மாயபிம்பம் !

.
அற்ப ஆயுளிலே
உடைபடுகிறது.
எப்பொழுதும்
அவசரமாகவே
செதுக்கப்படுகிற
முழு சிற்பம்.

வழிகளற்ற பாதை !


எதையோ நினைத்து
எதையோ பேசி
எப்படியோ போகிறது
வாழ்க்கை

எனக்குத்தான் தெரியவில்லை
எங்கே செல்கின்றது
என்று !
எங்கே செல்வது
என்று !

முடிவுரை அல்லது முன்னுரை ...

*

திட்டமிட்டே
காலம் தாழ்த்தி
மௌன கூட்டங்களை
விலக்கிக்கொண்டு
விடிந்ததும் வந்த
ஓலை

அணிவகுத்து வந்த
முற்றுப்புள்ளிகளில்
எதையோ
சொல்லிக்கொண்டிருக்கிறது
இறுதிப்புள்ளி ....

வெற்றி தோல்விகள்
அற்ற
முடிவுரை
தெரியவில்லை
முன்னுரையாகக்கூட
இருக்கலாம்

நிகழ்வு : ௨௦-௦௩-௨௦௧௨
நிகழ்வின் விளைவு : ௨௧-௦௩-௨௦௧௨

நான் தொடங்கியது...

*
என்றோ
நான் தொடங்கியது...
முடிந்ததாக
நான் நினைத்தது...

நெடுநாள் சென்று
ஒரு திருநாளில்...

நீங்களே
காற்புள்ளி வைத்தீர்கள்,
நீங்களே
யூகத்தில் தொடர்ந்தீர்கள்...
நீங்களே
என்னை வெறுத்தீர்கள் ...
நீங்களே
முடிவுகளையும் எடுத்தீர்கள்...
நீங்களே
முற்றுபுள்ளி வைக்க நினைத்தீர்கள்...
நீங்களே
நான் முற்றுபுள்ளி வைத்ததாகவும்
நினைத்தீர்கள்..

இதில்
என் பங்கு என்ன ?

*