வெற்றிடமாகிப்போன கடவுள்

*

இறைத்தன்மையை உணர்த்தி இறை தேடிச்சென்ற பொழுதுகளில் உணரமட்டும் முடிந்து காணயியலாது போன காலங்களில். துணைநின்று பயணத்தை தொடர துணை நின்றது இறை, காண எங்கெங்கோ சென்று நிகழ் மற்றும் இறந்தகாலத்தின் நினைவுகளை கனவுகளை அசைபோட்டு அதை உந்துசக்தியாக்கி இறைத்தேடல் தொடர்ந்தது. இறை என்ற ஒற்றை உணர்வு மட்டும் உண்மையில்லை, இறை மறுப்பு / எதிர்ப்பு கூட உண்மையான உணர்வுதான், என்னை பிடித்துக்கொண்ட அல்லது எனக்கு பிடித்த இறையின் நிழலில் முட்களின் மீது விளைவை புரிந்தும் நடந்து மகிழ்ச்சியில் நாட்கள் நகர்ந்தன.

என்னை முழுவதுமாக ஆக்கரமித்து முற்றிலுமாக குழப்பிவித்து, போதையில் தள்ளி எங்கோ சென்றுக்கொண்டிருந்தது வாழ்க்கை . நற்றுனை என நினைத்த காலமும் துணையின்றி போனது. கனவுதேசத்தின் பிடியில் சிக்கி தத்தளித்துக்கொண்டும். நடுநிசி பயணத்திற்கும் ஒரு குவளை தேநீருக்கும் காலத்தின் பிடியில் அடிமையாக இருந்தேன். தேடலின் துடிப்பில் எங்கோ போய்கொண்டிருக்க. எனக்கும் புரியவில்லை யாரும் இருக்கவில்லை, தனிமையில் என் உலகத்தை ஆட்சி செய்துகொண்டிருக்க. காலத்தின் பிடி தளர்ந்து அதன் கால்களால் உதைக்கப்பட்டு கனவுகளை மட்டும் சுமந்து எங்கோ நகர்ந்துகொண்டிருந்தது என் எண்ணங்கள்.

இன்னும் தேடல் பலமடங்கு அதிகரிக்க, சீவன் எங்கோ செல்ல இறை என்னுடனே அடங்கிவிட்டது, சீவனை காணும் முயற்ச்சிக்கு தடைசெய்த மனதில் சீவனின் நினைவுகள் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. நினைவுகளை சிதறவிடாது ஆவணபடுத்தும் முயற்ச்சியில் இறங்கியது மனது. சீவனுக்கும் இறைக்கும் தொடர்பு இருப்பது உண்மை, இறவனைக்கொண்டு சீவனை நோக்கும்பொழுது இறையைவிட மேன்மைக்கொண்டதாக விளங்கும், இறையை இயன்றளவு கட்டிக்கொண்டு செல்ல, பயண காலத்தின் அளவு கூட கட்டில் தளர்வு விரிவடைந்துக்கொண்டே செல்ல, இறை இல்லாமல் போனதற்கான அறிகுறிகள் தென்படும். மகிழ்ச்சியில் பயணம் தொடர ஆழ்மனதில் அடைக்கப்பட்டு வைத்திருக்கும் இறை காலம் தோதாக இருக்கும்பொழுது அவ்வபோது உணர்த்திவிட்டு செல்லும்/ சொல்லும் சில நிமிடங்கள் தன்னை மறந்து இறையின் மடியில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் மனது.


நிமிடங்கள் கரைவில் இறையின் சுவடுகள் வெற்றிடமாகி போகும். வெற்றிடத்தின் பிடியில் சிக்கி கால்கள் தானாக நடிநிசி பயணத்தை தொடரும், ஒரு கோப்பை தேநீரும் அதற்க்கு துணைநிற்கும். வெற்றிடமாகிப்போன கடவுளின் பிடியில் மனது சிக்கி நிற்க, சீவனை காண மனது ஏங்கி நிற்கும்.

4 comments:

பிரியமுடன் பிரபு said...

தயவு செய்து தமிழில் பதிவு போடவும்
இல்லையேல் தமிழில் விளக்க உரை கொடுக்கவும்
நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

அருமையான இடுகை. கடவுள் மாதிரியே ஒரு கருமமும் புரியலை

:))))

வால்பையன் said...

புரியிற மாதிரி எழுதுனா உங்களுக்கு ஒரு ஃபுல்லு வாங்கித்தர்றேன்!

ஸ்வாமி ஓம்கார் said...

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! திரிபுராந்தகர்!

இது தமிழ் மணத்தில உங்க இடுக்கைக்கு கீழே இருந்த இடுக்கை.

:)