தல. பயபுள்ள டேட்டா அனுப்பி வைக்கிறேன். :-)