மும்பை - சென்னை - கொல்கத்தா

*

எங்கவூட்டு திண்ணைல குந்திகினிங்க
எங்காத்து விருந்தாளின்னு சொல்லிகினிங்க
எங்கூட்டு சோத்த மொதல தின்னுகினிங்க
இப்ப சப்பாத்திதான் புடிக்குதுன்னு சொல்லிகிரிங்க

கூரையபிறிச்சி மாடியாக கட்டுரனிங்க
உங்களதானே நம்பி என்கூட்ட தந்தோமுங்க
விதவிதமா கட்டி கட்டி வியக்கவச்சிங்க
வீட்டுக்குள்ள நுழையுரப்ப எட்டிவுதக்குறிங்க

எங்கூட்டு சாதிசனம் வந்துனிக்கைல
எடுபுடி வேலைக்கூட எங்களுக்கிள்ளிங்க
என்கூடுதானே என்று எதித்து கேட்டாக்க
தேசியம்ன்னு என்ன என்னம்மோ மிரட்டுறிங்க

என்கவூடு எங்களுக்குன்னு சொல்லக்கூடதாங்க ?
எந்த ஊட்ட என்கவூடுன்னு நாங்கசொல்லுரதுங்க ?
உங்கவுணவ எங்களையும் திங்கசொல்லுரிங்க
என்கவூட்டுலஇருந்துக்கினு அத இன்னாத்துக்கு திங்கோனுங்க. ?

எங்க நீங்க போனாலும் அவங்க மாறோனுமுங்க
நீங்க மட்டும் எப்பொழுதும் மாறமட்டிங்க.
நீங்க கூத்தடிச்சி எங்க கலாச்சாரத்த சிதசிடுவிங்க.
எதுத்து கேட்டா கூடிநின்னு கும்மியடிக்குரிங்க.

இப்பகூட ஒன்னும் கெட்டுப்போகலிங்க
எங்கூட்டுல நல்லா வந்து குந்திகிடுங்க
சோறு போடும் பூமி உணவ தின்னுகிடுங்க பொறவு
நீ வேற நான்வேரன்னு நினைக்கமிடமில்லிங்க.

*

6 comments:

கோவி.கண்ணன் said...

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

:)

வினோத் கெளதம் said...

சூப்பர் மச்சி.எளிமையா இருந்தாலும்..உண்மைகள் புதைந்து இருக்கு..

ஜோசப் பால்ராஜ் said...

தேசியத்துக்கு எதிராகவும், அரசியலுக்கு எதிராகவும், கழகங்களுக்கு எதிராகவும் கவிதை பாடுறது தேச துரோகம் தம்பி. பார்த்து சூதனமா அவுக போற பக்கமெல்லாம் போயி பொழைச்சுக்கிற வழியப் பாருங்க.

பிரியமுடன் பிரபு said...

தேசியத்துக்கு எதிராகவும், அரசியலுக்கு எதிராகவும், கழகங்களுக்கு எதிராகவும் கவிதை பாடுறது தேச துரோகம் தம்பி. பார்த்து சூதனமா அவுக போற பக்கமெல்லாம் போயி பொழைச்சுக்கிற வழியப் பாருங்க.
///

பெரியவுக சொல்லுரத கேட்டுகுக

பிரியமுடன் பிரபு said...

நல்லாயிருக்கு வெற்றி

பித்தனின் வாக்கு said...

நல்ல கவிதை. தேசியத்திற்கு எதிராக இல்லாமல் தேசியம் என்ற பெயரால் மனிதர்களின் மொழி மற்றும் இனவெறியைக் சுட்டி உள்ளீர்கள். எங்க்கூட்டில் வந்து சாப்பிட சொல்லும் கடைசி வரிகள்தான் நமது அடையாளம். இது மட்டும் மாறாமல் இருந்தால் போதும்.