தனிமாநில கோரிக்கை மற்றும் கின்னஸ் சாதனைக்காக

*
தமிழகத்துல எங்கள் ஊர் பின்தங்கிய பகுதி சுதந்திரத்துக்கு முன்பும் சரி பின்பும் சரி அதை கண்டுகொள்ள யாரும் இல்லை.

எங்களை அரசாங்கம் கவனிக்கவில்லை, அதனால் கவன ஈர்ப்பு போராட்டமாக நிரந்தர பந்தலை போட்டு இரண்டு மணிநேரம் , நான்குமணிநேரம், ஆறு மணிநேரம் என்று ஷிப்ட் முறையில் எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் உண்ணாநிலை இருந்தோம் குறிப்பாக டயட்டில் இருந்தவர்களுக்கு முன்னிரிமை வழங்கினோம் ஆனால் எங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை நான்குமணிநேரம் உண்ணாநிலை இருந்து நாப்பது தொலைகாட்சிகளில் ஒளிபரப்பி பாத்திர கடையில் ஒரு பதக்கத்தை வாங்கி வெற்றிபெற்றுவிட்டோம் என்று கூறிக்கொள்ளும் அளவுக்கு எங்களுக்கு வசதியும் இல்லை ஆகவே அடுத்தகட்ட நடவடிக்கைக்காக பன்னிரண்டு பேர் கொண்ட குழு சிந்திக்க தொடங்கியது.

அதன் விளைவாக மாபெரும் யோசனை கிட்டியது அந்த திட்டத்தை முதலில் சோதித்து அது வெற்றிப்பெற்றால் எங்கள் ஊரிலும் அதை முயற்சிசெய்யலாம் என்று எண்ணினோம் நீண்டநாட்களாக எங்களை போலவே பக்கத்து ஊருக்காக போராடும் முனுசாமியிடம் இதை தெரிவிக்க அவர் எங்கள் யோசனையை ஏற்று 11 நாட்கள் தொடர் உண்ணாநிலை போராட்டத்தை நடத்தினார். என்ன ஆச்சரியம் உடனே பலன் கிடைத்துவிட்டது. முதலில் எங்கள் மாவட்டத்துக்குதான் தனிமாநில தகுதி கேட்க எண்ணினேன் ஆனால் முனிசாமி வெற்றி பல தாக்கத்தை ஏற்படுத்த, மாவட்டம் சுறுங்கி ஊர் என்ற அளவில் வந்து நிற்கிறேன் இப்பொழுதும் கேக்காவிட்டால் ஊர் சுறுங்கி தெரு என்ற அளவில் வந்துவிடும் அதனால் இந்திய இறையாண்மைக்கு ( அப்படின்னா என்னனு கேக்ககூடாது எனக்கும் தெரியாது, இந்த வார்த்தைய சேக்கலன்னா பாங்குரஸ்காரவங்க தேஞ்ச ரெக்காடு மாதரி திரும்பி திரும்பி கூவிகினு இருப்பாங்க. அதுக்காக சேத்திருக்கேன்.. ) உட்பட்டு எங்கள் ஊரை தனிமாநிலமாக அறிவிக்கவேண்டும்.

பத்துநாட்களுக்குள் மத்தியரசு அனுமதி வழங்கிவிடும் அப்படி நடந்தால் முனுசாமியின் சாதனையை முறியடித்து கின்னஸ்சில் இடம்பெறுவேன். எனக்கு என்னவோ அதிகபட்சம் ஐந்து நாட்கள்தான் அவர்களுக்கு தேவைப்படும் என்று தோன்றுகிறது. வீட்டு குழாயில் தண்ணீர் வராததற்கு மனுக்கள் குவிவது போல் அதே அளவு தனிமாநில கோரிக்கைக்கும் ஆட்கள் இருப்பதால் மத்தியரசு இதற்க்கு புதிய இணையதள சேவையை தொடங்கும் என்று எதிர்பார்கிறேன். ஓரிரு நாட்களில் இணையத்திலேயே ஒப்புதலும் அளித்தால் மிக்கமகிழ்ச்சி.

ஆனால் யாருக்காவது என்னைவிட குறைந்த நாட்களில் தனிமாநில தகுதி கிடைத்துவிட்டால் நான் சும்மா இருக்கமாட்டேன்.. எங்கள் வார்டு, எங்கள் தெரு, எங்கள் வீடு என்று என்னுடைய கோரிக்கையை சுருக்கிக்கொண்டு வருவேன். இந்த கின்னஸ் சாதனைக்கு மத்திய அரசு தோள்கொடுக்கும் என்ற நம்பிக்கையில்

-வெற்றி-[க்]-கதிரவன்
*
*
குறிப்பு : இறையாண்மை என்றால் என்ன என்று தெரிஞ்சவங்க சொல்லுங்க, அது ஒரு வகையான இனிப்பு பலகாரம் என்று நான் நினைக்க இல்லை அது ஒரு விளையாட்டுப்பொருள் என்று என் நண்பன் கூறுகிறான், பல கடைகளில் தேடியும் அது கிடைக்கவில்லை. யாரிடமாவது இறையாண்மை இருந்தால் எனக்கு இரண்டு கிலோ கொடுங்கள்.
*

16 comments:

ஜோசப் பால்ராஜ் said...

உங்கள் தனி மாநில கோரிக்கையை மாரநேரி நாட்டின் சார்பாக நான் வரவேற்கிறேன். தனி நாடு கேட்டு போராடாமல் தனி மாநிலம் என்றளவில் சுருக்கிக் கொண்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

வானம்பாடிகள் said...

இறையாண்மை என்பது பாங்குரஸ்காரங்களின் வசதிக்கு பல ரூபங்கள் எடுக்கும். அருவமாகும். தமிழ்நாட்டுக்கு கிலோவாகும். கர்நாட்கத்துக்கு மீட்டராகும்=)). நல்ல இடுகை.

கோவி.கண்ணன் said...

//இறையாண்மை என்றால் என்ன என்று தெரிஞ்சவங்க சொல்லுங்க, //

எனக்கும் கேட்டு சொல்லுங்க

எம்.எம்.அப்துல்லா said...

//உங்கள் தனி மாநில கோரிக்கையை மாரநேரி நாட்டின் சார்பாக நான் வரவேற்கிறேன் //

புதுக்கோட்டை நாட்டின் சார்பாக அதைநான் வழிமொழிகின்றேன்.

:))

சங்கர் said...

//இறையாண்மை என்றால் என்ன என்று தெரிஞ்சவங்க சொல்லுங்க//

ஜனநாதனோட அடுத்த படமா இருக்குமோ?

வினோத் கெளதம் said...

தனி மாநிலமா..அது சரி..அனால் உங்கள் மாவட்டத்தின் நிலைமை கொஞ்சம் கவனிக்கப்பட வேண்டிய நிலைமையில் தான் பலக்காலமாக உள்ளது..

தியாவின் பேனா said...

கலக்கல்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//யாரிடமாவது இறையாண்மை இருந்தால் எனக்கு இரண்டு கிலோ கொடுங்கள்.//

ந‌ம்ம‌ ப‌க்க‌த்து ஊர் அச்சு மாமாவிட‌ம் ச‌காய‌ விலைக்கு கிடைக்கிற‌து

S.A. நவாஸுதீன் said...

அதிரை தனிமாநில கோரிக்கை விரைவில் நாங்களும் கேக்கலாம்னு இருக்கோம்.

S.A. நவாஸுதீன் said...

//இறையாண்மை//

ரொம்ப நல்ல படம். அடடா அது ஜெயம் ரவியின் பேராண்மையாயோ!!.

அப்போ இது யாரு நடிச்ச படம்?

KISHORE said...

enathu.. thani manilama..? sari..sari.. manu kuduthutu po..

ரோஸ்விக் said...

அய்யய்யோ இறையான்மைனா என்னன்னு கேட்டுட்டீங்கள்ள... பாருங்க யாரவது ஒரு டுபாக்கூர் வைத்தியர் அது உங்களுக்கு இல்லையின்னு சொல்லி லேகியம் விக்க ஆரம்பிச்சிடுவாரு ... :-)

கண்ணா.. said...

பித்தன்,

தெலுங்கானா தனி மாநிலம் எதற்காக கேட்கிறது என்பதின் அடிப்படையை முழுதும் புரிந்தால் நாம் அதை குறித்து விவாதிக்கலாம். இல்லாவிட்டாலும் கூட அதை ஏளனப்படுத்தாமல் விட்டு விடுவதே சால சிறந்தது.


இல்லாவிட்டால் இலங்கையில் எதற்கு தனிஈழம் என கேட்கும் மலையாளிகளை போல் ஆக நேரிடும்.


என் நண்பன் என்ற உரிமையில் என் கருத்தை தெரிவித்தேன். தவறிருந்தால் மன்னிக்கவும்

வால்பையன் said...

//யாருக்காவது என்னைவிட குறைந்த நாட்களில் தனிமாநில தகுதி கிடைத்துவிட்டால் நான் சும்மா இருக்கமாட்டேன்.. எங்கள் வார்டு, எங்கள் தெரு, எங்கள் வீடு என்று என்னுடைய கோரிக்கையை சுருக்கிக்கொண்டு வருவேன். இந்த கின்னஸ் சாதனைக்கு மத்திய அரசு தோள்கொடுக்கும் என்ற நம்பிக்கையில்//


எனக்கும் பக்கத்துல பெட்டு போட்டு வையுங்க!

வெற்றி-[க்]-கதிரவன் said...

அனைவருக்கும் நன்றி

***

கண்ணா / நந்தா

இது தெலுங்கான மாநிலம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பினால் எழுதவில்லை, மற்ற அனைவரும் ஊருக்கு ஒரு மாநிலம் வேண்டும் என்று கேட்பார்கள் என்று தான் எழுதினேன் அது தானே நடக்கிறது, தெலுங்கான வேண்டுமா இல்லையா என்று முடிவு செய்யவேண்டியது அந்த பகுதி மக்கள்தானே தவிர நீங்களோ நானோ அல்லதோ இந்திய அரசோ அல்ல .

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆனா பாருங்க,

கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் தமிழகத்தில் இருபது முப்பது தாய்மார்கள் தொடர் உண்ணா விரதம் இருந்து கவலைக்கிடமான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்! ஒரு நாதி இல்ல...
மத்திய அரசு பேசல, மாநில அரசு பேசல, கண்டுக்கல மதிக்கல...

இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை!?இது என்ன தனம் என்று யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க....!