மீண்டும் ஒரு மழைக்காலம்...

*

தோணிற்று அவ்வாறு தோனுமென்று, தனித்து சென்றால் தாளாது என்று பல விழிகளின் நடுவில் விழிகள், தோணியது நிரூபிக்க கூட்டம் சரிதானென்று சாதித்த நானின் நான். பின்னிரவு தேநீரகத்தை நோக்கிய கால்கள். விழி மூடவிடா உதவிய இமைகள், எதோ மாற்றங்கள் புரியவில்லை நாட்களின் கடத்தலில் சுருதி குறைந்திருக்கும் என்ற எண்ணம் தவறியதை உணர்த்திய நிலவு, மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே பிடித்ததினால் கேட்காது பிடிப்பதினால் பிடித்திருக்க செய்தது, மீண்டும் பார்க்க மனம் உந்த. சில திங்களுக்குள்ளே தனிமையில். மழைகாலத்தில் நடுநிசியில் வீட்டை நோக்கி நடக்க மறுத்த கால்கள், தேநீரகத்தை நோக்கி நடந்தது.

மறந்துவிட்ட அல்லது மறைத்துவைத்த சாட்சியங்கள், தோண்டியெடுக்க நேரம் அமைந்து, மகிழ்ச்சியின் நடுவில் எதிர்வினையாற்றிய மனது. சிலவரிகளின் நினைவில் சில்லிட்ட மனது, எங்கோ எதோ ஒரு உணர்வு, சிலநொடிகளிலே ஊனில் எங்கெங்கோ பயணித்திருக்க, உணர்வை மொழியாய் குணரும் முயற்ச்சியில் தோற்ற தோல்விகள். அதிர்வுகளின் ஆழத்தில் புதைந்திருக்கும் வித்துக்களை மீண்டும் காண மனம் உந்தி வித்துக்கள் சில தினங்கள் வானவில்லாக பயணித்தது, எங்கோ வசந்தகாலத்தில் ஆரம்பித்த மழைக்காலத்தின் சுவடுகள் ஆங்காங்கே சிறு செடியில் கீறல்களாய் மரமாய் வளர்ந்த பிறகும் தெரிந்த சாட்சியம். சாட்சிகள் காலவெள்ளத்தில் கரைந்துவிடுவதில்லை, மூழ்கித்தான் செல்கிறது அதன் ஆழத்தை தொட உந்துதல் கிட்டும்பொழுது சாமர்த்தியத்தாலும் தப்பிக்கயியலாது.

எது துவங்கி வைக்கிறது என்று தெரியவில்லை, யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, தெரிந்திருந்தால் ஊனுள்ளே ஓரதிர்வும் உருவாகா, ஒத்திசைகள் நேருகின்றது சில சமயம் நேரெதிர் திசைகளில் பயணிக்கிறது, காலங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட உணர்வுகளின் சங்கமம்தான் ஆழ்கடலின் ஆழத்தை ஒத்து புதைந்திருக்க காரணகர்த்தா. தொடக்கத்தில் வெளிகுனரும் முயற்சிகள் வெற்றிப்பெற்று போக போக தோல்விகள் சரியான சாதக நிலை எட்டாத வரை எட்டினாலும் சிலதிங்கள் மருவி சிலமணித்துளிகள் என்று கரைந்துவிடுகிறது. பொய்யின் சங்கமிப்பு என்று முடிவிடும் தருவாயிலும் மௌனமே மிஞ்சும், எதிர்பாரா தருணம் எங்கென்று பாராது தோன்றும். பதிலிராது நமக்கு. பதிலை பார்த்து வருவதில்லை ஆனால் நமக்குத்தான் புரிவதில்லை.

வலுவுள்ளவரை அல்லது வரும்வரை வரட்டும் எதிர்கொள்ளத்தயார் என்றுரைத்தாலும். முற்றிலும் என்னைவிட்டு விலகிவிடு அல்லது முழுவதுமாக என்னை ஆட்கொண்டுவிடு ஆட்கொள்வது என்பதும் அழித்துவிடு என்பதும் ஒன்றுதான், எதிர்திசை பதில்கள்தான். காத்திருந்த பொழுதுகளில் துளிகளின் சத்தமோ அல்லது இசையோ கேட்கவில்லை. இனி வரும்பொழுது கேட்கருக்கிறேன் முடிவான பதிலொன்றை, பதிலிராது என்று தெரிந்தும்.

காத்திருக்கிறேன்..


மீண்டும் ஒரு மழைக்காலத்திற்காக.....

8 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

நாங்க போட வேண்டிய கமெண்டை நீங்களே லேபிளா வச்சுட்டா நாங்க என்ன போடறது? :)))

☀நான் ஆதவன்☀ said...

ஙே!

ரோஸ்விக் said...

மப்பும் மந்தாரமும் கிறுகிறுக்குது இந்த மழைக்காலம்.

ஜெகதீசன் said...

Woodbridge...

shortfilmindia.com said...

எனக்கு புரிஞ்சிருச்சு.. ஆனா சொலல் மாட்டேன்..

கேபிள் சங்கர்

கும்க்கி said...

ந்நா..,

இது யென்னா இசம்னு கொஞ்சம் சிறுகுறிப்பு வரைய கூடாதாங்நா...

லேசா தல கிறுகிறுங்குது...யம்மாடியோ..

நாடோடி இலக்கியன் said...

எப்படியோ முடிச்சிட்டேன், முடியல.

இராகவன் நைஜிரியா said...

கலக்கிட்டேள் போங்கோ...

புரிஞ்ச மாதிரி இருக்கு
புரியாத மாதிரியும் இருக்கு...

ஆனால் சும்மா சொல்லக்கூடாது...

எழுத்து சூப்பர் அண்ணா...

இந்த பாண்ட் சைஸ் மட்டும் கொஞ்ச பெரிசா போட்டு படிக்க கொஞ்ச வசதியா இருக்குமில்ல..