என் தேவதை

*

பேரூந்து டோல்கேட்டை கடக்கும்பொழுது பெரும்பாலான பயணிகள் இறங்கிருந்தனர், வெளியே பார்த்துக்கொண்டே மிக வேகமாக குறுஞ்செய்தியை கைபேசியில் இருந்து அனுப்பிக்கொண்டிருந்தாள் பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருந்த பெண், அவள் விரலின் வேகத்திற்கு கைபேசி விசைகள் ஈடுகொடுக்கமுடியாததால் எங்கோ பார்த்துக்கொண்டே செய்தியை அடித்துக்கொண்டிருந்தாள் அந்த வேகமே அவள் கல்லூரி மாணவி என்று உறுதிசெய்ய போதுமானதாக இருந்தது . அவளுக்கு இரண்டு இருக்கைகளுக்கு முன்பு பச்சை வண்ணத்தில் உடையணிந்திருந்த காதலர்கள் இருபது வயதுகூட கடந்திருக்காது இருவருக்கும். காதலன் மட்டும் முன்னிருக்கை கம்பியை பிடித்து தலையை குனிந்துகொண்டிருந்தான் அவனுக்கு தெரிந்தவர் அந்த நிறுத்தத்தில் ஏறிவிட்டார் போல.

வண்டி பாலத்தை கடக்கும்பொழுது திருவரங்க இராசகோபுரம் தெரிய அதை பார்த்துக்கொண்டே இருந்தேன் பசுமையான மரங்களுக்கு நடுவில் இராசகோபுரத்தின் மேல்பகுதி தெரிய என் முகத்தில் சிறு புன்னகை , உடலில் சிறு அதிர்வு , காரணம் தெரியவில்லை பிறகு தெரிந்தது என்னருகில் வானிலிருந்து வெள்ளையுடையில் தேவதை வந்தமர்ந்திருந்தாள் திருவானைக்கோவில் கோபுரத்தை பார்த்துவிட்டு திரும்பும்பொழுதுதான் அவள் இருப்பை உணரமுடிந்தது. வெங்கடேசா திரையரங்கை கடக்கும் பொழுது அவள் என்னை முழுவதுமாக ஈர்த்திருந்தாள். திருவானைக்கோவிலை கடந்து ஒரு சிறு பாலத்தின் மீது செல்லும்பொழுது பாலத்தின் கீழ் தொடரூந்து சென்றுக்கொண்டிருந்தது, தொடரூந்து எழுப்பும் ஒலியை இசையாக பாவிக்கும் மனநிலையில் இருந்தேன். மாம்பழச்சாலை சிக்னலில் வண்டி நிற்க, திருவரங்கம் செல்லும் சாலை முகப்பில் ஒரு மரத்தின்கீழ் உள்ளங்கை வியர்வையால் ஈரமான அட்டையின் நடுவில் சொருகப்பட்ட ரோசாவோடு நின்றுகொண்டிருந்தான் ஒரு இளைஞன். காதலை சொல்ல தேதிகுறித்துவிட்டான் போலும், சிகப்பு விளக்கிலிருந்து பச்சைக்கு மாற்றப்பட்ட பின்னும் வண்டி நகரவில்லை, வாகன நெரிசல், வண்டியில் இருந்த சிலர் செவிகளை மூடிக்கொண்டனர் பலரும் விருப்பமில்லாமல் வண்டியில் அமர்ந்திருந்தனர் அதற்க்கு காரணம் வாகனங்களில் ஒலியாக இருக்கலாம், ஆனால் எனக்கு என் இதயம் துடிக்கும் ஒலிய்யத்தவிர வேறு எதுவம் கேக்கவில்லை. மீண்டும் என் பார்வை திருவரங்க சாலையை நோக்கி திரும்பியது.

இரண்டு மூன்று பெண்கள் அவனை கடக்கும் பொழுது ஈரமான அட்டையையும் அதனுள் இருந்த ரோசவயையும் தன் முதுகுக்கு பின்னால் மறைத்துக்கொண்டான். அவர்கள் அவனைக்கடந்த பிறகு ஒரு காலால் தரையை உதைத்துவிட்டு இரண்டு அடி பின்னல் நடந்து கடை படிக்கட்டில் தலையில் கையை வைத்து குனிந்துக்கொண்டான். மூன்று பெண்களும் முக்கியசாலையின் வலது பக்கத்தில் திரும்பியவுடன் நடுவில் இருந்தவளிடம் மற்றவர்கள் ஏதோ சொல்ல வெட்கமும் கோபமும் கலந்து பதில் கூறிக்கொண்டிருந்தாள். வண்டி நகர விழித்திரையில் இருந்து திருவரங்கம் சாலை மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன் மரத்தடியில் தலையில் வைத்தக்கை எடுக்காமல் அப்படியே அதே படிக்கட்டில் அமர்ந்திருந்தான் அந்த இளைஞன், என்னருகில் இருந்த தேவதை அந்த சாலையில் என்னைநோக்கி நடந்து வந்துக்கொண்டிருந்தாள், திரும்பி என்னிருக்கைக்கு அருகில் பார்க்க இங்கும் இருந்தாள்.

காவிரிப்பாலத்தில் செல்லும்பொழுது குளிர்காற்று வீசியதிலிருந்தே ஆற்றில் நீர் ஓடிக்கொண்டிருந்ததை உணரமுடிந்தது. வாகனங்களை ஓரத்தில் நிறுத்திவிட்டு நடைப்பாதையில் மக்கள் நின்றுக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் திருமணமானவர்கள் ஏன் காதலர்கள் இங்கு வருவதில்லை என்று யோசித்துக்கொண்டே திரும்ப, தாயுமானவர் கோவில் தெரிந்தது, அதன் அருகில் இருக்கும் கணேசனும் விழித்திரையில் வந்து சென்றான். அண்ணா சிலையை கடந்தபொழுது அருகிலிருந்த தேநீரகத்தில் அதிகளவில் மாணவர் கூட்டம் காணநேர்ந்தது, வண்டி சத்திரத்தில் நின்றவுடன் அனைவரும் இறங்கிவிட்ட நிலையிலும் எனக்கு இறங்க மனமில்லை. வண்டியில் நான்மட்டும் சிலநொடிகள், வண்டியை விட்டு இறங்கும்பொழுது என்னுடன் தேவதையும் இறங்கினாள்.

நேராக கால்கள் காயத்திரி தேநீரகத்துக்கு சென்றது, ஒரு காபி மட்டும் வாங்கிக்கொண்டேன், உள்ளே அதிகளவில் மாணவர்கள் இரு பிரிவை சேர்ந்தவர்கள், அதிக இரைச்சல், அதிக சிகரட்புகை இருக்கமுடியாமல் வெளியே படிக்கட்டில் நின்றுக்கொண்டு காபியை குடிக்க தொடங்கினேன் நல்லவேளை இன்று வெளியே நிற்க அனுமதி கிடைத்தது.

மெதுவாக பேருந்து நிலையத்தில் இருந்து வந்து கொண்டிருந்த பேரூந்தில் வேகமாக நடந்து சென்று ஏறிக்கொண்டேன் வழி கோர்ட் என்பதை மட்டும் பார்த்து ஏறிவிட்டேன், அதன் அருகில் இருந்த அமெரிக்கன் மருத்துவமனையை பார்க்கவில்லை, வண்டி ஜோசப் கல்லூரி வாயிலை கடக்கும் பொழுது தேவதை வண்டிக்கு முன்னாள் சென்றுக்கொண்டிருந்தாள். புளுதிகளுக்கு மத்தியில் தெப்பக்குளம் தெரிந்தது. தலையரன் வாயிலில் அதிக மக்கள் கூட்டம், சோபீஸ் கார்னரில் பல கல்லூரி மாணவிகள் வண்டியில் ஏற வண்ணமயமானது பேரூந்து. அவர்களுக்கு நடுவில் இன்னும் அழகாக வெள்ளையுடையில் தெரிந்தாள் என் தேவதை. ஆம் அவள் என் தேவதை என்று சொல்லும் அளவிற்கு மௌனத்தின் புரிதலில் இணைந்திருந்தோம். ஒலி மொழிகளின் புரிதலை விட மௌனத்தின் பரிமாற்றம் ஆளுமை கொண்டதாக தோன்றியது,

தில்லை மருந்து வாசனைகளை கடந்து நான்கு சாலைகளில் பச்சைவிளக்குக்காக பேரூந்து நிற்க, எஸ்.வீ.ஆர் உணவகத்தின் அருகிலிருந்து காட்சிக்கொடுத்தாள் என் தேவதை, அடுத்து மருத்துவமனை நிறுத்தத்தில் வண்டி நிற்க, முன் பக்கமாக ஒரு பெண் வண்டியில் அலைபேசியில் பேசிக்கொண்டே ஏறி இரண்டு பயணசீட்டுக்களை வாங்கி மீண்டும் அலைபேசியில் பேச்சை தொடர்ந்தாள், மற்றொரு பயணச்சீட்டுக்கு வண்டியின் பின்பக்கமாக ஒருவன் எறிருப்பான் என்று நினைத்து திரும்ப ஷு, சலவை செய்த சட்டை, ஜீன்ஸ், சீவிய தலைமுடியாக ஒருவன் காட்சியளித்தான், கல்லூரி படிக்கும் காதலர்களுக்கான இலக்கணம் சரியாக இருந்தது அவனிடத்தில். என் தேவதை பயணசீட்டு வாங்கிவிட்டாளா என்று அவளிடம் கேட்க, அருகில் இருந்தவன் என்னை மேலும் கீழுமாக பார்கிறான், எங்கும் எனக்கு பயணச்சீட்டு தேவையில்லை என்று கூறினாள் என் தேவதை, வயதான பாட்டி வர என் இருக்கையை அவருக்கு கொடுத்துவிட்டு தேவதையின் அருகில் நின்றுக்கொண்டேன். டேப் வளாகத்தை கடந்து வண்டி சென்றுக்கொண்டிருந்தது, என் தேவதை என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள், அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவளுக்கு ஒரு இருக்கை கிடைக்க வண்டியின் பின் பக்கம் ஒரு முறை அவள் பார்த்தாள் விழிகளின் வழியே எதோ செய்தி சென்றுக்கொண்டிருந்தது , எனக்கு பின்னாலிருந்து முன்பு பார்த்த ஷு அணிந்திருந்த கால்கள் என்னை கடந்து சென்றது, என் தேவதையிடம் பேசிக்கொண்டிருந்ததால் அவனை பார்க்கவில்லை, ஆனால் அனைவரும் ஏன் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சந்திப்பு நிறுத்தம் வந்தவுடம் என் தேவதை என்னருகில் வந்து ஒரு முறை கண்களை சிமிட்டிவிட்டு வண்டியிலிருந்து இறங்கிச்சென்று சிறிது நேரத்திலேயே மறைந்தாள். வண்டி வளைந்து செல்லும்பொழுது அருகில் இருந்த ஒரு பொது தொலைபேசி நிலையத்திலிருந்து என்னபோல ஒருவன் பேசிக்கொண்டிருந்தான், இப்பொழுது என் தேவதை காட்சிக்கொடுக்கவில்லை இதயத்துடிப்பு அதிகரிக்க அவளை கண்கள் தேடிக்கொண்டிருந்தது. அதற்க்குள் மத்திய பேரூந்து நிலையம் வந்துவிட்டது, இறங்கி என் தேவதையை தேட தொடங்கினேன், எங்கும் இல்லை, வண்டி வந்த பாதையில் நடந்து பின்னோக்கிச்சென்றேன், ஜங்சன் உள்ளே சென்று முழுவதும் தேடினேன் இதுதானே என் தேவதையை நான் தொலைத்த இடம் என்று நீண்டநேரம் தேடினேன், வெளியேற முற்ப்படும்பொழுது நடைமேடை சீட்டை இருவர் கேட்க என் ஒட்டுமொத்த கோபத்தில் பதில் அவர்களுக்கு கிடைத்தது, ஒரு தேநீரகத்தின் வாசலில் தலையிலிருந்து வரும் சிவப்பு நிற திரவத்தை தடவிக்கொண்டே எழுந்தேன் உடல் முழுவதும் சில்லென்று இருந்தது இதற்க்கு முன் இத்தனை சன்னல்கள் என் சட்டையில் இல்லையே என்ற எண்ணம் தோன்றவில்லை, தேவதையை தேடிக்கொண்டே அலைந்துக்கொண்டிருந்தேன், இறுதியில் ஜங்க்ஷன் வாசலில் கால்கள் சோர்வுற்று அமர என் சட்டையின் வண்ணம் மாறிக்கொண்டே இருந்தது என் முடிகள் இறுகிக்கொண்டே இருந்தது.

ஒருநாள் வெள்ளையுடையில் இருவர் வந்து தேவதையிடம் கூட்டிசெல்வதாக கூறினார், தேவதையும் வெள்ளையுடையில் தானே இருப்பாள் அவர்களுடன் செல்ல சம்மதித்தேன். என் நெஞ்சில் எதையோ வைத்து தேடிக்கொண்டிருந்தார் ஒருவர், காதில் இருந்து அதை கழட்டிவிட்டு நாளை தேவதையை காணலாம் இப்பொழுது சென்று ஒய்வெடு என்று கூறினார், என்னைப்போலவே அங்கிருந்த மூன்று இளைஞர்களுக்கும் வெள்ளையுடையில் இருந்தவர் கையில் எதையோ வைத்து சோதித்துக்கொண்டிருந்தார், அவர்கள் மூவரையும் எங்கோ பார்த்ததுபோலவே இருந்தது, எங்குபார்த்தேன் என்று சரியாக நினைவில்லை, அதை யோசிக்க எனக்கு நேரமும்மில்லை.

நாளை என் தேவதையை பார்க்க போகிறேன்...
முடிவெட்டி சவரம் செய்யவேண்டும்...
புதுவுடை வாங்கவேண்டும் ...
அவளை பார்க்கும்பொழுது அழாமல் இருக்கவேண்டும்...
*

15 comments:

வால்பையன் said...

மாத்திரையெல்லாம் நேரத்துக்கு சாப்பிடுங்க தல!

நாடோடி இலக்கியன் said...

அட பைத்தியக்காரா..

பித்தனின் வாக்கு said...

புனைவு என்பதால் பொறுத்துக் கொள்ளலாம். என் கனவில் தேவதைகள் மினிஸ்கர்ட்,மற்றும் ஜீன்ஸ்தான் போட்டுள்ளார்கள். நாகரீகம் வளரும் நிலையில் சென்ற நூற்றாண்டு விட்டு வரவில்லையா நீங்கள்.

கண்ணா.. said...

பாஸ் மலேசியால கீழ்பாக்கம் ஹாஸ்பிட்டல் மாதிரி ஏதாவது இருக்கும்ல ..?

குடுகுடுப்பை said...

பதிவு பெர்சு
நமக்கு ஆவாது

ஸ்வாமி ஓம்கார் said...

முடிவெட்டினதோட காரணம் தெரிஞ்சுச்சு :)

அன்பரசன் said...

லூசா

வானம்பாடிகள் said...

ம்ம்.:). நல்லாருக்கு

வெற்றி-[க்]-கதிரவன் said...

யாருக்கும் புரியல அதனால பின்னூட்டமிட்ட அனைவருக்கும் பெயில் மார்க்குதான் :(((

வெற்றி-[க்]-கதிரவன் said...

பித்தன் வாக்கு என்ன சார் ? ஐயப்பன் , பெருமாள் எல்லாம் ஜீன்ஸ் & டி.ஷர்ட்க்கா மாறிட்டாங்க ? அதே போலதான் இதுவும் :)))

ரோஸ்விக் said...

தல... நான் போன வழியெல்லாம் சொல்லி எனக்கு பழைய நினைவுகள தூண்டி விட்டுட்டீங்க. என்ன... எனக்கெல்லாம் டெய்லி ஒரு தேவதை அதே மாதிரி பஸ்சுல வந்தா.... ஆனா நான் எஸ்கேப்பு... :-))

ஜோசப் பால்ராஜ் said...

// பித்தனின் வாக்கு said...
புனைவு என்பதால் பொறுத்துக் கொள்ளலாம். என் கனவில் தேவதைகள் மினிஸ்கர்ட்,மற்றும் ஜீன்ஸ்தான் போட்டுள்ளார்கள்.//

ஆஹா, இன்னொருந்தரு கிளம்பிட்டாருய்ய்யா. எல்லாம் சரியாத்தான் பித்தன்னு பேரு வைச்சுருக்கீங்க

அரவிந்த் said...

வெற்றி,

தேடித் தேடித் தொலைத்த பொருள் எளிதில் கிடைப்பதில்லை.

தேடாமல் இருந்தால் கிடைக்கும்.

மீறித் தேடினால்....

தேடாதே... தொலைந்து போவாய்...

(இது புரியுதா மாமா...)

பித்தனின் வாக்கு said...

ஞானத்தைத் தேடிய பயணம், வெள்ளுடை தேவதைகள்(மகான் கள்), மூன்று இளைஞர்கள் (சங்கரர்,மத்தவர்,இராமானுஜர்). காணவேண்டிய தேவதை மெய்ஞானம். சரியா தலைவா.

வினோத் கெளதம் said...

மச்சி இன்னும் கொஞ்சம் அதிகமா எதிர்ப்பார்க்கிறேன்..:)