புத்தனின் சிரிப்பு


காசுகொடுத்து
வாங்கிய
சிலையாய் இருந்த
புத்தனை
பார்த்து சிரித்தேன்

இன்று
அவன் என்னை
பார்த்து சிரிக்கின்றான்

காரணம் புரிகின்றது
நானும் தமிழன்

சுயபுராணம்

.
இந்த தளத்தில் ஒருவரி கூட சுயபுராணம் எழுத கூடாதென்றிருந்தேன். தவிர்க்கயியலவில்லை பொறுத்தருளுக






1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பித்தன் - நானே வைத்துக்கொண்ட பெயர், பித்தர்கள் மட்டும் தான் இந்த உலகில் நடிப்பதில்லை.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

நினைவில்லை

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கண்டிப்பாக பிடிக்கும், ஆனால் என்னை தவிர மற்றவர்களுக்கு புரிவது கடினம்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
இப்பொழுது : கிடைக்கும் அனைத்து சைவ உணவுகளும்.
எப்பொழுதும் : புட்டு மற்றும் இடியாப்பம் தேங்காய்பாலுடன்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அது அந்த நபர் பழகும் விதத்தை பொருத்தது.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பேச்சி.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது : சில நேரங்களில் கடவுளாக இருப்பது
பிடிக்காதது : பிடித்ததற்கு எதிர்மறை

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்குள் இல்லை

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அம்மா

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கருப்பு நிற பேண்ட். லைட் பச்சை நிற சட்டை

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கீபோர்டின் சத்தம்

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு & வெள்ளை

14.பிடித்த மணம்?
பிஞ்சி குழந்தைகளிடம் இருந்து வரும் பால் மனம்
மல்லிகை
மல்லேஸ்வரம் மார்கெட்டை கடக்கும் பொழுது அனைத்து மலர்களின் மனமும் கலந்து ஒரு புதுவித மனம் வரும் அந்த மனம்.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
நாம் பெற்ற சங்கடம் வேண்டாம் எவருக்கும்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
லோகு :
வறுமையின் நிறம்...
சொல்லாத காதல்..
திருப்பூர் பக்கம் வேலை தேடி வாங்க..

ராசா :

இவரது பெரும்பாலான பதிவுகள் குறிப்பாக என் ஓட்டு அம்மாவுக்குதாண்ணே…

17. பிடித்த விளையாட்டு?
பாடல் கேட்டுக்கொண்டே தனிமையில் நெடுந்தொலைவு ஸ்கேட்டிங் (இன் லைன்) செல்ல பிடிக்கும்.

18.கண்ணாடி அணிபவரா?
கணினி திரைக்கு முன்பு மட்டும்.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
எதார்த்தமான படங்கள், நிச வாழ்கையின் நிழலான படங்கள்

20.கடைசியாகப் பார்த்த படம்?
நான் கடவுள்

21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
இரண்டு மாதங்களுக்கு விடுப்பு கொடுத்திருக்கிறேன், சமிபத்தில் படித்தது
செம்மீன் - தகழி சிவசங்கர பிள்ளை

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மாற்றுவதில்லை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : மெளனம்
பிடிக்காத சத்ததம் : வாகன இரச்சல்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
பாலி

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கலாம்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
குப்பைத்தொட்டியான இதயம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கொடைக்கானல்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
மனிதன் போல நடிக்காமல்... மனிதனாக

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்குள் இல்லை

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க...?
சுழியம் ஆனால் அனைத்தும் இதில் அடங்கும்.

எனக்கு அழைப்பு விடுத்த லோகு மற்றும் அவிங்க ராசா அவர்களுக்கு நன்றிகள்

உலகின் தலைசிறந்த எழுத்தாளன் பாகம் 2

*
உலகின் தலைசிறந்த எழுத்தாளன் பாகம் 1




என் வாசக கண்மணிகளின் ஆதரவில் ஆதே கட்சியில் மீண்டும் சால்றா தட்டும் வேலை கிடைத்துவிட்டது. இப்பொழுது சம்பளத்தைக்கூட கூட்டி தருவதாக சொல்லிருகின்றனர். அதற்க்கு காரணமும் உண்டு அதுதான் என் கர்வம். நான் தலைசிறந்த எழுத்தாளன் என்ற கர்வம் எனக்கு இருப்பதாலேயே இது சாத்தியமாகி விட்டது. அதை தூக்கி ஏறி என்று வரும் கடிதங்களை நான் தூக்கி எறிகின்றேன்.

ஒரு எழுத்தாளனுக்கு முக்கியமானது அவன் எழுத்தைவிட அவன் கர்வம் மற்றும் அடுத்தவனின் கருத்தை ஏற்றுக்கொள்ள கூடாது என்ற மனப்பான்மை, எந்த எழுத்தாளனையும் மறந்தும் கூட பாராட்டிவிடக்கூடாது என்ற எழுதப்படாத அடிப்படை விதியை மதித்து செயல்படுபவனே உண்மையான எழுத்தாளன், சக எழுத்தாளனை விமர்சித்து அவனது எழுத்துக்களை குப்பைகலாக்குவதில்தான் ஒரு உண்மையான எழுத்தாளன் ஆனந்தம் காணவேண்டும், எதாவது ஒரு அணியில் இருந்து வேடிக்கை மட்டும் பார்ப்பவர்களே வாசகர்கள்.

என் கருத்துக்களை ஏற்று என் பின்னல் இந்த சமுகம் வந்தால், இந்த சமூகத்தை ஐந்தே ஆண்டுகளில் திருத்திவிடுவேன் ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும் ஆட்சியை போல மாறும் என் கருத்துக்களை மட்டும் என்னால் திருத்திக்கொள்ள இயலாது காரணம் கேட்டால் அதற்க்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை ஏன் என்றால் அது உங்களுக்கே தெரியும் நான் ஒரு உலக தரமான எழுத்தாளன் என்று. கருத்துக்கள் மாறுவது இயற்க்கை அதை யாரும் தடுக்கவோ தட்டி கேட்கவோ கூடாது.

அரும்பு மீசை வளரும் காலத்தில் கருப்பு கொடியும் பின்னாளில் சிகப்பு கொடியை பிடித்து வீதியில் அலைந்தவன் நான். இன்று தேடி தேடி சென்று ஞானிகளின் ஆசிர்வாதத்தை பெற்று வருகின்றேன், இது காலத்தின் கட்டளை அதற்காக என் பாலிய காலத்து கருத்துக்களை திரும்பபெற்றுக்கொள்ள என்று சொன்னால் அது நடக்காத காரியம், ஒருவன் கருத்துக்களை திரும்பி பெற்றுக்கொள்வது அவன் சுயபுத்திக்கு விடுக்கப்பட்ட சவாலே. எனது பழைய கருத்துக்களை தனிப்பட்டமுறையில் நான் ஏற்றுக்கொள்வது இல்லை ஆனால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வது உங்கள் கடமை ஏனெனில் நீங்கள் வாசகன் நான் எழுத்தாளன். கருத்துக்களை மாற்றிக்கொள்ளும் உரிமை எழுத்தாளனுக்கு மட்டுமே உண்டு. வாசகனின் சிந்தனையில் உருவாகும் கருத்து எப்பொழுதும் தவறாகவே இருக்கும். ஆகவே வாசகர்கள் சிந்திக்காமல் இருப்பதுவே நலம்.

அதுபோலவே வாசகர்கள் உப்பு சேர்க்காமல் உணவுண்டால் மட்டுமே எனது வாசகர்களாக இருக்கமுடியும், நான் எழுத்தாளன் என்று மட்டும் சொல்லிவிட்டால் அது தலைகனம் என்றாகிவிடும், ஆகவே அந்த கனத்தை இருக்கவே சிலநேரங்களில் நானும் வாசகனாகிவிடுகிறேன் அதனாலேயே உப்பு அதிகம் சேர்த்துக்கொள்வதில்லை ஆனால் எழுத்தாளன் என்ற முறையில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்கிறேன் என்று காட்ட வேண்டிய நிலைமைக்கு தள்ளபடுவதினால், எழுதும்பொழுது உப்பு அதிகம் சேர்த்துக்கொள்வது போல் நடிக்கவேண்டிய கட்டாயத்திருக்கு தள்ளபடுகிறேன்.

இரத்தம் சூடாக இருக்கையில் பொதுவுடைமை மற்றும் நாத்திகம் பேச குருதியில் புரட்சியும், எழுச்சியும் கரைபுரண்டு ஓடுவதை காணயியலும் ஆனால் குருதியின் சூடு தனிய தனிய ஆத்திகத்தில் உள்ள அதிர்வுகளின் கட்டுப்பாட்டில் நமது கருத்துக்கள் சென்று விடுகிறது. இதை தவரெண்டு சொல்பவர்கள் ஞானசூநியர்கள் ஏன் என்றால் இது என்னுடைய கருத்து. இதற்க்கு வயோதிக பயம் என்று பட்டம் கட்டும் முட்டாள்களும் உண்டு. நான் யாருக்கும் பயப்படுபவனும் அல்ல ஞானத்தை அடையாமல் இறக்க போகபோரவனும் அல்ல. ஞானம் என்றால் என்ன என்று கேட்பபவர்களுக்கு ஒரு தனி இடுகையை எழுதவிருக்கிறேன்.

தொடக்க காலத்தில் சத்திய சோதனையை ஏற்றுக்கொள்வது எனக்கு சத்தியசோதனையாகவே இருந்தது ஆனால் ஆயுளில் முக்கால்வாசி ஓடியபின் இன்று எனது வாழ்க்கை சத்தியசோதனையை ஒத்திருக்கின்றது என்று எழுதவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன் என்பதை நினைக்கும்பொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது, ஏன் என்றால் என்னை சத்தியசீலனாக போற்றுவார்கள் அல்லவா, வந்த பாதை சரியான பாதையா என்பதை காண பெரும்பாலானோர் அளவுகோலாக வைத்துக்கொள்ளும் சத்திய சோதனையை அளவுகோலாக வைத்து நானும் கண்டுகொண்டேன்.

எனது சத்திய சோதனையை "சோறு திங்க வன்முறையும், இளைப்பாற அகிம்சையும்" என்ற நூல்வடிவில் உங்களுக்கான அளவுகோலாக தரவிருக்கிறேன். இந்த நூலை வாங்கி உங்களுக்கான அளவுகோலாக வைத்துக்கொள்ளும் பட்சத்தில்

உங்களுக்கு என் ஆசிகள் கிட்டும்

-முற்போக்கு எழுத்தாளர் பித்தன்