கால்கள் போனப்பாதை

*

கால்கள் போனப்பாதையில் நடக்கையில். சொர்கத்தின் வாசலாக காண்பித்து நரகத்திற்கு வழி இருந்தது, வழி எங்கே செல்கிறது என்று பார்க்க பயணம் தொடர்ந்தது புதுவித உணர்வு புதுவித அனுபவம் சுகமாகவும் இருந்தது. சொர்க்கம் தெரிவதுபோல் கானல்நீராக தொடர்பயணம். ஒரு கட்டத்தில் பயணத்தை நிறுத்தி திரும்ப தோன்றும் மறுகணமே வேண்டாம் வந்தது வந்தாதகிவிட்டது முடிவையும் காண்போம் என்று தோன்றும். மனபோராட்டங்களுக்கு இடையில் பயணம் இனிதே தொடர்ந்தது. தொடக்கத்தில் பசுமையான தேசத்திற்குள் செல்ல. மனம் பரவசபட்டது வந்தது சரிதான் என்ற மனம் கூறிக்கொண்டது தொடர்ந்து செல்ல பசுமை சிறிது சிறிதாக மறைந்து தொடரோட்டம் போல் தோன்றியது. ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு அனுபவம் சரியோ தவறோ அனுபவம் மிஞ்சும். அனுபவத்தை வைத்து என்ன செய்வது ? மீண்டும் ஒரு பயணம் ? வேண்டாம் இதுவே போதும் இன்னும் முடிவே தெரியவில்லை இன்னும் இந்த உடலில் உள்ளத்தில் உந்துதல் இருக்கும் வரை தொடரட்டும் என்று தொடர்ந்தது.

முடிவரியா பயணம் தொடங்கி முடிவை முடிவுசெய்து பிறகு தவறென திருத்தி எழுதி இந்த பயணம் தொடர்கிறது. எதற்க்காக இந்த பயணம் ? எதோ தோனிற்று தொடங்கினேன் இதோ செல்கிறது, முடிவு செய்து தொடங்கவில்லை ஆனால் முடிவு தெரிந்து தொடர்ந்தேன். பயனற்ற பயணத்தில் பயண நேரம் வீணோ என்று தோன்றவில்லை. உண்மையான வாழ்க்கையை சந்திக்க முன்கூட்டியே தனிவகுப்பாக அந்த பயணம், மழைக்காலத்து நடுநிசி பயணம், இதமான குளிர் ஒரு தேநீருக்காக ஏங்கியது. தொடர்ந்தது சிலகாலம், வானிலை மாற்றத்தில் தொலைந்தது பொருள், உணர்வற்ற தேநீர் உயிரற்ற குளிர் இதற்க்காக நான் ஏன் பயணத்தை தொடரவேண்டும். அழகு சொற்க்களை நிரப்பி பொருளில்லா பாடல் எழுதுவதுபோல தொடர எனக்கு விருப்பமில்லை அல்லது பொருளற்ற பயணத்தில் எது நிறைவு ? பயணம் முடிந்துவிட்டதாக நான் அறிவிக்கவில்லை ஒரு காற்புள்ளி மட்டுமே வைத்துள்ளேன் அதற்க்கு தொடரும் என்று அர்த்தமாகாது முடிவு என்றும் அர்த்தமாகாது. அது அப்படியே இருக்கட்டும் முடியா தொடர்போல,

2 comments:

வால்பையன் said...

உங்க பயணம் முடியிறதற்குள்ள எங்களுக்கு டவுசர் கிழிஞ்சிரும் போலயே!

பித்தனின் வாக்கு said...

டவுசர் மட்டும் இல்லை வால்ஸ், டப்பா டான்ஸ் ஆடிரும் போல. குப்தகாசியில் நிறுத்தன பயணம் ஆறு மாதங்கள் ஆகியும் தொடர வில்லை. அதுக்குள்ள வாழ்க்கைப் பயணத்திற்க்கு போய் விட்டார். திருப்பதியில் பணி புரிந்த அனுபவம் இருக்கும் போல